Home Blog Page 157

சபரிமலை தரிசனம்… இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு!

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

உலகளவில் மிகவும் பிரபலமான கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் நடப்பாண்டு மண்டல – மகர விளக்கு பூஜை காலத்தில் இணைய வழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.

பம்பை நிலக்கல்லில் உடனடி புக்கிங் ஸ்பாட் புக்கிங் வசதி முற்றிலும் நிறுத்தம் செய்யப் பட்டது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் அடுத்த மாதம் நவம்பர் 16இல் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சபரிமலையில் நடப்பாண்டு பூஜை காலத்தில் இணையவழி பதிவு மூலம் மட்டுமே பக்தா்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பக்தா்களின் அதிக கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும். இணையவழி முன்பதிவின்போது, யாத்திரை பாதையை தோ்வு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும். நடப்பாண்டு நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சபரிமலை மற்றும் வாகன நிறுத்தமிட சாலைகளின் பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன், தலைமைச் செயலா் சாரதா முரளீதரன், மாநில காவல்துறை தலைவா் ஷேக் தா்வேஷ் சாஹேப் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவில் நவராத்திரி விழாவில் திருவாசகம் முற்றோதுதல்!

DSC 0115 scaled e1728240969472 - 2026


செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் திருவாசகம் முற்றோதுதல்.

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் திருக்கோவிலில் கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்

இந்தாண்டு நவராத்திரி திருவிழா செப்-03ஆம் தேதியில் துவங்கப்பட்டு நாள்தோறும் நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் 10நாட்களும் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2ஆம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாய தலைவர் செல்லப்பாஇசக்கி தலைமைதாங்கினார்.

பொருளாளா் சுந்தரம், மண்டகபடிதாரா் எம்எஸ்.முத்துசாமி, தங்கையா
ஆடிட்டர்சங்கர், ஆகியோர் முன்னிலைவகித்தனா். செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையில் திருவாசக குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. பின்னா் மாபெரும் அன்னதான விருந்து நடந்தது.

நிகழ்ச்சியில் மண்டகபடிதாரர்கள் சண்முகசுந்தரம், வள்ளி, சிவக்குமார்,
கல்யாணி. கார்த்திக்கேயன், இசக்கிமுத்து, சிவசங்கரி, சேகர், குருசாமி,
மாரியப்பன், தர்மராஜ், கணேசன், நாகராஜ், சரவணன், மணி, இராமலிங்கம், ஆறுமுகம், ஐயப்பன், வள்ளி, இசக்கி திருவாசக குழுவினா்கள் நெடுஞ்செழியன், பழனியம்மாள், செல்வராணி, ஸ்ரீதர், தேவி மற்றும் சமுதாய பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை பூஜாரிகள் கண்ணன், ஐயப்பன் செய்திருந்தனா். விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா்.

பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

panpoli sundarraja perumal temple onam function - 2026


செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.

செங்கோட்டை அருகே பைம்பொழில் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத
ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

IMG 20241005 WA0082 - 2026

இந்தாண்டு அதேபோல் இன்று புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு பண்பொழி நாயுடு சமுதாயம் சார்பில் பூமிநீளா சமேத ஸ்ரீசுந்தராஜ பெருமாள் மற்று பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்பொழி அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

smart tv crack - 2026
#image_title

டிவிய எப்பவுமே வீட்டம்மாதான் துடைப்பாங்க, அதுவும் டிரை கிளாத்ல தான் துடைப்பாங்க. ஒருநாள் டிவி பார்த்துட்டு இருந்தப்போ கொஞ்சம் தூசியா தெரியுதேன்னு, வீட்ல கண்ணாடிலாம் துடைக்க வாங்கி வச்சிருந்த Colinஐ spray பண்ணி் நல்லா துடைச்சிட்டேன். உத்துப் பாத்தா, இன்னமும் லைட்டா தூசி இருக்கவே, திரும்பவும் ஸ்பிரே பண்ணி சுத்தமா துடைச்சிட்டு, டிவிய ஆன் பண்ணுனா, டிவி நடூல பட்டையா நாலு கருப்புக்கோடு தெரியுது. மனசே உடைஞ்சு போச்சு.

