Home Blog Page 146

சாம்பியன்ஸ் ட்ராபி: கிங் கோலி அடித்த சதம்! பாகிஸ்தானை வென்று பலம் சேர்த்த இந்திய அணி!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- பாகிஸ்தான் – 23.02.2025

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து கை கொடுக்க, இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர் :
பாகிஸ்தான் – 241 / 10 (49.4 ஓவர்)
இந்தியா – 244 / 4 (42.3 ஓவர்)

வழக்கம்போல் பாகிஸ்தனை வென்றது இந்திய அணி

பாகிஸ்தான் அணியை (49.4 ஓவர்களில் 241 ரன், சவுத ஷகீல் 62, முகம்மது ரிஸ்வான் 46, குஷ்தில் ஷா 38, பாபர் ஆசம் 23,  குல்தீப் யாதவ் 3/40, ஹார்திக் பாண்ட்யா 2/31,ராணா 1/30, அக்சர் படேல் 1/49, ரவீந்தர் ஜதேஜா 1/40) இந்திய அணி (42.3 ஓவர்களில் 244/4, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100, ஷ்ரேயாஸ் ஐயர் 56, ஷுப்மன் கில் 46, ரோஹித் ஷர்மா 20, ஷஹீன் ஷா அஃப்ரிடி 2/74, அப்ரார் அகமது 1/28, குஷ்தில் ஷா 1/43) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது ரிஸ்வான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சுமாரான தொடக்கம் தந்தனர். இமாம்-உல்-ஹக் (10 ரன்), பாபர் ஆசம் (23 ரன்) பத்து ஓவர்கள் முடிவதற்கு முன்னர் ஆட்டமிழந்தனர். பவர்ப்ளே முடிவில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் சவுத் ஷகீல் (76 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர்) மற்றும் ரிஸ்வான் (7 பந்துகளில் 46 ரன், 3 ஃபோர்) மூன்றாவது விக்கட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அதன் பின்னர் குல்தீப் ஷா (39 பந்துகளில் 38 ரன்) மட்டுமே சிறப்பாக ஆடினார். பாகிஸ்தான் அனி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 241 ரன் எடுத்தது.

242 என்ற இலக்கு கடினமானதல்ல. அதனை அடைய இந்திய அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடியது. ரோஹித் ஷர்மா (15 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) கில் (52 பந்துகளில் 46 ரன், 7 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடினர். விராட் கோலி (111 பந்துகளில் 100 ரன், 7 ஃபோர்) ஷ்ரேயாஸ் ஐயர் (67 பந்துகளில் 56 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 42.3 ஓவர்களில் 244 ரன் எடுத்து இந்திய அணி ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் உள்ளன. இவற்றுள் இந்தியா அணி இரண்டு ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்று, நாலு புள்ளிகளுடன் குரூப்பில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி ஒரு ஆட்டத்தில் வென்று 2 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணி இரு ஆட்டத்தில் விளையாடி தோல்வியுற்று, மூன்றாமிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளிடம் விளையாடி இரண்டு ஆட்டத்திலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் உள்ளது.

ஏற்கெனவே, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்க, மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே உள்ளன. அதற்கடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் உள்ளன். 

இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.      

14,000 ரன் கடந்த விராட் கோலி

இந்தப் போட்டியில் விராட் கோலி 14 ரன் எடுத்திருந்த போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 14,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் சச்சினின் (350 இன்னிங்ஸ்) சாதனையை  287 இன்னிங்சில் முறியடித்தார். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களை எடுத்த ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்; மற்றொரு இந்திய பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களை எடுத்ததன் மூலம் 300 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார்

எண்ணெய் உணவைக் குறையுங்கள்; ஆரோக்யம் பேணுங்கள்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 119ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள் : 23.02.2025
ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன்.  இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன, அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது.  கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.  ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன்.  கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது.  இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது.  நமது விண்வெளிப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது.  இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள்.  காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது.  ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித் தொடர் மிகவும் பெரியது.  கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப் பட்டிருக்கின்றன, இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும்.  அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது தான்.  இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது.  சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!!  வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

நண்பர்களே, இன்னும் சில நாட்களில் நாம் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.  நமது குழந்தைகளுடைய, இளைஞர்களுடைய அறிவியல் மீதான ஆர்வமும், நாட்டமும் மிகுந்த முக்கியமான விஷயமாகும்.  இது தொடர்பாக என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது; இதை நீங்கள் ‘One Day as a Scientist’ விஞ்ஞானியாக ஒரு நாள் என்று கூறலாம்.  அதாவது, நீங்கள் ஒரு நாள் பொழுதை ஒரு அறிவியலாராக வாழ்ந்து பார்க்க வேண்டும்.  நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் விருப்பத்திற்கேற்ப, எந்த நாளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அந்த நாளன்று நீங்கள் ஏதோ ஒரு ஆய்வுக்கூடம், கோளரங்கம் அல்லது விண்வெளி மையம் போன்ற இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.  இதனால் அறிவியல் மீதான உங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.  விண்வெளி, அறிவியல் ஆகியவற்றைப் போலவே மேலும் ஒரு துறையில் பாரதம் விரைவாகத் தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறது என்றால் அது தான் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு.  தற்போது தான் நான் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க பாரீஸ் நகரம் சென்றிருந்தேன்.  இந்தத் துறையில் பாரதம் கண்டிருக்கும் முன்னேற்றம் குறித்து அங்கே உலகமே நன்கு பாராட்டியது.  நமது தேசத்தவர்கள் இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எந்த எந்தத் துறைகளில் செய்து வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளையும் அங்கே காண முடிந்தது.  எடுத்துக்காட்டாக, தெலங்காணாவில் ஆதிலாபாதின் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தோடாஸம் கைலாஷ் அவர்கள்.  டிஜிட்டல் முறையில் பாடல்கள்-இசையிலே அவருக்கு இருக்கும் நாட்டம் நமது பல பழங்குடியின மொழிகளைக் காப்பாற்றுவதிலே மிகவும் மகத்துவமான பணியைச் செய்து வருகிறது.  செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் துணையோடு கோலாமீ மொழியில் பாடலை மெட்டமைத்து அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறார்.  கோலாமீ மொழியைத் தவிரவும் கூட மேலும் பல மொழிகளில் பாடல்களைத் தயாரித்தளிப்பதிலே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறார் இவர்.  சமூக ஊடகத்தில் இவருடைய பாடல்கள் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு மிகவும் விருப்பமானவையாக இருக்கின்றன.  விண்வெளித் துறையாகட்டும், செயற்கை நுண்ணறிவுத் துறையாகட்டும், நமது இளைஞர்களின் அதிகரித்துவரும் பங்கெடுப்பு ஒரு புதிய புரட்சிக்குப் பிறப்பளித்து வருகிறது.  புதியபுதிய தொழில்நுட்பங்களை ஏற்பதிலும், கையாள்வதிலும் பாரதநாட்டவர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

எனதருமை நாட்டுமக்களே, அடுத்த மாதம் மார்ச் 8ஆம் தேதியன்று நாம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.  இது நமது பெண்சக்தியைப் போற்றும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம் ஆகும்.  தேவி மகாத்மியத்திலே,

வித்யா: சமஸ்தா: தவ தேவி பேதா: ஸ்த்ரிய: சமஸ்தா: சகலா ஜகத்ஸு என்று கூறப்பட்டிருக்கிறது.  அதாவது, அனைத்துக் கல்விகளும், தேவியின் பல்வேறு ரூபங்களின் வெளிப்பாடுகள், பேருலகின் அனைத்து பெண்சக்திகளும் கூட தேவியின் வடிவங்களே.  நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு மரியாதை செலுத்துவது தலையாயதாகக் கருதப்படுகிறது.  தேசத்தின் தாய்மை சக்தியானது நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பிலும் கூட பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது.  அரசியல் நிர்ணய சபையில் நமது தேசக்கொடியை அமைத்தளிக்கும் வேளையிலே ஹம்ஸா மெஹ்தா அவர்கள் கூறியதை நான் அவருடைய குரலிலேயே உங்களனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

குரல் –

” இந்த மாட்சிமை பொருந்திய இந்த மன்றத்தின் உச்சியில் பறக்கும் இந்த முதல் கொடி, இந்தியப் பெண்களின் பரிசாக இருப்பது என்பது சாலப் பொருத்தமானது.  நாம் காவி நிறத்தை அணிந்தோம், நாம் போராடினோம், அவதிப்பட்டோம், தேசத்தின் விடுதலைக்காக தியாகங்கள் புரிந்தோம்.  நாம் இன்று நமது இலக்கை எட்டியிருக்கிறோம்.  நமது சுதந்திரத்தின் இந்த அடையாளத்தை அளிப்பதன் மூலம் நாம் மீண்டும் ஒருமுறை தேசத்திற்கு நமது சேவைகளை அளிக்கிறோம்.  மகத்தானதொரு இந்தியாவை உருவாக்கவும், நாடுகளுக்கிடையே தலையாய நாடாக நமது நாடு உருவாக்கப்படுவதற்கும் நாங்கள் மீண்டுமொருமுறை அர்ப்பணிக்கிறோம்.  நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் உயர்வான நோக்கத்திற்காகப் பாடுபடவும் எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.

நண்பர்களே, ஹன்ஸா மெஹ்தா அவர்கள், நமது தேசியக் கொடியை அமைப்பது தொடங்கி, அதற்காகத் தியாகங்கள் புரிந்த நாட்டின் அனைத்துப் பெண்களின் பங்களிப்பை முன்வைத்திருக்கிறார்.  நமது மூவண்ணக் கொடியில் காவி நிறத்திலிருந்தும் கூட இந்த உணர்வு உயிர்ப்படைகிறது என்று இவர் கருதுகிறார்.  நமது பெண்சக்தி, பாரத நாட்டை சக்தி படைத்ததாக, வளமானதாக ஆக்குவதிலே மதிக்கமுடியாத பங்களிப்பை அளிக்கும் என்று அவர் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  இன்று அவருடைய கூற்று மெய்ப்பட்டிருக்கிறது.  நீங்கள் எந்த ஒரு துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பெண்களின் பங்களிப்பு எத்தனை பரவலானதாக இருக்கிறது என்பதைக் காண இயலும்.  நண்பர்களே, இந்த முறை பெண்கள் தினத்தன்று நான் ஒரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறேன், இதை நமது பெண்சக்திக்கு அர்ப்பணிப்பாகச் செய்ய இருக்கிறேன்.  இந்த சிறப்பான சந்தர்ப்பத்திலே, என்னுடைய சமூக ஊடகக் கணக்கான எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில், தேசத்தின் உத்வேகம் தரும் சில பெண்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்க இருக்கிறேன்.  இப்படிப்பட்ட பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், புதுமைகள் படைத்திருக்கிறார்கள், பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று இவர்கள் தங்களுடைய பணிகள், அனுபவங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.  தளம் வேண்டுமானால் என்னுடையதாக இருக்கலாம், ஆனால் அங்கே அவர்களுடைய அனுபவங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவர்கள் படைத்த சாதனைகள் பற்றியே பேச்சு இருக்கும்.  இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று நீங்களும் விரும்பினால், நமோ செயலியில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பான மன்றம் வாயிலாக, இந்தச் செயல்பாட்டில் அங்கம் வகிக்கலாம், என்னுடைய எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து உலகம் முழுக்கவும், உங்களுடைய கருத்தைக் கொண்டு சேர்க்கலாம்.  வாருங்கள், இந்த முறை பெண்கள் தினத்தன்று நாமனைவரும் இணைந்து மகத்தான பெண்சக்தியைக் கொண்டாடுவோம், அதற்கு மரியாதை செலுத்துவோம், அதை வணங்குவோம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, உங்களில் பலர் உத்தராக்கண்டில் நடந்த நமது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் சுவாரசியத்தை ரசித்திருப்பீர்கள்.  நாடெங்கிலும் இருந்து 11,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதிலே அருமையான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.  இந்த ஏற்பாடு, தேவபூமியின் புதிய வடிவத்தைப் படம் பிடித்துக் காட்டியது.  உத்தராகண்ட் இப்போது தேசத்தின் பலமான விளையாட்டுத்துறைச் சக்தியாக உருவாகி வருகிறது.  உத்தராகண்டின் விளையாட்டு வீரர்களும் கூட அருமையாகத் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள்.  இந்த முறை உத்தராகண்ட் 7ஆவது இடத்தைப் பிடித்தது.  இது விளையாட்டின் ஆற்றல், தனிநபர்களும் சமூகங்களும் இணைந்து மாநிலத்திற்கே புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள்.  இதனால் எங்கே வருங்காலத் தலைமுறையினர் அகத்தூண்டுதல் பெறுகிறார்களோ, அங்கே எதிலும் சிறந்து விளங்குவது என்ற கலாச்சாரத்திற்கும் ஊக்கம் கிடைக்கிறது.

