Breaking News
ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவைத் தட்டினர்: சரத் குமார்
வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர்; தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே! ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனை நடத்தினர். ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர்
வருமான வரி சோதனை: நடந்தது என்ன? சொல்வது என்ன?
தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே!ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனைநடத்தினர்.
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர் என்று கூறினார்.
அம்மா உணவகம் மூலம் பண விநியோகம்: அதிர்ந்த அதிகாரிகள்!
பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது.எனவே இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது
கீழ்த்தரமாகும் தேர்தல் பிரசாரம்; சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை; முகம் சுளிக்கும் மக்கள்!
சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கீழ்த்தரமான வகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை வைத்து ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வரும் பிரசாரத்தைக் கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பது...
ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் கார் உடைப்பு
பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் சோதனை
இவர், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற பணம் வாங்கியதாக பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார், விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை
வியாழன் நேற்று சரத்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருந்தார். தொகுதியில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்
வாக்காளர்க்கு தினகரன் தரப்பு பரிசுப் பொருள்: வருமான வரித் துறை சோதனை
சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு தயாராக வைத்து இருந்த குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த தினகரன் முயல்வதாக குற்றச்சாட்டு
அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை
தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!
திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை.