பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று வேலூர் வந்தது. இதற்கு பாஜக திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, விசிக உட்பட பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பேசிய தமிழிசை சவுந்திர ராஜன், தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.