வீட்டம்மா பெரும்பாலும் டிவி பாக்கமாட்டாங்க.அதனால அப்டியே கருப்புப் பட்டையோட ரெண்டுநாள் ஓடிருச்சு. மூணாவது நாள், ஏங்க, போரடிக்குது, எதாவது நல்ல பழைய படமா போடுங்கனு வந்து ஒக்கார. உலகமே தட்டாமால சுத்துது, என்ன நடக்கப் போகுதோன்னு பயந்துகிட்டே டிவியப் போட்டு சர்ச் பண்ண ஆரம்பிச்சதும் என்னங்க டிவில கோடு மாதிரி தெரியுதுன்னதும், தரை நழுவ ஆரம்பிச்சது.

சரி சொல்லிரலாம்னு Colin கதையச் சொன்னதும், கொஞ்சமாவது மூளையிருக்கா, யாராவது டிவிய ஈரத்துணில துடைப்பாங்களான்னதும், என்னோட மேதாவித்தனம் மொத்தமும் சரிஞ்சு சல்லடையாகிருச்சு. அப்புறம் LG service centreக்குக் கூப்டு விசாரிச்சா, டிரை க்ளாத்லதான் துடைக்கனும், தண்ணி படவேக் கூடாதுன்றாங்க. இதை சரி பண்ணமுடியுமான்னு கேட்டா, வாய்ப்பே இல்லன்னுட்டாங்க. டிஸ்ப்ளே மாத்தனும், அதுக்கு புது டிவி வாங்கிருங்கன்னு சொல்லிட்டாங்க.

சோகத்தோட உச்சிக்கே போனாலும், எப்டியாவது நாமளா சரி பண்ணிர்ரதுன்னு முடிவு பண்ணி, மகனைக் கூப்டு யூடியூப்ல பாத்தேன். அந்தக் கோடுலாம் அசால்டா சரி பண்ணிரலாம்னு வெள்ளைக்காரன் சொன்னத நம்பி, மகனை விட்டு டிவிய ஓப்பன் பண்ணச் சொல்லிட்டேன். என்னென்தையோ கழட்டி மாட்டிப் பாத்து சரியாகலன்னு, வேலை இருக்குன்னு அர்ஜெண்டா வெளில கிளம்பிக்கிட்டே, மாட்டி வச்சுருன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

கொஞ்சம் நேரம் கழிச்சு, ஏம்பா டிவி எப்படி தெரியுதுன்னேன். வந்து பாருங்கப்பான்னு சொன்னதும் எதோ பிராப்ளம்னு தெரிஞ்சதும் சீக்கிரமா திரும்பி வந்து பாத்தேன். டிஸ்ப்ளே நடூல கிராக் விட்டு பாதி பக்கம் படமே தெரியல.தூக்கி மாட்டுனப்ப டிஸ்பிளேல ஓரமா உடைஞ்சிருக்கு. 50 இஞ்ச் LG டிவி மொத்தமா க்ளோஸ்.

இதனால சொல்றது என்னனா, ஸ்மார்ட் டிவிய காஞ்ச துணியால மட்டும் துடைங்க.

எதாவது சின்ன எலெக்ட்ரானிக் பிரச்னைனா, டெக்னீசியன் கிட்ட காட்டி மட்டுமே சரி் பண்ணப் பாருங்க. சின்னப் பிரச்னைனா, அதை சரி்பண்ண முடியாதுன்னா, அப்டியே பாத்துப் பழகிருங்க.நானும் அஞ்சு மாசமா அதுலயே பாத்து, இதுவே போதும்கிற மனநிலைக்கே வந்துட்டேன்.

இப்ப 65 இஞ்ச் அதே LG TV வாஙகி மாட்டிட்டோம். இரண்டு மாச உழைப்பு வேஸ்டாப் போனாலும் இப்பத்தான் மனசுக்கு சந்தோசம்.

ஓவரா சுத்தம் பாத்தா உடம்புக்கு மட்டுமில்ல டிவிக்கே ஆகாது

  • அரு. சந்திரசேகர் – என்பவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த தகவல் இது.

இப்படி நிறையப் பேர், நன்கு விலை கொடுத்து வாங்கி, டிவி., ஸ்கிரீனை நீர் வீட்டு துடைப்பார்கள். அது குறித்த விழிப்பு உணர்வுக்காகவே இந்தத் தகவல் டிப்ஸ்…

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது, நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்கள் டிவி ஸ்க்ரீனை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்று? இன்னும் மோசமான விடயம் என்னவென்றால்? ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் தவறு, சில நேரங்களில் உங்கள் டிவியின் உத்தரவாதத்தை கூட ரத்தாகும் சூழ்நிலையை உருவாக்கலாம் நாம் அனைவருமே தூசி, அழுக்கு மற்றும் கசடுகள் இல்லாத டிவி ஸ்க்ரீனை விரும்புகிறோம். ஆனால் அதை சரியாக (சுத்தம்) செய்வது தான் இங்கே முக்கியம். அப்படியாக, உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, தெரியாமல் கூட நீங்கள் செய்ய கூடாத 8 விஷயங்கள் இதோ!

1. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?

கூடாது! ஏனெனில் பெரும்பாலான டிவி ஸ்க்ரீன்கள் (எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி ஸ்க்ரீன்கள்) ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும் (அதாவது அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும்) மற்றும் அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே டிஷூ மற்றும் டவல்களில் உள்ள “இழைகள் கூட” உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தலாம். எனவே முடிந்த வரை, அது LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்ப்ளேவாக இருந்தாலும் கூட அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தாமல், அதில் உள்ள கைரேகைகள் மற்றும் கறைகளை அகற்ற இந்த வகை துணி மிகவும் பொருத்தமானது.

2. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் – டிவி ஸ்க்ரீன்கள் உடையக்கூடியவை ஆகும். மிகவும் கடினமாக அழுத்தப்பட்டால் அல்லது தேய்க்கப்பட்டால் அது சேதமடையலாம். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்தவரை மெதுவாக துடைப்பதை உறுதி செய்யவும்.

3. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?

கூடவே கூடாது! எந்தவொரு க்ளீனிங் சொல்யூஷனையும் நேரடியாக உங்கள் டிவி ஸ்க்ரீனில் தெளிக்காதீர்கள். எப்பொழுதும் பஞ்சு இல்லாத துணி அல்லது மைக்ரோஃபைபர் மீது க்ளீனிங் சொல்யூஷனை வைத்து, பின்னர் அதை ஸ்க்ரீனில் வைத்து மெதுவாக துடைக்கவும். க்ளீனிங் சொல்யூஷனை நேரடியாக தெளிப்பதன் மூலம் ஸ்க்ரீனில் நிரந்தர அடையாளங்கள் அல்லது கறைகள் ஏற்படலாம்.

4. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?

தண்ணீர் மட்டும் அல்ல, முடிந்தவரை எல்லா திரவங்களையுமே டிவி ஸ்க்ரீனில் இருந்து விலக்கி வைக்கவும். திரவங்களை பயன்படுத்தி உங்கள் டிவியை சுத்தம் செய்தால் அது டிவியின் உள் பகுதிகளை சேதப்படுத்தலாம். குறிப்பாக அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தவே கூடாது, ஏனெனில் அவைகள் டிவி ஸ்க்ரீனில் உள்ள ஆன்டி-க்ளேர் கோட்டிங்கை (Anti-glare coating) சேதப்படுத்தலாம்.

5. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?

வேண்டாம்! சுத்தம் செய்யும் போது உங்கள் டிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதுமட்டும் இல்லாமல், ஸ்க்ரீன் “கருப்பாக” இருக்கும் போது தான், அதில் உள்ள அழுக்குகளை மற்றும் கோடுகளை கண்டறிய முடியும்; அதை அகற்ற முடியும். மேலும் இருண்ட ஸ்க்ரீனில் தான் தூசிகளும் நன்றாக தெரியும்.

6. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?

முடிந்தவரை உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரு திசையில் இருந்து (செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக) துடைக்க வேண்டும், பின்னர் அதை எதிர் திசையில் இருந்து செய்ய வேண்டும். இது வழிமுறை, ஸ்க்ரீனில் எந்த இடமும் பாக்கி இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் சுத்தம் செய்யும் போது ஸ்க்ரீனில் ஏற்படும் கோடுகளை தவிர்க்கவும் உதவுகிறது.

7. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?

சிலமுறை பயன்பாட்டிற்கு பிறகு, டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் துணியை மாற்றுவது நல்லது. ஏனெனில் அதில் தூசிகள் தங்கி விடலாம், அது ஸ்க்ரீன்களில் கோடுகளை, கீறல்களை ஏற்படுத்தலாம். மேலும் நன்றாக சுத்தம் செய்யும் “திறனையும்” இழக்கலாம். எனவே அவ்வப்போது டிவி ஸ்க்ரீனை துடைக்கும் துணியை மாற்றவும்.

8. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?

