December 7, 2025, 4:56 AM
24.5 C
Chennai
Home Blog Page 15

‘எந்த வாஷிங் மெஷின்?’ : வினையும் எதிர்வினையும்!

stalin udhayanidhi - 2025

மாண்புமிகு நிதி அமைச்சர் Thangam Thenarasu அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?

  • மு.க. ஸ்டாலின்

திமுக., அரசின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கேள்விக்கு சாமானியர்களால் சமூகவலைத்தளத்தில் முன்வைக்கப்படும் எதிர்வினை..!

  1. செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் அடைக்காமல் ஓய மாட்டேன் என்று கரூரில் வைத்து சொன்னீர்கள். கடைசியில் அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராக்கினீர்கள், என்னும் நிலையில் செந்தில் பாலாஜியை எந்த கடை வாசலில் மிஷினில் போட்டு துவைத்து நல்லவராக மாற்றினீர்கள்?
  2. சேகர்பாபு அதிமுகவில் இருக்கும் போது வேட்டிய மடித்துக் கொண்டு உங்கள் அப்பாவை அடிக்க பாய்ந்தார். அவர் பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டேன் என்று சொன்னீர்கள். பிறகு அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அறநிலையத்துறை அமைச்சராக மாற்றி வைத்திருக்கிறீர்கள். எந்தக் கடை வாஷிங்மெஷினில் போட்டு அவர் மீது இருக்கும் அழுக்கை எல்லாம் நீக்கினீர்கள்?
  3. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருக்கும் போது நிறைய ஊழல் செய்துவிட்டார் என்பதற்காக சிவகங்கை ஒரு கூட்டத்தில் அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டோம் என்று சொன்னீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகி அழகு பார்க்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
  4. ஏமா வேலு, அதிமுகவில் இருக்கும் போது கான்ட்ராக்ட்டில் முறைகேடு செய்துவிட்டார். அவரை ஜெயிலில் அடைக்க போகிறோம் என்று மேடை தோறும் பேசி வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க?
  5. எஸ். ரகுபதி அதிமுகவில் இருக்கும்போது ஊழல் செய்து வருகிறார், இவரை வெற்றி பெற வைக்க கூடாது என்று மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினீர்கள். இப்போது அவரை அமைச்சராக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த லாண்டரியில் போட்டு வெளுத்து எடுத்தீர்கள்?
  6. முத்துசாமி அதிமுகவில் இருக்கும் போது வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துவிட்டார், ஊழல் செய்து கொண்டு வருகிறார். எனவே அவரை சிறையில் அடைக்காமல் விடமாட்டோம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை டாஸ்மார்க் அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த துணிக்கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
  7. அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் உள்ள கான்ட்ராக்டர்களிடம் பணம் வாங்கி மிகப்பெரிய ஊழல் செய்கிறார் என்று உங்கள் ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் புனிதராகும் அளவிற்கு எந்த லாண்டரியில் போட்டு துவைத்தீர்கள்?
  8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிமுக அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். அவரை தோல்வி அடைய செய்யுங்கள் என்று கோவில்பட்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த சலவைக்காரனிடம் போட்டு துவைத்து வாங்கினீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
  9. ஜெகத்ரட்சகர் அதிமுகவில் இருக்கும் போது ஊழல் செய்து மதுபான ஆலைகள் திறந்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகியதும் இல்லாமல் அவருடைய மதுபான ஆலைலிருந்து அரசு நிறுவனத்திற்கு தொடர்ந்து மதுபானங்கள் வாங்கி இருக்கிறீர்கள். என்னும் நிலையில் அவரை எந்த துணி துவைப்பு கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.

செல்வகணபதி, அப்பாவு, தங்க தமிழ்ச்செல்வன், மைத்ரேயன், அன்வர் ராஜா என்று நீளமான பட்டியல் இருக்கிறது. அவர்களையெல்லாம் எந்த வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்க சார்.

இப்படி பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷினாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஒரு பொறுப்பான அரசியல் தலைவராக, கடந்த கால பேச்சுகள் மற்றும் செயல்களில் உள்ள முரண்பாடுகளை சீராய்த்து பார்க்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை பதவியில் வைப்பது அரசின் நம்பிக்கையை குலைக்கும். நல்ல ஆட்சிக்காக நேர்மையும் நியாயமும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இனிவரும் ஆறு மாதங்களிலாவது இப்படி ஊழல் கறை படிந்த இந்த பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு ஊழல் செய்யாத நல்ல அரசியல்வாதிகளை வைத்து அரசியல் செய்யுங்கள் அல்லது ஆட்சி செய்யுங்கள்..

ஒரு பெண் அல்லது ஒரு முஸ்லிம்… ஆர்.எஸ்.எஸ்ஸில் தலைவராக முடியுமா?!

dr keshav baliram hedgewar rss - 2025

தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

முஸ்லிம் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா ?
ஹிந்துவா முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்த பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் – என்கிறார் ராம் மாதவ் .

இவ்வாறு பதிலளித்த ராம் மாதவ் பாஜக.,வின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவர் அவுட்லுக் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது.

கேள்வி : ஷாகாவிலிருந்து தேசம் வரை என்ற உங்களுடைய சமீபத்திய நூலில் கடந்த பல ஆண்டுகளில் சங்க பிரச்சாரகர்கள் நிகழ்த்திய உரைகள் சுவாரசியமாக தொகுக்கப்பட்டுள்ளன . இதற்கான சிந்தனை உங்களுக்கு எப்படி ஏற்பட்டது ?

பதில் : ஆர் எஸ் எஸ் அமைப்பை புரிந்து கொள்வது சற்று சிரமம். தவறாக புரிந்து கொள்வது மிகவும் எளிது. தவறான புரிதலுக்கு காரணம் ஆர் எஸ் எஸ் எதற்காக இருக்கிறது என்பதை பற்றியோ அதன் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியோ போதுமான பதிவுகள் இல்லை என்பதேயாகும்.

ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு இதுபோன்ற இலக்கியங்கள் கிடைக்கின்றன . ஆனால் பொது ஜனங்களுக்கு ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு இலக்கியங்களே படிக்க கிடைக்கின்றன. இது தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது . எனவே தான் ஆர்எஸ்எஸ்ஸின் முதல் தலைவரும், 1925 இல் அதனை ஆரம்பித்தவர் தொடங்கி இன்றுள்ள, அதன் ஆறாவது தலைவர், மோகன் பாகவத் வரையில் உள்ள தலைவர்களின் குறிப்பிடத்தக்க உரைகளை தொகுத்து முன் வைத்துள்ளோம்.

கேள்வி : எந்த ஒரு அமைப்பும் நூறு ஆண்டு காலம் செயல்படுவது சுலபமான விஷயம் அல்ல. ஆர் எஸ் எஸ் எப்படி இதற்கு தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை பற்றி கூற முடியுமா ?

பதில் : ஆர் எஸ் எஸ் ஸின் சிறப்பே அது நூறு ஆண்டு காலம் இருக்கிறது என்பது மட்டுமல்ல அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர் எஸ் எஸ் தோன்றுவதற்கு ஓராண்டு காலம் முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நூறு ஆண்டு காலத்தில் ஆர் எஸ் எஸ் ஐ பாருங்கள் . அது தேசத்தின் மைய நீரோட்டமாகியுள்ளது மட்டுமன்றி இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு காரணம் ஆர் எஸ் எஸ் ஒரு கருத்தியலுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளவில்லை. கருத்தியல் சிறை என்றால் ஒரு சட்டகத்துக்குள் அல்லது வரம்புக்குள் தன்னை வைத்துக் கொள்வதாகும். கம்யூனிச கட்சிக்கு ஒரு கருத்தியல் உள்ளது. அந்த கருத்தியலுக்குள் அதில் நிரந்தரமாக சிக்கிக் கொண்டுள்ளதால் அந்த கட்சியின் இன்று தேங்கி நிற்கிறது. காரணம் அந்த கருத்தியல் இன்றைய காலத்திற்கு தேவையற்றதாகிவிட்டது. அதன் விளைவாக அந்த கட்சியும் தேவையற்றதாகிவிட்டது.

ஆர் எஸ் எஸ் புதிய கருத்தியலை பிரச்சாரம் செய்வதாக எப்போதும் சொல்லியதில்லை. இந்த புத்தகத்தில் உள்ள உரைகளில் எங்கள் சிந்தனை போக்கு தொன்மையான ஹிந்து பண்பாடு, வரலாறு, வரலாற்று அனுபவங்கள் மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது. பண்டைய ஹிந்து நாகரிகத்தின் வரலாற்றில் இருந்து நல்ல அம்சங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அது பற்றி ஹிந்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டுகிறோம்.

ஆர் எஸ் எஸ் இன்றைய காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது. இதுதான் இந்த அமைப்பின் நீண்ட ஆயுள் மற்றும் வளர்ச்சியின் ரகசியம். இது பல எதிர்ப்புகளை எதிர் கொண்டுள்ளது. மற்ற எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் இவ்வளவு எதிர்ப்புகளில் சரிந்து போயிருக்கும்.

கேள்வி : ஜாதியை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

பதில் : ஆர் எஸ் எஸ் ஸை ஆரம்பித்த கேசவ பலிராம் ஹெட்கேவாரின் கண்ணோட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. அவர் ஆர்எஸ்எஸ் ஸை துவங்கிய போது ஒவ்வொரு ஆர் எஸ் எஸ் காரரின் முதன்மையான நோக்கம் தேச விடுதலை தான் என்றார். குருஜி கோல்வல்கர் அதற்கு ஆன்மீக , சமய பரிமாணத்தை அளித்தார். பாளாசாஹேப் தேவரஸ் அதன் மூன்றாவது தலைவராக ஆனபோது சமூக பரிமாணத்தை சேர்த்தார். முதன் முதலில் அவர் தான் ஜாதி என்ற சமூக ஏற்பாடு தன் பயன்பாட்டை இழந்துவிட்டது என்றார்.

கோல்வல்கருக்கு சற்றே மாறுபட்ட கருத்து இருந்தது. அவர் இப்போதுள்ள ஜாதி முறைமையை புகழவில்லை. ஆனால் அது பண்டைய வர்ணாசிரம முறையிலிருந்து மாறுபட்டது என்பதை சுட்டிக்காட்ட முனைந்தார். பல தீமைகள் புகுந்ததால் தான் ஜாதி முறைமை இன்று சீரழிந்துள்ளது என்றார். ஆனால் தேவரஸ் கறாராகவும் தெளிவாகவும் தன் நிலையை விளக்கி விட்டார். அது மட்டுமன்றி அதற்கும் ஒரு படி மேலே போய் ஜாதி முறைமை பயனற்று போய்விட்டது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்.

அது ஆர்எஸ்எஸ் க்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் நாட்டிலுள்ள ஏழை மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோரிடையே நலத்திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. 1900 களிலும் 2000 துவக்கத்திலும் ஆர் எஸ் எஸ் தனது சேவை திட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டது.

இப்போது பாகவத் தலைமையில் ஆர் எஸ் எஸ் மிகவும் வெளிப்படை தன்மை கொண்ட இயக்கமாக ஆகி வருகிறது இவ்வாறு ஒவ்வொரு தலைவரும் கருத்தியல் சட்டகத்துக்குள் அடைபட்டு விடாமல் புதிய விஷயங்களை சேர்த்துக்கொண்டே வருகிறார்கள். இது அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்றும் அதை பயனுள்ள இயக்கமாக வைத்திருக்கிறது.

கேள்வி : இட ஒதுக்கீடு பற்றி…..?

பதில் : இட ஒதுக்கீடு பற்றி ஆர் எஸ் எஸ் இன் பார்வை மிகவும் தெளிவானது. இன்று நம்முடைய சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைகளை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதில் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், வேற்றுமைகள் இருக்கும் வரையில் சமுதாயத்தில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு ஆதரவு அதிகமாக தேவைப்படுகிறது. அந்த வகையில் இட ஒதுக்கீடு என்று முக்கியமான விஷயம். அது தொடர வேண்டும்.

கேள்வி : ஆர் எஸ் எஸ் ஸில் பெண்களின் பங்கு என்ன ?

பதில் : இரு வேறு பகுதிகளாக இதை பார்க்க வேண்டும். ஒன்று, அமைப்பின் செயல்பாடுகள் என்ற வகையில் ஆர்எஸ்எஸ் ஷாகாகள் காலை ஆறு மணிக்கு தொடங்குகின்றன. பெண்களுக்கு தனியான ஷாகாகள் உள்ளன . இதை ஏற்றத்தாழ்வாக கருதக்கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது இயல்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய ஆர் எஸ் எஸ் ஸின் சிந்தனை மற்றும் சமூக செயல்பாடுகளில் பெண்களின் பங்கு பெரிய அளவில் உள்ளது. ஆர் எஸ் எஸ் ஸின் ஆண்டு கூட்டங்களில் 15 இல் இருந்து 20% பேர் பெண்கள். சமீப ஆண்டுகளில் இது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஆர்எஸ்எஸ்க்கு நல்லது. இதனால் பெண்களைப் பற்றிய பார்வை மிகவும் முற்போக்கானதாக மாறி வருகிறது.

கேள்வி : பாலினத்தை பற்றிய ஆர் எஸ் எஸ் ஸின் பார்வை பழமையானது. இன்றைய மேற்கத்திய பெண்ணிய முன்மாதிரிகள் அதற்கு சவால் அளிப்பதாக உள்ளது. அது இந்தியாவில் எடுபடாது என்று ஆர் எஸ் எஸ் நினைக்கிறதா ?

பதில் : மேற்கத்திய பெண்ணிய அமைப்புகள் மேற்கத்திய அனுபவத்தின் அடிப்படையில் எழுந்தவை. இந்தியாவில் அதே போன்ற அனுபவங்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்கள் எப்போதும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டு, மதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

நம்முடைய சமுதாயத்தில் சில தீமைகள் நுழைந்து விட்டன என்பது உண்மைதான். அதனால் பெண்கள் சில நேரங்களில் நெருக்குதலுக்குள்ளாகிறார்கள். சில தசாப்தங்களாக அல்லது சில நூற்றாண்டுகளாக நம்மிடையே ஆணாதிக்க மனப்பான்மை வளர்ந்துள்ளது……..

கேள்வி : இங்குதான் மனு ஸ்மிருதி வருகிறது……

பதில் : நான்கு சூழ்நிலைகளில் பெண்கள் கணவனை விவாகரத்து செய்யலாம் என்று மனு ஸ்மிருதி கூறுவது உங்களுக்கு தெரியுமா? இதை வேறெந்த மதம் அனுமதிக்கிறது என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் ? புராதன இந்திய நூல்களை இன்று எளிதாக விமர்சிக்கிறார்கள்.

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பெண்கள் சுதந்திரமாகவும் வலிமையாகவும் இருந்துள்ளார்கள். சீதாவையும் திரௌபதியையும் பாருங்கள். அவர்களை நாம் மதிப்புடனே காட்டியுள்ளோம். சில தீமைகள் நுழைந்து விட்டன என்பது உண்மைதான். இங்குதான் மனு ஸ்மிருதி பற்றிய பிரச்சனை எழுகிறது. அதில் உள்ள ஒரு ஸ்லோகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

கஷ்டமான சூழ்நிலையில் தேவைப்பட்டால் ஆண்கள் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று அது சொல்கிறது. இதை நாம் விவாதிக்கலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை விலக்கி விடலாம். சில சாரமான நம்பிக்கைகளை தவிர இந்திய வரலாற்றில், இந்திய கலாச்சாரத்தில் எந்த நூலும் சாஸ்வதமானது அல்ல. அவை மாற்றப்படலாம். நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ள போதிலும், நிர்பயா சட்டத்தினால், பெண்கள் மீதான தாக்குதல்கள் நின்று விட்டதா? பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை சமுதாயத்திற்கு சொல்லி தராததால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

கேள்வி : இது பற்றி ஆர் எஸ் எஸ் என்ன செய்யப் போகிறது ? பெண்கள் விஷயமாக அதிகமான அழுத்தம் எழுந்துள்ளது. அவர்களும் தீவிரமாக செயல்படுகிறார்கள்.

