Home Blog Page 114

பாரதவாசிகளின் நெஞ்சம் நிறைந்த ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி!

air marshal ak bharti - 2026

தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி! என்பார்கள். ஒரு ராணுவத் தளபதி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நம் ராமாயண மகாபாரத இதிகாசங்களை மேற்கோளிட்டுப் பேச முடிந்திருக்கிறதா என்ற ஆச்சரியக் கேள்விகள் இப்போது எழுந்திருக்கிறது. இப்போதுதான் அவர்களின் உள்ளுணர்வு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உந்துதலாக இருந்திருக்கிறது என்ற கருத்தும் வெளிப்படையாக முவைக்கப்படுகிறது.

சொல்லப்போனால், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் போது, இவ்வாறு நம் இதிகாச புராணங்களில் இருந்து நன்னெறிக் கதைகள், சம்பவங்கள், உத்திகள், சிக்கலான தருணங்களில் எப்படி மீண்டார்கள் என்பது குறித்த பாடங்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்தான்! இது மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சதந்திரக் கதைகளைப் போன்றதுதான்!

பஞ்ச தந்திரக் கதைகள் வெறும் கதைகளாயினும் இக்கட்டான தருணங்களில் அறிவுபூர்வமாக யோசித்து முடிவு எடுக்கக் கூடிய சமயோஜித புத்தியை நெருக்கடியான நேரங்களில் நமக்குத் தரும். இதிகாசங்கள் நடந்த வரலாறுகள் என்பதால் அவற்றில் இருந்து பெறப்படும் உத்திகள் முன்னோர்களின் மேலாண்மை உத்திகள். ஆனால் ஊடகவியலாளர்கள் நிறைந்த ஒரு பிரஸ்மீட்டில் ஒரு தளபதி வெளிப்படையாகச் சொல்வது புதிது. அது ஆட்சியாளர்கள் கொடுத்த சுதந்திரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

இதயங்களை வென்ற ஏர் மார்ஷல் பாரதி – என்றுதான் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். துப்பாக்கியும் தோட்டாவும் கைகளில் இருந்தாலும், வீரம் இருக்கும் இடத்தில் ஈரமும் இருக்கும் போல் தன் கவிதை உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏர் மார்ஷல் பாரதி.

நேற்று நண்பகல் 2.30க்கு, இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். நிகழ்வின் முதல் பகுதில், முப்படைகளின் மூன்று பிரதிநிதிகளும் அந்தந்த கிளைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினர், பின்னர் முதல் செய்தியாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கங்களை அளித்தனர்.

நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் மதுரேந்திரா கேட்டார்: “பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன், ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் வரிகளைப் பின்னணியில் பயன்படுத்திய ஒரு வீடியோவை இராணுவம் இயக்கியது. நேற்றைய வீடியோவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இருந்தது. இதன் மூலம், எதிரிக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முயற்சித்தீர்கள்?” – என்பது அந்தக் கேள்வி.

சொல்லப் போனால், நேற்று முன் தினம் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, ராணுவத்தின் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கப் படத்தில் தொடக்கத்தில் பின்னணி இசையாக வந்தது சிவ தாண்டவ தோத்திரத்தின் இசைதான்! ஏற்கெனவே சிந்தூர் என்பதில் குங்குமம் சிதறியிருக்கும் காட்சியைப் புலப்படுத்தியதற்கு இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகள் சில இது மதத்தை பின்புலப் படுத்துவதாகக் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் ராணுவத்தின் விளக்கப் பட வீடியோவில் சிவதாண்டவ ஸ்தோத்திர இசை இருந்தால், இவர்கள் இம்சிக்க மாட்டார்களா என்ன?!

எனினும் அந்தப் பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையாளரின் பெயர் மற்றும் நிறுவனம் அதைக் குறித்துக் கொள்ளுமாறு அவர் மீண்டும் கேட்டார்.

பத்திரிகையாளர் குறிப்பிட்ட வரிகள் ராஷ்டிரகவி (தேசியக் கவி) ராம்தாரி சிங் தின்கரின் பிரபலமான காவியமான “ராஷ்மிரதி”யிலிருந்து வந்தவை, குறிப்பாக ‘கிருஷ்ணா கி சேதவானி’ (கிருஷ்ணாவின் எச்சரிக்கை) பகுதியிலிருந்து.

வரிகள் பின்வருமாறு:

துர்யோதன வஹ பீ தே நா சகா,
ஆஷிஷ் சமாஜ் கி லே ந சகா,
உலடே, ஹரி கோ பாந்தனே சலா,
ஜோ தா அசாத்ய, சாதனே சலா.

(துரியோதனனால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை.
சமுதாயத்தின் ஆசீர்வாதங்களை அவரால் பெற முடியவில்லை.
மாறாக, அவர் ஹரியை (கிருஷ்ணனை) பிணைக்க முயன்றார்.
சாத்தியமற்ற முயற்சி.)

ஜப் நாஷ் மனுஜ் பர் ஜாதா ஹை, பஹலே
விவேக் மர் ஹாதா ஹை|
ஹரி நே பீஷண் ஹுங்கார் கியா, அபனா
ஸ்வரூப விஸ்தார் கியா|
டகமக்-டகமக் திக்கஜ் டோலே, பகவான்
குபித் ஹோ கர் போலே|
ஜஞ்ஜீர் பத்தா அப் சாத் முஜே, ஹான்-ஹான் துர்யோதனன்! பாந்த முஜே|

(ஒரு மனிதனை அழிவு சூழ்ந்தால், முதலில் இறப்பது ஞானம்.
ஹரி கடுமையாக கர்ஜித்து தனது தெய்வீக வடிவத்தை விரிவுபடுத்தினார்.
பெரிய வீரர்கள் நடுங்கி தடுமாறினர். பகவான், கோபமடைந்து, கூறினார்:
உன் சங்கிலியை இப்போது நீட்டு, அதால் என்னைக் கட்டு! ஆம், துரியோதனா! என்னைக் கட்ட முயற்சி செய்!)

இந்தக் காட்சி, துரியோதனன் அவையில் சமாதானம் பேசச் சென்ற, அதாவது பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற ஸ்ரீ கிருஷ்ணனை துரியோதனன் அவமரியாதை செய்தபோது எழுந்த கவிதை வரிகள். அவன் ஸ்ரீ கிருஷ்ணனின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மரியாதை கொடுத்து செவிகொடுத்துக் கேளாமல், தன் துர்புத்தியால் அவரைப் பிணைத்துக் கட்டிவைக்க முயன்றான். அதன் பின் துரியோதனன் அழிந்தது வரலாறு. இதே போன்ற சூழல் தான் இப்போது ஆபரேஷன் சிந்தூர் விஷயத்திலும் ஒப்புமையாகப் போனது.

ஆனால், செய்தியாளரின் இந்தக் கேள்விக்கு, சூழலைப் புரிந்து கொண்டு பதிலளித்த ஏ.கே. பாரதி ராமசரித மானஸ் வசனங்கள் மூலம் பதிலளித்தார். எதையும் நோக்காமல், சுற்றுமுற்றும் பார்க்காமல், தன் மனத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் கருத்தை அவர் சரளமாகத் தெரிவித்தார்.

பினய ந மானத் ஜலதி ஜட
கயே தீனி தின் பீதி|
போலே ராம சகோப் தப
பய பினு ஹோயி ந ப்ரீதி |

(தாழ்மையான வேண்டுகோள்களுக்கு கடல் அசையாமல் இருந்தது; மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பின்னர், கோபம் பொங்கி எழுந்த ராமர், “பயம் இல்லாமல், அன்பு இருக்க முடியாது” என்று அறிவித்தார்.)

கடலரசனான வருண தேவன் இலங்கைக்குச் செல்ல வழி கொடுக்கும் வரை காத்திருந்த ராமர், மூன்று நாட்களுக்குப் பிறகு பொறுமை இழந்து கோபமடைந்தார். பயம் இல்லாமல் அன்பு இல்லை என்று அவர் அறிவித்தார், மேலும் தனது வில்லை உயர்த்தினார். அப்போதுதான் கடற்கடவுள் அவர் முன் தோன்றி உதவிக்கரம் நீட்டினார்.

பொதுவாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் விருந்தினர்கள் வரும்போது ஆரவாரம் செய்யவோ, கைத்தட்டவோ, எழுந்து நிற்கவோ மாட்டார்கள் – தேசிய கீதம் அல்லது மாநிலத்தின் பண் பாடப்படும் போது தவிர மற்ற நேரங்களில் அமர்ந்தே இருப்பார்கள். குறிப்பாக ஒரு தீவிரமான ராணுவ பத்திரிகையாளர் சந்திப்பில், இதுபோன்ற பதில்கள் அரிதானவை.

ஆனால் ஏ.கே. பாரதியின் தன்னிச்சையான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. கரகோஷம் முழங்க, ஏ.கே. பாரதியின் கவிதை வரிகளுடனான பதிலுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஏர் மார்ஷல் பாரதியின் அருகில் அமர்ந்திருந்த கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூட மென்மையான புன்னகையை வெளிப்படுத்தினார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை முடிப்பதற்கு முன், பிரமோத் குறிப்பிட்டார்: “ஷாம் நோ வருணா” – “வருணா (கடல்களின் கடவுள்) நமக்கு மங்களகரமானவராக இருக்கட்டும்” என்று பொருள்படும் வேதப் பிரார்த்தனையை முன்மொழிந்தார்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொன்றையும் நாம் இந்தப் பத்த்ரிகையாளர் சந்திப்பின் போது தவறவிடாமல் கவனித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்திய பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஆயுதங்களால் பேசிக் கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், அது பற்றி டிவி.க்களில் தோன்றி பேசி வந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவ அதிகாரிகள் நெருக்கடி நிலைக்கு ஆட்பட்டதைப் போன்ற பரபரப்புடன் தாங்கள் வெற்றி அடைந்ததாகவும், எதிரிகளை வீழ்த்தி விட்டதாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்க, நம் பாரத ராணுவ தளபதிகளோ, எந்த வித நெருக்கடியும், பரபரப்பும் இன்றி, வெகு இயல்பாக, அமைதியாக, சிரித்துப் பேசியபடி, முகத்தில் புன்னகை தவழ, செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று காலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வு முடிவுகளை அறிவித்த நேரத்தில், அது பற்றிக் குறிப்பிட்ட டிஜிஎம்ஓ., இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பற்றியும் குறிப்பிட்டு, அதனுடன் ஒப்புமைப் படுத்தியிருந்தார்.

ஆக, இது புதிய இந்தியா! எழுச்சியுற்ற பாரதத்தின் அடையாளங்கள்! அது ஒரு தலைவனால் சாத்தியமாகியிருக்கிறது. தலைவன் சரியாக இருந்தால், தளபதிகளும் தொண்டர்களும் மிகச் சரியானவர்களாகவே இருப்பார்கள்!

ஆப்ரேஷன் ஷக்தியிலிருந்து ஸிந்தூர் வரை!

write thoughts - 2026
#image_title

ஆப்ரேஷன் ஷக்தியிலிருந்து ஸிந்தூர் வரை

  • ‘ஜெய்ஹிந்த்’ ஸ்ரீராம்

மே மாதம் 98ல்…. – பொக்கைவாய் கிழவரும் அகம் மகிழ்ந்த சமாச்சாரத்திற்கு இன்று வயது 27. அது அந்த பாடல் வரிகளுக்கு அல்ல…. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் எனும் சிற்றூரில் வைத்து நம்மவர்கள் நடத்திய அணு வெடிப்பு சோதனைகளுக்கு கிடைத்திட்ட வெற்றிக்கு….

பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் மூன்று நிலைகளில் ஐந்து விதங்களில் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்கான சங்கேத பெயர் #ஆஃப்ரேஷன்_ஷக்தி.

ஆனால் இதற்கு முன்னதாக 1974 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த சமயத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக அணு வெடிப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேத பெயர் #சிரிக்கும்_புத்தா.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமானதொரு நாள். இதேபோன்றதொரு மே மாதத்தில் 18 ஆம் தேதி 1974 ஆண்டு காலை 8:45 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள #பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தி சாதித்தது இந்தியா.

உலக வல்லரசு நாடுகள் ஆடிப் போனது. அமெரிக்கா இதில் கோபம் கொண்டு கொந்தளித்தது. சீனா விக்கித்து நின்றது. இவை எல்லாம் அந்த அணுகுண்டு சோதனை ஏற்படுத்தின விளைவுகள்.

அசர வில்லை #இந்திரா. இது தான் பின்னாளில் இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என பேச வைத்தது. ஆனால் இதற்கான பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. பாதைகளற்ற வழியில் சுவடு இல்லாத பயணம் என்றனர் அந்நாளில். காரணம் உலகின் அத்தனை உளவு நிறுவனங்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு இதனை நுட்பமாக சாதித்திருந்தது இந்தியா.

அவ்வளவு வெறியுடன் இந்த திட்டத்தினை முன்னெடுத்திருந்தார் இந்திராகாந்தி. ஆனால் இந்த திட்டம் அவர் காலத்தில் தொடங்கியது இல்லை.

1962-63 சீன போரின் தோல்விகளில் இருந்து பாடம் படித்தார் நேரு. அடுத்தடுத்த வருடங்களில் சீனா அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு வெற்றி கண்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் அணு குண்டு சோதனையை அணு குண்டு சோதனை மூலமாகவே பதில் சொல்ல வேண்டும் முதன் முதலில் முழங்கியதே நேரு தான். கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம்.

பதிலுக்கு தன் பலத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு வந்தது. ஏனெனில் நேருவின் செக்யூலரிஸ… சோஷியலிச… கொள்கைகளால் வாங்கி இருந்த அடி அப்படி.அதனால் அவற்றை கைவிட்டுவிட்டு இத்திட்டத்தினை முன்னெடுத்தார். ஆற்றாமையோடு மறைந்தும் போனார். 1966 களில் இதற்கான விதை ஊன்றப்பட்டது.

அப்போதெல்லாம் ஹோமி பாபா உறுதுணையாக நின்று ஊக்கப்படுத்தி வந்தார் தனது குழுவினரை. இந்த காலகட்டத்தில் அதன் உதிரி பாகங்களில் கவனம் செலுத்த செய்தார். வெவ்வாறான உபகரணங்கள் வடிவமைப்பு கண்டது இந்நாட்களில் தான்.

சும்மா இல்லாத பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது 1972 ஆண்டு போர் தொடுத்து மூக்குடைத்துக்கொண்டது. இம்முறை இந்திரா விடவில்லை. கட்டம் கட்டி குதறி தள்ளினார் பாகிஸ்தானை… அப்போது பிறந்தது தான் #பங்களாதேஷ் எனும் நாடு. இப்போது அதும் ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறது வேறு கதை.

அத்தனை தூரம் சாகஸம் காட்டினார்கள் அந்த சமயத்தில்….. இந்திய ராணுவமும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. வித்தை காட்டியிருந்தனர் இந்திய ராணுவத்தினர். இதில் இந்திய உளவு பிரிவான #ரா அட்டகாசம் செய்து இருந்தனர்.

இந்த சமயத்தில் தான் பாகிஸ்தானை பலமாக ஆதரித்து வந்த அமெரிக்கா பலவிதங்களில் இந்தியா, இந்திராவை மிரட்டி பணிய வைக்க முயன்றது. அமேரிக்காவே நேரிடையாக தலையிட்டது இந்த சமயத்தில் தான். தனது அதி நவீன போர் கப்பலை வங்காள விரிகுடாவில் கொண்டு வந்து நிலை நிறுத்தியது.

இந்திரா நேரிடையாக மோத ஆரம்பித்தார். கப்பலை அங்கிருந்து வெளியேறி சொன்னார். இந்த இடத்தில் அந்த சமயத்தில் தான் காட்சிக்குள் வந்தது ரஷ்யா. தனது அதிநவீன நீர்மூழ்கி கப்பலை ஓசையில்லாமல் கொண்டு வந்ததிருந்தனர். கெடு விதித்தனர். இந்தியா சற்றே ஆசுவாமானது அப்போது தான். வேறு வழியின்றி பின்வாங்கி சென்றது அமெரிக்க நாசகாரி கப்பல்.