முடிந்தவரை, இப்படி செய்வதை தவிர்க்கவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்து முடித்ததும், டிவியை மீண்டும் கனெக்ட் செய்யும் முன், அதன் ஸ்க்ரீன் முழுமையாக உலர வைக்கப்பட வேண்டும். ஈரமான புள்ளிகள் ஸ்க்ரீனில் அப்பட்டமாக தெரியும், பின்னர் அதுவே கூட ஓரு கறையாக மாறிவிடலாம். பிறகு டிவி ஸ்க்ரீனை துடைத்ததிற்கு புண்ணியமே இல்லாமல் போய் விடும்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

weather update in chennai - 2026
#image_title


இந்திய வானிலையியல் துறை வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு வடகிழக்குப்பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு

— முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்


          இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவர் முனைவர்ம்ருத்துஞ்சய மொஹொபாத்ரா கடந்த அக்டோபர் முதல் தேதியன்று நாட்டில் தென்மேற்குப் பருவமழைஎவ்வாறு பெய்துள்ளது என்பது பற்றியும் வடகிழக்குப் பருவமழை எப்படிப் பெய்யும் என்பதுபற்றியும் காணொலி வழியாக பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்.

          இந்திய வானிலை ஆய்வுத்துறை நான்கு வகையானவானிலை முன்னெச்சரிக்கைகளை வெளியிடுகிறது. அவையாவன (1) Nowcasting என ஆங்கிலத்தில்அழைக்கப்படும். இது ஒரு மணி முதல் மூன்று மணி நேரத்திற்கு வானிலை எப்படியிருக்கும்எனச் சொல்லும். (2) குறுகிய நேர வானிலை முன்னறிவிப்புகள் (Shrot range forecast).

இவை ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு செல்லுபடியாகும். (3) நடுத்தர வானிலை முன்னறிவிப்புகள்.இவை நான்கு முதல் பத்து நாள்கள் வரையிலான காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பு. (4) நீண்டகால வானிலை முன்னெச்சரிக்கை. பத்து நாட்களுக்கு அதிகமான காலத்திற்கு இது வழங்கப்படுகிறது.இந்திய வானிலை ஆய்வுத்துறை இவ்வகையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கும் தேதி, அப்பருவத்தில் பெய்யக்கூடிய மழை,வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலம் போன்றவை இதில் அடங்கும்.

          தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப்பருவமழைக் கால நீண்ட கால வானிலை முன்னெச்சரிக்கையில் மழை இயல்பை விட அதிகமாகப் பெய்யுமா?குறைவாகப் பெய்யுமா அல்லது இயல்பை ஒட்டிப் பெய்யுமா என்பது கூறப்பட்டிருக்கும். ஒருகுறிப்பிட்ட பகுதியில், அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பது சொல்லப்பட்டிருக்காது.

எனவே தான் இதனை காலநிலை முன்னெச்சரிக்கை (Climate forecast) எனவும்கூறுவர். வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் தமிழகத்தில் குறிப்பாக எவ்வளவு மழைபெய்யும்?எவ்வளவு புயல் அடிக்கும்? பெருமழைச் சம்பவங்கள் எத்தனை இருக்கும்? என்பது போன்ற முன்னரிவிப்புகள்இதில் இருக்காது.

          இதன் காரணம்  என்னவெனில், இவற்றை அறியக்கூடிய காரணிகள் நமக்குஅறிவியல் பூர்வமாகக் கிடைப்பதில்லை. இதனால் இத்தகைய வானிலை முன்னறிவிப்புகள் செய்யமுடிவதில்லை.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யக் கூடிய உத்தேச மழையளவு

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பற்றிய முன்னறிவிப்பின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

அ)தென் இந்தியாவில் உள்ள ஐந்துவானிலை துணைப்பிரிவுகளில் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், இராயலசீமா, கேரளா மற்றும் மாஹே மற்றும் தெற்குஉள் கர்நாடகா) வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவுஇயல்பை விட அதிகமாக இருக்கும்.அதாவது நீண்ட கால சராசரியைவிட 112% அதிகமாகயிருக்கும். பருவசராசரி (LPA – long Periodaverage) வடகிழக்குப் பருவமழைகாலத்தில் (அக்டோபர்-டிசம்பர், 2024). இதே காலகட்டத்தில் மத்தியஇந்தியாவின் பல பகுதிகளிலும், தென்தீபகற்ப இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பிலிருந்துஅதிகமான மழை பெய்யக்கூடும். இருப்பினும், வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும்இந்தியாவின் தென்பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில்இயல்பை விட குறைவான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

ஆ)2024 அக்டோபரில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இயல்பை விட இயல்பான மழைஅல்லது இயல்பைவிட அதிகமான மழையைப் பெறக்கூடும்.இருப்பினும், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும்தென் தீபகற்பத்தில் ஒரு சில பகுதிகள்இயல்பை விட குறைவான மழையைஅனுபவிக்க வாய்ப்புள்ளது.

