இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. காலையில் செப்பு தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலம் ஆகும்.இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஆண்டாளுக்கும் ரங்கமன்னார்க்கும் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது ஐதீகம்.
இந்த திருக்கல்யாணம் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை இரவு வேளைகளில் ஆண்டாள் ரங்கமன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நேற்று 11ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரங்க மன்னரும் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோபாலா கோவிந்தா என கோஷம் முழுங்கியவாறு ரதத்தினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து வந்து நிலையம் சேர்த்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு ஆண்டாள் அங்க மணிகளுடன் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கன்னியா லக்னத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அலங்கார பந்தலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் பிரபு என்ற வெங்கட்ராம பட்டாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிவில் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாத பாக்கெட் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
திருக்கல்யாணம் முடிவில் ஆண்டாள் ரங்கம்மன்னார்க்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் தீபாரதனை காட்டப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை அறங்காவலர்கள் வ. ராம்குமார் வரதராஜன் அ.உமாராணி த.நளாயினி தாயில்பட்டி வெ. மனோகரன் வெங்கடாசாமி விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.நாகராஜன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாட வீதிகள் வழியாக அவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆண்டாள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஐ.பி.எல் 2025 – சென்னை vs கொல்கொத்தா எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை – 11.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (103/9, ஷிவம் துபே 331, விஜய் ஷங்கர் 29, ராகுல் திரிபாதி 16, டேவன் கான்வே 12, சுனில் நரேன் 3/13, வருண் 2/22, ஹர்ஷித் ராணா 2/16, வைபவ் அரோரா, மொயின் அலி தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (10.1 ஓவர்களில் 107/2, க்விண்டன் டி காக் 23, சுனில் நரேன் 44, அஜிங்க்யா ரஹானே ஆட்டமிழக்காமல் 20, ரிங்கு சிங் 15, அனுஷ் காம்போஜ் 1/19, நூர் அகமது 1/8) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் இன்று மிக மோசமாக பேட்டிங் செய்தனர். இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நால்வர் மட்டுமே. டேவன் கான்வே (11 பந்துகளில் 12 ரன்), ராகுல் திரிபாதி (22 பந்துகளில் 16 ரன்), விஜய் ஷங்கர் (21 பந்துகளில் 29 ரன்), ஷிவம் துபே (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்) ஆகியோர் மட்டுமே.
கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் 3 விக்கட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். மூவரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி, 51 ரன்கள் கொடுத்து 7 விக்கட்டுகள் வீழ்த்தினார்கள். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 103 ரன்கள் எடுத்தது.
104 ரன் கள் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக மட்டையாட வந்த கொல்கொத்தா அணி 10.1 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 107 ரன் எடுத்து எளிதாக வெற்றிபெற்றது.
அந்த அணியின் க்விண்டன் டி காக் (16 பந்துகளில் 23 ரன், 3 சிக்சர்), சுனில் நரேன் (18 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அஜிங்க்யா ரஹானே (17 பந்துகளில் 20 ரன், 1 ஃபொர், 1 சிக்சர்), ரிங்கு சிங் (12 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) என மட்டையாட வந்த அனைத்து பேட்டர்களும் மிக நன்றாக ஆடினர். இதனால் கொல்கொத்தா அணி 59 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சென்னையில் நேற்று வந்திறங்கிய அமித் ஷா, மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பினார். தமிழகத்தில் அடுத்தது தேஜ., கூட்டணி ஆட்சிதான் என்று, எடப்பாடி முன்னிலையில் உறுதியாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா பேச்சு!
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது…
அதிமுக., பாஜக., இணைந்து ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டணி செயல்படும். கூட்டணிக்கு அதிமுக., எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது இயல்பான இயற்கையான கூட்டணி. அதிமுக.,வின் தனிப்பட்ட பிரச்னைகளில் நாங்கள் தலையிடப் போவதில்லை.
