Home Blog Page 162

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!

DSC 0593 scaled e1727065726597 - 2026


செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

செங்கோட்டை இரயில் நிலைய வளாகத்தில் வைத்து பொதிகை
எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு 21வது பிறந்தநாள் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த இரயிலானது செங்கோட்டையிலிருந்து பொதிகை எஸ்பிரஸ் இரயில் தென்காசி, கடையநல்லுார் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னை வரை
நாள்தோறும் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்து செல்கிறது. இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று செப்-20ஆம் தேதியில் 20வது ஆண்டு நிறைவு பெற்று 21வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் இரயில் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இரயில் ஓட்டுநர்கள் அனில்குமார், அஸ்லாம்ஹனீப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

பின்னா் கேக் வெட்டி ஓட்டுநர்கள், மற்றும் இரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்க பொருளாளா் கேகே.சுந்தரம், உறுப்பினா்கள் சங்கரபாண்டியன், நவநீதகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

IND Vs BAN Test: பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 20.09.2024

முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்

பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவது இன்னிங்க்ஸ் 81/3 (கில் ஆட்டமிழக்காமல்33) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப் 2/19, ஜதேஜா 2/19). இந்தியஅணி 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பங்களாதேஷை 149 ரன்களுக்குத் ஆல் அவுட் ஆக்கிய பிறகு, இந்தியா ஃபாலோ-ஆனை அமல்படுத்தவில்லை, மேலும் 7 இரண்டாவதுஇன்னிங்ஸ் விக்கெட்டுகள் கையில் இருக்கின்ற நிலையில் 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          இரண்டாவதுநாள் அதிகாலையில் வங்காளதேசம் நான்கு விரைவான விக்கெட்டுகளுடன் இந்தியாவை அவுட்டாக்கியது. ஆனால் இது எண்ணைச்சட்டியில்இருந்து எரியும் நெருப்பில் விழுந்ததுபோல ஆயிற்று. வெறும் 47.1 ஓவர்களில் அந்த அணி ஆட்டமிழந்தது. இந்தியா 227 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதிலும் ஃபாளோ ஆன் தராமல் பேட்டிங் செய்யத் தேர்வுசெய்தது, மேலும் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில்7 இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுகள் கையில் உள்ளதுடன் 308 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

ஆட்டகளம் முதல் நாளைப் போல இன்று ஆட்டத்திற்குச்சாதகமாக இல்லை. ஜஸ்பிரித் பும்ரா,ஆகாஷ் தீப் மற்றும் முகமதுசிராஜ் ஆகியோர் தங்களுக்குள் எட்டு விக்கட்டுகள்  எடுத்தனர்,அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா பங்களாதேஷின் மிகப்பெரிய கூட்டணியை உடைத்தார்.

          பும்ரா,இடது கை தொடக்க ஆட்டக்காரர்களுக்குவிக்கெட்டுக்கு மேல் கை வர பந்து வீசத் தொடங்கினார், பந்தை தொடர்ந்து ஸ்விங் செய்தார். ஆனால் முதல் ஓவரின் கடைசி பந்தில் வீசும் முறையை மாற்றினார்.அந்தப் பந்தை ஷாட்மேன் இஸ்லாம் அடிக்காமல் விட்டார். ஏனெனில்முந்தைய ஐந்து பந்துகளும் விலகிச் சென்றிருந்தன. அதனால் இந்தப் பந்து விக்கட்டின்மேல் பகுதியைத் தட்டியது; அவர் கிளீன் பவுல்ட் ஆனார். நடுவர் மற்றும் இந்திய கேப்டன் இருவரும் தவறாகக் கணித்த ஒரு எல்பிடபிள்யூ அழைப்பிலிருந்துஜாகிர் ஹசன் தப்பினார், ஆனால்ஆகாஷ்தீப் அவருக்கும் மொமினுல் ஹக்கிற்கும் மிகவும் நல்ல பந்துவீச்சாளர் என நிரூபித்தார்.    ஆகாஷ்தீப்பின் முதல்ஓவர், உடனடியாக விக்கெட்டைச் சுற்றி வீசப்பட்டது; அது மிகச்சிறந்த ஓவராக இல்லை, ஆனால் அவரது இரண்டாவது ஓவரில் அவர் இரண்டு அடுத்தடுத்த பந்துகளில் இரண்டுவிக்கட்டுகள் எடுத்தார்.

          மதியஉணவிற்குப் பிறகு, இந்தியா தனது முதல் இரண்டுபந்துவீச்சாளர்களுக்கு மீண்டும்வாய்ப்பு கொடுத்தது. அவர்கள் இடைவேளைக்குமுன் குறுகிய ஸ்பெல் மட்டுமே வீசினர். முன்னதாக ஜாகிரின் விக்கெட்டை இழந்த சிராஜ், மூவரில் மிகவும் துல்லியமாக இருந்தார்.

          இச்சமயத்தில்லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சில நல்ல தோற்றமளிக்கும் டிரைவ்களுடன்51 ரன்களை விரைவாகச் சேர்த்தனர். பின்னர் இந்தியாவின் சுழல் இரட்டையர்கள் பந்து வீசவந்தனர்.  ஆடுகளம் அவர்களுக்கு எந்த உதவியும்கிடைக்கவில்லை. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில், லிட்டன் ஸ்லாக்-ஸ்வீப்விளையாடி ஸ்கொயர் லெக்கில் ஒரு கேட்ச் கொடுத்தார். ஷாகிப் துரதிர்ஷ்டவசமாக ரவீந்திரஜடேஜாவை ரிஷப் பந்திடம் லாப் செய்ய  ஆட்டமிழந்தார்.

          வங்கதேசஅணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டமிழந்த பிறகு, இரண்டாவது நாளில் ஸ்டம்புக்கு முன்னதாகஇந்தியா பேட்டிங் செய்ய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது.

ஆட்டத்தில் இதுவரை முன்னேறிய நிலையில்,இந்தியா திரும்பவும் மட்டையாட வந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்தார்.ரோஹித் ஷர்மா அவர் எதிர்கொண்ட முதல் பந்தை 4 ரன்களுக்கு விளாசினார், ஆனால் ஆடுகளம்இன்னும் பந்துவீச்சுடன் விளையாடுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.சேப்பாக்கத்தில் ஒரே நாள் ஆட்டத்தில் அவர்களது விக்கெட்டுகள் அதிகபட்சமாக – 16 ரன்எடுத்தது. ஷுப்மான் கில் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் பந்துவீச்சின் தகுதிக்கு ஏற்றவாறுபேட் செய்தனர், ஆனால் ஒரு அரிய டிஸ்மிஸ் – வலது கை பேட்டர் ஒரு ஆஃப்ஸ்பின்னரிடம் எல்பிடபிள்யூஅவுட் ஆனார் – ஒரு நாளில் 17 விக்கெட்டுகளை எடுக்கப்பட்டது. கோஹ்லி அதை மறுபரிசீலனைசெய்யவில்லை, அல்ட்ரா எட்ஜ் பின்னர் ஒரு எட்ஜ் ஆகியிருக்கலாம் எனச் சொன்னது. ஆட்டநேரமுடிவில் இந்தியா 300 ரன்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தது.

ஹரியானா: பெண்களுக்குப் பண வாக்குறுதி!

1781972 congress1 - 2026

ஹரியானா தேர்தலில் பெண்களுக்குப் பண வாக்குறுதி – காங்கிரஸ் 2,000! பாஜக 2,100!