இ)அக்டோபரில், மத்திய இந்தியா மற்றும் அதை ஒட்டிய தென்தீபகற்பத்தில் உள்ள சில பகுதிகளைத்தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.

ஈ)தற்போது, ​​கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில்சராசரிக்கும் குறைவான கடல் மேற்பரப்பு வெப்பநிலையுடன்பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில்நடுநிலையான எல் நினோ-தெற்குஅலைவு (ENSO) நிலைகள் காணப்படுகின்றன. நிகழ்தகவு முன்னறிவிப்பு, 2024ஆம் ஆண்டு பருவமழைக்குப்பிந்தைய காலத்தில் லா நினா நிலைமைகள்உருவாக அதிக வாய்ப்பைக் குறிக்கிறது.

உ)சராசரிக்கும் மேலான கடல் மேற்பரப்பு வெப்பநிலை(SSTs-Sea Surface Temperatures) தற்போதுஇந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது, ​​இந்தியப் பெருங்கடலில் நடுநிலையான இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD-Indian Oceandipole) நிலை நிலவுகிறது. சமீபத்திய MMCFS (MMCFS-MonsoonMission Climate Forecast System) முன்னறிவிப்பு,2024 ஆம் ஆண்டு பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் நடுநிலை IOD நிலைமைகள் தொடர வாய்ப்புள்ளது என்பதைக்குறிக்கிறது.

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம்17ஆம் த்தி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளது.

          என்னுடைய சொந்தக் கணிப்பின்படி அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழைக்கான வாய்ப்பிருக்கிறது. அச்சமயத்தில் வட தமிழகத்தின் கரையைக் கடக்கும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றவும் வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீபகற்ப இந்தியாவைக் கடந்து அரபிக்கடலில் நுழைந்து அங்கும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறா வாய்ப்புள்ளது.

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

railway news - 2026
#image_title

இரயில் பயணிகள் கவனத்திற்கு … மீண்டும் தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரயில்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயிலக தாம்பரம் திருவனந்தபுரம் மீண்டும் இயக்க படுகிறது.

தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு வண்டி எண்: 06035
தாம்பரம் புறப்பாடு வெள்ளி 19.30 அக்டோபர் 11 முதல் 27 டிசம்பர் வரை

திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம்
வண்டி எண்:* 06036 ஞாயிறு
அக்டோபர் 13 முதல் 29 டிசம்பர் வரை
தாம்பரம் வருகை:* 07.35 திங்கள் 3 அடுக்கு ஏ/சி எக்கானமி பெட்டிகள் மட்டுமே உள்ளது.முன்பதிவில்லா பெட்டிகள் கிடையாது._
முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்டது.

முன்பு வாரம் இருமுறை கோடைகால சிறப்பு ரயிலாக இயங்கியது . பிறகு ஓணம் பண்டிகைக்கு மூன்று முறை இயங்கியது. ‌தற்போது வாரம் ஒருமுறையாக இயங்கும்.

இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்.பி கொடிகுன்றில் சுரேஷ் வலியுறுத்தி வந்தார். ரயில்வே அமைச்சர் வாரம் ஒருமுறை இயக்க ஒப்புதல் கூறினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

andal thaila utsav - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வடபத்ரசாயி பெருமாளுக்கு புரட்டாசி மாதமும், ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடி மாதமும், ஆண்டாள் நாச்சியாரின் திருத்தந்தையார் பெரியாழ்வாருக்கு ஆனி மாதமும் பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுகின்றன. அடுத்து, ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீரெங்கநாதர் திருமண வைபவம் பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இப்படி ஆண்டுக்கு நான்கு பிரம்மோத்ஸவங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில்
நடைபெறுகின்றன. ஆடிப்பூரம் விழாவில் பெரிய தேரும், மற்ற மூன்று திருவிழாக்களில் செப்புத் தேரோட்டமும் நடைபெறும்.

வடபத்ரசாயி பெருமாளுக்கான பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. தினமும் இரு வேளையும் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி இரவு கருடசேவை நடைபெறும்.

அப்போது பெருமாள் கருட வாகனத்திலும், ஸ்ரீ பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்வர்.