பதில் : பாலினத்தில் உயர்வு தாழ்வு கிடையாது. பெண்களை தங்கள் செயல்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அதிகமாக ஈடுபடுத்தி வருகிறது. எங்களுடைய சகோதர அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்கிறார்கள். நாங்களும் பெண்களை பெரிய அளவில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். தேசத்தை மறு உருவாக்கம் செய்வதிலும் சமுதாயத்தை மீள்கட்டமைப்பதிலும் பெண்களுக்கு சரிசமமான பங்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி : மறு உருவாக்கம் பற்றி பேசும்போது இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக நீங்கள் எப்படி உருவகிக்கிறீர்கள் ?

பதில் : சுதந்திரத்திற்கு பிறகு மதசார்பின்மை என்பதை பற்றி தவறாக விளக்க ஆரம்பித்தோம். நேரும் இடதுசாரிகளும் இதற்கு காரணம். பல மேற்கத்திய நாடுகள் தங்களை கிறிஸ்துவ நாடுகளாக அரசமைப்பு சட்டத்திலேயே அறிவித்து விட்டார்கள். நம்முடைய அரசமைப்பு சட்டத்தில் நாம் மதசார்பற்றவர்கள் என்றும் சோசியலிஸ்ட்கள் என்றும் அறிவித்துள்ளோம். அந்த நாடுகள் மதவாத நாடுகளா ? அல்லது மதசார்பின்மைக்கு எதிரான நாடுகளா? அப்படி இல்லை. எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் நாட்டு கலாச்சாரத்தை, நாகரீகத்தின் வேர்களை மதிக்கின்றன. சில நேரங்களில் அவை தங்கள் மதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஆனால் இந்தியாவில், விடுதலைக்கு பிறகு ஹிந்துவுடன் தொடர்புடைய எல்லாம் எதிர்மறையாக பார்க்கப் பட்டன. சுதந்திர போராட்ட காலத்தில் அப்படி இல்லை. அரவிந்த கோஷ் , லோகமான்ய திலகர், சாவர்க்கர், காந்திஜி , ஏன் அம்பேத்கரை கூட பாருங்கள். ஹிந்து மதத்தை சீர்திருத்தவில்லை என்றால் இந்திய சமுதாயத்துக்கு விடிவே இல்லை என்று அவர் சொன்னார்.

இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்த சீர்திருத்தம் அவசியம் என்று அவர்கள் அனைவரும் கருதினார்கள். ஆர்எஸ்எஸ் அதே வழியில் பயணித்தபோது ஆரம்பத்தில் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் விடுதலைக்குப் பிறகு ஆர் எஸ் எஸ் மதவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டது. அதனால்தான் ஹிந்து என்ற சொல்லை பயன்படுத்த உங்களுக்கு மனத்தடைகள் இருக்குமானால் பாரதிய என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் என்று இப்போது உள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் சொன்னார்.

கேள்வி : ஆனால் ஆர் எஸ் எஸ் இன் செயல்பாடுகள் மிகவும் பிராமணிய தன்மையுடன் இருக்கின்றனவே…….

பதில் : மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் எப்போதும் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? கம்யூனிஸ்டு கட்சி பொலீட்பீரோவில் எப்போதும் ஒரு முஸ்லிம் இருந்ததேயில்லை…..

கேள்வி : ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் ஹிந்து என்றே ஆர்எஸ்எஸ் நம்புகிறதில்லையா…..

பதில் : எங்களுடன் பல்வேறு சமூக நிலைகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டதனால் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவர் பிராமணர் இல்லாதவர். எங்கள் அமைப்பில் சமுதாயத்தின் எல்லா பிரிவினரும் பொறுப்பில் வருவதை உறுதி செய்கிறோம். ஆர்எஸ்எஸ் ஸை பிராமண அமைப்பு என்று கூறுவது அற்பத்தனமானது.

ஹிந்துத்துவா அல்லது ஹிந்து ராஷ்டிரம் பற்றிய நமது கண்ணோட்டம் நல்லிணக்கம் உள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். உங்கள் குடும்ப பண்புகளை பாதுகாப்பது பற்றி நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கேள்வி : ஆர் எஸ் எஸ் அரசமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது. அது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

பதில் : இது தவறான கருத்து. 1950 இல் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்தபோது , தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன கருத்து இருந்தாலும் உறுப்பினர் என்ற வகையில் எல்லா ஆர் எஸ் எஸ் காரர்களும் அரசமைப்பு சட்டத்தை மதித்தாக வேண்டும் என்று கோல்வல்கர் சொன்னார். இதுதான் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் நிலைப்பாடு. நூறு முறை அரசமைப்பு சட்டத்தை மாற்றியவர்கள் ஆர்எஸ்எஸ் ஸை பார்த்து அரசமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள் என்று கூறுவது கேலிக்குரியது.

கேள்வி : நாம் ஏன் அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் ?

பதில் : மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை அரசமைப்பு சட்டமே வழங்கி உள்ளது. நாட்டிற்கு நன்மை என்று இன்று நாம் கருதும் விஷயத்தை வருங்கால தலைமுறையினர் மீது திணிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? அவர்களே முடிவு செய்யட்டும். இந்த விஷயத்தில் அம்பேத்கரும் நேரும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார்கள். தேசத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியை அரசமைப்பு சட்டமே வழங்குகிறது. அதனால் தான் 107 முறை அது மாற்றப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அல்ல……

கேள்வி : ஆனால் ஆர்எஸ்எஸ் ஸின் செல்வாக்கு மாற்றத்திற்கு காரணமாகி உள்ளதே……

பதில் : ஆர் எஸ் எஸ் ஆட்சி நிர்வாகத்தில் எப்போதும் தலையிடுவதில்லை. எங்கள் ஸ்வயம்சேவகர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கூட அரசமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமென நினைத்தால் உரிய கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தி, அதன் பிறகு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.

கேள்வி : மோகன் பாகவத் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். நான் பிகாரில் இருந்தேன். அங்கு 2.1 பற்றி பேசுகிறார்கள்……

பதில் : மக்கள் தொகை இயலை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும். 2.1 என்பது சராசரி மக்கள் தொகை வளர்ச்சி. ஒன்பது குடும்பத்தில் தலா இரண்டு குழந்தைகள் இருந்தால் அதன் சராசரி 2.1 ஆகும். இன்று நம்முடைய மக்கள் தொகை வளர்ச்சி 2.1 விட குறைந்து 1.9 ஆக உள்ளது. 2.1 என்ற சராசரியை நாம் பராமரித்தால் நம்முடைய சமுதாயத்தில் போதுமான இளைஞர் சக்தி இருக்கும். ஆனால் இன்றுள்ள வளர்ச்சி விகிதத்தை பார்க்கும் போது அடுத்த இருபது ஆண்டுகளில் நம்மிடம் போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள்.

பல நாடுகளில் இந்த பிரச்சனை உள்ளது. கடந்த முப்பதாண்டு காலமாக குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை பின்பற்றிய சீனா இன்று மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்துகிறது. இன்று நம் நாட்டில் வளர்ச்சி விகிதம் 1.9 என்று குறைந்துள்ளதால் பாகவத் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஆலோசனை கூறுகிறார். எல்லா பெண்களும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென நாங்கள் கூறவில்லை. அது மட்டுமன்றி இது ஒரு ஆலோசனைதான்.