தேர்தல் விஷயங்கள் குறித்து எடப்பாடி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம். கூட்டணி அமைவது, இருவருக்கும் பலனளிக்கக் கூடியது. யார் யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்தும், ஆட்சியில் யார் பங்கு பெறுகிறார்கள் என்பது குறித்தும் பிறகு முடிவு செய்வோம்.
ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழி, தொகுதி மறுவரையறை, சனாதன பிரச்னைகளை திமுக., எழுப்புகிறது. வரும் தேர்தலில், திமுக.,வின் மோசடி, ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசுபொருளாக இருக்கும்.
டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவு மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளை மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. மின்சாரம், நிலக்கரியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியும், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாயும், பண மோசடி மூலம் ஆயிரம் கோடிக்கு மேலும் தமிழகத்தில் ஊழல் நடக்கிறது.
ஊட்டச்சத்துக்கு சாதனம் வாங்குவதில் ரூ.450 கோடி, செம்மண் கடத்தல், அரசு வேலைக்கு பணம், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் என பல மோசடி நடக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்.
மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை திமுக.,, பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட விவகாரத்தில் அதிமுக.,, உடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது செயல்திட்டம் உருவாக்கப்படும்.
தமிழக மக்களை சந்திக்கும்போது, அவர்கள் உண்மையாக சந்திக்கும் பிரச்னையை எடுத்து செல்வோம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்துவோம். திமுக.,,வை போன்று மடைமாற்றும் திட்டத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம்.
எடப்பாடி பழனிசாமிதலைமையில் தான் கூட்டணி செயல்படும். தமிழ் மக்களையும், மாநிலத்தையும் கவுரவமாகவே கருதுகிறோம். தமிழகத்தை எப்போதும் பிரச்னைக்கு உரியதாக கருதியது இல்லை. மோடி, தமிழகம், தமிழ் கலாசாரத்தை மதித்து பார்லிமென்டில் செங்கோலை நிறுவினார். ஆனால், அதனை திமுக.,, எதிர்த்தது. மோடி தான் தமிழின் பெருமையை போற்ற காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தை நடத்தினார்.
தமிழகத்தில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை கேலோ விளையாட்டில் இணைத்தார். தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரே நிறுவனம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம். மத்திய அரசின் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பிரதமர்,
ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. திருக்குறளை உலகின் பல்வேறு நாட்டின் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறோம். இதுவரை 63 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். பாரதியின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டவர் பிரதமர். சிவில் சர்வீஸ் தேர்வுகள் தமிழில் எழுத முடிகிறது. ஆனால், மத்தியில் திமுக.,, கூட்டணி ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய ஆயுத காவல்படை தேர்விலும் இந்த நிலை இருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுத முடிகிறது. திமுக.,, கூட்டணி ஆட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடிந்தது.
எங்கு எல்லாம் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்கள் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம், இந்த படிப்புக்கான தமிழ்ப் பாடங்களை உருவாக்க வேண்டும் என கூறியும், அது நடக்கவில்லை.
திமுக.,, இதுவரை தமிழ் தமிழ் என சொல்கிறார்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என மக்களிடம் பட்டியலிட முடியுமா? கூட்டணி குறித்து அதிமுக.,, எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.
நீண்ட வலுவான உறுதியான கூட்டணி அமைப்பதற்காக தான் கூட்டணி அமைப்பது காலதாமதமானது.தமிழக மக்கள் ஏதும் அறியாதவர்களா? காங்கிரசின் நிலைப்பாடு என்ன எதை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்பதை அறிந்தவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்…. என்று கூறினார் அமித் ஷா.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழன் அன்று இரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக.,, மாநில தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்பட்டது.
