Home Blog Page 269

நீங்கள் GPay அதிகம் பயன் படுத்துவர் எனில்… ஏமாறாமல் இருக்க இந்த எச்சரிக்கை அவசியம்!

gpay - 2026

நீங்கள் Gpay செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்களா… கூகுளின் இந்த எச்சரிக்கை உங்களுக்காகத்தான்! தொடர்ந்து முழுதாகப் படியுங்கள்!

UPI பணப் பரிமாற்றங்களைப் பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுவதால், மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இவற்றால், அன்றாடம் நடைபெறக்கூடிய மோசடி பரிவர்த்தனைகளை கூகுள் பே அடையாளம் காண்கிறது.

இருப்பினும் இந்த ஏஐ தொழிழ்நுட்பம் எல்லா நேரத்திலும் பயன்படாது. ஒரு சில நிகழ்வுகளில் மோசடிக்காரர்கள் உங்களது வங்கி விவரங்களைப் பெறுவதற்காக ஸ்கிரீன் ஷேரிங் போன்ற சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். கூகுள் பே பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யும் போது இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் பொதுவாக, நமக்கு பணிச் சூழலில் தொலைதூர உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்கினாலும் இவற்றை நம் டிவைஸில் நிறுவுவதால், பல நேரத்தில் நாம் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பயனர்கள் இதனைப் பயன்படுத்தும் போது அதன் மூலமாக வங்கி விவரங்களை மோசடிக்காரர்கள் பெறுகின்றனர்.

“கூகுள் பே ஒருபோதும் பயனாளர்களை தேர்ட் பார்ட்டி செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ சொல்லாது. ஒருவேளை நீங்கள் கூகுள் பே பயன்படுத்துவதற்கு முன்பு இது போன்ற செயலிகளை ஏற்கனவே டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை செல்போனில் இருந்து அழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்கிறது கூகுள்!

“யாரேனும் உங்களிடம் கூகுள் பே ரெப்ரசன்டேட்டிவ் போல பேசி இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய சொல்லி, நீங்கள் அதனை டவுன்லோட் செய்திருந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடுங்கள். இது குறித்து நீங்கள் கூகுள் பே-யில் புகாரையும் பதிவு செய்யலாம்,” என்கிறது கூகுள்!

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் மற்றவர்களின் ஸ்கிரீனில் என்ன நடக்கிறது என்பதைக் காணவும், அந்த சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுக்கவும் பயன்படுத்தப்படுவதால், உங்களது அனுமதி இல்லாமல் இது போன்ற அப்ளிகேஷன்களை மோசடிக்காரர்கள் இன்ஸ்டால் செய்யும்படி ஏமாற்றலாம்.

நீங்கள் UPI பின் நம்பரை என்டர் செய்யும் பொழுது பின் நம்பர் என்ன என்பது மோசடிக்காரர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் UPI பின் தெரிந்து கொண்ட அந்த நபர்கள் நிச்சயமாக உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவார்கள். எனவே முடிந்தவரை இது போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள்.

ஒருவேளை உங்களது வேலைக்கு அது அவசியமாக கருதப்பட்டால் நீங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் பொழுது அந்த அப்ளிகேஷன்களை திறக்க வேண்டாம். ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்களை மூடிய பிறகு கூகுள் பே செயலியை திறந்து பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பாரதத்தின் மணி மகுடம்! : வரலாற்றுக் கண்காட்சியில் சுவையான தகவல்கள்!

tanjore rk mutt swami vimurthananda lecture in kumbakonam kashmir exhibition - 2026
#image_title

காஷ்மீர், பாரதத்தின் மணிமகுடம் என்ற அருமையான வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சில சுவையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கல்யாணபுரம் ஸ்ரீவத்ஸத்தில் காஷ்மீர் நமது நாட்டின் மகுடம் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமை வகித்துப் பேசினார்.

கும்பகோணம் அருகிலுள்ள கல்யாணபுரத்தில் ஸ்ரீவத்சம் ஹாலில் டி. கே. வி. ராஜன் என்பவர் அமைத்துத் தந்த காஷ்மீர் பற்றிய கண்காட்சி சிறப்பாக மூன்று தினங்கள் நடைபெறுகிறது. இதில், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தா கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினார்.