கேள்வி : மதத்தையும் அறிவியலையும் ஆர்எஸ்எஸ் எப்படி இணைக்க பார்க்கிறது ?

பதில் : நாங்கள் சுவாமி விவேகானந்தரை பின்பற்றுபவர்கள். அறிவியலுக்கு ஒவ்வாத விஷயங்களை மதத்தின் பெயரால் புனித படுத்த முடியாது என்று அவர் சொல்லியுள்ளார். ஹிந்து மதத்தில் உள்ள ஆன்மீக உண்மைகள் அறிவியல் பூர்வமானவை. இதில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், ஹிந்து மதம் சொல்லும் சில விஷயங்களை அறிவியல் இன்னும் கண்டடையவில்லை என்பதுதான். இதுவரை அறிவியல் சென்றடையாத சில தளங்களை ஹிந்து ஆன்மீகமும் ஹிந்து சிந்தனையும் சென்றடைந்துள்ளன.

எச். ஜி. வெல்ஸ் விண்கலன்களை பற்றி நாவல் எழுதிய போது விண்கலங்களே இல்லை. ஆனால் இன்று நம்மிடம் விண்கலன்கள் உள்ளன. எனவே சில நேரங்களில் ஆன்மீகமும் மதமும் அறிவியலை கடந்து செல்லும்.

கேள்வி : முஸ்லிம்களும் ஹிந்துக்களே என்று ஆர்எஸ்எஸ் சொல்கிறது. அப்படி இருக்க ஹிந்து பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்வதில் ஏன் பிரச்சனை எழுகிறது ?

பதில் : மேற்கத்திய நாடுகளில் இருப்பதை போல் இங்கு இல்லை. அங்கு முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். இங்குள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களில் 99.9 சதவீதம் பேர்கள் இந்திய இனத்தினர். ஏதோ ஒரு காலகட்டத்தில் மதம் மாறியவர்கள். எனவே தான் நாங்கள் – நீங்கள் கடவுளை பின்பற்றும் வழியை மாற்றிக் கொண்டீர்களே தவிர உங்கள் வரலாற்றையோ கலாச்சார வேர்களையோ மாற்ற முடியாது – என்று சொல்கிறோம்.

கேள்வி : ஹிந்துவாக பிறக்கத்தான் முடியும் என்று தானே சொல்கிறார்கள்…….

பதில் : தாய் மதம் திரும்ப எங்களிடம் செயல்திட்டம் உள்ளது. ஆனால் அதை ஆசை காட்டியோ அச்சுறுத்தியோ செய்வதில்லை. விலகிச் சென்ற ஒருவர் விருப்பப்பட்டு தொன்மையான நம்பிக்கைக்கு மீண்டும் வர வேண்டுமென்றால் அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.

இது இரு வழிப்பாதை. ஆனால் இங்குள்ள சிறுபான்மையின தலைவர்கள் அதை ஏற்பதில்லை. அவர்கள் இந்துக்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவும் மாற வேண்டும் என்கிறார்கள் . திரும்பி போவதை ஏற்பதில்லை. எந்த வகையில் போனாலும் அது ஆசைக்கோ அச்சுறுத்தலுக்கோ ஆட்பட்டு இருக்கக் கூடாது.

இதை நீங்கள் ஏற்பதில்லை. எனவேதான் நாம் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்று ஆர் எஸ் எஸ் கூறுகிறது. நாங்கள் ஹிந்து என்கிறோம் நீங்கள் பாரதிய என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்தியா பல்வேறு வகைப்பட்ட சமுதாயத்தைக் கொண்டது. வெவ்வேறு மதங்களிடையே நடக்கும் திருமணம் லவ் ஜிகாத்தாகி உள்ளது. வேறு ஜாதி திருமணம் சமுதாயத்தில் கொத்தளிப்பை ஏற்படுத்தவில்லையா ?

கேள்வி: உங்கள் புத்தகத்தில் உள்ள ஒரு உரையில் ஜாதி கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டுமென கூறுகிறதே ?

பதில் : இந்த விஷயங்களை கவனமாக அணுக வேண்டும். மக்கள் சதி திட்டம் என்று கருதி எதிர்வினையாற்றலாம். கேரளத்தில் லவ் ஜிகாத் விஷயத்தை எழுப்பியவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? அதை முதலில் எழுப்பியவர்கள் கிறிஸ்துவ அமைப்பினர். பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமண ஆசை காட்டி எங்கள் மதத்தைச் சேர்ந்த பெண்களை கவருகிறார்கள் என்றனர். நாங்கள் உண்மையான மதக்கலப்பு மற்றும் ஜாதி கலப்பு திருமணத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கிறோம். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென திறந்த மனத்துடன் கூறுகிறோம்.

கேள்வி : ஆர் எஸ் எஸ் பாஜக உறவு எப்படிப்பட்டது ?

பதில் : அரசியலுடன் ஆர்எஸ்எஸுக்கு உள்ள தொடர்பு மிகவும் சுவாரசியமான விஷயம். ஆரம்பிக்கப்பட்ட முதல் 25 ஆண்டு காலம் பிரிட்டிஷ் அரசினால் பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்திஜி கொலை தொடர்பாக தவறான குற்றச்சாட்டினால் அரசிடம் இருந்து மிகப்பெரிய சவால் எழுந்தது.

ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டபோது நமக்கு அரசியல் குரலும் தேவை என்ற எண்ணம் முதன்முதலாக ஆர்எஸ்எஸ் க்குள் எழுந்தது.

50 ஆண்டுகள் ஆகிய நிலையில், ஆர் எஸ் எஸ் ஸூம் ஜன சங்கமும் வலிமையாக இருந்த நிலையில், ஆர் எஸ் எஸ் மீண்டும் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜனதா கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்எஸ்எஸ் முடிவெடுத்தது. ஆனால் அந்த அனுபவம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதன் பிறகு பாஜக துவங்கப்பட்டது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு 2000 இல் ஆர் எஸ் எஸ் தனது 75 வது ஆண்டை கொண்டாடும்போது அதன் அரசியல் களப்பணியில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியாயினர். வாஜ்பாய் பிரதமரானார் . உறுதியான ஆர்எஸ்எஸ் காரர் ஒருவர் இப்போது உலக தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆர் எஸ் எஸ் ஸின் அரசியல் பயணத்தை பார்க்கும் போது 1925 இல் தொடங்கி 2025 வரை அது தினசரி அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகியே இருக்கிறது.

கேள்வி : ஆனால் ஆர்எஸ்எஸ் இப்போது எல்லா இடங்களிலும் இருப்பதாகவே தெரிகிறதே ?

பதில் : ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். ஆனால் அமைப்புகள் சுதந்திரமானவை. அதன் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் வயதில் மூத்தவர்களாக உள்ளார்கள். அவர்கள் எங்களை வழிநடத்தி வருகிறார்கள். எங்களிடம் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.

கேள்வி : ஒரு பெண் ஆர்எஸ்எஸ் ஸின் தலைவராக எப்போது வருவார் ? அல்லது ஒரு முஸ்லிம் எப்போது ஆர் எஸ் எஸ் ஸின் தலைமைக்கு வர முடியும் ?

பதில் : எதிர்காலத்தைப் பற்றி என்னால் அனுமானமாக கூற முடியாது. ஆனால் நாங்கள் அந்த கண்ணாடி வழியாக பார்ப்பதில்லை. நீங்கள் முஸ்லிமா அல்லது ஹிந்துவா என்பது விஷயம் அல்ல. அதற்கான தகுதி உங்களுக்கு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

கேள்வி : அதற்கான தகுதி என்ன ?