9-ம் தேதி மதியம் 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. புரட்டாசி திருவோணம் நாளான 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

13-ம் தேதி சப்தாவர்ணம், இரவில் வெட்டிவேர் சப்பரத்தில் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

thiruvalluvar
thiruvalluvar

மாணவ, மாணவியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மதுரை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப் பொதுமறையாம்
திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால், குறள் பரிசாக ரூ:15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

விண்ணப்பங்களை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, 25.10.2024-க்குள்
தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம்,
உலகத் தமிழ்ச் சங்க வளாகம்,
மருத்துவர் தங்கராசு சாலை,
அரசு சட்டக் கல்லூரி அருகில், மதுரை- 20
– என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / tamilvalarchimdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.

பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் … ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!

1783428 palani murugan temple - 2026

நீதிமன்றம் போட்ட அந்த ஒரே ஒரு உத்தரவால், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, கைப்பேசி பாதுகாப்பு நிலையத்தின் மூலம், ஓராண்டில் ரூ. 1.51 கோடி வசூல் ஆகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் , பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் கைப்பேசி கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை, பாதுகாப்பாக வைக்க, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம், ரோப்காா் நிலையங்களில், பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில், கைப்பேசியை வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கைப்பேசிக்கு தடை விதிக்கப்பட்டு ஓராண்டான நிலையில், இதுவரை கைப்பேசி மையங்களால், 30 லட்சம் பக்தா்கள் பயனடைந்துள்ளதாக, திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

கைப்பேசி காப்பக கட்டணம் மூலம் இதுவரை ரூ. 1, 51, 64, 965 வருவாய் கிடைத்ததாகவும், கட்டடம், மின் சாதனம், கணினி, பாதுகாப்பு பெட்டகம், கண்காணிப்பு கேமரா என ரூ.38 லட்சம், பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ.1.38 கோடி செலவிடப்பட்டதாகவும், கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிலையில் எழுதப்பட்ட வாசகம் அப்படி..!’ கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!

srirangam evr statue - 2026

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சிலையை அகற்றுதல் தொடர்பாக கருத்தைக் கூறிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிராகப் பதிவு செய்திருந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 

தமிழக அரசின் அங்கமான ஹிந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்துக்கு முன் எதிர்ப்புறத்தில், கடவுளை நம்புபவன் முட்டாள் என்றும், பலவாறாக ஹிந்து மதத்தை அவமதித்தும் அவதூறாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சிலையை நிறுவி, அதன் கீழ் இந்த வாசகங்களை வைத்தது தமிழக அரசு.

ஆலயத்தை நிர்வகிக்கும் அரசு, ஆலயத்தின் மூலம் வருமானம் ஈட்டும் அரசு, அதே  ஆலயத்துக்கு பக்தர்கள் அதிகம் பேர் வரவேண்டும் என்று விரும்பி அழைத்து அவர்களிடம் இருந்து வசூல் வேட்டையை நடத்தும் அரசு, அதே ஆலயத்துக்கு முன் அந்த ஆலயத்தின் கடவுளை அவமரியாதை செய்து அவதூறு செய்யும் கருத்துகளையும் எழுதி வைத்திருப்பதற்கு ஆன்மிக அன்பர்கள் பலர் வெகுகாலமாக எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நியாயப்படி பார்த்தால், தங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயிலுக்கு எதிரான கருத்துகள் என அரசுதான் அந்தச் சிலையை அகற்றியிருக்க வேண்டும், அல்லது அதை நிறுவியவர்கள் மீது அரசு சார் அறநிலையத்துறை வழக்கு தொடுத்திருக்க வேண்டும். 

ஆனால், அது குறித்து கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் பாசிஸப் போக்கை திமுக., அரசு கையாண்டு வருவதற்கு கண்டனம் எழுப்பப் பட்டது.

இதையும் படிங்க: கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

குறிப்பாக, இந்து முன்னணி அமைப்பின் சார்பில்,  சென்னை மதுரவாயலில் கடந்த வருடம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழா, பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். 

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாத சர்வாதிகாரி அரசு: இந்து முன்னணி விமர்சனம்!

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கோயில் வாசலில், கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல் துறையினர் அகற்றியிருக்க வேண்டும். சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்குப் பதில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” இன்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே மனுதாரர் அவ்வாறு பேசியிருக்கிறார் எனக் கூறி, கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க: எந்தத் தகுதியின் அடிப்படையில்… சிலை வைக்கப்பட்டுள்ளது?!

evr statue in srirangam - 2026
#image_title