காஷ்மீர் பிரதேசம் பாரதத்தின் பாரம்பரிய சிறப்பு கொண்டது. ஸ்ரீசாரதா அம்பாளின் அருளால் ஆதிசங்கரர், ராமானுஜாச்சாரியார், திருமூலர், அபிநவ குப்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற பல மகான்கள் அங்கு சென்று தவமியற்றி பாரதத்தின் ஆன்மீகம், தத்துவம், மருத்துவம், இலக்கியம் போன்றவற்றைத் தழைத்தோங்கச் செய்தார்கள்.

அப்படிப்பட்ட காஷ்மீரத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, பாகிஸ்தான் நம்மிடமிருந்து பிடுங்கிய பகுதியை நம் மத்திய அரசாங்கம் மீட்க வேண்டும், முழு காஷ்மீரும் பாரதத்தின் ஒரு பகுதியே என்று கூறி, சுவாமி விமூர்த்தானந்தா இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க நிகழ்ச்சியில், சீதாராமன், திருமூலருக்கும் காஷ்மீருக்கும் உள்ள தொடர்பைப் பற்றி உரையாற்றினார்.

தொல்லியல் ஆய்வாளர் டி.கே. வி. ராஜன் பேசுகையில், காஷ்மீரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.பி. 6ம் நூற்றாண்டிலேயே, காஞ்சிபுரத்திலிருந்து பல மாணவர்கள் இந்து மற்றும் பவுத்த மதங்களைப் படிப்பதற்காக காஷ்மீருக்கு சென்றுள்ளார்கள். இதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.

இளைய தலைமுறைக்கு காஷ்மீர், இலங்கையின் பெருமை, அதன் பங்களிப்பு தெரிய வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் காஷ்மீர், இலங்கை வரலாற்று பெருமைகள் பற்றி இல்லாமல் உள்ளது. காஷ்மீர் நமது நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை எவ்வாறு உயர்த்தியது என்பதை இந்த வரலாற்று கண்காட்சி உணர்த்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி நடத்திட விரும்பினால் அதற்கு வழிவகை செய்து தருகிறோம் என்றார்.

காஷ்மீர் இந்தியாவின் மகுடம் எனும் நூலை வெளியிட அதனை புவியியல் ஆய்வாளர் செல்வ முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். வரலாற்றுக் கண்காட்சியை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கண்டு குறிப்பெடுத்தனர்.

இந்தக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. கலைமாமணி ஜானகி அம்மாள் இறை வணக்கம் மற்றும் குரு வணக்கம் பாடினார். ரங்கராஜன் நன்றி கூறினார்.

நிறைவுக் கட்டத்தில்… உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்புப் பணி!

uttaraghand tunnel work - 2026
#image_title

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில், துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து, இன்று மாலை மீட்புப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக, உத்தரகாசியில் சுரங்கப்பாதையைத் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தாமதம் அடைந்தன. இதுவரை 46.8 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதை துளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 மணி அளவில் துளையிடும் பணி துவங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மீதமுள்ள 5 முதல் 10 மீட்டர் துளையிடும் இடத்தில் எந்தவித தடைகளும் கிடையாது என்பதால் இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உயிர் கொடுத்த திருச்செங்கோடு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனத்தின் சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் துளையிடும் அதிநவீன ரிக் இயந்திரம் இதில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டது.

உத்தராகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே நவ. 12ம் தேதி, மலையின் சுரங்கப்பாதையில், ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மறுமுனையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 பணியாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை 11 நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடைச் சேர்ந்த ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனத்திடம் ‘சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் துளையிடும் அதிநவீன ரிக் வண்டி இருந்ததால், உதவி கோரப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் சிக்கிய இடத்துக்கு மேல் இருந்து துளையிட்டனர். இதில் மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக துளையிடப்பட்டது. அதன் வழியாக கேமராவை உள்ளே அனுப்பி தொழிலாளர்களை அவர்களின் குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டது. மேலும் 41 தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன் குடிநீர் உணவு மருந்துப் பொருட்களை இதன் மூலமாக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தரணி ஜியோடெக் நிறுவன மேலாண் இயக்குனர் ஜெயவேல் தெரிவித்தபோது, எங்களிடம் மூன்று துளையிடும் இயந்திரங்கள் இருந்தன. அதில் நவீன ரிக் இயந்திரமான ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ வாயிலாக துளையிடும் பணியில் ஈடுபட்டு சாதித்துள்ளோம். இந்த இயந்திரத்தை பி.ஆர்.டி. நிறுவனம் உருவாக்கியது” என்றார்.