முதலில் முன்னாள் புதுவை ஆளுநரும் பாஜக., முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் கூற, தமிழிசையின் வீட்டுக்குச் சென்றார். பின், துக்ளக் இதழாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக.,, மாநிலத் தலைவர் குறித்து பேசப்பட்டதாம். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக கட்சிகளை சேர்ப்பது குறித்தும் பேசப்பட்டதாம். இந்த ஆலோசனையின் போது, அண்ணாமலை மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, திமுக.,வின் செயல்பாடு எப்படி இருக்கும், அதை எப்படி சமாளிப்பது, கூட்டணியில் எவரை இணைக்கலாம், மாநிலத் தலைவராக யார் இருந்தால் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளிக் கிழமை மாலை 2 மணிக்குத் தொடங்கி, மதியம் 4 மணிக்குள் மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் எனு தெரிவிக்கப்பட்டது. எனினும் பாஜக., சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே போட்டியிட மனு அளித்தார். இதனால் அவர் போட்டியின்றி மாநிலத் தலைவராகத் தேர்வாவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமித் ஷா இது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக பாஜக.,, தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக பாஜக.,, தலைவராக பாராட்டத்தக்க வகையில், பல சாதனைகளை அண்ணாமலை செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாகட்டும், கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாகட்டும், அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பாஜக.,, பயன்படுத்திக் கொள்ளும்… என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமித் ஷா, அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு பெரும் கவனம் பெற்றது. அதில் அமித் ஷா கூறிய கருத்துகள் இவை…
பாஜக., தலைவர்களும், அதிமுக.,, தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம். இந்தத் தேர்தலை தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம்.
1998 ம் ஆண்டு முதல் பாஜக.,வும் அதிமுக.,,வும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. இது இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலம் முதல் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 30 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.
வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல். டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும்.
ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப திமுக மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்.
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா? பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் படிக்கிறார்கள்.
தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பாஜக, அதிமுக ஒன்றாக இணைந்து கூட்டணி; தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் இபிஎஸ் தலைமையிலும் கூட்டணி என்பதை செய்தியாளர் சந்திப்பில் கூறினார் அமித் ஷா.
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக்…
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்.
திமுக., என்ன செய்யும்?
அடுத்து அமைவது கூட்டணி அரசுதான் என்று அமித் ஷா கூறிய நிலையில், ஏற்கெனவே திமுக.,வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்னெடுத்து பல நேரங்களில் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. கூட்டணியாகப் போட்டியிட்டு, பெருவாரியான வாக்குகள் பெற்றும், தனிக் கட்சியாக திமுக., ஆட்சி அமைத்து, பெரும் ஊழலில் ஈடுபடுவதும், ஒட்டுமொத்தமாக ஆட்சியின் மூலம் கொள்ளையடிப்பதும் கூட்டணி ஆட்சியில் என்றால் அது கட்டுப்படுத்தப் படும் என்ற கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த தேர்தலில் இதுபோன்ற ஆட்சியில் பங்கு என்பதற்கு திமுக., சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு பம்பை நதியில் ஆராட்டு வைபவம் இன்று பகலில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப் 2 செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் உற்சவபலி பூஜை, இரவு ஸ்ரீ பூதபலி நடைபெற்றது. தினமும் சுவாமி ஐயப்பன் விக்ரகத்தை சுமந்தபடி யானை கோயில் வலம் வந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று வியாழக்கிழமை ஐயப்பன் பள்ளி வேட்டை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இரவு சுவாமி ஐயப்பனுக்கு மகா தீபாரதனை வழிபாடு அத்தாழ பூஜை நடத்தி, சுவாமி ஐயப்பன் 18 படி வழி கீழ் இறங்கி நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு புறப்பட்டார்.
சரங்குத்தியில் சம்பிரதாய முறைப்படி ஐயப்பன் வனவிலங்குகளை வேட்டையாடும் பள்ளிவேட்டை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்ததும் சுவாமி திரும்பி நடைபந்தலுக்கு வந்ததும் தீப ஆர்த்தி வழிபாடு நடைபெற்றது. பின்னர் அசுத்தப்பட்டிருப்பதால் கோவில் வெளிப்பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி பள்ளி உறக்கம் வைக்கப்பட்டு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் நடை திறந்ததும், கணபதி ஹோமம் உட்பட முக்கிய பூஜைகள் தொடங்கின. காலை 7:30க்கு பூஜை நடந்ததும் சுவாமி பம்பைக்கு ஆராட்டு விழாவுக்கு புறப்படும் நிகழ்வுகள் தொடங்கின.