நண்பர்களே, இன்று நாடெங்கிலும் இந்த விளையாட்டுக்களின் சில நினைவில் கொள்ளத்தக்க செயல்பாடுகள் குறித்து நிறைவாகப் பேசப்படுகின்றது.  இந்த விளையாட்டுக்களில் மிக அதிக அளவில் தங்கப் பதக்கங்களை வென்ற படைவீரர்கள் அணிக்கு என்னுடைய பலப்பல பாராட்டுக்கள்.  தேசிய விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் ஒவ்வோர் விளையாட்டு வீரரையும் நான் பாராட்டுகிறேன்.  நமது பல விளையாட்டு வீரர்களும், கேலோ இந்தியா இயக்கத்தின் வரப்பிரசாதம்.  ஹிமாச்சல் பிரதேசத்தின் சாவன் பர்வால், மகாராஷ்டிரத்தின் கிரண் மாத்ரே, தேஜஸ் சிரஸே அல்லது ஆந்திரத்தின் ஜோதி யாராஜி, ஸப்னே ஆகியோர் தேசத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள்.  உத்தர பிரதேசத்தின் ஈட்டி எறிதல் வீரர் சச்சின் யாதவ், ஹரியாணாவின் உயரத் தாண்டும் வீரர் பூஜா, கர்நாடகத்தின் நீச்சல் வீரர் தினிதி தேசிந்து ஆகியோர் நாட்டுமக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்கள்.  இவர்கள் மூன்று தேசிய சாதனைகளை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.  இந்த முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வளர் இளம் பருவ வெற்றியாளர்களின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  15 வயதேயான துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் கோவின் ஏண்டனி, உத்தர பிரதேசத்தின் இரும்புக் குண்டு எறிதல் போட்டி வீரர், 16 வயதேயான அனுஷ்கா யாதவ், மத்திய பிரதேசத்தின் 19 வயது நிரம்பிய கழியூன்றி உயரத் தாண்டும் போட்டியின் வீரர் குமார் மீணா ஆகியோர், பாரதத்தின் விளையாட்டுக் கலாச்சாரத்தின் எதிர்காலம் மிகவும் திறமைமிகு தலைமுறையினரின் கைகளில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயல்பவர்கள் கண்டிப்பாக வெல்கிறார்கள் என்பதை உத்தராக்கண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நம்மால் காண முடிந்தது.   சுகவாசியான யாரும் வெற்றியாளர்களாக ஆவதில்லை.  நமது இளைய விளையாட்டு வீரர்களின் மனவுறுதியும், ஒழுங்குமுறையும் பாரதத்தை விரைவாக உலக அளவிலான விளையாட்டுச் சக்திபீடமாக ஆக்கி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

என் கனிவுநிறை நாட்டுமக்களே, தேஹ்ராதூனில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நான் முன்னெடுத்தேன்.  இது தேசத்தில் ஒரு புதிய விவாதப் பொருளானது.  அதாவது உடற்பருமன்.  உடலுறுதிப்பாடும், ஆரோக்கியமும் உடைய ஒரு தேசமாக ஆக, நாம் உடற்பருமன் பிரச்சனையை எதிர்கொண்டாக வேண்டும்.  இன்று எட்டில் ஒருவர், உடற்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.   கடந்த ஆண்டுகளில் உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்றாலும், இதைவிடக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடமும் இந்த உடற்பருமன் பிரச்சனை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது தான்.  உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 2022ஆண்டில், உலகெங்கிலும் சுமார் இரண்டரை கோடி மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.  அதாவது தேவைக்கதிகமாக உடல் எடை உடையவர்களாக இருக்கிறார்கள்.  இந்தப் புள்ளிவிபரம் மிகவும் கடுமையான ஒன்று, நம் அனைவரையும் ஆழச் சிந்திக்க வைப்பது, ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராயச் செய்கிறது.  அதிக உடல் எடை அதாவது உடற்பருமன் பல வகையான பிரச்சனைகளுக்கு, நோய்களுக்கு வித்திடுகிறது.  நாமனைவரும் இணைந்து சின்னச்சின்ன முயற்சிகள் மூலமாக இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.  எடுத்துக்காட்டாக ஒரு வழிமுறையை ஆலோசனையாக அப்போது நான் கூறினேன் அல்லவா?  உண்ணும் உணவில் பத்து சதவீதம் எண்ணையைக் குறைத்துக் கொள்வது.  ஒவ்வோரு மாதமும் பத்து சதவீதம் எண்ணையை நான் குறைப்பேன் என்று தீர்மானியுங்கள்.  உணவு எண்ணையை வாங்கும் போது பத்து சதவீதம் குறைவாக வாங்குவது என்று நீங்கள் தீர்மானியுங்கள்.   உடற்பருமனைக் குறைக்கும் திசையில் இது மிக முக்கியமான அடியெடுப்பாக இருக்கும்.  மனதின் குரலில் இந்த விஷயம் குறித்து ஒரு சிறப்பான செய்தியை நான் உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.  தொடக்கத்தில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்டா அவர்களோடு நாம் உரையாடலாம், இவர் தாமே கூட உடற்பருமனோடு போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

குரல் –

அனைவருக்கும் வணக்கம்.  நான் நீரஜ் சோப்டா உங்களனைவருக்கும் தெரிவிக்க விரும்புவது என்னென்னா, நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், மனதின் குரலில் இந்த முறை உடற்பருமன் குறித்து பேசியிருக்கிறாங்க, இது நம்ம தேசத்தில மிக முக்கியமான ஒரு பிரச்சனை.  ஏதோ ஒரு வகையில இந்தப் பிரச்சனையால நானும் பாதிக்கப்பட்டவன் தான்.  ஏன்னா தொடக்கத்தில களமிறங்கத் தொடங்கிய காலத்தில, நான் கணிசமான உடற்பருமனோட இருந்தேன்.  ஆனா பயிற்சி தொடங்கிய பிறகு நல்ல உணவை நான் உண்ணத் தொடங்கினேன், என்னோட உடல் ஆரோக்கியத்திலும் மேம்பாடு காணப்படத் தொடங்கிச்சு, அதன் பிறகு நான் ஒரு துறைசார் வல்லமையுடைய விளையாட்டு வீரரா ஆன பிறகும் கூட எனக்கு கணிசமா இது உதவிகரமா இருந்திச்சு.  மேலும் பெற்றோருக்கு நான் ஒண்ணு கூற விரும்புறேன் – நீங்களும் கூட திறந்தவெளி விளையாட்டுக்களில ஏதாவது ஒன்றில ஈடுபடணும், உங்க குழந்தைகளையும் உங்களோட கூட்டிச் செல்லுங்க, ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வளர்த்துக் கொள்ளுங்க, நல்லா சாப்பிடுங்க, உங்க உடலுக்கு ஒரு மணி நேரமோ, அல்லது எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, அப்போ உடற்பயிற்சி செய்யுங்க.  மேலும் ஒரு விஷயம்.  இப்போ தான் நம்ம பிரதமர் அவர்கள் சொன்னாரு, உண்ணும் உணவில பயன்படுத்தும் எண்ணெயில பத்து சதவீதம் குறையுங்கன்னாரு.  ஏன்னா, பலமுறை நாம எண்ணெயில பொரிச்ச பதார்த்தங்களை உண்பதால உடற்பருமனை இது அதிகரிக்கச் செய்யுது.  ஆகையால இந்த உணவுகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள், உங்க உடல்நலனில கவனம் செலுத்துங்க அப்படீன்னு நான் உங்ககிட்ட கேட்டுக்கறேன்.  நிறைவா, நாம எல்லாரும் ஒன்றிணைஞ்சு நம்ம தேசத்தை சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம் அப்படீன்னு உங்க எல்லார் கிட்டயும் கேட்டுக்கறேன்.  நன்றி.

நீரஜ் அவர்களே, உங்களுக்கு பலப்பல நன்றிகள்.  புகழ்மிக்க விளையாட்டு வீரர் நிகித் ஜரீன் அவர்களும் கூட இந்த விஷயம் குறித்துப் பேசியிருக்கிறார்.

குரல் –

ஹை, என்னோட பேர் நிகத் ஜரீன், நான் ரெண்டு முறை உலக குத்துச்சண்டைப் போட்டி வெற்றியாளர்.  நம்ம பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மனதின் குரலில உடற்பருமன் தொடர்பா சொன்னாரில்லையா, இது ஒரு தேசியப் பிரச்சனையா நான் பார்க்கறேன், நாம நம்ம உடல் ஆரோக்கியத்தை தீவிரமான வகையில அணுகணும்.  ஏன்னா உடற்பருமன் எத்தனை விரைவா பரவிட்டு வருதுன்னு பார்த்தா, இதை நாம தடுத்தே ஆகணுங்கறதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றக்கூடிய முயற்சியில ஈடுபடணுங்கறதும் நமக்கு விளங்கும்.  ஒரு விளையாட்டு வீரர்ங்கற முறையில, ஆரோக்கியமான சீரான உணவை பின்பற்ற முயற்சி செய்யறேன், ஏன்னா நான் தவறுதலா கூட ஆரோக்கியமில்லா உணவு திட்ட உணவை எடுத்துக்கிட்டாலோ, எண்ணெய் அதிகம் இருக்கற உணவை எடுத்துக்கிட்டாலோ என் செயல்பாட்டுல இது பாதிப்பை ஏற்படுத்துது, குத்துச்சண்டைக் களத்தில விரைவாகவே நான் களைச்சுப் போயிடறேன்.  ஆகையால எத்தனை முடியுதோ அந்த அளவுக்கு உணவு எண்ணெய் போன்ற வஸ்துக்களைக் குறைவாவே உண்றேன், அதுக்கு பதிலா ஆரோக்கியமான சீரான உணவைப் பின்பற்றுறேன், தினசரி உடல்ரீதியான செயல்பாடுகள்ல ஈடுபடுறேன், இதன் காரணமாத் தான் நான் உடலுறுதியோட இருக்கேன்.  அன்றாட வேலைக்குப் போறவங்க, பொதுமக்கள் எல்லாம்னு எல்லாருமே உடல் ஆரோக்கியம் தொடர்பா கவனத்தைச் செலுத்தணும், ஏதோவொரு உடல்ரீதியான செயல்பாட்டில ஈடுபடணும், இதன் காரணமா மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் நம்மை அண்டாம, நம்மை உடலுறுதியோட வச்சுக்க முடியும்ங்கறது தான் என் கருத்து.  ஏன்னா நாம உடலுறுதியோட இருந்தா, இந்தியாவும் உடலுறுதியோட இருக்கும்.

நிகத் அவர்கள் உண்மையிலேயே சில அருமையான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.  வாருங்கள் இப்போது நாம் டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.  இவர் மிகவும் மதிப்புமிக்க ஒரு மருத்துவர் என்பது உங்களனைவருக்கும் நன்கு தெரியும், இவர் இந்த விஷயம் குறித்துத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

குரல் –

மிகவும் பிரபலமான தன்னுடைய மனதின் குரல் நிகழ்ச்சியில உடற்பருமன் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக நான் நமது மதிப்புமிக்க பிரதமருக்கு என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.  உடற்பருமன் அப்படீங்கறது இன்னைக்கு ஒரு மேலோட்டமான பிரச்சனையில்லை; இது மருத்துவரீதியா ரொம்ப ஆபத்தான பிரச்சனை.  இன்னைக்கு இந்தியாவோட பெரும்பாலான இளைஞர்கள் உடற்பருமன் உடையவர்களா இருக்காங்க.   இன்னைக்கு உடற்பருமனுக்கான முக்கியமான காரணம்னு பார்த்தா, அவங்க எடுத்துக்கற உணவோட தரம், குறிப்பா அதிகப்படியான மாவுச்சத்து அதாவது அரிசி, சப்பாத்தி, சர்க்கரை, அதிக அளவு எண்ணெய் உட்கொள்வது.  உடற்பருமன், பெரிய மருத்துவப் பிரச்சனைகளான இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகமுடைய கல்லீரல் அப்படீன்னு இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்குது.  ஆகையால இளைஞர்களுக்கு என்னோட பரிந்துரை என்னென்னா, உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்க, உங்க உணவைத் திட்டமிட்டு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்க, ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பா இருங்க, உங்க உடல் எடையில கவனமா இருங்க அப்படீங்கறது தான்.  மீண்டும் ஒருமுறை நான் உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான எதிர்காலம், நல்ல அதிர்ஷ்டம், கடவுளோட நல்லாசிகளை வேண்டிக்கறேன்.

நண்பர்களே, உணவு எண்ணெயின் குறைவான பயன்பாடும், உடற்பருமனை எதிர்கொள்வதும் என்னுடைய விருப்பத் தேர்வு மட்டுமல்ல, குடும்பத்தினருக்கான நம்முடைய கடமையும் ஆகும்.  உணவுகளில் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால் இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏராளமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  நமது உணவுகளில் சின்னச்சின்ன மாறுதல்களைச் செய்வதன் மூலமாக, நாம் நமது எதிர்காலத்தை பலமானதாகவும், உடல் உறுதியானதாகவும், நோயற்றதாகவும் ஆக்க முடியும்.  ஆகையால் நாம் இனியும் காலம் தாழ்த்தாமல், இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொள்வோம், இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்குவோம்.  இன்றைய மனதின் குரலின் இந்தப் பதிவிற்குப் பிறகு, பத்து பேர்களிடம் வேண்டிக் கொள்கிறேன், சவாலை முன்வைக்கிறேன், நீங்கள் உங்களுடைய உணவுகளிலே எண்ணெயின் பயன்பாட்டை பத்து சதவீதம் குறைத்துக் கொள்ள முடியுமா?  கூடவே, நீங்களும் உங்கள் பங்குக்கு இன்னும் பத்து நபர்களிடம் இப்படி ஒரு சவாலை விடுக்க முடியுமா என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இதனால் உடற்பருமனோடு போராட பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆசியக்கண்டச் சிங்கம், ஹன்குல், பிக்மி ஹாக்ஸ், சிங்கவால் குரங்கு ஆகியவற்றில் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா நண்பர்களே?   பதில் என்னவென்றால், இவற்றில் ஏதும் உலகில் வேறு எங்குமே காணப்படாது, நமது தேசத்தில் மட்டுமே காணப்படும்.  உண்மையிலேயே தாவரங்களாகட்டும், உயிரினங்களாகட்டும் – ஒரு மிகப்பெரிய துடிப்புடைய உயிரினச் சூழலமைப்பு நம்மிடத்தில் இருக்கிறது.  இந்த வன விலங்குகள், நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிக் கலந்தவை.  பல உயிரினங்கள் நமது தெய்வங்களின் வாகனங்களாகவும் இருக்கின்றன.  மத்திய பாரதத்தின் பல பழங்குடியினத்தவர் பாகேஷ்வரை வழிபாடு செய்கின்றார்கள்.  மகாராஷ்டிரத்தில் வாகோபா வழிபாட்டுப் பாரம்பரியம் நிலவி வருகிறது.   பகவான் ஐயப்பனுக்கும் புலிக்கும் இருக்கும் உறவு மிகவும் ஆழமானது.  சுந்தர்வனக் காடுகளில் போன்பீபிக்கு பூஜையும் அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன, இந்த தேவியின் வாகனம் புலி.  நம்முடைய கர்நாடகத்தின் ஹுலி வேஷா, தமிழ்நாட்டின் புலியாட்டம் மற்றும் கேரளத்தின் புலிக்களி போன்ற பல கலாச்சார நடனங்கள் இருக்கின்றன, இவை இயற்கை மற்றும் வன உயிரினங்களோடு நம்மை இணைக்கின்றன.   வன உயிரினப் பாதுகாப்போடு தொடர்புடைய பல பணிகளில் மிக உற்சாகத்தோடு பங்களிப்பை நல்கிவரும் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  கர்நாடகத்தின் பிஆர்டி புலிகள் சரணாலயத்தின் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதற்கான மிகப்பெரிய பாராட்டு என்றால், சொலிகா பழங்குடி இனத்தவருக்கே சாரும்.  இவர்கள் தாம் புலிகளை வழிபட்டு வருபவர்கள்.  இவர்கள் காரணமாக இந்தப் பகுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான பிணக்குகள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு நிலவுகிறது.  குஜராத்திலும் கூட மனிதர்கள் கிர் பகுதியின் ஆசிய சிங்கங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் மகத்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.  இயற்கையோடு இசைவான வாழ்வு என்றால் எப்படி இருக்கும் என்பதை இவர்கள் உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.   நண்பர்களே, இந்த முயற்சிகளின் காரணமாக கடந்த பல்லாண்டுகளாகவே, புலி, சிறுத்தைப்புலி, ஆசிய சிங்கங்கள், காண்டாமிருகங்கள் மற்றும் சருகுமான் போன்றவற்றின் எண்ணிக்கை விரைவாக வளர்ந்திருப்பதோடு, பாரதத்தில் வன உயிரினங்களின் பன்முகத்தன்மை எத்தனை அழகானது என்பதையும் நாம் கருத்தில் இருத்துவது பொருத்தமானது.  ஆசியக்கண்ட சிங்கங்கள் தேசத்தின் மேற்கு பாகத்தில் காணக்கிடைக்கின்றன, புலிகளோ கிழக்குப் பகுதியில், மத்திய மற்றும் தென்பகுதியில் இருக்கின்றன, காண்டாமிருகங்கள் வடகிழக்குப் பகுதியில் வசிக்கின்றன.  பாரத நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இயற்கையிடம் புரிதலோடு இருப்பதோடு, வன உயிரினப் பாதுகாப்புக்கும் உறுதி சேர்க்கின்றன.  அனுராதா ராவ் அவர்கள் பற்றி நான் கேள்விப்பட்டேன்.  இவருடைய பல தலைமுறைகள் அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வருகின்றார்கள்.  அனுராதா அவர்கள் சிறுவயதிலேயே விலங்குகள் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்.  மூன்று பத்தாண்டுகளாக இவர் மான்கள் மற்றும் மயில்களின் பாதுகாப்பைத் தனது வாழ்க்கைக் குறிக்கோளாகவே ஆக்கியிருக்கிறார்.  இங்கே இருப்போர் இவரை  ‘Deer Woman’ – மான் பெண் என்றே அழைக்கிறார்கள்.  அடுத்த மாதம் நாம் வன உயிரினப் பாதுகாப்போடு தொடர்புடைய மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்போம் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.  இந்தத் துறையில் இப்போது பல ஸ்டார்ட் அப்புகளும் உருவாகி வருகின்றன என்பது எனக்கு நிறைவை அளிக்கும் விஷயம். 

நண்பர்களே, இது பத்தாம்-பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான காலம்.  நம்முடைய இளம் நண்பர்கள், அதாவது தேர்வு வீரர்களுக்கு, அவர்கள் எதிர்நோக்கும் தேர்வுகளின் பொருட்டு பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான உணர்வோடு, உங்கள் தேர்வுகளை எழுதுங்கள்.  ஒவ்வோர் ஆண்டும் பரீக்ஷா பே சர்ச்சா – தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் நாம் நமது தேர்வெழுதும் வீரர்களுக்குத் தேர்வுகளோடு தொடர்புடைய பலப்பல விஷயங்கள் குறித்து விவாதிக்கிறோம்.  இப்போது இந்த நிகழ்ச்சி நன்கு நிலைபெற்ற ஒரு வடிவம் பெற்று விட்டது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இதிலே புதியபுதிய வல்லுநர்களும் இணைந்து வருகிறார்கள்.  இந்த ஆண்டு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் ஏற்படுத்தித் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  வல்லுநர்களோடு கூடவே, எட்டு பல்வேறு பகுதிகளும் இடம் பெற்றன.  ஒட்டுமொத்த தேர்வுகள் தொடங்கி, உடல்நலப் பராமரிப்பு மற்றும் மனநலம், உணவு போன்ற விஷயங்களும் இதில் இடம் பெற்றன.  கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்கியவர்களும் தங்கள் கருத்துக்கள்-அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  பல இளைஞர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என இந்த முறை எனக்குப் பலர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.  இந்த வடிவம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  ஏனென்றால் இதிலே ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.  இன்ஸ்டாகிராமிலும் கூட நமது இளைய நண்பர்கள், இந்த பகுதிகளை அதிக எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார்கள்.  உங்களில் பலர் இந்த நிகழ்ச்சியை தில்லியின் சுந்தரி நர்ஸரியில் அமைத்திருப்பதை விரும்பியிருக்கிறீர்கள்.  தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் இந்தப் பகுதிகளை இதுவரை பார்க்காத நமது இளைய நண்பர்கள், கண்டிப்பாக இவற்றைப் பாருங்கள்.  இந்த பகுதிகள் அனைத்தையுமே நமோ செயலியில் உங்களால் காண முடியும்.  மீண்டும் ஒருமுறை தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் நமது வீரர்களுக்கான நான் அளிக்க விரும்பும் செய்தி என்னவென்றால், சந்தோஷமாக இருங்கள், அழுத்தமேதும் இல்லாமல் இருங்கள் என்பது தான். 