— ஆர். வி. ஆர்

தேர்தல் வாக்குறுதிப் போட்டா போட்டிகளில், காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் ஹரியானாவில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

ஹரியானா மாநிலத்தில் பாஜக இப்போது ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தல், வரும் அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் இப்போது மல்லுக் கட்டுகின்றன.

18 முதல் 60 வயதுள்ள ஹரியானா பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்போம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அடுத்த நாள் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த மகளிருக்கு மாதம் இரண்டாயிரத்து நூறு ரூபாய் உதவித் தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. மற்ற பல வாக்குறுதிகளையும் அந்த இரண்டு கட்சிகள் கொடுத்திருக்கின்றன.

‘நாங்கள் தொழில்வளத்தைப் பெருக்குவோம், வேலை வாய்ப்பை அதிகரிப்போம், கேஸ் சிலிண்டர்கள் குறைந்த விலையில் தருவோம், மருத்துவ சிகிச்சை வசதிகள் லட்சக் கணக்கில் தருவோம்’, என்று ஒரு கட்சி என்ன வாக்குறுதி அளித்தாலும், சுமாரான வருமானம் கிடைக்கும் அல்லது ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அவை பெரிய பொருட்டல்ல. சில வாக்குறுதிகள் மிக நிச்சயம் அல்ல என்பதும் அந்த மக்களுக்குத் தெரியும்.

ஒரு அரசியல் கட்சி, ‘எங்கள் அரசு மாதா மாதம் பண உதவி செய்யும்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அது சாதாரண மக்களால் கேள்வியின்றி வரவேற்கப் படும். ஏனென்றால் ஆட்சிக்கு வரும் கட்சி அந்த வாக்குறுதிப்படி பாவமான மக்களின் கைகளில் அந்தப் பணம் உடனே கிடைக்கச் செய்யமுடியும். அதற்காகக் காலமெடுக்கும் தயார் நடவடிக்கைகள் அவசியமில்லை.

இப்படியான பண விநியோக வாக்குறுதியைப் பொறுப்பற்ற முறையில் ஒரு அரசு செயல்படுத்தினால், என்ன ஆகும்? அரசு கஜானா சுகவீனம் ஆகும். ஆக்க பூர்வமான பல திட்டங்கள் படுக்கும். ரோடுகள் பாடாவதியாகப் பல்லிளிக்கும். அரசுப் பேருந்துகள் டப்பாவாக ஓடும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு டாக்டர்கள், நர்சுகள் இருக்க மாட்டார்கள். நடைமுறையில் இந்த விளைவுகளைப் பெரிதளவு அரசின் மாதா மாதப் பண விநியோகம் சரிசெய்யும். அப்படித்தான் நமது மக்கள் அவலமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் – சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும்.

நமது சாதாரண மக்களின் பரிதாப நிலையை நன்றாக உணர்ந்த காங்கிரஸ், இப்படி அரசுப் பணத்தை விநியோகம் செய்யும் வாக்குறுதியை அளித்து ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி மக்கள் நலனில் பெரிதாக ஒன்றும் செய்யாது. அரசாங்கப் பணத்தில் அது ‘என்னவெல்லாம்’ செய்ய நினைக்குமோ, அதைச் செய்யும். இப்படியான காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் எதிர்க்கும் பாஜக, தேர்தல் களத்தைச் சரியாகக் கையாள வேண்டும்.

நமது சாதாரண மக்கள் அப்பாவிகள், பொதுவாக நல்லவர்கள். மாதா மாதம் பண விநியோகம் செய்வதாக ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தால், அந்தப் பணம் தங்கள் வாழ்க்கைக்கு அவசியம் என்று கருதி, அவர்கள் அந்தக் கட்சிக்கே நல்லதனமாக, விசுவாச எண்ணத்துடன், வாக்களிக்கலாம்.

நமது பெரும்பாலான அரசியல்வாதிகள் குயுக்தியானவர்கள். நாட்டுக்கு, மக்களுக்கு, எது தொலைநோக்கில் நல்லது என்பது அவர்களுக்குப் பொருட்டல்ல. தங்களுக்கு, தங்களின் வம்சப் பரம்பரைக்கு, எது நல்லது என்பது பற்றியே அவர்கள் சிந்திப்பார்கள். சாதாரண மக்களின் நல்லதனத்தை அந்த அரசியல்வாதிகள் நன்றாக அறிந்தவர்கள். ஆனால் அந்த அரசியல்வாதிகளின் கெட்ட நோக்கத்தை அந்த மக்கள் அறியாதவர்கள்.

இந்த நிலையில், பாஜக மாதிரி தேச நலனை சிந்திக்கும் ஒரு கட்சி, இப்படி யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. எப்படியென்றால்:

‘மக்களுக்குப் பெரிதாக நல்லது செய்ய, மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். ஹரியானா தேர்தலுக்காக, பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகக் காங்கிரஸ் கட்சி நல்லெண்ணம் இல்லாமல் வாக்குறுதி அளித்தால், நாம் நல்லெண்ணத்துடன் இரண்டாயிரத்து நூறு தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளிப்போம். மக்களின் ஓட்டுக்களைப் பெற்று, தேர்தலில் வென்று, நல்லாட்சி செய்து, நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி, மாநிலத்தில் தொழில்வளம் பெருக்கி, மக்களுக்கு நாம் உண்மையிலேயே நன்மை செய்யவேண்டும்.’

ஹரியானா தேர்தல் நேரத்தில் பாஜக இப்படித்தான் நினைத்திருக்க முடியும். அது புரிந்து கொள்ளக் கூடியது.

இன்றைய காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலோ மத்தியிலோ ஆட்சிக்கு வாராமல் பார்த்துக் கொள்வதும் நாட்டு நலனுக்கு உகந்தது. அதற்காக அந்தக் கட்சியின் ஒரு சில வாக்குறுதிகளைச் செயலிழக்கச் செய்யும் விதமாக பாஜக-வும் தேர்தல் வாக்குறுதிகள் தந்து பின்னர் தனது அனைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதும் பாஜக-வின் நல்ல நோக்கம் அல்லவா?

பாஜக இன்றைய தேதியில் இதைச் செய்யாமல், சாதாரண மக்களின் ஓட்டுக்களைக் காங்கிரஸ் கட்சி எளிதாகவும் குயுக்தியாகவும் ஈர்க்க அனுமதித்து, பின்னர் ‘காங்கிரஸ் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து சாதாரண மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது’, என்று பாஜக அலுத்துக் கொண்டால் யாருக்கு என்ன லாபம்?

ஹரியானவில் பாஜக காண்பித்திருக்கும் நல்லெண்ணத்தை, நல் முயற்சியை, வாழ்த்தலாம்.

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

உலக அரங்கில் அமைதியை விதைக்கும் பாரதம்!

pm modi with ukrain zelensky - 2026
#image_title

By Dr. ப. ஜஸ்டின் ஆண்டனி,
சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை

இவ்வருடம் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் பயணத்தை உலகின் கண்கள் அனைத்தும் உற்றுநோக்கின. இது 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் போலந்துக்கு மேற்கொண்ட முதல் பயணம் என்பது மட்டுமல்லாது, 1991 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்பதுமாகும்.

இந்த பயணத்தால் உருவாகியிருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் புதியதோர் மைல்கல். மத்திய ஐரோப்பாவுடனான ஆழமான ஈடுபாட்டை மையமாகக் கொண்டு, ஒரு மூலோபாய மாற்றத்தைக் குறித்துள்ளது.