அப்போதைய அமெரிக்க அதிபரை, ஒரு பெண்ணிடம் தோற்று வந்ததாக கேலி பேச ஆரம்பித்து இருந்தார்கள் அமெரிக்காவில். போதாகுறைக்கு இந்தியாவை கேலி செய்தனர்….. ரஷ்யா பின் ஒளிந்துக்கொண்டதாக…. இது மேலும் கோபம் மூட்டியது இந்திராவை. அப்போது கையில் எடுத்தது தான் இந்த அணு ஆயுத சோதனை.

அவர் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டே இரண்டு கேள்விகளை மாத்திரமே கேட்டார். எப்போது இதனை செய்ய முடியும், எங்கு வைத்து இதனை மேற்கொள்ள முடியும். கணக்கில்லாமல் நிதி இதற்கு மடைமாற்றப்பட்டது. அசூர வேகம் எடுத்தது திட்டம்.

சமாதானத்திற்கான அணு வெடிப்பு சோதனை என்று அந்நாளில் அறிவிக்கவும் செய்தார் அவர். பின்னாளில் அமெரிக்கா அந்த சோதனை குறித்த அறிக்கை ஒன்றில் இந்தியா திட்டமிட்ட இலக்கில் 40% மட்டுமே எட்டிப் பிடித்தது என்று பகடி செய்தது வேறு விஷயம்.

ஆனால் அந்நாளில் நம் பக்கத்தில் நடைபெற்றது பராக்கிரம வேலை அது. ஹோமி பாபா செய்திருந்த ஏற்பாட்டால் மற்ற காரியங்கள் அனைத்தும் முடிந்திருந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டலை கொண்டு ப்ளுடோனிய வடிவமைப்பு கனகச்சிதமாக நிறைவடைந்தது.

அதாவது 9 மாத காலத்தில். அமெரிக்க இந்த கட்டத்தை முதல் முறையாக அடைய 5 1/2 ஆண்டு காலம் ஆனாது. சீனாவிற்கு மூன்று ஆண்டுகள் ஏழு மாதம் பிடித்தது. ஆனால் இந்தியாவிற்கு வெறும் 9 மாதம் மட்டுமே ஆனது. அவ்வளவு துல்லியமான திட்டமிடல். அசத்தி இருந்தனர் அனைவரும். அவ்வளவு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு.

மொத்தமும் 72 பேர் கொண்ட குழு. நான்கு வட்டங்களாக பிரித்து வடிவமைத்து இருந்தார் இதன் தலைவர் #ராஜா_ராமன்னா. இதன் அடுத்த வட்டத்தில் இரண்டாம் நிலையில் தமிழர்கள் பலர் இடம் பெற்று இருந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த #P_K_ஐயங்கார்.,நியுக்ளிர் பிஸிஸ்ட், நாகப்பட்டினத்தை சேர்ந்த #சாம்பசிவ_வெங்கடேஸன். #TBRL இருந்தார்.

அடுத்த அடுக்கில் சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி #சிதம்பரம் இருந்தார். இந்த குழுவில் தான் நமது பெருமதிப்புக்குரிய #அப்துல்_கலாம் இடம் பெற்று இருந்தார். இவர்கள் எல்லோருமே சிறப்பாக செயல்பட்டனர். பலர் அலுவலகத்திலேயே குளித்து ஓய்வெடுத்து என தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.

அந்த நாளும் வந்தது. ஸ்வரன்_சிங் வெளியுறவு துறை அமைச்சர். மேற்கு மண்டல ராணுவ கட்டளை தளபதி C G பேவூர் என இருவருக்கு மாத்திரம் 36 மணிநேரத்திற்கு முன்பு தகவல் தரப்பட்டு உஷார் படுத்தி, தயாராக இருக்க சொன்னார்கள். இந்த திட்டத்திற்கு பீஸ் மேக்கிங் புத்தா பெயர் கொடுத்தார்கள்.

புத்த பூர்ணிமா தினத்தில் அந்த காலை வேளையில் ராஜஸ்தானிய நிலம் அதிர்ந்தது. உலகின் பலரது முகம் இருண்டது. தகவல் இப்படி தான் சொன்னார்களாம் அங்கிருந்து இந்திராவிற்கு புத்தர் சிரித்து விட்டார் என்று.

ஆனால்…… பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் நடத்திப்பார்க்கப்பட்ட #ஆஃப்ரேஷன்_ஷக்தி அப்படியல்ல.. முழுமையான சோதனை திட்டமிடலாக அது அமைந்தது. பொதுவாக அணு வெடிப்பு சோதனையை இரண்டு விதங்களில் வகைப்படுத்துகிறார்கள். ஒன்று நியூக்ளியர் பிஷன்‌, அணுக் கரு பிளவு. மற்றொன்று நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு என்பர்.

நம் சூரியனில் நடப்பது நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு ஆகும். அணு குண்டு தயாரிப்புகளில் அணுக் கரு பிளவு தத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தியா இந்த இரண்டு விதங்களிலும்… அதாவது நியூக்ளியர் பிஷன்‌ மற்றும் நியூக்ளியர் பியூஷன் ஆகிய இரண்டையுமே வெற்றிகரமாக இந்த இரண்டு தினங்களில்… மே 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் செய்து பார்த்தது. இது நடந்தது மே மாதம் 1998ல். இந்தியாவில் ஏழு இடங்களில் நம் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட….

கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் அணு உலை அமைத்து மின்சார உற்பத்தி செய்து வருகிறோம்… இதில் கூடன்குளம் அணு உலை ரஷ்யாவுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட நவீன அணு உலையாகும். இஃது பயன்பாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற அமெரிக்க மிஷனரிகள் பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்தனர் என்பது வேறு விஷயம்.இன்றளவும் இவர்களின் தோல் பாவை நடனங்கள் இங்கு உள்ள அவர்களின் கைப்பாவை மூலம் நடத்திக் காட்டிக் கொண்டு தான் வருகிறார்கள் என்பதும் நாம் மறுதலிக்கமுடியாத உண்மைகள்.

பொதுவாக அணு வெடிப்பு விஷயத்திற்கு இரண்டு விதங்களில் வருகிறது என்று பார்த்தோம் அல்லவா…. அதில் பெரும்பாலும் யுரேனியத்தை தான் அணுக் கரு பிளவிற்கு பயன்படுத்துவார்கள். அணு குண்டு என்றால் அதற்கு புளுடோனியம் என்கிற அணு கதிர் வீச்சு தனிமம் பயன்படுத்தப்படுகிறது.

அணு உலைகளில் யுரேனியம் (235) என்கிற தனிமத்தை நியூட்ரானைக் கொண்டு பிளக்க அஃது மூன்று நியூட்ரானையும், பேரியம் 139 மற்றும் க்ருப்ட்ரான் 94 ஆக உடைந்து பெறும் சக்தியை வெளிப்படுத்தி சிதைவடைகிறது.

இந்த சக்தியை ஆற்றலாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதனைத் தான் அணு உலைகளில் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

தற்போது இதனை எல்லாம் தாண்டி வேறு நிலைகளில் பல மடங்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறோம் நாம். இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் மூலம் நாம் தற்போது தேனிக்கு அருகில் நியூட்ரீனோ ஆய்வு மையம் அமைத்து இருக்கிறோம்…… கூடிய விரைவில் உலகமே வியக்கும் வண்ணம் சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்……

இந்த சோதனைகளை உலக அளவில் நாம் மட்டுமே மேற்கொள்ள இருக்கிறோம் என்பதே நம்மில் பலரும் அறிந்திராத அறிவியல் விஷயமாக இருக்கிறது.

ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் வழிந்தோட உழைத்த அப்துல் கலாம் பிறந்த மண்ணில் இன்று எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல்…. அவதானிப்பு இல்லாமல் நம்மில் பெரும்பாலான மக்கள் இருப்பது சரியான சமாச்சாரம் அல்ல….

இனி வரவிருக்கும் காலங்களில் அந்த வானத்தையும் வசப்படுத்திய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அத்தனை திட்டங்கள் வரிசை கட்டி செயலில் உள்ளது. அப்படியான செயல் திட்டத்தின் ஓர் பகுதி தான் ஆப்ரேஷன் ஸிந்தூர்… இனி வரும் காலங்களில் அப்படி தான் பார்க்கப்படும்.

இந்த உலகமே பார்த்து பயந்த ஒரு சமாச்சாரம் அது. அணு ஆயுதங்களை மறைத்து வைத்து இருக்கும் இடத்தில் நேரிடையாக மிக துல்லியமாக தாக்கி விட்டு கமுக்கமாக இருந்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதற்கு முன் இந்த உலகில் யாருமே செய்யத் துணியாத ஒன்றை செய்து இருக்கிறார்கள். ஆத்து ஆத்து போகிறார்கள் மேற்கு உலக வாசிகள். அவர்களுக்கு இது புதியது.

ஒரு நாடு துணிந்தால்… ஒரு நாட்டிற்கு துணிச்சலான தலைமையை அது கொண்டு இருந்தால்….. என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கெல்லாம் இனி வரும் நாட்களில் இது உதாரணமாக அமையும்.

ஓர் நாட்டின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் மிலிட்டரி ஆப்ரேஷன் நேரிடையாக அடுத்த நாட்டுடன்…. அதுவும் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் நாட்டிமே பேசி இனி தாக்குதல் நடத்த வேண்டாம்….. கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டோம் என முறையிட…… சரி இன்று போய் நாளை வா என்கிற கதையாக…. அத்துடன் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள முடிந்திருக்கிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட விஷயம் இது.

அது தான் பாகிஸ்தான் விஷயத்தில் நடந்திருக்கிறது. எதை காட்டி பயமுறுத்துவதாக நினைத்து கொண்டு இருந்தார்களோ அதனையே நிர்மூலம் படுத்தி இருக்கிறார்கள்….. அதுவும் எல்லை தாண்டாமல்….. போர் அறிவிப்பு செய்யாமல்….

அத்துணை தூரம் துல்லி யமான உளவு தகவல்கள்…. MI என்கிற மிலிட்டரி இன்டலிஜென்ஸ் எத்தனை தூரம் நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் இது. கொண்டாட வேண்டிய தருணம் இது. நாம் அப்படியா செய்கிறோம்.

ஏதோ ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதாலேயே போர் நிறுத்தம் வந்துவிட்டது என ஒரு பன்னாடை பேச…. அப்படி பேச விட்டு ஒரு மாநில முதல்வர் வேடிக்கை பார்க்க முடிகிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட மன நோய் இது. அந்த வம்சத்தவருக்கே இது சொந்தம் என்கிற கேலி பேச்சுக்கு இடம் கொடுக்காதா…… ஏற்கனவே அதே கடற்கரை சாலையில் வைத்து தானே காலை உணவிற்கும் மத்திய உணவிற்குமான இடைவேளையில் ஒரு உண்ணாவிரதம் மேற்கொண்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டதின் நீட்சியாக அல்லவா இதுவும் பார்க்கப் படும் என்பதை கூட உணர முடியவில்லையா……

வாய் கூசாமல்… தேர்தல் நடக்கும் சமயத்தில் எல்லாம் எல்லையில் தாக்குதல் நடக்கிறது என எத்தனை தூரம் அவதூறு பேசியிருக்கிறார்கள் அன்று….
இன்று அங்கு அவர்களே பொதுவெளியில் வந்து இவையெல்லாம் எங்களுடைய ஸ்டாட்டிக்ஸ்…. நரித்தந்திரங்களில் ஒன்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்… அன்று இங்கு பேசியவர்களுக்கு என்ன தண்டனை…?!?!?

நேற்று இரவு 8 மணியளவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் பிரதமர் பேசினார்.

இனி…பாகிஸ்தானுடன் பேச ஒன்று மட்டுமே உள்ளது அது அவர்களின் தேசத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவது பற்றி மட்டுமே என்றார். அவர்களிடம் கேட்க ஒன்று மட்டுமே உள்ளது….. எப்போது எங்கள் தேசத்தில் இருந்து வெளியேற போகிறீர்கள்… என தீர்க்கமாக நெஞ்சுரத்துடன் கேட்டு இருக்கிறார். அவர் அப்படி கேட்டது பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை.

ஆடிப் போய் இருக்கிறார்கள் உலகத்தவர். எந்த பதட்டமும் இல்லை…
அலட்டலும் இல்லை. நிறுத்தி நிதானமாக பேசியது பார்த்து மலைத்து போய் நிற்கிறார்கள். பேரை தூக்க நாலு பேர்… பட்டத்தை பறிக்க நூறு பேர்….

எங்கோ தூரத்தில் எதிரொலிக்க… டொனால்ட் ட்ரம்ப்பின் உலக வல்லரசு பட்டத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு நிற்க….. இவற்றை அநாயாசமாக கைப்பற்றி விட்டு சும்மா நிற்கிறார் இந்த உலகத் தலைவர். இனி எல்லாம் அப்படி தான்….. மாறப் போவதில்லை…. மாற்றிட ஒருவரும் பிறக்கவில்லை.

வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்.

காலையில் ஒரு பேச்சு; மாலையில் ஒரு பேச்சு! பெரியண்ணன் ட்ரம்ப்பின் ‘ஸ்டிக்கர்’ அட்ராசிட்டி!

modi and trump - 2026
#image_title

– ஜி.எஸ்.பாலமுருகன்.

நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.

அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா… அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு… வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு…

ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது… ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் – காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது… இதுதான் ட்ரம்ப்… நம்மூர் ‘நீட் ரத்து ரகசியம்’ போல… நீட்டும் தொடருது… போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!

இப்போ திடீர்னு இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு… அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்…

அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது…

> “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்.”

ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது…

> “மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.”

இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது… 

> “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.”

ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.

> “இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.”

ஆனால் பாருங்க… ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்…😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்க பார்க்கிறார்.

நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!

  • ’செய்திக்கதிர்’ வாட்ஸ்அப் குழுவில் …

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்! பிரதர் மோடியின் ஆவேச உரை! மே 12ம் தேதி இரவு ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தமிழ் வடிவம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

ஆபரேஷன்_சிந்தூர் #narendramodi #operationsindoor #பிரதமர்மோடி #மோடி #ஆ

#News_Videos #தினசரி_செய்திகள் #ஆபரேஷன்சிந்தூர் #breakingnews

எதற்காக இந்த ‘உடான்ஸ்’ பேரணி?

stalin march in chennai - 2026

ஸ்டாலின் ‘இந்திய ராணுவத்திற்குத் துணையாக’ என்று சொல்லி நடத்திய உடான்ஸ் பேரணி!

— ஆர். வி. ஆர்

முதலில் ‘உடான்ஸ்’ பற்றி ஒரு பொருள் விளக்கம்: அது ஒரு கேலிச் சொல். தன் தவற்றை மறைக்க ஒருவர் சொல்லும் எளிதான பொய்யை, நடத்தும் பேரணியை, ‘உடான்ஸ்’ என்று தள்ளலாம்.

‘இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்போம்’ என்ற பெயரில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது தலைமையில் இந்த மே மாதம் 10-ம் தேதி சென்னையில் ஒரு பேரணி நடத்தினார் – நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு. இதன் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22-ம் தேதி ஒரு பயங்கரவாதம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அனுப்பிய நான்கு பயங்கரவாதிகள் அந்த ஊருக்கு வந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹிந்துக்கள் என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அவர்களில் 25 ஆண்களை – இந்தியர்கள் 24, நேபாளி 1 – அவர்களின் மனைவி குழந்தைகள் முன்னிலையில் படுகொலை செய்தனர்.