எனதருமை நாட்டுமக்களே, மனதின் இந்தக் குரல், இந்த முறை என்னோடு இம்மட்டே.  அடுத்த மாதம், மீண்டும் புதிய விஷயங்களோடு நாம் இணைவோம், மனதின் குரலை ஒலிக்கச் செய்வோம்.  நீங்கள் உங்கள் கடிதங்களைத் தொடர்ந்து எழுதி வாருங்கள், உங்கள் செய்திகளை அனுப்பி வாருங்கள்.  ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

‘பகுதிநேர பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்’: அண்ணாமலை கொடுத்த அடைமொழி!

annamalai bjp tn leader - 2026

பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி – என்று, பாஜக., மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை புதிதாக அடைமொழி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.

உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம். அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.

சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.

நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!

கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin – அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

getoutstalin post by annamalai - 2026

மேடை போட்டு அரசியல் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது சமூக தளத்திலும் நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது எவருடைய ஐ டி விங் பலமாக இருக்கிறது என்பதை அறியும் பலப் பரிட்சையாக திமுக விங் மற்றும் பாஜகவின் ஐடி விங் ஆகியவற்றுக்கு இடையே சமூகத்தள போர் தொடங்கியுள்ளது. கோ பேக் மோடி என்ற # மூலம் திமுக ஐடி விங் செய்து வந்த அரசியலுக்கு இப்போது பாஜக பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு போரை தொடங்கியுள்ளார்.

கெட் அவுட் ஸ்டாலின் #GetOutStalin என சமூக வலைதளத்தில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க., ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றிவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.

ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலை தி.மு.க., அரசு நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க., அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கெட் அவுட் ஸ்டாலின் #GetOutStalin என்று அவர் தொடங்கி வைத்துள்ள hashtag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தப் போராட்டமே தாய் மொழியை தொடர்புபடுத்தி ஏற்பட்டது என்பதால் அது இன்னும் சூடு பிடித்துள்ளது.

தமிழின் மீது பற்று உள்ளவர்கள் போல் நாடகமாடும் திமுகவினர் எப்படிப்பட்ட தமிழ் இன அழிப்பு மற்றும் தமிழ் மொழி அழிப்பு வேலைகளை செய்து வருகின்றனர் என்பதை பொதுமக்களிடம் முன்வைத்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே படித்து தமிழகத்துக்குள் திமுகவுக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டு வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் அதே நேரம் திமுகவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து அதிக அளவில் கல்விக் கட்டணங்களை வசூல் செய்து கோடிக்கணக்கில் மிதந்து வருகின்றனர் என்பதையும், தங்கள் குடும்ப இளைய தலைமுறை மூன்று மொழிகளையும் வேறு நாட்டின் மொழிகளையும் படிப்பதற்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்து வருவதையும் குறிப்பிட்டு இந்த போரை தொடங்கியுள்ளார்.

ஆனால் இது தமிழ் மொழிக்கு எதிரானது என்ற திமுக அரசின் வாதத்தை பொய்யாக்கி தாங்கள் தமிழ் மொழியை மாற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக எடுக்க வைத்து பரப்புவோம் என்றும் அதேபோல் தமிழகத்தில் இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக சிறுவயதில் மாணவர்கள் படித்துக் கொள்ள வேண்டும் என்பதையே தாங்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டு அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்.

இன்று சர்வதேச தாய் மொழிகள் தினம் என்பதால் தமது தமிழ் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த பதிவுகளையும் அண்ணாமலை செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு

@narendramodi அவர்கள் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.

சாம்பியன்ஸ் ட்ராபி: கில் ஆட்டத்தால் இந்திய அணி ‘தில்’ வெற்றி!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- வங்கதேசம் – 20.02.2025

கில் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

வங்கதேச அணியை (49.4 ஓவர்களில் 228 ரன், தவ்ஹித் ஹிருதய் 100, ஜேகர் அலி 68, டான்சிட் ஹசன் 25, ரிஷாத் ஹுசைன் 18, ஷமி 5/53, ராணா 3/31, அக்சர் படேல் 2/43) இந்திய அணி (46.3 ஓவர்களில் 231/4, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 101, ரோஹித் ஷர்மா 41, கே.எல். ராகுல் 41, விராட் கோலி 22, ஷ்ரேயாஸ் ஐயர் 15, ரிஷாத் ஹுசைன் 2/38, டஸ்கின் அகமது 1/36, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 1/62) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணியின் அணித்தலைவர் ஷண்டோ முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு ஆரம்பத்தில் வேகமாக விக்கட்டுகள் கிடைத்தன. சௌம்ய சர்க்கார் (பூஜ்யம் ரன்), மிராஸ் (5 ரன்) இருவரும் முகமது ஷமியின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். ஷண்டோ (பூஜ்யம் ரன்) ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் பந்துவீச வந்த அக்சர் படேல் அடுத்தடுத்த பந்துகளில் டான்சிட் ஹசனையும் (25 ரன்) முஷ்ஃபிகுர் ரஹிமையும் (பூஜ்யம் ரன்) வீழ்த்தினார். அப்போது வங்கதேச அணி 35 ரன் களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்திருந்தது.

அதிசயமான முன்னேற்றம்

அதன் பின்னர் அதிசயமான முன்னேற்றம் ஏற்பட்டது. தவ்ஹீத் ஹிருதய் (118 பந்துகளில் 100 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஜேக்கர் அலி (114 பந்துகளில் 68 ரன், 4 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடி, 42.4ஆவது ஓவரில் ஜேக்கர் அலி ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோரை 189 ரன்னுக்குக் கொண்டுவந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் சிறப்பாக ஆடவில்லை. எனினும் தவ்ஹீத் ஹிருதய் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, அணியின் ஸ்கோரை 49.4 ஓவர்களில் 228 என்ற அளவிற்கு கொண்டுவந்தார்.

229 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடியது. ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 41 ரன், 7 ஃபோர்) கில் (ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 101 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பிற்குப் பின்னர் ரன் ரேட் குறையத்தொடங்கியது. விராட் கோலி (38 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர்) ஷ்ரேயாஸ் ஐயர் (17 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்), அக்சர் படேல் (12 பந்துகளில் 8 ரன்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்று விக்கட்டை இழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கே.எல். ராகுல் (47 பந்துகளில் 41 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) கில் உடன் இணைந்து இந்திய அணியைக் கரைசேர்த்தார்.

இரண்டு அணிகளுமே அருமையான கேட்சுகளைத் தவறவிட்டன. அக்சர் தனது முதல் ஓவரை வீச வந்தபோது அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பந்திலும் விக்கட் எடுத்திருப்பார். ஆனால் முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் ஷர்மா ஒரு சுலபமான கேட்சை தவறவிடார். அதற்கடுத்து ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் பந்து வீச்சில் ஒரு கேட்ச் பிடிக்கத் தவறினார். வங்கதேச அணியும் முக்கியமான தருணங்களில் மூன்று கேட்சுகளைத் தவறவிட்டது.

துபாய் மைதானம் சுழல்பந்துக்குச் சாதகமாக இல்லை. எனவே இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்த சாம்பியன்ஸ் ட்ராபியை விளையாடுவது சரியான முடிவா? இதனைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இந்திய மைதானங்கள் போல இரவுநேரப் பனியும் இங்கே இருக்கவில்லை.          ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.      

உண்மையில் அது கார்டூனா?!

write thoughts - 2026
#image_title

பிரதமர் மோடியை இகழ்ந்து விகடன் பிளஸ் வெளியிட்ட கார்ட்டூன். கார்ட்டூனா அது?

— ஆர். வி. ஆர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேலி செய்து விகடன் பிளஸ் என்ற இணைய இதழ் பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அந்த இதழைப் பிரசுரிப்பது ஆனந்த விகடன் பத்திரிகை குரூப்.

அந்தக் கார்ட்டூன் கடும் கண்டனங்களை ஈர்த்தது – குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகளிடமிருந்து. அந்தக் கார்ட்டூன் பாரதப் பிரதமரை அவதூறு செய்கிறது, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அரசுக்குக் கோரிக்கை அனுப்பி இருக்கிறார்.

அந்தக் கார்ட்டூன் வெளிப்படுத்தும் காட்சி இது: மோடியின் கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப் பட்டுத் துவண்டு தோற்ற முகத்துடன் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அருகில் இன்னொரு நாற்காலியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமர்ந்து, மோடியை நோக்கி ஒரு கையைக் காட்டி எக்காளமாகச் சிரிக்கிறார். அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடியை அடக்கி வைத்திருக்கிறார், அமெரிக்க அதிபருக்கு முன் பாரதப் பிரதமர் செயலிழந்து கட்டுண்டு கிடக்கிறார் என்பது அந்தக் கார்ட்டூன் சொல்ல வந்த கருத்து.

இந்தக் கார்ட்டூனுக்கு ஒரு பின்னணி உண்டு. கார்ட்டூன் வெளிவந்த ஐந்து நாட்கள் முன்பாக, பாரதத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க ராணுவ விமானம் வந்திறங்கியது. அமெரிக்காவால் நாடுகடத்தப் பட்ட 104 இந்தியர்கள், கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அந்த விமானத்தில் திருப்பி அனுப்பப் பட்டிருந்தனர். அந்த நாட்டிற்குள் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த/தங்கிய அந்நியர்கள் என்பதால் பிடிபட்டு அவ்வாறு நாடுகடத்தப் பட்டனர்.

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த மற்ற சில நாட்டினரையும் கைகால்களைச் சங்கிலியால் பிணைத்து வைத்து விமானத்தில் அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது அமெரிக்கா. இப்போது மீண்டும் அமெரிக்க அதிபராகி இருக்கும் டிரம்ப், அமெரிக்காவில் பிடிபடும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

விகடன் பிளஸ் தனது கார்ட்டூன் மூலம் என்ன சொல்கிறது என்றால்: விமானத்தில் நாடு கடத்தப் படும் இந்தியர்களின் கைகால்களைச் சங்கிலியால் காட்டாமல் அனுப்ப வேண்டும் என்று பாரதம் அமெரிக்காவிடம் கேட்டு அவ்வாறு நிகழச் செய்ய முடியவில்லை. அதற்கான தெம்பும் திராணியும் பிரதமர் மோடியிடம் இல்லை. அப்படியாகப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் முன் செயலற்ற சோப்ளாங்கியாக இருக்கிறார். உறுதியான டிரம்ப், தனக்கு முன்பாக அடங்கிக் கிடக்கும் மோடியைப் பார்த்து இளக்காரமாகச் சிரிக்கிறார். இதுதான் விகடன் பிளஸ் கார்ட்டூனின் கருத்து.

இந்தக் கார்ட்டூன் கருத்தின் மதிப்பு என்ன? மெகா சைஸ் பூஜ்யம்.

நாடு கடத்தப் பட்ட இந்தியர்களில் பலர், அறியாமையால் ஏஜெண்டுகளிடம் பணத்தை இழந்து துன்ப வழியில் உருண்டு புரண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். நாடு கடத்தலாகும் போது அவர்கள் விரக்தியிலும் ஆவேசத்திலும் விமானத்திற்குள் அசம்பாவிதம் செய்ய முனையக் கூடாது. ஆகையால் அவர்களின் பாதுகாப்பிற்கும் விமானத்தின் பாதுகாப்பிற்கும் அவர்களின் கைகால்களில் அமெரிக்கா சங்கிலி போட்டு அவர்களைப் பயணிக்க வைப்பது தவிர்க்க முடியாதது. இது, அமெரிக்காவின் எச்சரிக்கை சம்பந்தப் பட்டது. இதில் பாரதத்தின் இயலாமையோ பலவீனமோ துளியும் இல்லை.