இப்பாரினில் தனித்தன்மை கொண்டது நம் பாரத தேசம். இத்தகைய தேசத்தின் பிரதமரின் பயணம், குண்டு மழைக்கிடையே வெள்ளைப்புறாவை பறக்க விட ஆயத்தமாகிறது என்ற நம்பிக்கை அவனியில் பறக்கிறது.

1954 – ல் தொடங்கிய இராஜதந்திர உறவுகளின் 70 – வது ஆண்டு நிறைவை இந்தியாவும் போலந்தும் கொண்டாடுகின்றன. சமீப காலமாக இவற்றின் வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்பது இவ்விரு நாடுகளுக்கி டையேயான இருதரப்பு வர்த்தகம் மிகவும் சீராக வளர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு பங்காளியாக போலந்து தொடர்கிறது.

பாரத பிரதமரின் போலந்து பயணத்தின் முக்கிய அம்சம் இரு நாடுகளின் இருதரப்பு உறவை ‘நீண்டகால திட்டங்களின்’ பங்காளிகளாக’ உயர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆகும். மட்டுமல்லாது, ஆழமாக வேரூன்றிய உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் உரையாடல், பாதுகாப்பு, வர்த்தகம், காலநிலை, தொழில்நுட்பம், இணைந்து செயல்படுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்தல் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்தி, 2024-2028க்கான ஐந்தாண்டு செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்துடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இரு தரப்பும் இந்திய-உக்ரேனிய அரசுகளுக்கிடையேயான ஆணையத்தை (ஐஜிசி) உருவாக்க ஒப்புக்கொண்டன. இது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராயும்.

எரிவாயு விசையாழிகள் மற்றும் விமானங்கள் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உக்ரைனின் நிபுணத்துவம் காரணமாக, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு உற்பத்திக்கான பரந்த அளவிலான வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. மேலும், உலகின் பெரும் விவசாய சக்திகளில் ஒன்றான உக்ரைன், போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவிற்கு சூரிய மலர் எண்ணெயை அளிக்கும் மிகப்பெரிய சப்ளையர்களில் ஒன்றாக இருந்தது.

இந்தப் பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியதோடு, இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, ஆனால் அமைதிக்கு ஆதரவாக உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார். அவசர மருத்துவ சேவையை வழங்கும் நடமாடும் மருத்துவமனையான ‘பாரத் ஹெல்த் இனிஷியேட்டிவ் ஃபார் சாஹ்யோக் ஹிதா & மைத்ரி (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri – BHISHM) என்பதை உக்ரைனுக்கு வழங்கினார்.

இந்தப் பயணத்தின் போது, விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான நான்கு முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் உக்ரைனும் கையெழுத்திட்டன. சுருக்கமாக, இந்த மூன்று நாள் பயணம் போலந்து, உக்ரைன் மற்றும் மத்திய ஐரோப்பாவுடன் நிலையான நீண்ட கால ஈடுபாட்டின் விதிமுறைகளை அமைத்தது. மத்திய ஐரோப்பா உலகளாவிய புவிசார் அரசியலில், குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக, இந்தியாவின் ஐரோப்பிய கொள்கையில் ஒரு முக்கிய இடைவெளியை இந்த பயணம் நிவர்த்தி செய்கிறது.

பல ஆண்டுகளாக, இந்தியாவின் செயல்பாடுகள் ஐரோப்பாவின் பெரிய நான்கு நாடுகளான ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் மட்டுமே இருந்தது. எவ்வாறாயினும், கடந்த பத்தாணாடுகளில், இந்தியா தனது எல்லையை ஐரோப்பாவில் பன்முகப்படுத்த முயன்றுள்ளது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், க்ரீன்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகள் மற்றும் எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா உள்ளிட்ட பால்டிக் நாடுகள் உட்பட ஐரோப்பாவின் பல துணைப் பகுதிகளுடன் கூட்டு இராஜதந்திரத்தை தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த தேசமாக மாற, நீண்ட கால திட்டங்களுடன் மத்திய ஐரோப்பாவுடன் இணைக்கிறது.

பிரதமரின் இந்த மூன்று நாள் பயணமானது, இந்தியாவின் முந்தைய அணிசேராக் கொள்கை, பரந்த அளவிலான நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணுவதை நோக்கி மெதுவாக நகர்கிறது என்பதை நிரூபிக்கிறது. உலக அளவில் அமைதியை ஏற்படுத்துவதில் தலைசிறந்து விளங்கும் நம் பாரத தேசத்தின் பிரதமர் மோடி இந்த அணுகுமுறையை ‘விஸ்வபந்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வளர்ந்து வரும் கொள்கையானது இந்தியாவிற்கு பொருளாதார மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்குகிறது.

“முப்பதுகோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் செப்புமொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று அன்றே சுதந்திர தாகம் பாடிய பாரதியின் கூற்றுப்படி, நம் பாரத தேசம் உலக அரங்கின் வல்லரசாக பவனி வரவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் புறப்படுவோம். நம் தேசம் ஜொலிக்கட்டும், நாமும்.

மகாளய பட்சம் எனும் மகத்தான நாட்கள்! என்ன செய்ய வேண்டும்?!

tharpanam in thiruvedagam vaigai river - 2026
#image_title

நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

கிடைத்தற்கரிய புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் – நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.

அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.

சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.

பக்ஷம் என்றால் 16 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 16 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 16 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம்.

இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள்.

புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.

அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள், சகோதரர்கள்- அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம்.

இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.
மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம்.

பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 16 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர்.

இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம்.

இந்த 16 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர்.

நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.


மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் (சில நேரம் 16ஆக மாறுபடும்) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, இவற்றை விட உயர்ந்தது மகாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்பார்கள் பெரியவர்கள். அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் (திதி) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் (திதி) கொடுத்த பலன் வந்து சேருமாம்!

மகாளயபட்ச காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும்: மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் (திவசம்) செய்வோம். ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோர்களையும் அப்போது நினைவுகூர வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்களுக்கு வஸ்திரதானம், ஏழைகளுக்கு அன்னதானம், பொருளாதார நிலையில் படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு வித்யாதானம், இவற்றை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும்!

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் (முன்னோர்கள்) மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் (பித்ருக்கள்) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்தப் பயிற்சியை இந்தக் காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம், ச்ராத்தம் குறித்த பிரக்ஞை நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம்:

மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்..!

முதல் நாள் : பிரதமை திதி – பணம் சேரும்
இரண்டாம் நாள் : துவிதியை திதி – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
மூன்றாம் நாள் : திரிதியை திதி – நினைத்தது நிறைவேறும்
நான்காம் நாள் : சதுர்த்தி திதி – பகை விலகும்
ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி – வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம்
ஆறாம் நாள் : ஷஷ்டி திதி – புகழ் கிடைக்கும்
ஏழாம் நாள் : ஸப்தமி திதி – சிறந்த பதவி கிடைக்கும்
எட்டாம் நாள் : அஷ்டமி திதி – அறிவு ஞானம் கிடைக்கும்
ஒன்பதாம் நாள் : நவமி திதி – சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும்
பத்தாம் நாள் : தசமி திதி – நீண்டநாள் ஆசை நிறைவேறும்
பதினோராம் நாள் : ஏகாதசி திதி – படிப்பு கலை வளரும்
பனிரென்டாம் நாள் : துவாதசி திதி – தங்க ஆபரணங்கள் சேரும்
பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி – தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அபிவிருத்தி கிடைத்தல்
பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி – பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை
பதினைந்தாம் நாள் : மகாளய அமாவாசை – மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்!