18 படி வழியாக சுவாமி ஐயப்பன் விக்ரகம் மேல் சாந்தியால் கொண்டு வரப்பட்டு யானை மீது அமர்த்தி சுவாமி யானை மீது அமர்ந்து பம்பை நதிக்கு சரங்குத்தி வழியாகப் புறப்பட்டார்.
பம்பை வந்த ஐயப்பனுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பம்பை கணபதி கோவிலில் இருந்து சுவாமி ஐயப்பன் பம்பை நதியில் உள்ள பாராட்டுக்கடைவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எண்ணெய் மஞ்சள் நெய் போன்ற அஷ்ட திரவிய பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
சபரிமலை வனப்பகுதியில் திடீரென அவ்வப்போது பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் இந்த ஆண்டு ஆராட்டு வைபோகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் சென்றனர்.
இன்று ஆராட்டு முடிந்ததும் சுவாமி பம்பை கணபதி கோவில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் பக்தர்களுக்கு வழங்கிய பின். பம்பையில் இருந்து சபரிமலை சென்று 18 படி வழியாக சன்னிதானம் சென்று கோவில் பிராகாரத்துக்குச் சென்றடைந்ததும் கோவில் கொடி மரத்தில் உள்ள கொடிப்பட்டம் இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு செய்யப்படும்.
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த ஏப் 1 திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. செவ்வாய் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கின.
காலை 9:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடி பட்டத்திற்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
தொடர்ந்து கொடிப் பட்டம் கோயிலைச் சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு பூஜைகளுக்கு பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். அன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி நடைபெற்றது. ஏப். 10- இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்தியில் எழுந்தருளினார். இன்று ஏப். 11 காலை நடை திறந்த பின்னர் உஷ பூஜை நிறைவு பெற்றதும் யானை மீது சுவாமி பம்பைக்கு எழுந்தருளி மதியம் ஒரு மணிக்கு சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. இந்தப் பத்து நாட்கள் திருவிழா நிகழ்வுகளை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
மதியம் 2:00 மணிக்கு பம்பை கணபதி கோயில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் முடித்து சுவாமி சன்னிதானத்துக்கு திரும்பும்போது சுவாமிக்கு பக்தர்கள் பம்பை சபரிமலை நடைபாதை இரு பக்கமும் தீபம் ஏற்றி வரவேற்பு அளிக்கப்பட்டு இரவு கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர ஆராட்டு விழா நிறைவு பெறும்.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் ஏப்.14 சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு ஐயப்பன் சன்னிதானம் முன்பு சுந்தரி கண்டறாரு ராஜீவ்ரு மேல் சாந்தி அருண்குமார் காய்கறிகள் கொன்றை மலர்கள் பாத்திரம் நிறைய வெள்ளி காசுகள் வைத்து கோவில் நடை அடைக்கப்படும். ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறந்ததும் சித்திரை விசு கனி காணும் நிகழ்வும் பக்தர்களுக்கு விசு கனி பிரசாதம் கைநீட்டமாக வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
மழையினால் பம்பை நதி மட்டுமல்லாது, வடசேரிக்கரை நதி மற்றும் எருமேலி மணிமாலா நதியிலும் தண்ணீர் வருகிறது. மழையால் எங்கும் பசுமையான வனப் பகுதிகள், மலைகளில் இருந்து இரைச்சலுடன் கொட்டும் அருவிகள் என, பக்தர்களின் கண்களுக்கு இயற்கை விருந்து படைக்கிறது!
Last Sunday, Tamil Nadu State Government Minister Ponmudi, who was speaking at an event in Villupuram, spoke derogatorily about women and, dragging religions like Saivism and Vaishnavism, and insulting them to compare with prostitutes. This video is now going viral on the internet. This has caused dissatisfaction and anger among spiritual leaders.
Generally, DMK., people play vote bank politics by mocking one side and speaking highly of the other. But Ponmudi has earned the displeasure of the entire Hindu people by speaking disparagingly of the two major sects of Hinduism.
As the condemnation of Ponmudi’s speech is increasing, DMK President M.K. Stalin has issued announcement stripping him of his party post. In this situation, various parties are saying that he should be removed from the ministerial post as well. Ponmudi, who is the Forest Minister in the current DMK government, has already been embroiled in various controversies and defamatory speeches! He had made fun of his ‘Oshi Oshi’, about free travel for women in buses. He showed obscene gestures in the assembly itself, calling the Governor “Poda”.
While Ponmudi is facing a series of problems, including a wealth accumulation case, a foreign exchange fraud case, and enforcement department raids, it was said that DMK government Chief Minister Stalin did not show any initiative to protect Ponmudi as compared with Senthil balaji, another minister in his cabinet.
In this situation, a video of him speaking about women and insulting Saivism and Vaishnavism at an event held in Villupuram last Sunday went viral on the internet, and action has been taken against him. As Minister Ponmudi’s obscene speech has caused great anger among women, DMK MP Kanimozhi, the daughter of M. Karunanidhi and sister of Chief Minister Stalin, who is being projected as the female face of the DMK, posted a comment on the social media condemning it.
In this situation, the DMK leadership has issued an order to strip Ponmudi of his party post (Deputy General Secretary). This position has been given to the party’s Rajya Sabha member Trichy Siva.
Ponmudi is being removed from the party post and continues as a minister. So does Stalin think that talk is right enough to continue as a minister?
Now, Bjp party president K. Annamalai condemn this action and demand his removal from the cabinet. In a statement he said, “This is DMK’s standard of political discourse in Tamil Nadu. Thiru Ponmudi was once the Higher Education Minister of Tamil Nadu & now Minister for Forests and Khadi, and the youth of Tamil Nadu are expected to tolerate this filth? Not just this Minister, the entire DMK ecosystem is vulgar, foul-mouthed, and uncouth. Hang your head in shame, Thiru MK Stalin, for leading such a disgraceful pack.
By removing him from a party post today, if DMK thinks people will move on, they are sadly mistaken! DMK’s relentless attacks on the pillars of Hindu Dharma (Saivam & Vainavam) won’t go unanswered forever. Don’t take our silence for weakness, Thiru MK Stalin.” he demanded.
தமிழக அமைச்சர் பொன்முடியின் அநாகரிகமான பேச்சு; பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாகப் பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் மாநில அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் திருநீறு, திருமண் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய விடீயோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பெண்கள் இருக்கும் இடத்தில் பொதுக் கூட்டத்தில் விபச்சாரியிடம் உடலுறவை வைத்து சைவமா வைணவமா என கேட்டதாக கூறிப்பிடுகிறார்.
இத்தகைய கருத்தை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த காரணத்திற்காகவே அவரது அமைச்சர் பதவியை நீக்கம் செய்யவும் முடியும்.
இது போன்ற அநாகரீக பேச்சுக்களை பல சமயங்களில் திமுக பின்னணி கொண்டவர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துக்கள் வன்முறையில் இறங்குவதில்லை என்ற தைரியத்தில் தான் தி.மு.க., தி.க. போன்ற கட்சிகள் கண்டபடி பேசுகிறார்கள். இதுவே வேற்று மதத்தினர் குறியீடுகளை குறித்து யாராவது ஒருவர் பேசியிருந்தால், சமூக ஊடகத்தில் பதிவு செய்து இருந்தால் காவல்துறை நள்ளிரவில் பாய்ந்து சென்று கைது செய்து சிறையில் அடைத்து இருக்கும். இல்லை நீதிபதிகளே சமூக ஊடகத்தில் பார்த்ததற்கு நடவடிக்கை எடுக்க தானாக முன்வந்து கருத்து வெளியிட்டு இருப்பார்கள்.
ஆக, இந்துக்களின் புனிதமான சின்னங்களை செக்ஸ் உடன் சம்பந்தபடுத்தி மாநில அமைச்சரே பேசும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது என்பது எத்தகைய வேதனையானது.
இந்துக்களிடம் போராடும் குணம் தீவிரமாக வேண்டும். இல்லையேல் சட்டமோ, நீதியோ, அரசு அதிகாரிகளோ ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இழிநிலையை காண்கிறோம்.
அமைச்சர் பொன்முடி பேசியது இந்து விரோத கருத்து ஏற்புடையதா என்பதை திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் விளக்கம் தர வேண்டும்.
திமுக எம்பி ஆ. ராசா திமுகவினர் இந்து சமய சின்னங்களை அணியக்கூடாது என்று பேசினார். இதுபோன்ற பேச்சு திமுகவின் உள்நோக்கத்தை தமிழர்களுக்கு வெளிக்காட்டுகிறது.
திமுக தலைவர்களுக்கு இந்து சமய நம்பிக்கை இல்லாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் திமுகவில் இருப்பவர்கள் சமய சின்னங்களை அணிய கூடாது என்பதும், இந்து சமய நம்பிக்கையை அமைச்சர் பொன்முடி கொச்சைப்படுத்தையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அமைச்சர் பொன்முடி பேசிய அருவருக்கத்தக்க கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஞாயிறு அன்று, விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக மாநில அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதுடன், விலைமாதர் குறித்துப் பேசி, அதில் சைவம் வைணவம் என்று சமயங்களை இழுத்து, அவற்றை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஆன்மிகப் பெருமக்கள் இடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
பொதுவாக, திமுக.,வினர் ஒரு தரப்பை கேலி கிண்டல் செய்து மற்றொரு தரப்பை உயர்வாகப் பேசுவது போல் பேசி, வாக்கு வங்கி அரசியல் செய்வார்கள். ஆனால் பொன்முடி இந்து மதத்தின் இரு பெரும் பிரிவையும் ஒன்று போல் இழிவுபடுத்திப் பேசி ஒட்டுமொத்த இந்து மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.
பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், அவரது கட்சிப் பதவியைப் பறித்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
தற்போதைய திமுக., அரசில் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளிலும் அவதூறுப் பேச்சுகளிலும் சிக்கியவர் தான்! அவருடைய ஓஷி ஓஷி என்ற பெண்கள் பஸ்களில் இலவச பயணம் செய்வது குறித்து கிண்டல் செய்திருந்தார். ஆளுநரை போடா எனக் கூறி சட்டப்பேரவையிலேயே ஆபாச செய்கைகளைக் காட்டினார்.
பொன்முடியின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அன்னியச் செலாவணி மோசடி வழக்கு, அமலாகத்துறை சோதனைகள் என பல்வேறு தொடர் வழக்குகள் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தனது அமைச்சரவையில் உள்ள செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற எடுத்து முனைப்பை இன்னொரு அமைச்சரான பொன்முடி விவகாரத்தில் திமுக., அரசின் முதல் அமைச்சர் ஸ்டாலின் காட்டவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையிலும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொன்முடியின் ஆபாசப் பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக.,வின் பெண் முகமாக முன்னிறுத்தப்பட்டு வரும் மு.கருணாநிதியின் மகளும் முதல் அமைச்சர் ஸ்டாலினின் சகோதரியுமான தி.மு.க., எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்து சமூகத் தளத்தில் கருத்துப் பதிவு செய்தார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொன்முடியின் கட்சிப் பதவியை (துணை பொதுச் செயலாளர்) பறித்து திமுக., தலைமை உத்தரவு வெளியிட்டுள்ளது. திமுக.,வில் மொத்தம் ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருப்பர். அவர்களில் ஒருவராக இருந்த பொன்முடியின் கட்சிப் பதவியை மட்டும் பறித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.
வழக்கமாக பதவிப் பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும்;ஆனால் இன்றைய பதவிப் பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது. காரணம், துரைமுருகனும் அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசி புண்படுத்தியிருந்தார். இது சமூக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள் பொன்முடி சிக்கிக் கொண்டார். இதனால், துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுச் செயலாளர் கையெழுத்தின்றி, தலைவரே கையெழுத்திட்டு அறிவிப்பு வெளியிடுவது, திமுக., தலைமைக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகள் சமூக வலைத்தளவாசிகளும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவி, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக.,வில் இருந்து முன்னர் நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட கருத்தில், “சமீப காலமாக இதுபோன்ற அறிவிப்புகள் தலைவர் பெயரில் வருகிறதே. இன்றைய தலைமுறைக்கு கட்சி விதிகள் தெரியாது என்பதாலா? பொதுச்செயலாளர் டம்மியாக இருக்கலாம் ஆனால் கட்சி விதிப்படி அந்தப்பதவிக்குத்தான் உரிமை உண்டு. பொன்முடி கட்சிப்பதவி நீக்கம், அமைச்சர் பொறுப்பில் தொடர்கிறார், அப்படியானால் அமைச்சராக தொடரும் அளவுக்கு அந்த பேச்சு சரி என நினைக்கிறாரா ஸ்டாலின். விலைமாது வீட்டு போவது, அதுபற்றிய விவகாரங்களை கொச்சையாக நா கூசும் வண்ணம் பேசுவதுதான் இவர்கள் வாடிக்கையாக அந்தகாலம்தொட்டு இந்த காலம்வரை உள்ளது.கேவல, அற்ப, வேடிக்கை மனிதர்கள்! #திராவிடமாடல்பேச்சு” என்று பதிவு செய்திருக்கிறார்.
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது
பங்குனி உத்திரம் சிறப்புகள்
பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழா. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலும் நாடெங்கிலும் பெருவாரியாக கொண்டாடப்படுகிறது. இந்த பங்குனி உத்திரம் திருநாள் புராணங்கள் மற்றும் சமயச் சடங்குகளுடன் இணைந்தது.
பங்குனி உத்திரம் – திருமணத்தின் நாள்
இந்நாளில் தெய்வீக தம்பதியரான சிவன் – பார்வதி (காளத்தீஸ்வரர் கோவிலில்), முருகன் – தெய்வானை (பழனி, திருச்செங்கோடு போன்ற முருகன் கோவில்களில்), ராமர் – சீதை (ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில்) ஆகியோரின் திருமணம் கொண்டாடப்படுகிறது. இது “தெய்வீக திருமணங்களின் நாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு
உத்திர நட்சத்திரம் வெற்றி மற்றும் மங்களகரமான முடிவுகள் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் உத்திர நட்சத்திரத்திலும் இருக்கும் ஒரு அரிய நேரம்.
பங்குனி உத்திர திருவிழாக்கள்
பல கோவில்களில் தேரோட்டம், பூமாலை அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பழனி, திருமலை திருப்பதி, மதுரை மீனாட்சி கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் முக்கியமானவை.
திருமணக் கதைகள்
முருகன் – தெய்வானை திருமணம்
புராணப்படி, முருகன் தெய்வானையை பங்குனி உத்திரத்தன்று மணந்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருச்செங்கோடு, பழனி போன்ற முருகன் கோவில்களில் விழா கொண்டாடப்படுகிறது.
ராமர் மற்றும் சீதையின் திருமணம்
இராமாயணத்தின்படி, ராமர் – சீதையின் திருமணம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிவன் – பார்வதி திருமணம்
சிவபெருமான் பார்வதியை மணந்த நாளாகவும் இது கருதப்படுகிறது.