பதில் : முழுமையான அர்ப்பணம். ஆர் எஸ் எஸ் தத்துவம் பற்றி மற்றும் இந்திய சமுதாயம் பற்றி முழுமையான புரிதல் இருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் சொல்லும் வார்த்தைகள் அதன் அங்கத்தினர்கள் மற்றுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தினராலும் கவனமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் அது இன்றிருக்கிறது.

ஆர் எஸ் எஸ் ஸை ஆதரிப்போரில் 90 சதவீதத்தினர் ஷாகாவுக்கு வெளியே இருக்கிறார்கள். எங்கள் தத்துவத்தை புரிந்து கொண்டவர்கள் தேவை. அப்படி புரிந்து கொண்டவர்கள் அமைப்பின் படிநிலைகளில் உயர்ந்து வருவார்கள்.

கேள்வி : ஹிந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் ?

பதில் : இந்த நாடு ஹிந்து நாடு என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு இல்லையென்றால் காந்தி சுதந்திர போராட்டத்தில் ரகுபதி ராகவ ராஜா ராமை பாடி இருக்க மாட்டார். திலகர் கணபதி உற்சவத்தையும் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவையும் கொண்டாடி இருக்க மாட்டார்.

அரசமைப்பு சட்டத்தின் மூலமாகவே இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக ஏன் அறிவிக்க கூடாது ? என்று சிலர் என்னிடத்தில் கேட்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தின்படி இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதற்கு காரணமே இது ஹிந்து ராஷ்டிரமாக இருப்பதால்தான்.

ஹிந்து ராஷ்டிரத்தில் எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பும் மரியாதையும் இருக்கும். முழு மத சுதந்திரம் இருக்கும். பிரிவினையற்ற , ஒத்திசைவு கொண்ட , உறுதியான அரசியல் நிர்வாகம் இங்கிருக்க வேண்டுமென ஆர் எஸ் எஸ் விரும்புகிறது. மக்களுக்கு சுதேசி உணர்வு தேவை. தற்சார்புள்ள பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும். நல்ல குடும்ப பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.

கேள்வி : ஹிந்து ராஷ்டிரத்தில் ஆதிவாசிகள் எங்கு பொருந்துகிறார்கள் ?

பதில் : அவர்கள் ஹிந்து ராஷ்டிரத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கம். நாம் ஆதிவாசி என்ற வார்த்தையை புரிந்து கொள்ளவில்லை. இங்கு வாழ்பவர்கள் எல்லோரும் ஆதிவாசிகள் தான். மேற்கத்திய புரிதலின்படி மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியது. அது அவர்களது புரிதல்.

நன்றி: அவுட்லுக் மேகஸின்

சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு! வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம்!

sabarimala melsandh 25 26i - 2025

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் தொடங்கியது. வழக்கமாக மாத பூஜைக்கு எதிர்பார்த்ததைவிட இம்முறை மிக அதிக அளவில் பக்தர்கள் வந்ததாலும் மழை தொடர்ந்து பெய்ததாலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும் சிரமம் நிலவியது. 

இந்த நிலையில் சபரிமலையில் இன்று காலை உஷபூஜை முடிந்ததும் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. சபரிமலை புதிய மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பிரசாத் என்பவரும் மளிகைபுரம் புதிய மேல் சாந்தியாக மனோ நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொ தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு காலை 8 மணிக்கு நடைபெற்றது.

ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் தனித்தனி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

ஐயப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதி காஷ்யப் வர்மா எடுத்தார். அதில் சபரிமலை மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக உள்ளார்.

இதேபோல் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதியான மைதிலி என்ற சிறுமி எடுத்தார். அதில் கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக வரும் நவ. 16ல் பொறுப்பேற்பார்கள்.

தற்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசாத் இ.டி., ஆரஷ்வரம் சாஸ்தா கோயிலின் தலைமை அர்ச்சகராக பணியாற்றுகிறார்.

மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவர் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார், “நான் மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிப்பது இது மூன்றாவது முறை. பகவான் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டதில் நான் உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்” என்று கூறினார்.

sabarimala pandalam royal family children - 2025

முன்னதாக, பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், காஷ்யப் வர்மா மற்றும் மைதிலி கே வர்மா ஆகியோர் அக்டோபர் 18, சனிக்கிழமை சபரிமலை மற்றும் மாளிகப்புரத்திற்கான மேல்சாந்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குடவோலை முறையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் இந்த மேல்சாந்தி தேர்வில் பங்கேற்றார்கள்.

தீபாவளி சிறப்பு; தந்தேரஸ் எனும் குபேரத் திருநாள்!

diwali lighting - 2025

தன்தேரஸ் – தீபாவளி

— ராமலிங்கம் கிருஷ்ணா —

தன்தேரஸ் – அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் வரும் கிருஷ்ண பட்ச திரயோதசி திதி (18.10.25) – அட்சய திருதியை அன்று பொன் பொருள் வாங்கினால் எவ்வளவு சுபிட்சமோ விருத்தியோ அது போலவே வட இந்திய மாநிலங்களில் தந்தேரஸ் அன்று பொருட்களை வாங்குவதுண்டு.

இந்தியாவில் பல பகுதிகளில், தந்தேராஸ் தீபாவளி பண்டிகைகளின் தொடக்கத்தை குறிக்கிறது, இது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் தன்வந்திரி, லட்சுமி, குபேரன், யமன் ஆகியோரை வழிபடுகின்றனர்.

பட்டாசு என்பது வேடிக்கை அல்ல, அது இந்துக்களின் சம்பிரதாயம், ஆசியக் கண்டம் இந்துமதத்தின் பிடியில் இருந்த வந்த பொழுது குறித்த காலம் இருந்து விட்டு விடைபெற்று செல்லும் பித்ருக்களை வழியனுப்பும் ஒருவித சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்தோம்.

அந்த கலை இந்தியாவில் இருந்தது, பூமியில் விளக்கேற்றி பித்ருக்களை வழிபடுவது போல வானில் விளக்கேற்றி அவர்களை வழியனுப்பி வைக்கும் சம்பிரதாயம்.

அந்த கலை இந்தியாவில் பவுத்த சமண காலங்களில் விடைபெற்றது, ஆனால் பெளத்த மதத்தை தழுவினாலும் சீனா இதை அந்த நாட்டின் கலாச்சார ரீதியாக தொடர்ந்து கொண்டு இருந்து வருகிறது.

முன்னோர்கள் வ்ழிபாடு, முன்னோர்கள் ஆசீர்வாதம், என வானத்தை நோக்கி விளக்கு ஏற்றி வேண்டும் பிரார்த்தனை தான். அதனாலே தான் கத்தி, கோடரி, ஈட்டி, வாள் என சண்டையிட்ட சீனர்கள் வெடிபொருளை ஆயுதமாக ஒரு போதும் பயன்படுத்தவில்லை, அது அங்கே ஒரு வழிபாடாக தெய்வத்திடம் வேண்டுகிற வழிபாட்டு பொருளாகவே புனிதமானதாகவே இருந்து வருகிறது.

(பின்னாளில் வந்த ஒரு கூட்டம் தான் அதனை ஆயுதமாக்கினார்கள், அதற்கு பின் உலகம் இன்றிருக்கும் வெடிகுண்டு அழிவுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது).

ஆம், பட்டாசு என்பது விளக்கேற்றுதல் போல வானில் தெய்வங்களை பித்ருக்களை வணங்கும் மரபு, அதை ஒவ்வொரு இந்துவும் உற்சாகமாக செய்ய வேண்டும், செய்வது நன்று.

இந்த இரவில், தீபாவளிக்கு முந்தைய இரவுகளில் பட்டாசும் கூடவே இந்த யம தீபமும் அவசியமானது.

யம தீபம் என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல, அது முன்னோருக்கான வெறும் அடையாள வழிபாடும் அல்ல, ஆழ்ந்த தத்துவம் கொண்டது.

ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் எதிரி பயம், தைரியம் என்பது அச்சத்தை மறைப்பதன்றி முழுக்க களைவது அல்ல, ஆனால் பயம் எல்லோர் மனதிலும் எப்போதும் உண்டு, அடுத்து என்ன ஆகுமோ எனும் அச்சமும், மரண பயமும் அப்படியானது, அந்த பயம் தான் ஒருவனை முடக்கும், கவலையுற செய்யும், மனகுழப்பத்தை தரும், பெரும் குழப்பத்தில் தள்ளும்.

இதனால் ஒரு மனிதன் களைய வேண்டிய விஷயங்களில் முதன்மை பயம் என சொன்னது இந்துமதம், மேலும் இந்துமத தெய்வங்களை வணங்கும் போது அவர்களின் கைகள் “அபய முத்திரையால்” நமக்கு காண்பிக்கும், அதாவது நம் மனபயத்தைப் போக்கும் அடையாளத்தை அந்த கரங்களில் காணலாம்.

அடுத்ததாக என்னாகுமோ, மரணித்தால் என்னாகுமோ எனும் அந்த பயம் ஒருவனை முடக்கும் , ஒருவனை கர்மம் செய்யவிடாமல் குழப்பும், மரணபயம் இன்னும் கொடுமையானது, அடுத்து எங்கு செல்வோமோ எப்படி இருக்குமோ என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்தும்.

எல்லாவற்றிக்கும் பயப்படுவார்கள் யார் என்றால் தர்ம வழியில் கர்ம வழியில் நடக்காதவர்கள் தான், அவர்களுக்குத் தான் பயம் வரும், சரியான பாதையில் செல்கின்றேன் என நம்புவோர்க்கு பயம் எப்போதும் வராது.

தர்ம வழிதான் அச்சத்தினை அகற்றும், தர்மம் என்பது தன் நிலை அறிந்து, நெறி அறிந்து, தர்மம் அறிந்து, அந்தவழி நடப்பது, நான் தர்ம வழி நடப்பவன் அதனால் நான் அச்சபட வேண்டியது இல்லை, தர்மம் என்னை மீட்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பவர் எக்காலமும் கலங்குவதில்லை.

மகாபாரதத்தில் தருமர் அதற்கு முழு உதாரணம், அவன் முழுக்க முழுக்க தர்மத்தின் வழி நடந்தவர், அந்த தர்மம் கொடுத்த தெளிவுதான் 14 வருடம் அவரை கலங்காமல் வைத்திருந்தது, சூதாட்டம் ஆடும் போதும், துரியன் அவையிலும் அவர் கலங்கவில்லை.

யட்சப் பிரஷ்ணத்தில் அந்த தேவதை முன்னால் தம்பிகளின் இறந்த உடலை கண்டபோதும் அவர் கலங்கவில்லை, கலங்காமல் அந்த தேவதையின் கேள்விக்கு தகுந்த பதில்களை கூறி சகோதரர்களை மீட்டு வந்தார், எங்கும் அவர் அஞ்சி அழுது ஒடுங்கியதாக யாரும் கண்டதில்லை. காரணம் அவர் தன் தர்மம் அறிந்திருந்தார், அதனாலே தர்ம வழியில் நடந்தார், தெளிவாக இருந்தார்.

அதே சமயம் அர்ஜூனன் களத்தில் கலங்கினான், தன் தர்மத்தை மறந்தான் குழம்பினான் அழுதான், அவனை கீதை உரைத்து கண்ணன் தேற்றினார்.

தர்மத்தின் வழியில் ஒருவன் வாழும் போது அச்சமில்லை, பதற்றமில்லை. அதற்காக காவல்துறைக்கு அஞ்சியோ, சட்டதிட்டங்களுக்கு அஞ்சியோ தர்மத்தின் வழியில் வாழ்வது தர்ம வாழ்வாகாது அதுவும் அச்சமிக்க வாழ்வே.

மனதார கர்மத்தை ஏற்று நடத்தலே கர்மத்தை கடக்கும் வழி. அந்த வரத்தை தருபவன் தான் எமதர்மன். ஆம், எம தர்மன் ஒரு ஞானகுரு, ஞான வெளிச்சம் தருபவன், அவனை வணங்கினால் மரண பயம் அகலும், எல்லாவித அச்சமும் அகலும், முழு தெளிவும் ஞானமும் கிடைக்கும்.

இந்த உடல் அழியக்கூடியது உயிர் பிரியக்கூடியது ஆன்மா அழியாதது என கீதையில் சொன்னார் கண்ணன், அந்த தெளிவினை தருபவன் எமதர்மனே.

அச்சமற்ற மனம் எங்கும் குழம்பாமல் தெளிந்த அர்ஜூனன் போல, தர்மனை போல, ராமனை போல வைராக்கியமாக பந்த பாசத்தை, மாயையை கடந்த கர்மத்தை போல, கர்மமாக செய்யும் வரத்தை தருவதே எம வழிபாடு.

துலா ராசியில் சூரியன் வரும் இம்மாதம் சனி உச்சமடையும் மாதம், அந்த சனீஸ்வரன் வாழும் போது கர்மத்தை செய்யவைப்பவர், எமதர்மன் வாழ்வுக்கு பின்னர் கர்ம கணக்கு வழக்குகளை சரிபார்ப்பவர், அதனால் தான் இந்த நாளில் எமனை வழிபட சொன்னார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால் மஹாளய பட்சத்தில் பூமிக்கு வந்த மூதாதையர்கள், பித்ருக்கள் மீண்டும் எமலோகம் செல்லும் நாள் இது என்பதால் அவர்களுக்கும் சேர்த்து பிரார்த்தித்து எமனிடம் வேண்டும் நாளும் இந்த நாள்தான்.

அந்த எமதீபம் ஏற்ற சில வழிமுறைகள் உண்டு – மாலை ஆறுமணிக்கு பின் வீட்டின் உயரமான பகுதியில் நல்லெண்ணையால் புதிய அகல் விளக்கில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.

வீட்டில் உள்ளோர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்றுதல் வேண்டும். விளக்கு எமதிசையான தென் திசையை நோக்கி எரிதல் அவசியம். விளக்கேற்றி அந்த விளக்கின் முன்பு அமர்ந்து முன்னோரை நினைந்து இந்த துதிகளை பாடலாம்

“யமாய நம
தர்ம ராஜாய நம
ம்ருத்யவே நம
அந்தகாய நம
வைவஸ்தாய நம
காலாய நம
ஸர்வ பூத க்ஷயாய நம
ஓளதும்பராய நம
தத்னாய நம
நீலாய நம
பரமேஷ்டினே நம
வ்ருகோதராய நம
சித்ராய நம
சித்ரகுப்தாய நம
சித்ரகுப்தா வை ஓம் நம இதி”

இந்த ஸ்லோகத்தையும் –

”கார்திகஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே
யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி”’ எனவும்,

“மம சர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா
யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே
” ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ
த்ரயோதஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம” எனவும் வழிபடலாம்.

இப்படி சொல்லி வழிபட்டால், தன்னை வழிபடுவோரை நோக்கி யம தர்மன் “தீர்காயுஷ்மான் பவ/தீர்க ஸுமங்கலீ பவ” என ஆசீர்வதிப்பார்.

யம வழிபாடு என்பது கர்ம பாவங்களை ஒழிக்கும், தர்மநெறியில் நடக்க வைக்கும், கர்மத்தை சரியாக செய்ய வைக்கும், மரண பயத்தை அகற்றும், மரண பயம் அகன்றவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும், எதுவும் அவனை தடுக்காது, கர்மத்தை தர்மமாக அவன் சிறக்க செய்வான், எங்கும் கலங்கமாட்டான், குழம்பமாட்டான், அவன் பிறப்பு சரியாக நிறைவடைந்து பிறப்பற்ற நிலையினை அந்த ஆத்மா அடையும்.