மகாளயபட்ச விதிமுறைகள் : மகாளயபட்ச (மேலே சொன்ன 15 தினங்கள்) காலத்தில் கண்டிப்பாக வெங்காயம் பூண்டு உள்ளிட்டவை உணவில் சேர்க்கக் கூடாது. எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது! முகச்சவரம் செய்யக்கூடாது! தாம்பத்யம் (உடலுறவு) கூடாது! புலனடக்கம் மிக மிக அவசியம்!

மகாளயபட்சத்து (பதினைந்து நாட்களில்) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது (பரான்னம் புசிக்கக் கூடாது).

இந்த வருட மஹாளய பக்ஷ விவரம்

செப்.18 பு – ப்ரதமை
செப்.19 வி – த்விதீயை
செப்.20 வெ – த்ருதீயை
செப்.21 ச – சதுர்த்தி (மஹாபரணீ)
செப்.22 ஞா – பஞ்சமி
செப்.23 தி – சஷ்டி (கபில சஷ்டி)
செப்.24 செ – ஸப்தமி (மஹாவ்யதீபாதம்)
செப்.25 பு – அஷ்டமி (அபிதவா நவமி, புதாஷ்டமி, மத்யாஷ்டமி)
செப்.26 வி – நவமி
செப்.27 வெ – தசமி
செப்.28 ச – ஏகாதசி
செப்.29 ஞா – துவாதசி (சந்யஸ்த மஹாளயம்)
செப்.30 தி – திரயோதசி (கஜச்சாயை)
அக்.01 செ – சதுர்தசி (சஸ்த்ர ஹத மஹாளயம்)
அக்.02 பு – மஹாளய அமாவாஸை, பிண்டபித்ரு

மஹாளய பக்ஷ தர்ப்பணம்

தர்ப்பணம் என்றால் போனவர்களுக்கு திருப்தியையும் நிறைவையும் தருவதாகும். அவர்களை திருப்திப்படுத்தி மேலும் நகர்த்தச் செல்ல சிரார்த்தம் இது செய்யப்படுகிறது.

மூதாதையரின் இறப்பு நேரம், தேதி மற்றும் இயல்பைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தனது மூதாதையருக்கு கடமையை நிறைவேற்றும் நாள் இது. இது ஒரு வகை பார்வண சிரார்த்தம். இந்த நாளில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யப்படுகிறது.

செயல்முறைகள்

ஸ்ரார்த்தம் நான்கு படிகளில் செய்யப்படுகிறது:

1. விஸ்வதேவ ஸ்தபனா – இது ஒரு தொழில்முறை பூசாரியைக் கலந்தாலோசிப்பது மற்றும் சடங்கைச் செய்வதற்குத் தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் சேகரிக்கும் செயல்முறையைக் குறிப்பிடுகிறது.

2. பிண்டம் – அரிசி, பார்லி, பசும்பால், தேன், நெய் மற்றும் சர்க்கரையால் ஆன ஆத்மாக்களுக்கு ஒரு வட்ட வடிவ பந்தில் உணவு வழங்கப்படுகிறது.

3. தர்ப்பன் – எள், பார்லி, தர்பை புல் மற்றும் வெள்ளை மாவு ஆகியவற்றுடன் தர்பனம் தண்ணீரை வழங்கி வருகிறது.

4. பிராமணர்களுக்கு உணவளித்தல் – இறுதியாக, பிராமணர்களுக்கு நன்றி உணவாக உணவு வழங்கப்படுகிறது.

சிரார்த்தத்தில் என்ன தானம் செய்ய வேண்டும்?

சிரார்த்தம் பூஜையில் சுப பொருட்களை தானம் செய்வது பித்ரு தோஷத்திலிருந்து விடுபட உதவுகிறது. புராண நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது.

வெல்லம் – இது வறுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறது.

நிலம் – ஒரு முனிவருக்கு நிலத்தை வழங்குவது உங்களுக்கு நிதி ரீதியாக வளர உதவுகிறது.
தங்கம் – இது வீட்டில் உள்ள ஒற்றுமையை குறைக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியான உறவை ஏற்படுத்த உதவுகிறது.

மாடு – மற்றவர்களுக்குப் பரிசாகப் பசுவை கொடுப்பது, பெயர், புகழ் மற்றும் அனைத்து வார்த்தைகளான இன்பங்களையும் கொடுத்து உங்களுக்கு உதவுகிறது, ஏனெனில் இது யாராலும் செய்யப்படக்கூடிய தூய்மையான தானம்.

உணவு தானியங்கள் – இது செழிப்பை அளிக்கிறது.
நெய் – முனிவருக்கு நெய்யை வழங்குவது வாழ்க்கையின் அனைத்து கண்ணோட்டங்களிலும் வளர உதவுகிறது.

உப்பு – உப்பு நம் முன்னோர்களின் ஆத்மாவை சமாதானப்படுத்துகிறது, இதனால் அவர்கள் நமக்கு வரங்களை அளிக்கிறார்கள்.

ஆடைகள் – எப்போதும் செழிப்பு மற்றும் மன அமைதியுடன் ஆசீர்வதிக்கும் முனிவர்களுக்கு ஒரு ஜோடி ஆடைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
வெள்ளி – வெள்ளியை வழங்குவது நம் முன்னோர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
எள் விதைகள் – எள் விதைகளை வழங்குவது எந்தவிதமான ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

மஹாளயபக்ஷம் தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,
2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,
3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்

1.தேவகடன்,
2.பித்ருகடன்,
3.ரிஷிகடன்

ஒவ்வொரு மனிதனும், தேவகடன் நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
பித்ருகடன்,தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும்நிவர்த்தி அடையலாம்.

ரிஷிகடன் முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.

கிடைத்தற்கரியது மஹாளயபக்ஷம் புண்ணிய காலம்.

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபக்ஷபூஷித லோகமாகும். இங்குதான் மஹாளயபக்ஷத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள். அதாவது, நமது மூதாதை யர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளயபக்ஷம் மாகும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற் றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள்.
இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபக்ஷம் காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.

என் அருமையான தகப்பன் கடினமாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, என்னைப் படிக்க வைத்து, நல்ல வேலையில் கொண்டுபோய் சேர்த்து, நான் உயர்வதைப் பார்த்து மகிழ்ந்து, எனக்குத் திருமணம் செய்து வைத்து, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துவிட்டு, என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்துவிட்டுப் போனாரே… அதற்காக நன்றி என்று தெரிவிப்பது நல்லதல்லவா?
அந்தத் தாய் இல்லையெனில் நான் இல்லை. தன் உதரத்தில் சுமந்தவள் என்பதால் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என் நினைவாகவே வாழ்ந்து, எனக்காகவே தன் வாழ்க்கை வசதிகளை சுருக்கிக்கொண்டு, என்னுடைய வளர்ச்சியையும் கம்பீரத்தையும் பார்த்துப் பூரித்து ‘அது என் பிள்ளை’ என்று பலபேர் முன்னால் கர்வமாகச் சொல்லி, அந்தக் கர்வத்தின் காரணமாகவே இன்னும் அதிக உதவிகள் செய்து, உங்கள் மனைவிக்கு வாழ்வின் மேன்மைகளை உணர்த்தி, உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லி, சட்டென்று ஒருநாள் போய் வருகிறேன் என்று சொன்னதுபோல மறைந்து போனாளே… அவளுக்கு மனமார்ந்த நன்றியாக தர்பனம் செய்வதுதான் எத்தனை சுகம்! நெஞ்சார்ந்த நன்றி என்று தாய் தந்தையாரை நினைத்துக் கொண்டுவிட்டால் அந்த நீத்தார் கடனில் எவ்வளவு ஆழமாக, உணர்வுப்பூர்வமாக ஈடுபட முடியும்!

‘அன்பு தாயே, தந்தையே, நீங்கள் வெளிச்சத்திற்கு வாருங்கள் உங்கள் பசி தீர்க்க இந்த அரிசி மாவினால் செய்த பிண்டத்தை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தாகம் தீர்க்க எள் நீர் வார்க்கிறேன். உங்களை கைகூப்பி இந்த இடத்தில் இந்த இந்த மஹாளயபக்ஷத்தில், என் அருகே வந்து நான் கொடுக்கின்ற இந்த சிறிய பொருட்களை காணிக்கையாக ஏற்று சந்தோஷமடைய வேண்டும். எங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேண் இங்கே உட்கார்ந்து இத்தனை கம்பீரமாக இதைச் செய்ய முடிகிறதென்றால் அது நீங்கள் என்னை நன்கு வளர்த்ததுதான் காரணம்’ என்று நெகிழ்ந்து சொல்லுங்கள்.

அரிசி மாவினால் செய்த பிண்டத்தை காக்கை தின்று விட்டது. ஐயர் தட்சணையை வாங்கிக்கொண்டு போய்விட்டார். நீரில் இறைத்த ஜலம், நீரோடு கலந்துவிட்டது. நீங்கள் மட்டும் குளக்கரையில் அமர்ந்து நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனம் மட்டும் அந்த மஹாளயபக்ஷத்தில், அம்மாவையும், அப்பாவையும், மற்ற முன்னோர்களையும் நினைத்துக் கொள்ளும். உள்ளுக்குள் கை கூப்பும். கண்களின் ஓரம் நீர் திரளும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

எவ்விதம் பித்ருக்கள் வருகிறார்கள்?

மஹாளயபக்ஷம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களை தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.

தேவர்கள் வணங்குகின்றனர். பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.

மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனிதநாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக நமது நன்மைக்காக விளக்கியுள்ளது.

இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பாலியலைத் தூண்டும் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

பித்ருக்களை வழியனுப்பி வைத்தல்!

இவ்விதம் மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு, மஹாளய அமாவாசை அன்று விசேஷ பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுலகிற்கு எழுந்தருளி நம்முடன் இந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களுக்குப் பாதபூஜை செய்து (பெரியவர் ஒருவர் மூலம்), நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும் (மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரணங்கள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள். ஆதலால், மஹாளயபக்ஷம்என்ற மகத்தான புண்ணிய காலம் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது.

தர்ப்பணம்

உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம். தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.

செய்ய வேண்டியவை

இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம். தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.

தவிர்க்க வேண்டியவை

கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.

ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காணலாம்..!

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம்.
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும்.

“”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி.

இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் – குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான்.
இந்துக்களுக்கு தமது முன்னோரது ஆசி பெற அமாவாசைகள் அதிலும் குறிப்பிட்ட சில அமாவாசைகள், வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் மிகவும் உகந்தவை.

பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்காகச் செய்யவேண்டும். தர்ப்பணம் என்றால் திருப்தியுடன் செய்வது என்றும், சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம்.
மஹாளயபக்ஷ அமாவாசையில், சீக்கிரம் எழுந்து புனித நதிகளில், கடலில் அல்லது அருகிலுள்ள ஏரி குளம் இவற்றில் நீராடுவார்கள். இந்த நாளில் உண்ணாவிரதம் இருந்து அமாவாசை நோன்பையும்
கடைப்பிடிக்கின்றனர்.

ஸ்ரார்த சடங்குகளை செய்வது, எள் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புனிதமான செயல் என்று நம்பப்படுகிறது.

பிந்திய மாத காலத்தில் தங்கள் முன்னோர்களை வணங்க முடியாதவர்கள் இந்த நாளில் இருந்தாவது, இவற்றினை செய்தால் நலம் ஆகும். அன்று அந்தணர்கள், முதியவர்கள், ஏழைகள் என்பவருக்கு தானம் தர்மம் செய்வது பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தடைபட்ட திருமணம், வேலையின்மை, நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் வாழ்வில் கிடைக்கப்பெறும்.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி,திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.

பிதுர் தோஷம் நீக்கும் மஹாளயபக்ஷ அமாவாசை பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது. அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

(ஆதாரம் : ஸ்ரீ பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், ஸ்ரீ கருடபுராணம், ஸ்ரீ பவிஷ்ய புராணம், ஸ்ரீ மத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ அகத்தியர் பூஜா விதானம், முதலிய நூல்கள்).

  • ராஜசேகர வாத்யார், நெல்லை

திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

tirupathi laddu - 2026
#image_title

ஹிந்துக்கள் மிகவும் புனிதமாகப் போற்றப்பட்டு வரும்  திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த ஆய்வறிக்கையும் அதனைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகளும் விவாதங்களும் ஹிந்துக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, திருப்பதி பெருமாளுக்கு விரதம் இருந்து வரும் புரட்டாசி மாதத்தின் தொடக்கத்தில் இத்தகைய செய்தி வெளியாகி இருப்பது பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். வெகு நாட்களுக்கு முன்பே தரிசன டிக்கெட் பதிவு செய்து வரிசையில் காத்திருந்து திருப்பதி பெருமாளை வணங்கி செல்லும் பக்தர்கள் அனைவருமே தவறாமல் இங்கு விநியோகம் செய்யப்படும் பிரசாத லட்டுவையும் வாங்கிச் செல்கிறார்கள். நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் வரை இங்கே பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும், திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் மத்தியில் இருக்கும் தேவை காரணமாக, கள்ளச் சந்தையில் திருப்பதி லட்டு கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதும் பழக்கமாகி போன ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தான், தற்போதைய ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலந்திருப்பதாக தெரியவந்தது குறித்து அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததற்காக  முந்தைய முதல் அமைச்சர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும்  என்று கூறியிருந்தார். இவரது பேச்சு திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை மட்டுமல்லாது ஹிந்து ஆன்மீக உணர்வாளர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சந்திரபாபு நாயுடு இவ்வாறு புகார் கிளப்பிய மறுநாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் திருப்பதி லட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து, ‘முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர். நாங்கள் அதை தரமானதாக மாற்றி நெய் மட்டுமே லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரி குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது பெரியவந்துள்ளது. அந்த நெய்யில், மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து  திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கூறியபோது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் தேவை என்று கூறி டெண்டர் விடப்பட்டது. டெண்டரின் பேரில் அந்த நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்தது. அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணை நடத்தி நெய் கொள்முதல் நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக பார்க்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பாக எழுந்துள்ள  நிலையில், ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த குற்றச்சாட்டை  மறுத்துள்ளார். அக்கட்சியின் சார்பில் ஒய்.வி.சுப்பா ரெட்டி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கு தேசம் கட்சி அரசியல் லாபத்திற்காக பொய் சொல்கிறது. திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அவமதித்துள்ளார். லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க சந்திரபாபு நாயுடு தயங்கமாட்டார்  என்பதற்கு இதுவே அத்தாட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஹிந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் புனிதத்தை நாசம் செய்யும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளில் அரசியல் கோணங்கள் இல்லை. யார் பொறுப்பு என்று கண்டுபிடியுங்கள்” என்று கூறினார். 