தத்துப் பித்தான கருத்தில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது விகடன் பிளஸ். மற்றபடி, டிரம்ப உட்பட அகில உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியைப் பெரிதும் மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்பது வெளிப்படை. கார்ட்டூன் வெளியான மூன்றாம் நாள் அமெரிக்காவில் நிகழ்ந்த மோடி-டிரம்ப் சந்திப்பின் பொதும் இது தெரிந்தது.

அடுத்த விஷயம், இந்தக் கார்ட்டூன் நேர்மையற்றது, கீழ்த்தரமானது. விமானத்தில் நாடு கடத்தலாகும் இந்தியர்கள், உடன் வரும் அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள், விமான பைலட்டுகள் ஆகியோருக்கும், பறக்கும் விமானத்திற்கே கூட, நூறு சதவிகிதப் பாதுகாப்பு அவசியம் என்பதால்தான் அந்த இந்தியர்களின் கைகால்களில் சங்கிலி போடப் பட்டது என்பது, நூற்றாண்டு காணவிருக்கும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் புரியாதா? இருந்தாலும் பிரதமர் மோடியை எப்படியோ இகழ இது ஒரு வாய்ப்பு என்று தன் மனம் இனிக்க மலிவாக ஒரு கார்ட்டூன் பிரசுரித்திருக்கிறது விகடன் பிளஸ்.

தற்போது மத்தியில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலைமையிலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தலாகும் இந்தியர்கள் கைகால்களில் விலங்கு போட்டுத்தான் இந்தியாவுக்கு அனுப்பப் படுவார்கள். அப்போதும் அதுதான் நடக்கும். ஆனால் அப்போது – அதாவது ராகுல் காந்தி பிரதமராக இருந்தால் – நடக்கவே முடியாதது இது: எக்காளமாய்ச் சிரிக்கும் அதிபர் டிரம்பும் கைகால்களில் சங்கிலியிட்ட ‘பிரதமர்’ ராகுல் காந்தியும் விகடன் பிளஸ் கார்ட்டூனில் தோன்ற மாட்டார்கள்.

அர்த்தமற்ற, நேர்மையற்ற இந்தக் கார்ட்டூன் கீழ்த்தரமானதும் கூட. பாரதப் பிரதமரை அமெரிக்க அதிபரின் முன்னால் தோல்வியுற்ற முகத்துடன் கைகால்களில் விலங்குடன் அமர்ந்திருக்குமாறு ஒரு பாரதப் பத்திரிகை கார்ட்டூன் போடலாமா? அதுவும் மனமறிந்த ஒரு பொய்க் கருத்தை வெளிப்படுத்த? கீழான நோக்கம் கொண்ட ஒரு பத்திரிகைதான் இப்படியான கார்ட்டூனை வெளியிடும். அதே நோக்கம் கொண்ட மற்றொருவர்தான் இந்தக் கார்ட்டூனைப் பாராட்ட முடியும். அப்படியான மற்றொருவர், “அது சிறந்த கார்ட்டூன். அதில் அர்த்தமும் இருந்தது” என்று விகடன் பேட்டியில் சிலாகித்தார். அவர் யாரென்றால், நூற்றி ஐம்பதாவது வயதை நெருங்கும் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகையின் டைரக்டர், என். ராம்.

இந்தக் கார்ட்டூன் மத்திய அரசால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதா இல்லையா என்பது வேறு விஷயம். இந்த விஷயத்தில் விகடன் பிளஸ்ஸை சட்டம் ஒழுங்குபடுத்த முடியாமல் போனால், அதன் காரணமாக அந்தப் பத்திரிகையின் செயல் சரியாகாது, பாராட்டுக்கு உரித்தாகாது.

ஒரு மனிதன் அல்லது ஒரு பத்திரிகை தனக்கு உண்மையாக, பிறருக்கு நேர்மையாக, தேசத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருத்தல் அவசியம் என்பது சட்டத்தின் கட்டளையல்ல. குடிமக்கள் இந்தப் பண்புகளைத் தாமாக ஏற்பது சமூகத்தை, தேசத்தை, உயர்த்தி வைக்கும். அந்த வகையில் விகடன் பிளஸ்ஸுக்கு நாம் எத்தனை மார்க் தரலாம்? மைனஸ் தான்.

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

குருஜி சிந்தனைகள்: கல்வி – வேர்களை வலுப்படுத்துவோம்!

guruji golwalkar - 2026
#image_title

வேர்களை வலுப்படுத்துவோம்

(ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ ராவ் கோல்வல்கர் ஆசிரியர்களிடையே பேசியது)

கல்வித்துறையில் ஆசிரியர்கள்தான் மிக முக்கியமானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. இருப்பினும் இந்த விஷயத் தில் நாம் சில விஷயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது நன்று.

நமது அடிப்படைத் தத்துவம்

‘கல்வி’ என்ற சொல்லுக்கு இப்போது எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்கிற விஷயத்தில் இருந்து நாம் தொடங்க லாம். மனிதனுக்கு உள்ளே உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்வதுதான் கல்வி. மூளையில் வெறுமனே தகவல் களைக் கொட்டும் வேலை கல்வியாகிவிடாது. தட்டுமுட்டுச் சாமான் கள் போட்டு வைக்கும் அறைபோல, மனித மூளையை ஆக்குவது அதன் நோக்கமல்ல. மனிதனுக்குள் இருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை – பேரறிவாற்றலை வெளிக்கொணர்ந்து வளர்ப்பது தான் கல்வியின் மிக முக்கியமான பணி என்று எல்லா இடங்களி லும் கருதப்படுகிறது. இது நல்ல பலன்களையும் தந்துள்ளது.கலை, விஞ்ஞானம் போன்ற பலவகையான துறைகளில் அரும்பெரும் சாதனை படைத்தவர்களை பல்வேறு நாடுகளிலும் நாம் பார்க்க முடியும்.

ஆனால் ஹிந்துக்களாகிய நாம், இத்துடன் நின்றுவிடவில்லை; இதையும் தாண்டிச் சென்றிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை கல்வியின் சாராம்சம் என்பது, மனிதனுக்குள்ளே உறையும் அவனது ஆளுமையை வெளிப்படுத்துவதுதான். வாழ்க்கை என்பது வெறுமனே உணர்ச்சிகளால் ஆன மூட்டை அல்ல. நமக்குள்ளே ‘இறுதிப் பேருண்மை ‘ இருப்பதாக நாம் சொல்கிறோம். அந்தப் பேருண்மையைப் புரிந்துகொண்டு, நமக்குள்ளிருக்கிற அதனை வெளிப்படுத்துவதே நோக்கம். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நமது மகான்களும் தவமுனிவர்களும் விரிவான ஆலோசனைக நமழங்கிச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நடை முறைப்படுத்துவதில் ஆசிரியரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

கையிலிருக்குது வெண்ணெய்

துவக்கத்திலேயே அவர்களிடம் பத்துத் தத்துவங்களை யமங்கள், நியமங்கள் மாணவர்களின் மனத்தில் வேரூன்றச் செய்துவிட வேண்டும். அஹிம்சை (இன்னா செய்யாமை), சத்தியம் (வாய்மை), அஸ்தேயம் (திருடாமை = தேவைக்குமேல் பொருள் சேர்க்காமல் இருப்பது), பிரம்மசரியம் (புலனடக்கம்), அபரிக்ரகம் (இரவாமை) – இவை ஐந்தும் ‘யமங்கள்’. ஸௌச்சம் (தூய்மை), ஸந்தோஷம் (போதுமென்ற மனம் படைத்தவராக இருத்தல்), தபஸ் (நோன்பு), ஸ்வாத்யாய (ஆன்மிகக் கல்வி), ஈஸ்வர ப்ரணிதானம் (கர்மங்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது) -இவை ஐந்தும் ‘நியமங்கள்’. பார்க்கப்போனால், பைபிளின் பத்துக் கட்டளைகள் என்பது என்ன? இந்த ஐந்து நியமங்கள்தான். மாணவர்களில் மிகச் சிலர்தான் இந்த யம-நியம உணர்வுகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற நிலை உருவாகலாம். அதனாலும் மிக நல்ல பலன் உண்டு. ஏனெனில், அவர்கள் தங்களைச் சுற்றிலும் மிகப் புனிதமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். இதன் விளைவாக, நாளாவட்டத்தில் மற்றவர்களும் இவற்றைக் கடைப்பிடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

இந்தத் தத்துவங்களை அந்த இளம் உள்ளங்களுக்குச் சுவையான முறையில் சொல்லித்தர வேண்டும். நான் நடுத்தரப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அப்பள்ளியில் ஓர் ஆசிரியர் இருந்தார். பள்ளிப்பாடங்களைச் சொல்லித் தருவதோடு மட்டுமல்லாமல் அவர், நமது தொன்மையான புராணங்களில் இருந்து பலதரப்பட்ட கதைகளையும் சொல்லுவார். அவர் சொல்லும் கதைகள் மிகவும் சுவையாகவும் அதேநேரத்தில் நல்ல ஞானம் ஊட்டுவதாகவும் இருக்கும். எனது தாயாரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. எனது தாயார் “கல்வியறிவு படைத்த” பெண்மணி அல்ல. மகாபாரதம், ராமாயணம் போன்ற நமது சமய இலக்கியங்களை நான் அவருக்குப் படித்துக்காட்டு வேன். இதன்மூலம் எனக்கும் அளவில்லா ஆதாயம் கிட்டியது.

இத்தனை நூற்றாண்டுகளாக ‘ஒரே மக்கள்’ என்ற அளவில் நம் பாரம்பரியத்தையும் நடத்தையையும் நிர்மாணித்து வருவது இந்தக்  கதைகள்தான். இவற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம், ஏராளம். “ஜாபாலி” கதை ஓர் உதாரணம். ஜாபாலி என்பவன் ஒரு பையன். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவன் வாய்மையைக் கடைப்பிடித்தான். ஒருமுறை அவன் ஓர் ஆசிரியரை அணுகி, ‘என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ளுங்கள்’ என்று வேண்டினான். ஆசிரியரோ அவன் என்ன ‘கோத்திர’த்தைச் சேர்ந்தவன் என்று வினவினார். பையன் நேரே தாயாரிடம் சென்று, ஆசிரியர் தன்னிடம் கேட்ட கேள்வியைக் கூறினான். அவனது அம்மா, ”மகனே! நான் ஓர் எஜமானர் வீட்டில் வேலைக்காரியாக இருந்தபோது கர்ப்பமடைந்தேன். அந்தக் குழந்தைதான் நீ. உனது தந்தை யாரென்பதையே என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இதை உனது ஆசிரியரிடம் சொல்” என்று கூறினாள்.

ஆசிரியரிடம் போனான் ஜாபாலி. தாயார் தன்னிடம் சொன்ன பதிலை வார்த்தை பிசகாமல் அப்படியே அவரிடம் கூறினான். “தம்பி, உன்னிடம் நேர்மையான நடத்தை இருக்கிறது.உண்மை பேசும் துணிவு இருக்கிறது. கல்வியறிவு பெறுவதற்கு மிகவும் ஏற்றவன் நீ” என்று கூறி அவனைத் தனது சீடனாக்கிக் கொண்டார் அந்த ஆசிரியர். அதற்குப் பிறகு அந்தப் பையன் ‘சத்தியகாம ஜாபாலி’ என்றே அழைக்கப்படலானான்.