அந்த வரத்தை எமதர்மன் ஞான குருவாய் நின்று அருள்வார். அவரவர் கர்மத்தை தர்மத்தை ஒவ்வொருவரும் உணரும் போது வீடு துலங்கும், வீடு துலங்கினால் எல்லாம் ஒவ்வொன்றாக துலங்கி நாடே மிகபெரிய அளவில் உலகிற்கு தர்மம் போதித்து ஒளிவீசும்.

அந்த தர்மத்தை அந்த வரத்தை யமதர்மன் அருளட்டும், எல்லா வித பயமும் அச்சமும் விலகட்டும், அதிகம் பிரார்த்திக்க முடியாதவர்கள், நல்லெண்ணெய் விளக்கேற்றி தெற்கு பக்கமாக வைத்து, யம காயத்திரியினை 27 முறை சொன்னால் நிச்சயம் பலன் உண்டு.

“ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
மஹாகாளயே தீமஹி
தன்னோ யம ப்ரசோதயாத்.”

(எள்ளின் நல்லெண்ணெயில் ஏற்றும் திரியிட்ட விளக்குத்தான், மண்ணில் செய்யபட்ட அகல் விளக்குத்தான் யம தீபத்துக்கு உகந்தது, சூட்சும பலன்கள் அதில்தான் முழுமையாக கிடைக்கும் என்பதால் அதை தவிர வேறேதும் சரியான தேர்வாக இருக்க முடியாது)

வாணவேடிக்கை என்பது பாரம்பரிய சின்னமாக கோவில்களில் கடைப்பிடித்து வருகிற ஒரு நிகழ்ச்சி, இன்றளவும் கேரளாவில் உள்ள கோவில்களில் வெடி வழிபாடு என்று ஒன்று இருக்கிறது. அறுபதுகளில் நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் வாணவேடிக்கை சுவாமி புறப்பாட்டின் போது நடக்கும் சப்பரத்திற்கு முன்பாக முப்பது நாற்பது அடி இடைவெளியில் நடக்கும்.

இப்போது தான் ராக்கெட் பாம் வந்திருக்கு, ஆனால் முன்பெல்லாம் ஒரு பெரிய மூங்கில் குச்சியில் சணல் கயிறை கட்டி அதற்குள் வெடி மருந்தை திணித்து அதில் நெருப்பைப் பற்ற வைத்து மேல் நோக்கி எறிய அது அந்த மருந்தின் வேகத்தில் மேலே சென்று வெடிக்கும். வாணவேடிக்கை நிகழ்த்துபவரில் ஒருவர் கையில் ஆறு ஏழடி மூங்கில் கம்பு வைத்து இருப்பார். அதன் மேல் முனையில் ஒரு சின்னக் கிண்ணம் மாதிரி இருக்கும். அதில் ஒரு பூங்கொத்தி புஸ்வானத்தை ஏற்றி வைத்து உயரே காட்டுவார். அது மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், வெள்ளை என்று தனித்தனிக் கலரில் இருக்கும். இப்போது 10000,100000 லட்சம் வெடிகள் இருக்கிறது அல்லவா அது மாதிரி ஆட்டம் பாம், சீனிவெடி, சரவெடி என்று கோவில் திருவிழா களைகட்டும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

1001013323 - 2025

ஐப்பசிமாத பூஜை க்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வெள்ளிக்கிழமை மாலை நடை திறந்து மேல்சாந்தி தீபமேற்றி வைத்தார்.நாளை சனிக்கிழமை முதல் சபரிமலை ஐயப்பனுக்கு ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கும்.சபரிமலை ஐய்யப்பன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள மாளிகப்புரம் கோவிலில் புதிய மேல்சாந்தியாக பணியாற்றிட புதிய மேல்சாந்தி தேர்வு சனிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது வேறு பூஜைகள் ஏதும் இன்றி பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இரவு நடை அடைக்கப்படும் நாளை சனிக்கிழமை முதல் ஐப்பசி மாத பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு துவங்கி நடைபெறும் நெய்யபிஷேகம் படி பூஜை உட்பட பல்வேறு வழிபாடுகள் ஐயப்பனுக்கு விமர்சையாக நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகை புரம் கோயில் மேல் சாந்தி பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும்.தற்போதைய மேல் சாந்தி பதவிக்காலம் அடுத்த மாதம் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2025-26-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும்.சபரிமலை கோவிலில் உஷபூஜைக்கு பிறகு, புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும் .

மேல்சாந்திக்கான போட்டியில் உள்ளவர்கள் மாளிகப்புரம் மேல்சாந்திக்கான போட்டியில் உள்ளவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதப்பட்டு சன்னிதானத்தில் வைத்து தந்திரி , மேல்சாந்தி ஆகியோர் முன்னிலையில் கோவில் பாரம்பரியப்படி குலுக்கல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

சபரிமலை, மாளிகைப்புரம் மேல் சாந்திகளை தேர்வு செய்யும் பந்தள மகாராஜா குடும்ப வாரிசுகளான இருகுழந்தைகளை பந்தளம் அரண்மனை அங்கீகரித்து அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மேல்சாந்திகளை தேர்ந்தெடுக்கும் இரு குழந்தைகளையும் அங்கீகரித்துப் பந்தளம் அரண்மனை அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்வாகும் மேல்சாந்திகள், நவம்பர் 16ம் தேதி பொறுப்பேற்று ஓராண்டுக்கு சன்னதிகளில் தங்கி பணியாற்ற உள்ளனர்.

தற்போது சபரிமலை மேல்சாந்தியாக கொல்லம் சக்திகுளங்கரையை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் உள்ளனர்.இவர்களது பதவிக்காலம் வரும் நவ 16மண்டலபூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகை புரம் கோயில் நடை திறந்ததும் நிறைவடையும்.

பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், .காஷ்யப் வர்மா & மைதிலி கே வர்மா ஆகியோர்‌ இன்று இருமுடி கட்டி சபரிமலை வந்தடைந்தனர்.அவர்களை தேவஸம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

அக்டோபர் 18, சனிக்கிழமை சபரிமலை மற்றும் மாளிகாப்புரத்திற்கான மேல்சாந்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குடவோலை முறையில் இவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, சபரிமலை – மாளிகாபுரம் கோயிலின் மேல்சாந்திக்கான சீட்டுப் போடுவதற்காக,

பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த காஷ்யப் வர்மா மற்றும்
மைதிலி கே வர்மா ஆகியோர் பந்தளம் அரண்மனை வலிய தம்புரான் திருவோணம் நாள் ராம வர்மா ராஜாவின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்கள் சபரிமலை வந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸின் அறிக்கையின் அடிப்படையில் குழந்தைகள் தேர்வுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பந்தளம் அரண்மனை வலிய தம்புரான் மற்றும் வலிய தம்புராட்டி ஆகியோரின் ஆசிகளைப் பெற்ற பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதி நண்பகலில் பந்தளம் வலிய கோய்க்கல் கோயிலுக்குச் சென்ற பிறகு, குழு பிரதிநிதிகள் (துணைத் தலைவர் அருண் குமார், குழு உறுப்பினர் கேரளம் வர்மா) மற்றும் அவர்களது பெற்றோருடன் சன்னிதானத்திற்குப் புறப்பட்டு வந்தடைந்தனர்.