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு கலப்படம் குறித்து, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சமூகத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “சநாதன தர்மத்தை எந்த வகையில் இழிவுபடுத்தினாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேச அளவில் சநாதன தர்ம பாதுகாப்பு அமைப்பை (Sanatana Dharma Rakshana Board) உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

திருமலை திருப்பதி லட்டு விவகாரம் இப்போது ஆந்திர அரசியல் மட்டத்திலும் நாடு முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது.  சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் அலசப்பட்டு வருகிறது.  குறிப்பாக திருப்பதி வேங்கடசலபதிக்காக விரதம் இருந்து வரும் புரட்டாசி மாத தொடக்கத்தில் இந்த உபகாரம் வெளியானது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி நிறுவனம் தாங்கள் கடந்த நான்கு வருடங்களாக  திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என்று  கூறி ஒதுங்கி விட்டது.  ஆய்வறிக்கைகளின்படி  தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிறுவனம் என்றும் திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் என்றும் குறிப்பிடப்பட்டு அவற்றின் மூலம் தான் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக தளங்களில் வெளியாகும் வெவ்வேறு தகவல்களால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Ind Vs Ban Test: அஸ்வின், ஜடேஜா அற்புதமான ஆட்டம்!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 19.09.2024

முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்

அஸ்வின் – ஜடேஜா அற்புதமான ஆட்டம்

          இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்(அஷ்வின் ஆட்டமிழக்காமல் 102, ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86, ஜெய்ஸ்வால் 56, மஹ்மூத்4-58)

          இந்திய கிரிக்கெட் அணி வலுவான அணி. ரோஹித்ஷர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் அனுபவம் மிக்க பேட்டர்கள். எனவே வங்கதேசத்து அணியைஊதித் தள்ளிவிடுவார்கள் என்ற நினைப்பு பலருக்கு இந்தியாவில் இருந்திருக்கலாம். வங்கதேசஅணி இப்போதுதான் வலிமையான பாகிஸ்தான் அணியை அவர்களது நாட்டிலேயே டெஸ்ட் பொட்டிகளில்தோற்கடித்துவிட்டு வந்திருக்கிறது. இந்திய அணி நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டி விளையாடவில்லைஎனவே வங்கதேச அணி எளிதில் தொடரை வெல்லும் என்ற பேச்சுக்கள் அந்தப்பக்கத்தில் எழாமல்இல்லை.

          இன்று நடந்த சென்னை சேப்பாக்கம் டெஸ்டில்முதல் நாளில் பல தப்புத்தாளங்கள் நிகழ்ந்தன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின்சமீபத்திய ஆதிக்கம் உறுதியாக இருந்தது. வெளிநாட்டு அணிகள் இந்திய பேட்டர்களுடன் போட்டியிடலாம்ஆனால் அவர்களின் கீழ்-மிடில் ஆர்டரை விஞ்சும் ஆழம் அந்த அணிகளிடத்து இல்லை. டெஸ்ட்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் 38 வயதை எட்டிய சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன்அஷ்வின், அவரோடு சென்னை சூப்பர் கிங் ரவீந்திர ஜடேஜா இருவரும் வங்கதேச அணிக்கு தங்கள்திறமையைக் காண்பித்தார்கள். அவர்கள் முதல் நாளை ஸ்டைலாக தொடங்கி, 6 விக்கெட் இழப்புக்கு144 ரன்களில் இருந்து இந்தியாவை உடையாத 195 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் மீட்டனர்.

          ஏறக்குறைய பிரிக்க முடியாத இரண்டு சுழல்இரட்டையர்களில், அஸ்வின் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்த போது, ​​அந்த நாளில் சிறந்தபேட்டராக இருந்தார். அவரதி பேட்டிலிருந்து கிளம்பிய ஒலியில் இருந்து சக சென்னை மக்கள்பிரமிப்பில் ஆழ்ந்தனர். மைதானத்தில் ஒரு பாட்டி இரண்டு டம்ளர்களைத் தட்டிக்கொண்டு அஶ்வினைப்பாராட்டியது காணக்கண்கொள்ளாக் காட்சியாகும். ஜடேஜா 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கையில்இன்றைய நாளின் ஆட்டம் முடிந்தது.

          இந்திய அணியின் ஏழாவது விக்கெட் ஜோடி அவர்களின்இதயங்களை உடைப்பதைப் பார்க்கும் வலி வங்காளதேசத்திற்கு புதியதாக இருக்காது. ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக, இந்தியாவோடு விளையாடும் ஒரு டெஸ்டில் அந்த அணி பந்து வீசத் தேர்வுசெய்தது. இந்தியாவும் அப்படித்தான் செய்திருப்போம் என்றார் ரோஹித். ஆடுகளத்தின் தயாரிப்புமழையால் தடைபட்டதால் அல்ல: இந்த சற்று பச்சையான, ஈரமான ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்றதுஎன நினைத்ததால்.

          தள்ளாட்டம்-சீம் லைன் மற்றும் லெங்த் பந்துவீச்சாளர்,ஹசன் மஹ்முத், மென்மையான சீம் அசைவு மூலம் டாப் ஆர்டரை சிதைத்தார். இந்தியா 3 விக்கெட்டுக்கு34 ரன்களில் இருந்து சுருக்கமாக மீண்டது. ஆனால் பங்களாதேஷ் இரண்டாவது அமர்வில் மேலும்மூன்று விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியது.

          பின்னர் அஷ்வின் இந்திய அணியின் பேட்டிங்கைஓட்டத் தொடங்கினார். அவரோடு ஜடேஜா இணைந்தார். அவர்களிடமிருந்து ஒரு புதிய விளையாட்டுவெளிப்பட்டது. அதுவரை மஹ்மூத் இந்தியாவைக் கட்டுப்படுத்தினார். தஸ்கின் அகமது மற்றும்நஹித் ராணா ஆகியோர் புதிய பந்தை மிகக் குறுகியதாகவோ அல்லது மிகவும் முழுதாகவோ வீசியபோதும்,மஹ்மூத் தவறில்லை. ரோஹித் ஷர்மா ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பல பந்துகளைத் தவிர்த்தார்.இருப்பினும், மஹமூதின் பந்து ஒன்றினை இரண்டாவது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்தார். ஷுப்மான்கில் லெக் சைடில் ஒரு ஃப்லிக் ஆட கேட்ச் ஆனார். ஆனால் அவர் தனது எட்டு பந்துகளில் ஒருபோதும்எளிதாக உணரவில்லை. விராட் கோலி முழு நோக்கத்துடன் வெளியே வந்தார், ஆனால் உடலில் இருந்துஒரு எட்ஜ் ஆனது; கேட்ச் பிடிக்கப்பட்டது அவர் வெளியேறினார்.

          யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த்,(இவர்  கிட்டத்தட்ட 700 நாட்களுக்குப் பின்னர்தனது முதல் டெஸ்டில் விளையாடினார்), சில அலட்சிய பந்துவீச்சுக்கு எதிராக நான்காவதுவிக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் தனது எட்டாவது அரை சதம் அடித்தார்.பந்த் ஆபத்தானவராகத் தோன்றத் தொடங்கினார். மதிய உணவிற்குள் இந்தியா அந்த முயற்சியைமுறியடித்தது. மதிய உணவிற்குப் பிறகு, பந்த் ஒரு கட் ஷாட்டின் மூலம் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து மஹ்மூதுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.

          டாஸ்கினும் ராணாவும் ஒரு சிறந்த அமர்வில்கலந்து கொண்டனர். முதல் அமர்வைப் போல் இல்லை என்றாலும், பந்து இன்னும் ஸ்விங்க் ஆனது,மேலும் அவர்கள் நல்ல நீளத்தில் பந்துவீசுவதன் மூலம் ஒரு கடுமையான சோதனையை வழங்கினர்.ராணா இறுதியில் கூடுதல் வேகத்தில் ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார், மேலும் அமைதியானதோற்றமுடைய கே.எல். ராகுல் ஷார்ட் லெக்கில் ஜாகிர் ஹசனின் அசத்தலான கேட்சுக்கு விழுந்தார்.

          மெஹிதி ஹசன் மிராஸ் ராகுலின் அந்த பெரியவிக்கெட்டைப் பெற்றிருக்கலாம் என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் பொதுவாக பங்களாதேஷ்கேப்டன் நஜ்முல் ஹசனுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் வழங்கத் தவறினர். உண்மையில், அவர்செயல்பட ஒரு முழுமையான தாக்குதல் இல்லை. மஹ்மூத் அவர்களை முதல் அமர்வில் தனித்து விளையாடினார்,மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாகச் செயல்பட்டபோது, ​​அவர்களை புதியதாக வைத்திருக்கும்ஸ்பின்னர்கள் அவர்களிடம் இல்லை.

          எல்லாவற்றையும் சொல்வது எளிது, ஆனால் 6 விக்கெட்டுக்கு144 என்ற நிலையில், அணியின் ஸ்கோரை மீட்டெடுப்பது மிகவும் சிரமம். அஸ்வின் பெரிய ஆரவாரத்துடன்மைதானத்தில் நடந்தவுடன் அப்பணியைத் தொடங்கினார். அஸ்வின் மற்றும் ஜடேஜா மூலம் பல மீட்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அஷ்வின் பின் காலில் நின்று ஆடினார். பவுன்ஸின் உச்சியில்பந்துகளை சந்தித்தார்; மற்றும் கவர்கள் மற்றும் ஸ்கொயர் லெக் மூலம் அவற்றை நொறுக்கினார்.ஜடேஜா பழைய பாணியில் விளையாடினார்.

          பந்து மென்மையாக மாறியதும், ஓட்டங்கள் பாயத்தொடங்கியதும், களம் விரிக்க வேண்டியிருந்தது. அண்மை ஃபீல்டர்கள் எல்லைக்கோட்டருகே செல்லவேண்டியதாயிற்று. சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக பவுண்டரிகளை வழங்கினர். பல இடங்களில்இருவரும் ஒருவரை ஒருவர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டனர். அஸ்வின் ராணாவின் வேகத்தைஸ்லிப்களுக்கு மேல் நான்கு ரன்களுக்கு உயர்த்தியபோது, ​​​​ஜடேஜா பாராட்டினார். ஜடேஜாவின்ஒரு பிளாட் ஸ்லாக்-ஸ்வீப்பில் அஸ்வின் பாராட்டை திரும்பி அளித்தார்.

          ஆட்டம் முடிவடைய ஆறு நிமிடங்களுக்கு முன்பு,அஸ்வின் 108 பந்துகளில் தனது சதத்தை எட்டினார், இதனால் சொந்த நகரத்தின் கூட்டத்தை மகிழ்ச்சியில்ஆழ்த்தினார். ஜடேஜா 80களில் நுழைய அதே ஓவரில் ஒரு ஃபோர் அடித்துக் கொண்டாடினார். ஆட்டம் இன்னம் முடிந்துவிடவில்லை. நாளை பாக்கியிருக்கிறது என்பதை நினைவூட்டினார்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

vilakkupooja in chozhavanthan janakai mariamman - 2026
#image_title

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மதுரை அருகே சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில், பௌர்ணமி செவ்வாய் மற்றும் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில், சோழவந்தான் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எனண்ணெய் திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவிளக்கு பூஜையில், கலந்துகொண்ட பெண்கள் நேர்த்திக்கடன் நிறை
வேற அம்மன் பாடல்கள் பாடி வேண்டிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீக பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

வாடிப்பட்டியில் வல்லப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வல்லப கணபதி கோவிலில், வாடிப்பட்டி வடக்கு மண்டல் சார்பாக பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா வையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன், சிறப்பு பூஜைசெய்து பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் மண்டல் தலைவர் சேது ராமன், மாவட்டப் பொருளாளர் முத்து ராமன், மதுரை மாவட்ட வழக்கறி ஞர் பிரிவு மாவட்ட துணைத் தலை வர் கார்த்திகேயன், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் வாசு தேவன், மண்டல் பொதுச்செயலா ளர் தர்மராஜன், பிரபாகர், கோபால், செல்வம், காட்டு ராஜா,பாலா, மேலாண்மை மாவட்ட துணைத் தலைவர் சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவளநாட்டு முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே 66.எம்.
உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்ன கருப்புசாமி, ஆண்டிசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம்,
கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று காலை யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஆண்டிச்சாமி மற்றும் முத்தையா சுவாமி கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மதுரை புத்தகத் திருவிழா நிறைவு!

madurai book fair concluded - 2026
#image_title

4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை:
ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை:

மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் மதுரை புத்தகத் திருவிழா மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர பி.மூர்த்தி , கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தமுக்கம் மாநாட்டு மையத்தில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 230க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

தினந்தோறும் மாலை 6.00 மணியளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தலைசிறந்த எழுத்தாளர், முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புத்தகத் திருவிழாவை பார்வையிட வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

”புத்தகத் திருவிழா – 2024” தொடங்கிய 06.09.2024 முதல் இன்று (17.09.2024) வரை 700க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 42,000 மாணவ மாணவியர்கள் உட்பட 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மாணவ மாணவியர்கள் வசதிக்காக , மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 3.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

”புத்தகத் திருவிழா – 2024” நிறைவு நாளான இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் பங்கேற்று, கடந்த 12 நாட்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்கள், கிராமிய கலைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர் மற்றும் பொறுப்பாளர்களின் பணியினை பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பரிதவிப்பது பாஜக வா? கோவையா?

coimbatore annapoorna owner and nirmala seetharaman - 2026
#image_title

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக கோவையின் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் “முதலாளிகளுடன்” தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவன் நான்.

பூனா மற்றும் கோவையின் தட்பவெப்பநிலை கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பூனாவையும் இன்றைய பூனாவையும் கோவையுடன் ஒப்பிட்டால் பூனா அடைந்த தொழில் வளர்ச்சியில் கால் பங்கு கூட கோவை அடையவில்லை. அதற்கு காரணம் கோவையில் “professional approach” என்பது கிடையாது. அங்குள்ளவர்கள் professionalism மற்றும் proprietorship என்ற இரண்டுக்கும் இடையில் நாற்பது ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை professional போல் காண்பித்துக் கொண்டு முதலாளிகளாகத்தான் நடந்து கொள்வார்கள். முதலாளியைத் தவிர வேறு யாரும் எந்த முடிவும் கருத்தும் சொல்ல முடியாது.