குறுக்கு வழிகள் நேர்மையை அழிக்கின்றன

ஆனால், கதைகளும் நிகழ்ச்சித் தொகுப்புகளும் மேற்கோள் களும் நிறைந்த இந்தக் களஞ்சியங்களைப் பற்றி நம்மில் பலர் அறிவதில்லை. மிகவும் வளமையான எல்லாத் துறைகளிலும் மேலோங்கிய – மிகத் தொன்மையான வரலாறு நமக்கு இருக்கிறது என்பதைக்கூட நமது இளைஞர்களில் பெரும்பாலானோர் அறியாமல் இருக்கிறார்கள். கல்விக்கூடங்களில் இந்த ஆக்கபூர்வ மான – ஆரோக்கியமான விஷயங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. எனவேதான் நமது மாணவர்கள் பாதைமாறிப் போய்விடுகிறார்கள். ஆபாசமான புத்தகங்களைப் படிக்கத் தலைப்படுகிறார்கள். ‘அவர்கள் அதிக முயற்சி எடுத்துப் படிப்பதில்லை; புரிந்துகொள்ள அதிக நாட்டம் கொள்வதில்லை’ என்பதை அவர்கள் பாடம் படிக்கும் முறையே காட்டிக் கொடுத்து விடுகிறது. பாடப்புத்தகங் கள், தரமான நூலாசிரியர்களால் எழுதப்பட்ட ஆலோசனை நூல்கள் (Reference Books) போன்றவை எல்லாம் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. சுருக்கமான குறிப்புகள், கேள்வி-பதில் ஆகியவை தான் இன்றைய ஃபாஷன். ‘எளிதில் பாஸ் பண்ணுவதற்கு இன்னொரு வழி டியூஷன் வைத்துக்கொள்வது’ என்றும் மாணவர்கள் கருதுகிறார்கள். ஓர் ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்திற்கு, அவருடைய மாணவர்கள் இன்னொருவரிடத்தில் டியூஷன் வைத்துக் கொள்ள வேண்டிவருகிறது என்றால், அந்த ஆசிரியர் அதைத் தன்னுடைய கடமை உணர்வுக்கும் ஒழுக்க உயர்வுக்கும் அவமானமாகக் கருதவேண்டும். மொத்தத்தில் இந்தக் குறுக்கு வழிகள் மாணவன் மனதைப் பாதிக்கின்றன. புரிந்துகொள்ளும் திறனையும் ஆர்வத்தையும் துடைத்தெறிந்து விடுகின்றன. இதுதான் மிச்சம். இந்த மாதிரியான விஷயங்களை ஆசிரியர்களே ஊக்குவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. பார்க்கப் போனால் சில ஆசிரியர்களே, தன்னிடம் டியூஷன் படிக்க வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்தவும் சொல்கிறார்கள். இவை எல்லாம் மாணவனின் மனோதிடத்தைப் பாதித்துவிடும்; ‘பிழைப்பதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் உள்ளன; எனவே, கடமையை நேர்மையாகச் செய்து முடிக்க வேண்டிய அவசியமே இல்லை’ என்று அவர்கள் மனத்தில் பதிந்துவிடும். இவ்வாறு மாணவர்களின் மன உறுதி குலைந்து போவதுதான், அவர்களை முறைகேடான நடத்தைக்குத் தூண்டுகிறது; எல்லாக் “குறுக்கு வழி”களும் தோல்வியடைந்துவரும்போது, தேர்வில் பாஸ் பண்ணுவதற்காக முறைதவறிய வழிகளில் ஈடுபடுகிறார்கள்.

மிகத் தீவிரமான ஹிந்துக்களாக இருப்போம்

இத்தகைய விபரீதங்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். துவக்கக் கல்வி பயிலும் நிலையிலேயே, உன்னத குணங்களான அறிவும் அன்பும், இளம் உள்ளங்களில் விதைக்கப்பட வேண்டும். புனிதமான நமது தேசியச் சிறப்பியல்பு கள், ஆற்றல்மிக்க தேசிய வீரர்கள், உயரிய சம்பவங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய தொன்மையான இலக்கியங்கள், நவீன நூல்கள் அடங்கிய களஞ்சியத்திலிருந்து நாம் இந்த விஷயங்களைப் பெறமுடியும். குறிப்பாக, நமது இளைய தலைமுறையினர், உன்னதமான இந்த ரிஷி – முனிவர்கள் பரம்பரையில் பிறந்ததற் காகப் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் உண்மையான வாரிசுகளாக நாம் இருக்க வேண்டுமென்றால், நாம் ஹிந்துக்களாக இருக்க வேண்டியது அவசியம். ஹிந்துக்களாகவே காட்சியளிக்க வேண்டும். நாம் ஹிந்துக்கள்தான் என்று உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளுமாறு நமது நடவடிக்கைகள் அமைய வேண்டியது அவசியம். எப்பொழுது நம்மையும் நமது தேசிய பழக்கங்களையும் தேசிய நடைமுறைகளையும் முதலில் நாம் மதிக்கத் தொடங்குகிறோமோ, அப்பொழுதுதான் உலகமும் அவற்றை மதிக்கும். உண்மையில், நாம் நாமாக இருக்க வேண்டும் என்றுதான் உலகம் விரும்புகிறது; யார் யாரை எல்லாமோ காப்பியடித்து அவர்களது நகல்களாக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

உள்ளத்துக்கு உண்மையாக…

ஒருமுறை ஒரு பிரெஞ்சுக்காரர் என்னைச் சந்தித்தார். அவரை எங்களுடன் உணவு அருந்துமாறு வேண்டினோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்த அவர், எங்களுடன் தரையிலேயே அமர்ந்தார். ஸ்பூன், முள் கரண்டி, டேபிள் எதுவும் இல்லாமல் நமது உணவை வெறும் கைவிரல்களாலேயே எடுத்துச் சாப்பிட்டார். இது மிகவும் சுவையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். “நாங்கள் உங்கள் நாட்டிற்கு வரும்போது உங்களது பழகுமுறை பழக்கங்கள் ஆகியவற்றின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொண்டு, அவைகளை, நாங்களும் அனுபவித்து உணரவேண்டும். அது இல்லாவிட்டால், நாங்கள் இவ்வளவு தூரம் உங்களது நாட்டிற்கு வரவேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் வினவினார்.

ஒருமுறை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் இயக்கம் ஒரு பரிசோதனை மேற்கொண்டது. வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் இருந்து சில மாணவர்களை பூனாவிலும் மகாராஷ்ட்ரத்தின் வேறுசில பகுதிகளிலும் தங்கவைத்து கல்வி போதிப்பது என்பதே அந்தத் திட்டம். அவர்கள் தங்களது மனத்தில் நமது கலாச்சாரத்தைப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்; இதன் மூலமாக அவர்கள் நமது தாய்நாட்டின்மீதும் நமது மக்களுடனும் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட வேண்டும் -இந்தக் காரணத்திற்காக அவர்களை வீடுகளிலேயே தங்கவைப்பது என்று முடிவாகியது. இந்தத் திட்டத்தின் அமைப்பாளர்கள் என்னை அணுகியபோது நான், “மேற்கத்திய பாணி குடும்பங்களில் அவர்களைத் தங்க வைக்காதீர்கள்” என்று அறிவுரை கூறினேன். காலையும் மாலையும் பூஜையறையில் விளக்கேற்றி வைக்கப்படும் வீடுகளில் – நமது விழாக்களும் சடங்குகளும் உயிர்ப்புடன் இருக்கும் வீடுகளில் – எந்த வீடுகள் அவர்களுக்கு கலாச்சார பதிவுகளைக் கொடுக்க முடியுமோ, அத்தகைய வீடுகளில்தான் அவர்கள் தங்க வேண்டும் என்று கூறினேன். பரந்து விரிந்த பாரத பூமியில் வாழும் மக்கள் குழாம், எத்தனையோ குழப்பங்களுக்கு மத்தியிலும் தங்களது தேசிய சிறப்பு இயல்புகளைக் காப்பாற்றிக் கொண்டு, இறவாத தேசமாக இன்னும் உயிர் வாழ்ந்து வருவது இத்தகைய பண்புப் பதிவுகளின் மூலம் மட்டும்தான்.

“ஹிந்துஸ்தான் உலகிலேயே மிகப்பழமையான தேசம்” – என்று 1872லேயே எடின்பர்க் ரெவ்யூ எழுதியது; ஆனால் துரதிர்ஷ்டவச மாக, இந்தத் தொன்மையான, மகத்தான இனமக்கள்கூட அந்நிய பிரசாரத்தின் வலையில் விழுந்து விட்டார்கள்; தங்களது புராதன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறந்துவிட்டார்கள். தங்களது கடந்த காலம் என்ற நிலத்தில் இருந்து வேர் அறுக்கப்பட்டுவிட்ட இந்த சமுதாயம் தனக்கென்று ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை நிர்மாணித்துக் கொள்வது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

இந்தக் குழப்பங்களுக்கு மூல காரணம் எது ?

நான் டெல்லி சென்றிருந்தபோது ஒருமுறை திரு. எம். சி. சாக்ளா அவர்களைச் சந்தித்தேன். அப்போதைய மத்திய கல்வி அமைச்சராக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்புதான் ரஷ்யா சென்று திரும்பி இருந்தார். எவ்வாறு ரஷ்ய இளைஞர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களாகத் திகழ்கிறார்கள், வாழ்க்கையின் எல்லாப் படிகளிலும் மகோன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் இருக்கிறார்கள் என்பதை அவர் விவரித் தார். பிறகு அவர் என்னிடம், “அதேநேரத்தில் நமது மாணவர் களையும் பாருங்கள்! ஒரே ஸ்டிரைக் மயம், ஒழுங்கீனம், குழப்பம். இவர்களிடம் என்ன கோளாறு என்பதே எனக்குப் புரிவதில்லை. ஆனால், உங்களது இயக்கத்தையும் நான் பார்க்கிறேன். அதிலுள்ள இளைஞர்கள் ஒழுக்கத்துடன் திகழ்கிறார்கள். அவர்களிடம் சமர்ப் பண மனோபாவம் இருக்கிறது. ஆகவே, நமது இளைய தலைமுறை யினரின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு நீங்கள் சொல்லலாமே!” என்று கேட்டார்.

“சரி! மாணவர்களின் மத்தியில் ஏதாவது தலைசிறந்த லட்சியத்தை முன்னிறுத்தி இருக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “அவர்களை ஊக்கப்படுத்தி கிளர்ந்தெழச் செய்கிற மாதிரி உன்னதமான ஒரு லட்சியம் இல்லாதபோது, அவர்கள் நல்ல ஒழுக்கத்தையும் சமர்ப்பணத்தை யும் உயர்ந்த வாழ்க்கைத் த்துவங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இத்தகைய உயர்ந்த லட்சியம் மட்டுமே தங்களது மூர்க்கத்தனமான தூண்டுதல் களைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்; தங்களது பொங்கி வரும் ஆற்றலை ஆக்கபூர்வமான, தேச நிர்மாண வழிகளில் செலுத்தவைக்கும். எனவே, அவர்கள் மனதில் தேசிய லட்சியம் பதிய வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நமது உண்மை யான வரலாற்றைப் போதிப்பது இதற்கான நல்ல ஆரம்பம். நாம் மிக உயர்ந்த பாரம்பரியம் கொண்ட நாட்டில் பிறந்திருக்கிறோம், உலகாயத வாழ்விலும் ஆன்மிகத் துறையிலும் நமது முன்னோர்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள், உன்னதமான வாழ்க்கைத் தரங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதை நமது குழந்தைகளுக்கு போதிக்கவேண்டும். அப்போதுதான், நாமும் அதேபோன்ற – அல்லது அதையும்விட உயர்ந்த – நிலையை எய்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யும் ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும்.