சாஸ்தா / குலதெய்வ வழிபாடு
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குல தெய்வம் மற்றும் குல சாஸ்தா இருக்கும். சில குடும்பத்தில் சாஸ்தா மற்றும் குலதெய்வம் ஒன்றாக இருக்கும், சில குடும்பத்தில் குல தெய்வம் என்பது தனியாகவும், குல சாஸ்தா என்பது தனியாகவும் இருக்கும்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சாஸ்தா கோவிலான கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டுள்ளார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூருக்குத் தென்மேற்கே காயாமொழி அருகில் குதிரைமொழி கிராமம் தேரிக் குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இந்த கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. திருச்செந்தூருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், திருச்செந்தூருக்கு வரும் ஏராளமான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அருச்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், புலுடையார் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா மற்றும் நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்கசாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில், தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கைக்கொண்டார்சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூசண பெருமாள் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs டெல்லி சின்னசாமி மைதானம் பெங்களூரு – 10.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (163/7, பில் சால்ட் 37, டிம் டேவிட் 37, ரஜத் படிதர் 25, விராட் கோலி 22, க்ருணால் பாண்ட்யா 18, நிகம் 2/18, குல்தீப் யாதவ் 2/17, முகேஷ் குமார், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (17.5 ஓவர்களில் 169/4, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 93, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 38, அக்சர் படேல் 15, புவனேஷ் குமார் 2/14, யஷ் தயாள் 1/22, சுயேஷ் ஷர்மா 1/13) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (17 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விராட் கோலி (14 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.
நாலாவது ஓவரில் பில் சால்ட் ரன் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த ரஜத் படிதர் (23 பந்துகளில் 25 ர்ன, 1 ஃபோர், 1 சிக்சர்) கோலியுடன் இணைந்து ஆடினார். ஆயினும் ரன் விரைவாகச் சேர்க்கமுடியவில்லை.
லியம் லிவிங்க்ஸ்டோன் (4 ரன்) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (3 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை. இருப்பினும் இறுதியில் க்ருணால் பாண்ட்யா (18 பந்துகளில் 18 ரன்) மற்றும் டிம் டேவிட் (20 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) இருவரின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது.
164 ரன் என்ற இலக்கை எதிர்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டியு பிளேசிஸ் (2 ரன்), ஜேக் மெகர்க் (7 ரன்), அபிஷேக் போரல் (7 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதற்குப் பின்னர் ஆட வந்த கே.எல். ராகுல் (53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன், 7 ஃபோர், 6 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அவருடன் இணைந்து அக்சர் படேல் (11 பந்துகளில் 11 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடி அணிக்கு 17.5 ஓவர்களிலேயே வெற்றியைத் தேடித்தந்தனர்.
டெல்லி அணியின் மட்டையாளர் கே.எல் ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது. பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு குங்குமப் பிரசாதம் தீர்த்தம் சடாரி வழங்கப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர் திருக்கோவில் பணியாளர்கள் பணியாளர்கள் மற்றும் மதுரை பாகவதர் கோஷ்டிகள் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நந்தவனத்தில் பூச்செடிகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தம் மதுரை பாகவதர் கோஷ்டிகளால் சேவிக்கப்பட்டது.
சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்!
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
பூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் உச்சமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
முளைப்பாரி ஊர்வலத்துடன் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி குழும தலைவர் மணி முத்தையா கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணிமுத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.
முத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவம்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், 66 பாறைப் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவ விழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் பெண்கள் – ஆண்கள் அக்கினிசட்டி எடுத்து ஊர்வழம்மாக வந்து கோவிலை சுற்றி வந்து நிறைவேற்றினர்.
மேலும், பக்தர்கள் உடல் முழுக்க யார் என்று தெரியாத அளவிற்கு வேடம் அணிந்து தாங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை, 66 பாறைப் பட்டி கிராமத்தின் சார்பாக கிராம பூசாரி அழகப்பன் நாட்டாமை பிரவத் தேவர் கிராமக் காவல்காரர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலமையில் நடைபெற்றது.