பூனா இன்றைக்கு இந்தியாவின் Detroit city. அத்துடன் ஐடி நிறுவனங்கள், பொறியியல் நிறுவனங்கள் என்று கொடிகட்டிப் பறக்கிறது. பூனாவில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் நல்ல பதவிகளில் காண முடியும். கோவையில் நீங்கள் இதைப் பார்க்க முடியாது. சில நிறுவனங்களில் நல்ல ஒரு Executive வந்து நிறுவனத்தை திறம்பட நடத்துவார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரை துரத்தி விடுவார்கள், அங்குள்ள தொழிலாளிகள் பலரிடம் காரணம் கேட்டபோது அவர்கள் சொன்னது வியப்பாக இருந்தது. “சார், ஓனர் இன் செக்யூரிட்டியா ஃபீல் பண்ணுவார் சார், அதுனால ஏதாவது காரணம் சொல்லி வேலையில் இருந்து தூக்கிருவாங்க சார்”

ஒரு தொழில்முறை அணுகுமுறை இருந்திருந்தால் ஒரு பெரிய நாட்டின் நிதியமைச்சருடன் புத்திசாலித்தனமான முறையில் தன்னுடைய வாதங்களை முன்வைத்திருக்க முடியும். Facts and Figures உடன் ஒரு convincing presentation கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு முதலாளித்துவ மனப்பான்மையுடன் ஏளனப் பேச்சை எந்த ஒரு Professional Entrepreneur ஆக இருப்பவர் நிச்சயம் செய்யமாட்டார்.

இது ஒரு தனிப்பட்ட மனிதரின் பிரச்சினை இல்லை கோவையின் Professional Industrial approachல் இருக்கும் குறை!

இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் மெனக்கெட்டு, பல துறைகளின் அதிகாரிகள் வந்து அதிகப்படியான நேரத்தை செலவிட்டு பல முன்னெடுப்புகளை எடுத்திருந்தார்கள். இது போன்ற ஒரு வாய்ப்பு சென்னைக்கோ அல்லது பெங்களூர், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கோ கிடைத்திருந்தால் அங்கிருக்கும் தொழிலதிபர்கள் பலவற்றை சாதித்திருப்பார்கள். ஆனால் இங்கே கோட்டை விட்டிருப்பது கோவை.

இதை பாஜக அரசியல்வாதிகள் கூட சில நாட்களில் மறந்து விடுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் மோசமானவர்கள், வேறு ஆட்சி வந்தாலும் கூட இந்த அனுபவத்தை மறக்க மாட்டார்கள். இப்படி தான்தோன்றித்தனமாக பேசுவது என்ன ஸ்டைல் என்றே புலப்படவில்லை.

ஒருவேளை கோவையில் இந்த மெனக்கெடலை திராவிட ஈகோ சிஸ்டம் காலி செய்ததா, அதற்கு ஒரு தனி நபரை பயன்படுத்தியிருக்குமோ என்ற ஐயமும் எழாமலில்லை. அப்படி இருந்திருந்தாலும் ஒரு மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு எப்படி கொண்டு வருவது என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது.

ஆக, கோவை வளரவேண்டும் என்றால் அது தன்னுடைய தொழில் ரீதியான professionalism என்ற ஒன்றை கொண்டுவர வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த கொடீட்சியா பம்மாத்து எல்லாம் வேலைக்கு ஆகாது. அதுவரைக்கும் பரிதவிக்கத்தான் வேண்டும்!

இனி பாஜகாவின் பரிதவிப்புகளைப் பார்ப்போம். எப்போதும் பொட் பொட்டென்று அடிக்கும் நிர்மலா சீதாராமன் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை. “I am here for serious business and don’t have time for sarcasm” என்று அப்போதே சொல்லி, கேட்டவர் முகத்தில் கரிபூசியிருந்திருக்கலாம். இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியிருக்காது.

ஒரு வேளை அருகிலிருந்த அம்மையார் சமிக்ஞை எதுவும் செய்தாரோ என்னவோ? அண்ணாமலை என்ற ஆளில்லாத சமயத்தில் தன்னை ஒரு கோவையின் நலம் விரும்பி என்று காண்பிக்க உண்மையிலே வானதி எடுத்த சீரியசான முயற்சிகள் கடைசியில் பரிகாசத்திற்கு உள்ளானது தான் மிச்சம்.

கோவை எப்படி தொழில் ரீதியான அணுகுமுறைக்கும் முதலாளித்தனத்துக்கும் நடுவில் பரிதவிக்கிறதோ அதுபோல் பாஜகாவும் மென்மையான போக்கிற்கும் தடாலடி அரசியலுக்கும் இடையில் பரிதவிக்கிறது. முதலில் தடாலடி அரசியல் அணுகுமுறை தான் தமிழ்நாட்டில் எடுபடும் என்பதை தலைமை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அதிகப் பிரசங்கித்தனமான பேச்சிற்கு மன்னிப்பு கேட்டவுடன் “ஆமாம், அவருடைய கோரிக்கைகள் தவறில்லை, அவர் வெளிப்படுத்திய விதம் சரியானதாக இல்லை. அதை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்டார். அதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இனிவரும் காலங்களில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தைரியமாக கூறியிருக்க வேண்டும். அதைக் கூறுவதற்கு யாருக்கும் பாஜகவில் திராணி இல்லை.

முதலில் அவரை நேரில் சந்திக்க அனுமதி கொடுத்திருக்க கூடாது. அவரை ஒரு கடிதமாக அனுப்புங்கள் என்றோ அல்லது நீங்களே பொதுவெளியில் தெரிவித்து விடுங்கள் என்றோ கூறியிருக்க வேண்டும். இரண்டாவது முறை அவரை சந்திக்க வைத்தது நிதியமைச்சருடைய பொறுப்பு நிலையை கீழே இறக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் படிக்கப்போன அறிவாளி அந்த வீடியோவை வெளியிட்டு பிறகு நீக்கி மன்னிப்புக் கோருகிறார். எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் சபை நாகரிகம் இல்லாமல் பேசினார். அதற்கு பிராயச்சித்தம் கேட்கிறார். அதை வெளியிட்டதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

கழகங்களாக இருந்தால் தம்முடைய சார்பு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்திருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நித்தியானந்தா வீடியோவையே தொடர்ந்து ஒலிபரப்பியவர்கள். இதற்கிடையில் கட்சிக்காரர் ஒருவரையும் நீக்கியிருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளால் பாஜக.,வினர் தொழிலதிபர்களுக்காக எடுத்த சீரியசான முயற்சிகள் காணாமல் போய், நாங்க தான் தப்பு செஞ்சோம் நாங்கதான் தப்பு செஞ்சோம் என்று பாஜகவினரே தம்பட்டம் அடித்தது போலாயிற்று.

முதலில் தடாலடி அரசியலை தைரியமாகச் செய்யுங்கள். அப்போதுதான் தொண்டனுக்கே கட்சி மீது நம்பிக்கை வரும். இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் கழகங்களுக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது.

அத்துடன் கோவைக்கு இது போன்ற முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வையுங்கள். They don’t deserve unless they become true Industrialists!”

  • அப்பாவி