“ஆனால், நம் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவதோ தலைகீழ்ப் பாடம் ; நமது வரலாற்றின் ஒளிமயமான காலம் அனைத்தும் இருண்ட காலம் என்று சொல்லித் தரப்படுகிறது; அடிமைப் பட்டிருந்த காலம் புகழப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டல்களுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது; சுதந்திரப் போராட்ட வீரர்களின் உணர்வூட்டும் செயல்கள் இருட்டடிப்புச் செய்யப்படு கின்றன. நமது சரித்திரத்தைப் பாதி ஆக்கிரமித்திருப்பது ‘முஸ்லிம் காலம்’. மீதத்தை ‘பிரிட்டிஷ் காலம்’ பிடித்துக் கொண்டுள்ளது. இதுதான் நாம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் லட்சணம். ‘அவர்களுக்கென்று மகத்தான கடந்த காலமே கிடை யாது; அவர்கள் எப்போதும் அடிவாங்கிக் கொண்டே இருந்தார்கள். முகலாயர்களும் பின்னர் பிரிட்டிஷாரும் வந்த பிறகுதான், இந்த நாடு முன்னேற்றப் பாதையைப் பார்த்தது. ஆக மொத்தத்தில் அவர்களுக்கென்று பெருமைப்படத்தக்க உருப்படியான கடந்த காலம் இல்லை, பின்பற்றத்தக்க உருப்படியான முன்னோர்கள் இல்லை.- இப்படிச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தை களிடம் இருந்து உருப்படியாக எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

”சரி, கடந்த காலத்தில் ஹிந்துக்கள் புரிந்த சாதனைகளைப் பற்றி நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களது வீரத்தையும் அந்நியர்களுக்கு – அது கிரேக்கர்களா கட்டும், முஸ்லிம்களாகட்டும், பிரிட்டிஷாராகட்டும் – எதிராக நடந்த போர்களில் அவர்கள் காட்டிய தியாக உணர்வையும் பாராட்டிப் பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உடனேயே உங்களை ‘வகுப்புவாதி’ என்று முத்திரை குத்திவிடுவார்கள்! பிரச்சினையின் ஆணிவேர் எது என்பது இப்போது தெரிகிறதா?. என்று நான் பதில் கூறினேன். திரு. சாக்ளா வாயடைத்துப் போனார். சற்று நேரம் கழித்து, “ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டார்.

செயலில் தெரியுது வேறுபாடு

நம்மை அவமானப்படுத்துகிற நகைப்புக்கு இடமாக்குகிற இந்தக் கல்விமுறையினால் கண்ட பலன்தான் என்ன?

“ஓர் உதாரணம் தருகிறேன். சில ஆண்டுகள் முன்பு டாக்டர் சதுர்வேதி என்பவர் ஜெர்மனிக்குப் போனார். ஜெர்மனி வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது ‘இந்தோ – ஜெர்மனி அசோசியேஷன்’ என்ற அமைப்பு. ஐரோப்பிய பாணியில் உடையணிந்திருந்த அவர் விமானநிலையத்தில் வந்திறங்கியதுமே, அங்கிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! ‘சரிசரி, குளிருக்கு இதமாக இருக்கும் என்று இந்த உடைகளை அணிந்திருக்கிறார் போலும்!” என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள். பிறகு அவரை, அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அழைத்துச் சென்றார்கள். அந்த வீதிகளில் நான்கு பெரிய பெரிய ஆர்ச்சுகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேதத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வந்திருப்பவர் சதுர்வேதியாயிற்றே! (நான்கு வேதங்களிலும் கரைகண்டவர்) அசோசியேஷனின் செயலாளரான பெண்மணி, தூய சம்ஸ்கிருதத்தில் அவரை வரவேற்றுப் பேசினார். அவரை அடுத்துப் பேசிய நபரும் சம்ஸ்கிருதத்திலேயே பேசினார்; அடுத்துப் பேசிய “பண்டித” டாக்டரோ ஆங்கிலத்தில் பேசினார். அதுவும், வரவேற்புரைக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத விஷயத்தைப் பற்றி! காரணம் வேறொன்றுமில்லை. அவருக்கு சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. வேதங்களைப் பற்றிக் கேட்பானேன்! ஒருவழியாக “பண்டித”ரின் குட்டு உடைந்தது. இதர நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு அந்தப் “பண்டித” டாக்டர், அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

பெரியவர்கள் நடந்து கொண்டுள்ள முறை இதற்கு நேர்மாறானது. ஸ்வாமி ராமதீர்த்தர் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் அமெரிக்க கடற்கரையைத் தொட்டது. சகபயணிகள் அனைவரும் அவசர அவசரமாகத் தங்கள் சாமான்செட்டுகளைச் சுருட்டிக்கொண்டு, கிளம்ப ஆயத்தமானார்கள். ஆனால், இந்தக் காவி உடைச் சாமியாரோ, ஆரவாரமில்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார். எதேச்சையாகத் துறைமுகத்திற்கு வந்திருந்த அமெரிக்கர் ஒருவர் அவரை அணுகினார்; அவருடைய சாமான்கள் எங்கே, அவர் எங்கே போக வேண்டும், ஏதாவது அறிமுகக் கடிதம் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் வினவினார். சுவாமி ராமதீர்த்தரோ, தன்னிடம் எந்த சாமான்செட்டும் இல்லை, பணமும் இல்லை என்றும் எந்தவித அறிமுகக் கடிதமுமே கிடையாது என்றும் பதில் கூறினார். இந்தப் பதிலைக் கேட்ட அந்த அமெரிக்கர் திக்குமுக்காடிப் போனார்: “என்ன இது, இது உங்களுக்கு அந்நிய நாடாயிற்றே! எதுவுமே இல்லாமல் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு இங்கே நண்பர்கள் – அறிமுகமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? ” ஸ்வாமிஜி புன்னகை பூத்தார்; வாஞ்சையுடன் அந்த அமெரிக்கரின் தோள்களில் கரங்களை வைத்து, ‘ஓ, இல்லாமலென்ன? ஒருவர் இருக்கிறார், நீதான் அது!” என்று மறுமொழி கூறினார். இந்த அன்பு அந்த அமெரிக்கரின் உள்ளத்தைத் தொட்டது. அப்போதே அவர் ஸ்வாமிஜிக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்; ஸ்வாமிஜியைத் துதிக்கலானார். ஸ்வாமி ராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்குவதற்கு மிக நல்ல ஏற்பாடுகளைச் செய்து தந்ததும் அவரே.

அஸ்திவாரத்தை மறக்க வேண்டாம்

ஆனால், சிறுவயதில் இருந்தே முறையான பண்புகளை நாம் பெற்றுவந்தால்தான், அன்பு கொள்வதிலும் விவேகம் பெறுவதிலும் இவ்வளவு உயரத்தை அடைய முடியும். அதற்கு, தொடக்கப்பள்ளி நிலையில் இருந்தே சரியான சூழ்நிலை உருவாக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம். ஒருமுறை நான், நாசிக்கில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தேன். பள்ளி வராந்தா சுவர்களில் நூற்றுக்கணக்கான படங்கள் மாட்டப்பட்டி ருந்தன . எல்லாமே, ஐரோப்பாவிலும் வேறுசில நாடுகளிலும் நடைபெற்ற போர்கள் முதலானவை பற்றிய படங்கள்தான். நமது சரித்திர கால, புராண கால சம்பவங்களைக் குறிக்கும் ஒரு படம்கூட இல்லை. “இளைய தலைமுறையினர் உள்ளங்களில் இந்தப் படங்கள் எப்படி சரியான உணர்வைப் பதியவைக்கும்?

போர்களைப் பற்றிய படங்களாகவே இருக்கட்டும், ஹல்திகாட், பானிப்பட்டு போர்களைப் பற்றிய சித்திரங்களை வைத்திருக்கக் கூடாதா!” என்று நான் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டேன். இதற்கு அவர், “எனது நாடு, எனது நாட்டு எல்லை என்று குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைந்து கிடக்கக்கூடாது.” என்று குறிப்பிட்டார். இத்தகைய அசட்டுத்தனமான சர்வதேச வாதம், இன்னும் இதர ‘இஸம்’கள் போன்ற எல்லா வறட்டு வாதங்களும் இளம் உள்ளங்களை சீரழிக்கவே செய்யும்.

நமது தேசிய தத்துவங்களையும் பாரம்பரியத்தையும் பொறுத்தவரையில் அவை என்றுமே, ஒட்டுமொத்த மனிதகுலத்துக் கும் ஏற்படவுள்ள மிக உயர்ந்த நன்மையை உள்ளடக்கியவை. எனவே, நமது தேசியத்தைக் குழந்தைகளுக்குப் போதிப்பதால் -மிக மிகத் தீவிர தேசியத்தைச் சொல்லித் தந்தாலும் கூட – நமது குழந்தைகளின் மனது ஒருக்காலும் மனிதகுல நன்மைக்கு விரோதமாகி விடாது. அதற்கு மாறாக, அது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புகளையும் வலுப்படுத்தவே செய்யும்.

இளைய உள்ளங்களை உருவாக்கும் ஆசிரியர்கள், இந்தக் குறிப்புக்களை மனதில் கொள்வது நல்லது.

வாழ்வே வேள்வி: குருஜியின் சிந்தனையில்… ராஷ்ட்ர சேவை! 

guruji msg - 2026

பிற்போக்கான “முற்போக்காளர்கள்”

ஆத்ம சமர்ப்பணம் செய்வதற்காக நம்மை ஊக்குவித்துத் தூண்டுகின்ற ஒரே குறிக்கோள் ராஷ்ட்ர சேவை என்பதே. 

இதன்மூலம் நடைமுறை ரீதியான லட்சியத்தின் இருதரப்புகளாகின, யதார்த்த வாதம், லட்சியவாதம் ஆகிய இரண்டுமே பூர்த்தியாகி விடுகின்றன. எந்தவொரு பொருளைப் பற்றி நமது உள்ளத்தில் அன்பு, பெருமிதம் அல்லது பக்தி சிரத்தை தோன்றுகிறதோ அந்தப் பொருளுக்கு அல்லது மனிதர்களுக்குத்தான் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் ஏற்படும். 

ஆகவே முதன் முதலாக நாம் நமது மனத்தில் நமது தேசிய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி – தர்மம், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கைத் தத்துவ ஞானம்,அபிலாஷைகள், நம்பிக்கைக்கும் தன்மானத்திற்கும் உரிய பொருள்கள் ஆகியவை பற்றி – தீவிரமான அன்பும் பெருமிதமும் பக்தி சிரத்தையும் பூண்டு அதன்மூலம் மனதைப் பண்படுத்திப் பழக்க வேண்டியது அவசியம்.