பாதகம் செய்த பாகிஸ்தான் மீது, மே 7-ம் தேதி அதிகாலையில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் துவங்கியது இந்தியா. அன்று விடிவதற்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை இந்திய ஏவுகணைகள் தகர்த்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை மேலோகம் அனுப்பின. அன்றைய தினமே மோடியின் துணிவு மிக்க அரசியல் தலைமை உலகெங்கும் ஒளிர்ந்தது.

அடுத்த நாளில் (மே 8) பாகிஸ்தானின் சில ஊர்களில் இருந்த வான்வெளிப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா சின்னாபின்னம் செய்தது. இடையில் நமது ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததையும் முறியடித்தது இந்தியா.

இந்த நிலைமையில், மூன்றாவது நாளான மே 9-ம் தேதி காலை ஸ்டாலின் தனது பேரணியை அறிவித்தார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார்?

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நாம் ஆதரவை வெளிபடுத்தும் நேரம் இது” என்று சொல்லிய ஸ்டாலின், அதற்காக மறுநாள் மே 10-ம் தேதி மாலை 5 மணிக்குச் சென்னையில் ஒரு பேரணி நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி பேரணி நடத்தினார்

மே 10-ம் தேதி அன்று, ஸ்டாலின் தனது பேரணியைத் துவங்குவதற்கு முன்பாக, இந்தியா தனது ஏவுகணைகளைச் செலுத்தி பாகிஸ்தானின் 11 ராணுவ விமானத் தளங்களைத் துவம்சம் செய்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய பாகிஸ்தான், மே 10-ம் தேதி பிற்பகலில், இந்தியாவை அழைத்துப் போர்நிறுத்தம் கேட்டு அழுதது. அதன்படி அன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல் செய்ய ஒப்புக் கொண்டு அதன்படி போர் நின்றது. அன்று மாலை ஸ்டாலின் அவரது பேரணியில் நடந்த போது, பாதி வழியிலேயே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிந்திருப்பார்.

இந்தப் போர் அதி விரைவில் முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே இந்தியா பாகிஸ்தானை ராட்சசப் புரட்டு புரட்டி அதற்குக் கைகால் விளங்காமல் செய்தது. இன்னொரு முக்கியக் காரணம்: அத்தகைய போர் நடவடிக்கைக்கான ஒப்புதலை அளித்து, அதன் விளைவுகளுக்கான பொறுப்பையும் தானே ஏற்கும் அரசியல் துணிவு பிரதமர் மோடியிடம் இருந்தது என்பதாகும்.

போர் விஷயத்தில் ஸ்டாலின் மோடியை ஒரு வார்த்தை கூடப் பாராட்டவில்லை. ஏதோ நமது முப்படைகளின் தளபதிகள் பாகிஸ்தான் மீது இன்ன தேதியில் இன்ன தாக்குதல்கள் நடத்தவேண்டும் என்று தாமாகவே திட்டம் வகுத்து அவர்களாகவே செயல்பட்டார்கள், மோடி பல்லுப் போன கொள்ளுத் தாத்தா மாதிரி ஓரத்தில் அமைதியாக படுத்துத் தூங்கினார் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?

பேரணி பற்றி ஸ்டாலின் அறிவித்த வார்த்தைகளைப் பாருங்கள். பாகிஸ்தான் ‘தீவிரவாதத்தை’ வளர்த்தெடுத்து இந்தியாவில் ‘அத்துமீறல்கள்’ செய்கிறதாம். அதற்காக வீரத்துடன் பாகிஸ்தானுடன் போர் புரியும் நமது ராணுவத்திற்கு நாம் ஆதரவாக நிற்கும் நேரம் இதுவாம். அதன் பொருட்டு ஸ்டாலின் பேரணி நடத்துகிறாராம்.

பாகிஸ்தான் தனது நாட்டில் பாலூட்டி வளர்ப்பது பயங்கரவாதம் (terrorism) – அது வெறும் தீவிரவாதம் (extremism) அல்ல. ஒன்று சிறுத்தை, மற்றது ஓநாய். தனது பேரணி அறிவிப்பில் பயங்கரவாதத்தின் பெயரைக் கூடச் சொல்ல ஸ்டாலினுக்கு என்ன பயம்? இதில் பம்முவதால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை ஈர்க்க முடியும் என்று நினைக்கிறாரா ஸ்டாலின்?

அடுத்து, பஹல்காமில் பாகிஸ்தான் பாதகர்கள் செய்தது ஸ்டாலின் பாஷையில் ‘அத்துமீற’லாம். “உன் மதம் என்ன?” என்று சுற்றுலாப் பயணிகளைக் கேட்டு அவர்கள் ஹிந்துக்கள் என்று அறிந்து அவர்களை சுட்டுக் கொன்றார்கள் அந்தப் பயங்கரவாதிகள். அந்தக் கிராதகர்களின் அப்பட்டமான மத வெறுப்பைக் கண்டனம் செய்யாமல், அவர்கள் ஏதோ கையை ஆட்டி சுற்றுலாப் பயணிகளைப் “போ போ” என்று ஊரை விட்டு விரட்டி விட்டார்கள், அதுதான் அவர்கள் செய்த ‘அத்துமீறல்’ என்பது மாதிரிச் சொல்கிறாரே ஸ்டாலின்?

போரிட்ட நமது முப்படை வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இதில் சந்தேகம் இல்லை. போருக்குப் பின் மே 12-ல் டி.வி மூலம் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோடியும் நமது படைவீரர்களுக்கு, விஞ்ஞானிகளுக்கு மற்றும் உளவுத் துறையினருக்கு சல்யூட் வைத்தார். அது மோடியின் பணிவாலும் பண்பாலும் வந்த சல்யூட். அதாவது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் என்ற முறையில், போர் வெற்றியில் தனக்கு இயல்பாகக் கிடைக்கும் பெருமையைப் போரில் ஈடுபட்ட இந்தியப் படை வீரர்களுக்கும் நமது வெற்றிக்குப் பங்களித்த பிறருக்கும் கொடுத்தார் மோடி. அது மெச்சத் தக்கது. ஆனால் ஸ்டாலின் விஷயம் வேறு.

மோடியை எதிலும் எப்போதும் தனது அரசியல் எதிரியாகப் பார்க்கும் ஸ்டாலின், மோடிக்கு என்ன பெருமை சேர்ந்தாலும் அதை உதாசீனம் செய்வதில் அற்ப திருப்தி கொள்வார். ஆகையால் போர் விஷயத்தில் மோடிக்கு உரித்தான பாராட்டை ஸ்டாலின் சிறிதும் வெளிப்படுத்தவில்லை.

இப்படியும் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் ஸ்டாலின் என்ன சொல்வார்? ராஜ ராஜ சோழன் என்பரா, இல்லை சோழ நாட்டுக் கொத்தனார்கள் என்று பதில் சொல்வாரா?

ஒரு நாட்டின் படைவீரர்களுக்குத் தில்லும் திறமையும் இருக்க வேண்டும். அவர்களிடம் முறையான ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்க வேண்டும். அதற்கும் மேலாக, போர் என்று வந்தால் நாட்டின் போர்ப்படைத் தளபதிகளின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் பின்னால் வலுவாக நிற்கும் ஒரு அரசியல் தலைவனும் அந்த நாட்டிற்குத் தேவை. இந்த நேரத்தில் மோடி அப்படி ஒரு தலைவனாக இருக்கிறார். இது ஸ்டாலினுக்குப் புரியுமா?

கடைசியாக ஒன்று. உண்மையில் ஸ்டாலின் எதற்குத் தனது பேரணியை நடத்தினார்? காரணம் உண்டு.

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மோடி செமத்தியாகப் பாடம் புகட்டியதற்காக, அவருக்கு இந்திய மக்கள் நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதில் தேச உணர்வும் கலந்து வருகிறது. தாமும் இப்போது தேச உணர்வை வெளிப் படுத்தியது போல் இருக்கட்டும், அதே சமயம் முனகலாகக் கூட மோடிக்கு பாராட்டு சொல்லக் கூடாது, என்று நினைத்து ஒரு மலிவான நாடகத்தை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். தனது பேரணிக்காக ஸ்டாலின் சொன்ன காரணத்தை, அவரது பேரணியை, எப்படி எடுத்துக் கொள்வது? வேறென்ன? உடான்ஸ்!

Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

பெண்களின் குங்குமத்தைப் பறித்தால், என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பிரதர் மோடியின் ஆவேச உரை!

pm modi speech about operation sindoor - 2026

PM ADDRESS TO THE NATION ON 12.05.2025

தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, தேசத்தின் வல்லமை, மற்றும், அதன் ஒழுங்குமுறை, இரண்டையும் பார்த்தோம்.  நான் அனைத்திற்கும் முதன்மையாக, பாரதத்தின் பராக்கிரமம் வாய்ந்த இராணுவத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும், நம்முடைய உளவுப்படைப் பிரிவினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து பாரதவாசிகள் தரப்பிலிருந்து, சல்யூட் செய்கிறேன். 

நம்முடைய வீரம் நிறைந்த இராணுவத்தினர், ஆப்பரேஷன் சிந்தூரின் இலக்குகளை சாதிப்பதற்காக, எல்லையற்ற வீரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். 

நான் அவர்க்ளின் வீரத்தை, அவர்களின் மனோதைரியத்தை, அவர்களின் உறுதிப்பாட்டை, இன்று, அர்ப்பணம் செய்கிறேன், நம் தேசத்தின் அனைத்து அன்னையர்களுக்கும், தேசத்தின் அனைத்து சகோதரிகளுக்கும், மேலும், தேசத்தின் ஒவ்வொரு மகளுக்கும், இந்தப் பராக்கிரமத்தை சமர்ப்பணம் செய்கிறேன். 

நண்பர்களே, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று, பஹல்காமிலே, பயங்கரவாதிகள் வெளிப்படுத்திய காட்டுமிராண்டித்தனம் வாயிலாக, அவர்கள், தேசத்தையும் உலகையும் உலுக்கிப் போட்டார்கள்.  

விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த, ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்களை, அவர்களின் மதம் என்னவென்று கேட்டு, அவர்களின் குடும்பத்தாருக்கு முன்பாகவே, அவர்களின் குழந்தைகளின் முன்பாக, ஈவிரக்கமில்லாமல் கொன்று போடுவது, இது பயங்கரவாதத்தின், மிகவும், பயங்கரமான கோரமுகம். 

கொடூரமான பக்கம்.  இது தேசத்தின் நல்லிணக்கத்தைத் தகர்க்கும், பயங்கரமான முயற்சியும் கூட.  என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையிலே, இந்த வலி மிகவும் பெரியதாக இருந்தது.  இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு அனைத்தும், அனைத்துக் குடிமக்களும், சமூகம் அனைத்தும், அனைத்துப் பிரிவும், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே குரலெடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க, ஒன்றுபட்டார்கள். 

நாம் பயங்கரவாதிகள் அனைவரையும், மண்ணோடு மண்ணாக்கி அழிக்க, நமது இராணுவத்தினருக்கு அனைத்து சுதந்திரத்தையும் அளித்து விட்டோம்.  அந்த வகையில் இன்று, அனைத்துத் பயங்கரவாதிகளும், அனைத்துத் பயங்கரவாத அமைப்புகளும், தெரிந்து கொண்டு விட்டார்கள், நம்முடைய சகோதரிகள் மகள்களுடைய, வகிடுகளிலிருந்து, சிந்தூரத்தை அகற்றுவதன், பலன் என்னவாக இருக்கும் என்று. 

நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூர், இது வெறும் பெயர் அல்ல.  இது தேசத்தின் கோடானுகோடி மக்களுடைய, உணர்வுகளின் பிரதிபிம்பமாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், நியாயத்துக்கான அகண்ட சபதமேற்பாகும்.  

மே மாதம் 6ஆம் தேதி இரவு வேளையிலே, மே 7ஆம் தேதி காலையிலே, ஒட்டுமொத்த உலகத்தாரும், நாம் சூளுரைத்ததன், விளைவுகள் என்னவென்று கண்டார்கள்.   பாரதநாட்டின் சேனைகள், பாகிஸ்தானத்திலே, பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களிலே, பயங்கரவாதிகள் பயிற்சி மையங்களிலே, துல்லியமாகத் தாக்கினார்கள். 

பயங்கரவாதிகள், கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள், நம் பாரதம், இத்தனை பெரிய முடிவை எடுப்பார்கள் என்று.  ஆனால், தேசம் எப்போது ஒன்றுபட்டு விட்டதோ, தேசத்திற்கே முதன்மை என்ற உணர்வால் நிரம்பி இருக்கிறதோ, அனைத்திற்கும் மேலாக தேசமாகிறது, அப்போது, தீவிரமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  அதன் விளைவுகளை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானின் பயங்கரவாத மறைவிடங்களின் மீது, பாரதத்தின் ஏவுகணைகள் தாக்குதல் தொடுத்த போது, பாரதத்தின் ட்ரோன்கள் தாக்கிய போது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் நெஞ்சுரமும் நிலைகுலைந்து போனது.  பஹாவல்புர், மற்றும் முரீத்கே போன்ற, பயங்கரவாத முகாம்கள், ஒரு வகையிலே, உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 

உலகின் எந்த மூலையிலும் கூட, பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதும், அது ஒன்பது பதினொன்றாக இருக்கட்டும், அல்லது லண்டன் ட்யூப் குண்டுவெடிப்புகளாகட்டும், அல்லது பாரதத்திலே, பல பத்தாண்டுகளாக நடந்த, பெரியபெரிய பயங்கரவாத தாக்குதல்களாகட்டும், இவையனைத்தின் தொடர்பும், ஏதோ ஒரு வகையிலே, பயங்கரவாதத்தின் இந்த முகாம்களோடு தான் இணைந்து வந்திருக்கிறது. 

பயங்கரவாதிகள், நம்முடைய சகோதரிகளின் சிந்தூரத்தை அழித்தார்கள், ஆகையால், பாரதம், பயங்கரவாதிகளின் இந்த தலைமையகத்தை வேரறுத்து விட்டோம்.  பாரதத்தின் இந்த தாக்குதல்களிலே, 100க்கும் மேற்பட்ட, கொடூரமான பயங்கரவாதிகள், கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  பயங்கரவாதத்தின் பல தலைவர்கள், கடந்த 25-30 ஆண்டுகளாக, சுதந்திரமாக, பாகிஸ்தானிலே திரிந்து கொண்டிருந்தார்கள், இவர்கள் பாரதத்திற்கு எதிராக சதிகள் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை பாரதம், சொடுக்குப் போட்டு முடித்து விட்டது.

நண்பர்களே, பாரதத்தின் இந்தச் செயல்பாட்டால், பாகிஸ்தானம், கடுமையான ஏமாற்றத்தால் சூழப்பட்டு விட்டது, அதிர்ச்சியில் ஆழந்தது, செய்வதறியாமல் திகைத்தது, மேலும், இந்த திகைப்பு காரணமாக, அவர்கள் மேலும் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டார்கள்.

  பயங்கரவாதிகளுக்கு எதிரான, பாரதத்தின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தருவதற்கு பதிலாக, பாகிஸ்தானம், பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது, பாகிஸ்தானம், நமது பள்ளிகள் கல்லூரிகளின் மீதும், குருத்வாராக்களின் மீது, கோயில்கள் மீது, சாதாரண குடிமக்களின் வீடுகளைக். குறிவைத்துத் தாக்கினார்கள், பாகிஸ்தானம், நமது இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் தொடுத்தது, ஆனால் இதிலும் கூட, பாகிஸ்தானத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

உலகமே பார்த்தது, அதாவது எப்படி, பாகிஸ்தானத்தின் ட்ரோன்களும், பாகிஸ்தானத்தின் ஏவுகணைகளும், பாரதத்தின் முன்பாக துரும்புகளைப் போல நொறுங்கின என்பதை.  பாரதத்தின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு முறைகள், அவற்றை வானிலேயே தவிடுபொடியாக்கி விட்டன. 

