October 22, 2021, 2:47 pm
More

    ARTICLE - SECTIONS

    உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் சாய்னா, சிந்து

    02 Aug 03 Badminton - 1உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தார்.

    கால் இறுதியில் சாய்னா, முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினையும், சிந்து, 8ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவையும் எதிர்கொள்கின்றனர். இத்தொடரில் சாய்னா 2015ல் வெள்ளியும், 2017ல் வெண்கலமும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீரரான சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் விட்டின்கசை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்று அசத்தினார். இதே போல, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரான்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட்களில் மலேசியாவின் சூன் ஹாத், ஜேமி லாய் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,575FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-