தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆஜராக திவாகரனுக்கு சம்மன்

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் துணை ராணுவம் நடமாட்டம்: வழக்கமான பயிற்சி என்கிறார் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து கும்பகோணம் ஏஎஸ்பி கணேசமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 வீரர்கள் கும்பகோணம் வந்து பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினர்.

‘மனநலம் பாதிக்கப்பட்ட’ திவாகரனால் மீண்டும் உயிர்த்தெழுந்த அம்மா அணி! பொதுச் செயலாளர் ‘அவரே’!

அதிமுக.,வையும் ஆட்சியையும் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகளைச் செய்த சசிகலா குடும்பம், இப்போது அனைத்தையும் இழந்து சிதறிப்போய்க் கிடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பழிவாங்குகின்ற ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்று இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை மீட்பு, அதிமுக., கட்சி அலுவலகம் மீட்பு, அதிமுக மீட்பு என்றெல்லாம் இயங்கிய சசிகலா குடும்பம், இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகியுள்ளது.

பச்சை பட்டு ஜொலிக்க… பக்தர் குரல் அதிர… வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை மக்கள் கள்ளழகர் மேல் காட்டும் பக்தியும் அன்பும் சொல்லில் வடிக்க இயலாதது என்று எண்ணும்படி, ஆட்டமும் பாட்டமுமாக, அழகரை வரவேற்று மாலைகளும் நிவேதனங்களும் அளித்து தங்கள் ஒரு வருட காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.

காவிரி தொடர்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; பதிலில்லை: முதல்வர்

சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தி.மு.க.,வோடு கூட்டணி இல்லை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்கிறார்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில சுயாட்சியை மீட்பது குறித்து பேசுவதற்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இன்றுகோபாலபுரத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் .
- 2026

காங்கிரஸ் வெற்றிபெற கேம்பிரிட்ஸ் அனலிடிகா கொடுத்த பகீர் திட்டங்கள்! வெளிநாட்டு சதியை இந்திய சமூகம் முறியடிக்குமா?

காஷ்மீர் கதுவா சிறுமி பாலியல் விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நடக்கும் போராட்டங்கள் வரை, இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள பாஜக., தன் வழிகளைக் கையாள்கிறது. நீதித்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலகம் விளைவித்தார்கள். நீதிபதியை பதவியிறக்க மனு போட்டார்கள். எல்லாமே இந்த அரசியல் சதித் திட்டமிடலின் ஓர் அங்கம்தான் என்கிறார்கள்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிர்மலா தேவி விவகாரம்: யாரையோ காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என முருகன் மனைவி புலம்பல்

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை...

அய்யாக்கண்ணு மெரீனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை இல்லை: சென்னை ஐகோர்ட்

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு...

கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
- 2026

Recent articles