பாகிஸ்தானம் அடுத்ததாக, எல்லையின் மீது போர் தொடுத்தது, ஆனால் பாரதம், பாகிஸ்தானத்தின் மையப்பகுதியிலேயே தாக்குதல் தொடுத்தது.  பாரத நாட்டின் ட்ரோன்கள், பாரத நாட்டின் ஏவுகணைகள், மிகத் துல்லியத்தோடு இலக்குகளைச் சென்று தாக்கின.  பாகிஸ்தானியர்களின் விமானப்படையின், விமானத் தளங்களுக்கு, நாசத்தை ஏற்படுத்தின, இவை குறித்து பாகிஸ்தானம் பீற்றிக் கொள்வது வழக்கம்.  பாரதம் முதல் மூன்று தினங்களிலேயே , பாகிஸ்தானத்தை எந்த அளவுக்கு அழித்து விட்டது என்றால், இதைப் புரிந்து கொள்ளக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆகையாலே, பாரதத்தின் ஆக்ரோஷமான செயல்பாட்டிற்குப் பிறகு, பாகிஸ்தானம், தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேட ஆரம்பித்தது.  பாகிஸ்தானம் உலகம் எங்கிலும், அழுத்தத்தைக் குறைக்க வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தது.  மிக மோசமான வகையில் அடிவாங்கிய பிறகு, இந்தக் கட்டாயம் காரணமாகவே, மே 10ஆம் தேதி பிற்பகலிலே, பாகிஸ்தானிய சேனையானது, நமது டிஜி எம் ஓவை தொடர்பு கொண்டார்கள். 

அதற்குள்ளாக நாம், பயங்கரவாதிகளின் கட்டமைப்புக்களை, பெரிய அளவில் அழித்தொழித்து விட்டிருந்தோம்.  நாம் பயங்கரவாதிகளுக்கு மரணத்தைப் பரிசாக அளித்திருந்தோம்.  பாகிஸ்தானுடைய நாட்டுக்குள்ளே குடியமர்த்தப்பட்ட, பயங்கரவாத முகாம்களை நாம், இடிபாடுகளாக ஆக்கியிருந்தோம். 

ஆகையால், பாகிஸ்தானத்தின் தரப்பிலிருந்து, வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து, கூறப்பட்ட போது, எங்கள் தரப்பிலிருந்து, இனி வருங்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயல்பாடுகளோ, வேறு எந்த, இராணுவ வெறிச்செயலிலோ ஈடுபட மாட்டோம் என்ற போது, அப்போது பாரதமும் கூட, வேண்டுகோளைப் பரிசீலித்தது. 

நான் மீண்டும் உங்களிடம் உரைக்கிறேன், நாம் பாகிஸ்தானத்தின் பயங்கரவாத, மற்றும் இராணுவ மையங்களின் மீது, நமது பதில் நடவடிக்கைகளை, இப்போது, நிறுத்தி மட்டும்,  வைத்திருக்கிறோம்.  இனிவரும் நாட்களிலே, நாம் பாகிஸ்தானத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், இந்த உரைகல்லில் உரைத்துப் பார்ப்போம், அவர்கள் ஒழுங்காக நடக்கிறார்களா என்றாய்வோம். 

நண்பர்களே, பாரதத்தின் முப்படைகளும், நமது விமானப்படை, நமது தரைப்படை, மற்றும் நமது கடற்படை, நமது எல்லையோரப் பாதுகாப்புப் படை, பி எஸ் எஃப், பாரதத்தின் ரிசர்வ் காவல் படை, தொடர்ந்து, விழிப்போடு இருக்கின்றன. 

துல்லியத் தாக்குதல், மற்றும் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, இப்போது, ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிராக, பாரதத்தின் கொள்கையாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான, போரிலே, ஒரு புதிய எல்லைக்கோட்டைக் கிழித்திருக்கிறது, ஒரு புதிய அளவுகோல், புதிய நிலையை தீர்மானம் செய்திருக்கிறது. 

முதலாவதாக, பாரதத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.  நாம் நமக்கு உகந்த வகையிலே, நாம் தீர்மானம் செய்து, கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.  எங்கெல்லாம் பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிப்படுகின்றதோ, அங்கெல்லாம் சென்று நாங்கள் பயங்கரமான நடவடிக்கையை மேற்கொள்வோம். 

இரண்டாவதாக, எந்த ஒரு அணு ஆயுத பயமுறுத்தலையும், பாரதம் பொறுத்துக் கொள்ளாது.  அணுஆயுத மிரட்டலில் தஞ்சம் புகுந்து தழைத்து வரும் பயங்கரவாத முகாம்களின் மீது, பாரதம் உறுதியான, மற்றும் தீர்மானமான தாக்குதலைத் தொடுக்கும். 

மூன்றாவதாக, நாம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம், மற்றும், பயங்கரவாதத் தலைவர்களையும், வேறுவேறாகப் பார்க்க மாட்டோம்.  ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைப்படி, உலகம், பாகிஸ்தான் பற்றிய இந்த வெறுக்கத்தக்க உண்மையை மீண்டும் கவனித்தது.  இறந்துபட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடந்த வேளையிலே, பாகிஸ்தானிய சேனையின் பெரிய பெரிய அதிகாரிகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். 

பயங்கரவாதத்திற்கு அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்கான, இது மிகப்பெரிய சான்றாகும்.  நாம் பாரதம், மற்றும் நமது குடிமக்களை, அனைத்து வகையான அபாயங்களிலிருந்தும் காப்பாற்ற, தொடர்ந்து தீர்மானமான முடிவுகளை எடுத்து வருவோம்.

நண்பர்களே, யுத்த களத்திலே நாம் ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானத்தை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம்.  ஆனால் இந்த முறை, ஆப்பரேஷன் சிந்தூரோடு, ஒரு புதிய பரிமாணத்தை இணைத்திருக்கிறோம்.  நாம் பாலைவனங்களிலும் மலைகளிலும், நமது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம், அதோடு கூடவே, நவீனகால போர்முறைகளிலும் கூட, நமது திறமைகளை நிரூபித்திருக்கிறோம். 

இந்த ஆப்பரேஷன் செயல்பாட்டிலே, நமது இந்தியத் தயாரிப்பு ஆயுதங்களின் நம்பகத்தன்மை, நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  இன்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது, 21ஆம் நூற்றாண்டின் போர்முறையிலே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், இவற்றுக்கான வேளை வந்து விட்டது.

நண்பர்களே, அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கு எதிராக, நாமனைவரும், ஒன்றுபட்டு இருப்பது, நமது ஒற்றுமை, நமது மிகப்பெரிய சக்தியாகும்.  கண்டிப்பாகச் சொல்கிறேன், இந்த யுகம், யுத்தத்திற்கானது அல்ல, ஆனால், இந்த யுகம், பயங்கரவாதத்திற்கானதும் கிடையாது.  பயங்கரவாதத்திற்கு எதிராக, பூஜ்யம் சகிப்புத்தன்மை, இதுவே ஒரு சிறப்பான உலகிற்காக உத்திரவாதமாகும்.

நண்பர்களே, பாகிஸ்தானிய இராணுவம், பாகிஸ்தானிய அரசாங்கம், எந்த வகையிலே, பயங்கரவாதத்தை அரவணைத்து ஆதரிக்கிறதோ, அது என்றாவது ஒரு நாள், பாகிஸ்தானுக்கே முடிவு கட்டிவிடும்.  பாகிஸ்தானம் தப்பிக்க வேண்டும் என்றால், அது தனது, பயங்கரவாத கட்டமைப்புக்களை சுத்தமாக அகற்றியே ஆக வேண்டும். 

இதைத் தவிர, அமைதிக்கான வேறு எந்த வழியுமே இல்லை.  பாரதம் தனது முடிவில், தீர்மானமாக இருக்கின்றது, பயங்கரவாதம், மற்றும் பேச்சுவார்த்தை, ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.  பயங்கரவாதம், மற்றும் வர்த்தகம், ஒரே நேரத்தில் ஈடுபட முடியாது.   மேலும், தண்ணீர் மற்றும் ரத்தமும் கூட, ஒன்றாகப் பெருகியோட முடியாது.

நான் இன்று, உலக சமுதாயத்திடமும் கூற விரும்புகிறேன், எங்களுடைய வெளிப்படையான கொள்கை இதுதான், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் பற்றியதாகவே இருக்கும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரம், பி ஓ கே, இதைப் பற்றித் தான் இருக்கும். 

பிரியமான நாட்டுமக்களே,

இன்று புத்த பூர்ணிமை.  பகவான் புத்தர் நமக்கு, அமைதிக்கான பாதையைக் காட்டியிருக்கிறார். அமைதிக்கான பாதையும் கூட, சக்தியைக் கடந்து தான் பயணிக்கிறது.  மனித சமூகம், அமைதி மற்றும் நல்வளங்களை நோக்கிப் பயணிக்கட்டும்,

அனைத்து இந்தியர்களும் அமைதியுடன் வாழ வேண்டும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவுகளை நிறைவேற்ற வேண்டும், இதன் பொருட்டு, பாரதம் சக்தியுடையதாக ஆவது அவசியமானது, மேலும் தேவை ஏற்பட்டால், இந்த சக்தியைப் பயன்படுத்துவதும் அவசியமானதாகும்.  அதோடு கடந்த சில நாட்களிலே, பாரதம் இதைத் தான் செய்து காட்டியது.

நான் மீண்டும் ஒருமுறை, பாரதத்தின் சேனைகள், மற்றும் ஆயுதப்படைகளுக்கு, சல்யூட் செய்கிறேன்.  பாரதவாசிகளான நமது நம்பிக்கை, அனைத்து குடிமக்களின் ஒற்றுமைக்கான சபதம், சங்கல்பம், நான் இவற்றைப் போற்றுகிறேன்.

பலப்பல நன்றிகள்.

பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்.


பிரதமர் மோடியின் உரை : தமிழ்க் குரலில்…

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்! பிரதர் மோடியின் ஆவேச உரை! மே 12ம் தேதி இரவு ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தமிழ் வடிவம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

#ஆபரேஷன்_சிந்தூர் #narendramodi #operationsindoor #பிரதமர்மோடி #மோடி

#News_Videos #தினசரி_செய்திகள் #ஆபரேஷன்சிந்தூர் #breakingnews

சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலம்!

chozhavanthan perumal in vaigai river - 2026

சோழவந்தானில் சித்திரை திருவிழா கோலாகலம்; எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கள்ளழகரை வரவேற்றனர்

முன்னதாக சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளழகரை வரவேற்று மண்டகப்படி நடைபெற்றது அதனை தொடர்ந்து சோழவந்தான் எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் மருது மகாலில் கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து சனீஸ்வரன் கோவிலில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்றது கோவில் அர்ச்சகர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அதனை அடுத்து மருது பெட்ரோல் பங்கில் கள்ளழகரை வரவேற்ற பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் தொழிலதிபர் எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்

அங்கும் கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பச்சை பட்டு உடன் தங்க குதிரை வாகனத்தில் முதல் முறையாக சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்றனர் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இனி, பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே பாகிஸ்தானுடன் பேச்சு! பதிலடி பயங்கரமாக இருக்கும்!

pm modi speech about operation sindoor - 2026

அன்பிற்குரிய நாட்டு மக்களுக்கு வணக்கம். நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.

நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன். நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.

இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

நாங்கள் பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம். இன்று ஒவ்வொரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

நண்பர்களே, ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி. மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள். இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீது அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

பயங்கரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.

பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற பயங்கரவாதிகளின் வாழ்விடங்கள், உலக பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது உலகில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால், செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும். லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய பயங்கரவாத தாக்குதலாக இருக்கட்டும் இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த பயங்கரவாத முகாம்களோடு இணைந்திருந்தது.

பயங்கரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் பயங்கரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது. பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான பயங்கரவாதிகள் இறந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தின் பல கிளைகள் கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள். இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள். அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

நண்பர்களே,
பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது. தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது. நிலைகுலைந்து போய் விட்டது. இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எனவே, பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது. பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது. மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார். அதுவரை நாம் பயங்கரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.

பயங்கரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம். பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த பயங்கரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது, அதாவது, அவர்களது தரப்பிலிருந்து பயங்கரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது, உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.

நான் மீண்டும் சொல்கிறேன். பாகிஸ்தானின் பயங்கரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

நண்பர்களே,
பாரதத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது. ஆப்ரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது. ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.

முதலில், பாரதத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது. அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற பயங்கரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.

மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் பயங்கரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது. நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது. நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். மேலும், நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம். இந்த ஆப்ரேஷன் மூலமாக நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களே
இந்த மாதிரியான பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும் உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் பயங்கரவாதத்திற்கானதும் அல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது.

நண்பர்களே
பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்

பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும். இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை. பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பயங்கரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது. பயங்கரவாதமும், வாணிகமும் ஒருங்கே செல்லவியலாது. மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது.

நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால், பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது பயங்கரவாதம் பற்றிதான் இருக்கும். ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்.

அன்புக்குரிய நாட்டுமக்களே! இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார். அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும். ஒவ்வொரு பாரதவாசியும் அமைதியோடு வாழ வேண்டும்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக பாரதம் சக்திசாலி நாடாக இருக்கவேண்டியது அவசியம். மேலும் ‍தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது.

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இந்த பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்

நன்றி

பாரத் மாதாகி ஜெய்
பாரத் மாதாகி ஜெய்
பாரத் மாதாகி ஜெய்


ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்…


பேரையூர் அருகே சாப்டூர் ஆற்றில் இறங்கிய பெருமாள்!

saptoor azhagar atril irngkuthal - 2026

உசிலம்பட்டி: பேரையூர் அருகே பழமைவாய்ந்த பழையூர் திருவேங்கட பெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக பச்சை பட்டு உடுத்தி சாப்டூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருவேங்கட பெருமாள் கோவிலின் இரண்டு நாள் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது., முன்னதாக திருவேங்கட பெருமாள் கோவிலில் குதிரை மீது காட்சி தந்த கள்ளழகருக்கு பழையூர், சாப்டூர், குடிப்பட்டி, வடகரைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த நெல்மணி மாலை, பணமாலை, துளசி மாலை, பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கை தாங்களாக சாப்டூர் ஆற்றிற்கு சுமந்து செல்லப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டாடை அணிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசங்களுடன் சாப்டூர் ஆற்றில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, குடிப்பட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் இருந்து மீனாட்சியம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வடகரைப்பட்டியில் கள்ளழகர் மீனாட்சியம்மன் எதிர்சேவை நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்… மிரட்டல் விடுத்த பிரதமர் மோடி!

pm modi speech about operation sindoor - 2026
  • பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்… பிரதமர் மோடி மிரட்டல் பேச்சு!
  • உலக நாடுகளிடம் கெஞ்சியது பாகிஸ்தான்
  • சேட்டை செய்ய மாட்டோம் என்றது பாகிஸ்தான்:
  • அமெரிக்கா தலையீடு இல்லை: 

நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் 

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்

பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான்.

நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது.

பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். 

பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 

எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக் கொள்ளப்படாது. இது பயங்கரவாதத்திற்கான சகாப்தம் அல்ல.

‘நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.. நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன்.

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்… இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது’

நமது பெண்களின் நெற்றியில் இருந்து ‘சிந்தூர்’ அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது

மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டது.

தண்ணீரும் ரத்தமும் ஒருசேர ஓட முடியாது. அதுபோல, பயங்கரவாதமும் அமைதிப் பேச்சு வார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது. அமைதியே மிகப்பெரும் சக்தி.

உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும், அதில் பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு; உலக பயங்கரவாதத்தின் தலைமை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

– பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து…