ஆனால் நம் நாட்டில் இன்று தம்மை ‘முற்போக்குவாதிகள்’ என்று அழைத்துக் கொள்ளும் பலர் உள்ளனர். அவர்களுக்கு நம் தொன்மையான வாழ்க்கை லட்சியங்களனைத்தும் பிற்போக்குத்தன மாகவும் கொடுமை வாய்ந்தவையாகவும் தோன்றுகின்றன. பாரதீய பண்புகளுக்கெதிராக அவர்கள் எழுப்புகின்ற பெரும் ஆட்சேபம் அவை பழசாகிவிட்டன என்பதே. 

இந்தப் புதிய ‘தீர்க்கதரிசி’ களுக்குப் புதுமை ‘மதம்’ பிடித்திருக்கின்றது. அவர்களுக்குப் பழையன அனைத்தும் மோசமானவை. கைமருத்துச் சரக்குகள் போன்ற அவர்களது சித்தாந்தங்கள் சமீப காலமாக அவற்றிற்கு அதிகமான குணமிருக்கிறது எனக் கற்பனை செய்து கொள்கிறார்கள். 

மருத்துவரொருவர் நோயாளியிடம் சென்று, காலக்கிரமப்படி  பிறவிக்குப் பிறகு சாவு இருப்பதால், சாவதே நல்லது என்று யோசனை கூறினால் அது எவ்வளவு நகைப்புக்கிடமாக இருக்குமோ, அதுபோல உள்ளது இவர்கள் கருத்து. 

சூரியன் பழைய வனாக, உண்மையில் மிகமிகப் பழையவனாக ஆகிவிட்டான். மின் குழல்விளக்கு இருளைப் போக்குவதற்காகப் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. ஆகவே சூரியனை விட்டுவிட்டு, அந்த இடத்தில் ‘குழல் விளக்கு’ வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா?

சில பொருள்கள் தொன்மையானவை என்பதற்காக மாத்திரம் அவற்றைப் பயனற்றவை என்றும் பிற்போக்குத் தனமானவை என்றும் கூறுவது அறிவுத்துறையில் அடிமைத்தனத்தை ஒப்புக் கொள்வதாகும். இவ்வாறு இருப்பினும், இந்த ‘அறிவு அடிமைகள்’ இந்த யுகத்தின் ‘முற்போக்குவாதிகள்’ என்று தம்மைத்தாமே அறிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். 

இது மானசீக பலவீனத்தின் அறிகுறி, அறிவு சூன்யமாகி விட்டதென்பதையே இது காட்டுகிறது. இதன் காரணமாக, மனிதன் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் ஆக்கப்பூர்வமாகவும் முழுமையாகவும் சிந்திக்க முடிவதில்லை.

மானசீக அடிமைத்தனம்

மனிதனின் இந்த பலவீனத்தை வளர்ப்பதில் மற்றொரு காரணமும் துணைபுரிகின்றது. மேற்கு நாட்டவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் மட்டமானவர்கள் என்று நம்மையே கருதிக் கொள்கின்ற எண்ணம்தான் அது. இந்த உணர்ச்சியானது இந்நாட்டில் ஆங்கிலேய ஆட்சியின் பரம்பரைச் சொத்தாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்நாட்டில் தோன்றிய பல மகாபுருஷர்கள் அந்நிய ஆட்சியின் தளையை ஒடித்தெறியப் பெருமுயற்சி நடத்தி வந்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் மனத்தில் ஆங்கில அடிமைத்தனம் குடிகொண்டிருந்தது. அவர்களது மனத்தில் தோல்வி மனப் பான்மையும் இழிவு மனப்பான்மையும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. இது எப்படி நிகழ்ந்தது? 

இதற்கான காரணம் மிகவும் எளிது. அதாவது எல்லா நற்குணங்களையும், பணத்துடனும் அதிகார சக்தியுடனும் தொடர்புபடுத்தி நினைக்கின்ற மனித பலவீனம்தான் அதற்குக் காரணம். 

சமஸ்கிருதத்திலுள்ள பிரபலமான ஒரு பழமொழி இதனை விளக்குகின்றது.

யஸ்யாஸ்தி வித்தம் ஸ நர: குலீன: |
ஸ பண்டித: ஸ ச்ருதிமான் குணக்ஞ: ||

(எவனிடம் செல்வமும் சக்தியும் இருக்கின்றதோ, அவனைப் பண்டிதனென்றும் ஞானம் வாய்ந்தவனென்றும் உயர்குடிப் பிறந்தவனென்றும் நல்ல குணங்கள் வாய்ந்தவனென்றும் ஒப்புக்கொண்டு விடுவது மனிதனின் இயல்பு) 

அந்நியர்களுக்கு எதிராக பாரதீயர்கள் தொடுத்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதாகத் தோன்றியது; நாம் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட ஆரம்பித்தது; அப்பொழுது நாட்டில் எங்கு நோக்கினும் நிராசையும் செயலிழந்த நிலையும் தன்னம்பிக்கை அழிந்த சூழ்நிலையும் பரவலாயிற்று. அதன் காரணமாக நமது நாட்டு மக்களின் மனத்தில் ஓர் எண்ணம் வளரலாயிற்று. அதாவது நம்மைத் தோற்கடித்து வெற்றிபெற்ற இனத்தவரிடம் படைபலமும் தந்திரச் சூழ்ச்சித் திறமையும் நம்மைவிட அதிகமாக இருப்பதுடன் உலகியல் செல்வமும் நிறைந்திருப்பதாக அவர்கள் தைரியமாக நடிப்பதால், அவர்கள் நம்மைவிட எல்லா ஞானங்களிலும் உயர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்து பெருகிவிட்டது. 

துவக்க காலத்திலிருந்தே நம் நாட்டு மக்கள் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களையும் நடையுடை பாவனைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நடிக்கவும், மேல்நாட்டிலிருந்து கடன் வாங்கிய கருத்துக்களை உள்ளத்திலுறைந்த உறுதி போலவும் வெளியிடத் துவங்கினார்கள். ஒவ்வோர் ஐரோப்பிய லட்சியமும் – அது எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும் – அவர்களுக்கு வேதவாக்கு ஆயிற்று. 

இதற்கு நேர்மாறாக நம் நாட்டின் ஒவ்வொரு பொருளும் இயற்கையாகவே பொய்யானது என்றும் முட்டாள்தனமானது என்றும் தீர்மானித்தார்கள். குறிப்பாக நமது சமுதாயத்தில் மேல்நாட்டு அறிவைப் பெற்ற ‘படித்த’ வர்க்கத்தினர் உண்மையிலேயே கறுப்பு ஆங்கிலேயர்களாகி விட்டார்கள்.

இப்படிப் ‘படித்த’ மனிதர்கள், ஆங்கிலேயர்களால் சூழ்ச்சிநயம் வாய்ந்த முறையில் பிரசாரம் செய்யப்பட்ட இந்த அபத்தத்தை அதாவது நமது தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் மூலகாரணம் நமது வாழ்க்கை முறைதான் என்ற கருத்தை – மிகச் சுலபமாக எவ்விதக் கஷ்டமுமின்றி நம்பிவிட்டார்கள் என்பதில் வியப்பில்லை. அவர்கள், தமது சொந்தப் பண்பாடு பற்றிய அவமான வெறுப்பும் வெளிநாட்டு வாழ்க்கை லட்சியங்களில் மோக வெறியும் கொண்டு நமது தேசிய வாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்யத் துவங்கினார்கள்.

பிரிட்டிஷாரும்கூட நம் நாட்டில் இந்தக் கீழ்த்தரமான தலைமை வர்க்கத்தைப் போற்றி வளர்ப்பதைக்  கொள்கையாகக் கொண்டு சாமர்த்தியமாக முயற்சித்து வந்தனர். வெளிநாட்டு ஆட்சியாளர்கள், அடிமைப்பட்ட நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பை உண்மையான ராஷ்ட்ர பக்த சக்திகளை ஒடுக்குவதற்கும், விட்டுக் கொடுத்து இணங்குகின்ற சக்திகளை ஊட்டி வளர்ப்பதற்கும் முயன்று அதே கொள்கையுடன் வேலை செய்கிறார்கள்.

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

pawan kalyan in madurai temple - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் ஸ்வாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஆன்மீக சுற்று பயணமாக தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது சிறப்பான தரிசனம் பெற்றேன் என்றார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்கும் விதமாக குரல் கொடுக்க வேண்டும் என,
இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில் திருப்பரங்குன்றம் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க விதமாக தங்கள் குரல் கொடுக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி சார்பாக மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகப்பெற்ற புண்ணிய ஸ்தலமான கோவிலில் கொடிக்கணக்கான பக்தர்கள் தினம் தரும் வழிபட்டு வருகின்றனர் மலைமீது காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு பல வருடமாக கோவில் சார்பாக பழனி ஆண்டவர் கோயில் வழியாக வேல் எடுத்து செல்கின்றனர்.

அதை சீரழிக்கும் வகையாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எஸ். டி .பி.ஐ . நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவையும் அதனுடன் பெரியத வீதியில் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலையும் ஊடுருவி நிர்வாகம் செய்து வருகிறது .

கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் மலை முழுவதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் மலை மீது ஆடு,மாடு தோழிகள் பலி கொடுப்போம் என்றும் சர்ச்சையை உண்டாக்கி இந்து முஸ்லிம் ஒற்றுமை சீர்களுக்கும் விதமாக மோதலை தூண்டும் வகையில் பள்ளி ஜமாத் நிர்வாகம் என்ற போர்வையில் எஸ்டிபிஐ கட்சியினர் தற்போது மலை மீது எங்களுக்கு வழிபாடு உரிமையை பறிக்கப்படுகிறது என்றும் ஒரு தவறான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் என்ற பெயரில் திருப்பரங்குன்றத்தில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய மத கலவரத்தை உண்டாக்கும் எஸ்டிபிஐ மற்றும் அதன் கூட்டணி திட்டமிட்டு செய்து வருகிறது.

எனவே , சனாதன தர்மத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தற்போது முருக பெருமானின் அறுபடைவீடுகளில் தரிசிக்க வரும் சனாதன விரோதிகளுக்கு சிம்ம சொற்பனமாக திகழும் நீங்கள் முருகன் கோவில் புனித மலையை பாதுகாக்க ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என, திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் ஒட்டுமொத்த இந்து சமய பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினர்.

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

public protest in vatrayiruppu for nallathangal temple idol issue - 2026

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது.

தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை பாசத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய 15 ம் நூற்றாண்டை சேர்ந்த சிறப்பு வாய்ந்த அக்கோயிலில் நல்லதங்காள் அம்மன் உருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் அம்மன் உருவில் எழுந்தருளிய நல்லதங்காள் சிலையை கடந்த 18 தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தியதுடன் உண்டியல் பணத்தையும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதையடுத்து அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் கோயில் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். குற்றவாளியை சில தினங்களில் கைது செய்து விடுவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு நபர்களிடமும் விசாரணை செய்தனர். ஆனால் குற்றவாளி யாரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

இதனால் கோபமுற்ற கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் ஊரின் பிரதான சாலையில் திரண்டு பி எம் டி மக்கள் பாதுகாப்பு படை தலைவர் இசக்கி ராஜா என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், குற்றவாளிகளை 19ஆம் தேதிக்குள் கண்டுபிடிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.