தீபாவளி ஸ்பெஷல்… பூக்கள் விலை கடும் உயர்வு!

madurai flower market - 2025

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து மல்லிகை பூ 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது., இந்த பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் முதல் தங்கம் விலை வரை உயர்வை எட்டியுள்ளது.,

அந்த வகையில் பண்டிகை காலங்களில் பூக்களின் பங்கும் இருக்கும் பட்சத்தில் பூக்களின் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது, அவ்வாறு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.,

குறிப்பாக கடந்த வாரம் வரை கிலோ 600 க்கு விற்பனை ஆன மல்லிகை பூ இன்று 1500 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் 1000 ரூபாய்க்கும், அரளி 150, மரிக்கொழுந்து 100, பன்னீர் ரோஸ் 150, பட்டன் ரோஸ் 200, கோழி கொண்டை 100 என இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.,

மழை காரணமாகவும், வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் எனவும் மல்லிகை 2000 முதல் 3000 வரை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது., இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சொந்த ஊர் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சௌந்திரராஜா!

soundaraja in madurai amman temple theechatti - 2025

உசிலம்பட்டி அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தனது சொந்த ஊர் திருவிழாவில் – அக்னி சட்டி எடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்திய நடிகர் சௌந்திரராஜா.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தி்ரராஜா. இவர் சுந்தரபாண்டியன் முதல் பூவையார் நடித்துள்ள ராம் அப்துல்லா ஆண்டனி வரை குணச்சித்திர நடிகராகவும் பயணித்து வருகிறார். நடிகர் விஜய் ஆதரவாளரும்கூட!

இந்நிலையில் , கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நடிகர் சௌந்திர ராஜாவின் சொந்த ஊரில் இன்று முதல் அந்த ஊரில் உள்ள கௌமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வில், நடிகர் சௌந்திர ராஜ் -ம் கலந்து கொண்டு தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

அருள் இறங்கி வெறும் கைகளாலேயே தீ சட்டியை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்த சௌந்திர ராஜா விற்கு உறவினர்கள் மாலை அணிவித்தும் மஞ்சள் நீர் ஊற்றியும் நெகிழ்ச்சியடைந்தனர்.

ஆன்மீக அமுதம்: லக்ஷ்மி எத்தனை லக்ஷ்மியடி..!

varalakshmi vratham - 2025
#image_title

— ராமலிங்கம் கிருஷ்ணா —

லக்ஷ்மி எத்தனை லக்ஷ்மியடி..!

நகையும் நட்டும் போட்டிருந்தா… சொர்ணலட்சுமி…
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா…தான்யலட்சுமி…
மானம் காக்க துணிஞ்சு நின்னா… வீரலட்சுமி…
எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா…விஜயலட்சுமி… எத்தனை லட்சுமி பாருங்கடா… ஆ… இவ என்ன லட்சுமி கூறுங்கடா… ஆ…
நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும்… அன்னலட்சுமி ஆகுமடா…ஆமா அன்னலட்சுமி ஆகுமடா…

— கவிஞர் வாலியின் வைர வரிகள் இவை.

லக்ஷ்மி ….எத்தனை லக்ஷ்மி 27 நட்சத்திரங்களில் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார் – உதாரணமாக –

சுக்கிரன் அசுவினியில் இருந்தால் வித்யாலக்ஷ்மியாகவும்,
பரணியில் இருந்தால் அன்ன லக்ஷ்மியாகவும்,
கிருத்திகையில் ஜோதி லக்ஷ்மியாகவும்,
ரோஹிணியில் தனலக்ஷ்மியாகவும்,
மிருக சீரிடத்தில் முத்து லக்ஷ்மியாகவும்,
திருவாதிரையில் வீர லக்ஷ்மியாகவும்,
புனர் பூசத்தில் ராம லக்ஷ்மியாகவும்,
பூசத்தில் குரு லக்ஷ்மியாகவும்,
ஆயில்யத்தில் நாக லக்ஷ்மியாகவும்,
மகத்தில் தான்ய லக்ஷ்மியாகவும்,
பூரத்தில் சந்தான லக்ஷ்மியாகவும்,
உத்திரத்தில் சீதா லக்ஷ்மியாகவும்,
ஹஸ்தத்தில் கான லக்ஷ்மியாகவும்,
சித்திரையில் சுப லக்ஷ்மியாகவும்,
சுவாதியில் தீப லக்ஷ்மியாகவும்,
விசாகத்தில் சுப்பு லக்ஷ்மியாகவும்,
அனுஷத்தில் ஆனந்த லக்ஷ்மியாகவும்,
கேட்டையில் யோக லக்ஷ்மியாகவும்,
மூலத்தில் வசந்த லக்ஷ்மியாகவும்,
உத்திராடத்தில் ராஜ லக்ஷ்மியாகவும்,
திருவோணத்தில் மகா லக்ஷ்மியாகவும்,
அவிட்டத்தில் அஷ்ட லக்ஷ்மியாகவும்,
சதயத்தில் விஜய லக்ஷ்மியாகவும்,
பூரட்டாதியில் பாக்கிய லக்ஷ்மியாகவும்,
உத்திரட்டாதியில் வேங்கட லக்ஷ்மியாகவும்,
ரேவதியில் கஜலக்ஷ்மியாகவும் அருள் பாலிக்கிறார்.

பெயர் அமைப்புகள் மாறும். குண பாவங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஷோடச லக்ஷ்மி அல்லது 16 லக்ஷ்மி

மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

ஸ்ரீதனலட்சுமி – நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமி அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

ஸ்ரீவித்யாலட்சுமி – எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

ஸ்ரீதான்யலட்சுமி – ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

ஸ்ரீவரலட்சுமி – உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

ஸ்ரீசெளபாக்யலட்சுமி – ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

ஸ்ரீசந்தானலட்சுமி – எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

ஸ்ரீகாருண்யலட்சுமி – எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

ஸ்ரீமகாலட்சுமி – நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

ஸ்ரீசக்திலட்சுமி – எந்த வேலையும் என்னால் முடியாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

ஸ்ரீசாந்திலட்சுமி – நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

ஸ்ரீசாயாலட்சுமி – நாம் நம சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி – எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

ஸ்ரீசாந்தலட்சுமி – பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

ஸ்ரீகிருத்திலட்சுமி – நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஸ்ரீவிஜயலட்சுமி – விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

ஸ்ரீஆரோக்கிய லட்சுமி – நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்; 24ல் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

school students going in rain - 2025
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வடகிழக்குப் பருவமழை இன்றிலிருந்து தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதிலிருந்தும் விலகிவிட்டது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டலக் காற்றுச்சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் வலுவான கிழக்கு-வடகிழக்குக் கஆற்று வீசுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழைபெய்யும். குறிப்பாக இரவு, அதிகாலை நேரங்களில் மழைபெய்யும்.

பிற இடங்களில் பகல்நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இன்று கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கியதால் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் இறந்துபோனதாகத் தகவல் வந்துள்ளது.

அரபிக்கடலில் நிலவும் வளிமண்டலக் காற்றுச் சுழற்சி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மஆறக்கூடும்.

வங்கக் கடலில் வருகின்ற 24ஆம் தேதி ஒரு காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, வடதமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றாழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையுமா, தமிழகத்தைத் தாக்குமா என்பது குறித்து 24ஆம் தேதி வானிலைத் தரவுகள் கிடைத்த பின்னரே சொல்ல இயலும்.

சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு; ஜனாதிபதி வருகையால் தரிசனத்தில் மாற்றம்!

president to sabarimala - 2025

ஐப்பசிமாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அக்17ல் மாலை திறப்பு : ஜனாதிபதி வருகை! தரிசனத்தில் மாற்றம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்கு நாளை மாலை திறக்கப்பட்டு சனிக்கிழமை முதல் ஐப்பசி மாத பூஜை மற்றும் சபரிமலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.இந்தநிலையில் ஜனாதிபதி வருகை! தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 17-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமையன்று) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

கோவிலில் நாளை மறுநாள் சனிக்கிழமை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

பின்னர் மறுநாள் 22-ந் தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார். 22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார். நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா நதியில் நீராடவும் திட்டமிட்டுள்ளார்

பின்னர் பம்பாவிலிருந்து மலையேறி புதிய கூர்க்கா ஜீப்பில் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை.

ஜனாதிபதி சபரிமலை வருவதை ஒட்டி 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.