இந்த இயந்திர உருவாக்கம் குறித்து தகவல் அளித்த பி.ஆர்.டி. நிறுவன மேலாண் இயக்குனர் பரந்தாமன், ”திருச்செங்கோடில் 1972ல் பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ ரிக் இயந்திரத்தை தயாரித்து கொடுத்தோம். இது தற்போது 41 தொழிலாளர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இன்று… துளசி கல்யாணம் விசேஷம்!

tulsi kalyanam - 2026
#image_title
  • கே.ஜி. ராமலிங்கம்

‘துளஸி! அமிர்த ஜன்மாஸி! சதாத்வம் கேசவப்ரியே!”
(तुलसि अमृत जन्मासि, सदा त्वं केशव प्रिये)
(அம்மா தாயே! துளசி! நீ அமிர்தத்தின் உறைவிடம் அல்லவா! உன்னிடத்தில் அல்லவா அந்த கேசவனுக்கு ரொம்பப் ப்ரியம்.)

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதால் “பிருந்தாவன துவாதசி’ என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசிக்கு இணையான மகத்துவம் கொண்டது. இதை குருவாயூர் ஏகாதசி என்றும் அழைப்பார்கள். குருவாயூரப்பனும் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் பகவான் பாதகமலத்தை அடைந்த தினம். வருடாவருடம் குருவாயூர் ஏகாதசி அன்று மற்ற கஜங்கள் அணிவகுக்க அன்றைய பிரதம கஜராஜன் முன்னிலையில் சிலை வடிவில் உள்ள குருவாயூர் கேசவனுக்கு அஞ்சலி செலுத்தும் வைபவம் இன்றும் நடந்து வருகிறது. அதற்கு மறுநாள் வரும் துவாதசி தினம் “பிருந்தாவன துவாதசி” .

நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகாவிஷ்ணுவை பிருந்தாவன துவாதசி நாளில் “உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ’ என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசியன்று அதிகாலையில் திருமணமானப் பெண்கள் நீராடியபின் துளசி செடியாக வைத்திருந்தாலும், துளசிமாடமாக இருந்தாலும், முதலில் அதனை சுத்தம் செய்து, மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும்.

துளசியோடு ஒரு நெல்லி மரக்கன்றை இணைத்து வைத்து, இரண்டுக்கும் பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விஷ்ணுவின் படமோ, அல்லது கிருஷ்ணனின் படமோ வைத்தும் அலங்கரிக்கலாம்.

துளசி செடிக்கு கருகமணி, நகைகள் அணிவித்து மணப்பெண்ணிற்கு அலங்கரிப்பது போல் அலங்காரத்தை முதலில் செய்யலாம். துளசியையும், விஷ்ணுவையும் மணக்கோலத்தில் அலங்கரித்து விட்டு, பின்பு நம்மால் முடிந்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் வைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி தீப தூப ஆராதனையுடன் இந்த துளசியை வழிபட வேண்டும்.

அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ’

இந்த நாளில்தான் துளசி தாயார் மஹாவிஷ்ணுவை மணந்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. துளசி என்ற சொல்லுக்கு “தன்னிகரற்றது’ என்று பொருள். விஷ்ணு ப்ரியா , ஹரிப்ரியா என்று போற்றப்படும் துளசிதேவியை இந்தப் புண்ணிய நாளில் விரதமிருந்து வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

நெல்லி மரம் மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதால் இதை துளசி விவாகம் என்றே பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்நாளில் துளசி விவாகம் செய்து வழிபடுவது இல்லறத்தை இனிமையாக்கும் .

இந்தத் துளசி திருமண பூஜைக்கு நம் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து பூஜையில் கலந்துகொள்ள செய்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைப்பது என்பது மேலும் நன்மையை தரும். துளசியின் அடிபாகத்தில் சிவபெருமானும், துளசியில் மத்தியில் மகாவிஷ்ணுவும், துளசியின் நுனியில் பிரம்மனும் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.

முற்பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்..செடியாய்ப் பிறந்த துளசியை சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிப்பது விசேஷம்…

கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க நாரதர் `கூறிய யோஜனைப்படி சத்தியபாமாவும்,உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத் தந்தோம்” என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள்.

நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார். தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டு தான் இறங்கி இருந்தது.

ருக்மிணிதேவி கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் . துளசி பாற்கடலில் தோன்றியது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.

பெருமாள் கோவில்களில் துளசிவனம், துளசிமாடம் இருக்கும். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றப் கூடிய துளசி மாடம் மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின் மேல் அமைந்துள்ள துளசி மாடம். அருகில் வில்வமரமும் உள்ளது.


துளசி விவாஹமான இன்று நாம் சொல்லி அர்ச்சிக்க…

துளசி அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் துளஸ்யை நம:

ஓம் பாவந்யை நம:

ஓம் பூஜ்யாயை நம:

ஓம் வ்ருந்தாவநநிவாஸிந்யை நம:

ஓம் ஜ்ஞாநதாத்ர்யை நம:

ஓம் ஜ்ஞாநமய்யை நம:

ஓம் நிர்மலாயை நம:

ஓம் ஸர்வபூஜிதாயை நம:

ஓம் ஸத்யை நம:

ஓம் பதிவ்ரதாயை நம:

ஓம் வ்ருந்தாயை நம:

ஓம் க்ஷீராப்திமதநோத்பவாயை நம:

ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:

ஓம் ரோகஹந்த்ர்யை நம:

ஓம் த்ரிவர்ணாயை நம:

ஓம் ஸர்வகாமதாயை நம:

ஓம் லக்ஷ்மீஸக்யை நம:

ஓம் நித்யஸுத்தாயை நம:

ஓம் ஸுதத்யை நம:

ஓம் பூமிபாவந்யை நம:

ஓம் ஹரித்யாநைகநிரதாயை நம:

ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:

ஓம் பவித்ரரூபிண்யை நம:

ஓம் தந்யாயை நம:

ஓம் ஸுகந்திந்யை நம:

ஓம் அம்ருதோத்பவாயை நம:

ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:

ஓம் துஷ்டாயை நம:

ஓம் ஸக்தித்ரயரூபிண்யை நம:

ஓம் தேவ்யை நம:

ஓம் தேவர்ஷிஸம்ஸ்துத்யாயை நம:

ஓம் காந்தாயை நம:

ஓம் விஷ்ணுமந: ப்ரியாயை நம:

ஓம் பூதவேதாலபீதிக்ந்யை நம:

ஓம் மஹாபாதகநாஸிந்யை நம:

ஓம் மநோரதப்ரதாயை நம:

ஓம் மேதாயை நம:

ஓம் காந்தாயை நம:

ஓம் விஜயதாயிந்யை நம:

ஓம் ஸங்கசக்ரகதாபத்மதாரிண்யை நம:

ஓம் காமரூபிண்யை நம:

ஓம் அபவர்கப்ரதாயை நம:

ஓம் ஸ்யாமாயை நம:

ஓம் க்ருஸமத்யாயை நம:

ஓம் ஸுகேஸிந்யை நம:

ஓம் வைகுண்டவாஸிந்யை நம:

ஓம் நந்தாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:

ஓம் கோகிலஸ்வராயை நம:

ஓம் கபிலாயை நம:

ஓம் நிம்நகாஜந்மபூம்யை நம:

ஓம் ஆயுஷ்யதாயிந்யை நம:

ஓம் வநரூபாயை நம:

ஓம் துக்கநாஸிந்யை நம:

ஓம் அவிகாராயை நம:

ஓம் சதுர்புஜாயை நம:

ஓம் கருத்மத்வாஹநாயை நம:

ஓம் ஸாந்தாயை நம:

ஓம் தாந்தாயை நம:

ஓம் விக்னநிவாரிண்யை நம:

ஓம் ஸ்ரீவிஷ்ணுமூலிகாயை நம:

ஓம் புஷ்ட்யை நம:

ஓம் த்ரிவர்கபலதாயிந்யை நம:

ஓம் மஹாஸக்த்யை நம:

ஓம் மஹாமாயாயை நம:

ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:

ஓம் ஸுமங்கல்யர்சனப்ரீதாயை நம:

ஓம் ஸெளமங்கல்யவிவர்திந்யை நம:

ஓம் சாதுர்மாஸ்யோத்ஸ-வாராத்யாயை நம:

ஓம் விஷ்ணுஸாந்நியதாயிந்யை நம:

ஓம் உத்தானத்வாதஸீபூஜ்யாயை நம:

ஓம் ஸர்வதேவப்ரபூஜிதாயை நம:

ஓம் கோபீரதிப்ரதாயை நம:

ஓம் நித்யாயை நம:

ஓம் நிர்குணாயை நம:

ஓம் பார்வதீப்ரியாயை நம:

ஓம் அபம்ருத்யுஹராயை நம:

ஓம் ராதாப்ரியாயை நம:

ஓம் ம்ருகவிலோசநாயை நம:

ஓம் அம்லாநாயை நம:

ஓம் ஹம்ஸகமநாயை நம:

ஓம் கமலாஸநவந்திதாயை நம:

ஓம் பூலோகவாஸிந்யை நம:

ஓம் ஸுத்தாயை நம:

ஓம் ராமக்ருஷ்ணாதிபூஜிதாயை நம:

ஓம் ஸீதாபூஜ்யாயை நம:

ஓம் ராமமன:ப்ரியாயை நம:

ஓம் நந்தநஸம்ஸ்த்திதாயை நம:

ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம:

ஓம் முக்தாயை நம:

ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயிந்யை நம:

ஓம் ப்ராதர்த்ருஸ்யாயை நம:

ஓம் க்வாநிஹந்த்ர்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் ஸர்வஸித்திதாயை நம:

ஓம் நாராயண்யை நம:

ஓம் ஸந்ததிதாயை நம:

ஓம் மூலம்ருத்தாரிபாவந்யை நம:

ஓம் அஸோகவநிகாஸம்ஸ்த்தாயை நம:

ஓம் ஸீதாத்யாதாயை நம:

ஓம் நிராஸ்ரயாயை நம:

ஓம் கோமதீஸரயூதீரஸோபிதாயை நம:

ஓம் குடிலாலகாயை நம:

ஓம் அபாத்ரபக்ஷ்யபாபக்ந்யை நம:

ஓம் தாநதோயவிஸுத்திதாயை நம:

ஓம் ஸ்ருதிதாரணஸுப்ரீதாயை நம:

ஓம் ஸுபாயை நம:

ஓம் ஸர்வேஷ்டதாயின்யை நம:

ஹிந்துக்களின் உண்டியல் காசை… ஹிந்து அல்லாதோருக்கு வாரிவழங்கிய அறங்கெட்ட துறை!

srirangam lights given to muslims - 2026
#image_title

அரங்கன் ஆலய நிர்வாகத்தின் அநியாயம்.
பீர் முகமதுக்கு எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்ட்.

ஹிந்துக்களின் உண்டியல் காசு வேற்று மதத்தினருக்கு அறங்கெட்ட துறை வாரி வழங்கல்….

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஹிந்து அல்லாதோருக்கு கடைகளோ, குத்தகை நிலங்களை அல்லது திருக்கோவிலுக்குள் பணி செய்ய உரிமம் கோர முடியாது….
ஆனால் இன்று கைசிக ஏகாதசியையொட்டி கிளி‌ மண்டபம் மற்றும் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் மின் விளக்குகள், சீரியல் செட்கள் போடப்பட்டுள்ளது.

இந்த உரிமமானது திருச்சி பால்பண்ணை அருகே செயல்படும் S .P. M கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது, இந்த கம்பெனியை நடத்தி வருபவர் பீர்‌முகம்மது என்கின்ற இசுலாமியர்

வேற்று மதத்தினர் திருக்கோலிலுக்குள் வரக்கூடாது என்று சட்டம் உள்ளது, அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட இடம் வரையிலே தான் அனுமதி, ஆனால் திருக்கோவிலின் கொடி மரம் தாண்டி பிரதான இடமான கிளி மண்டபத்திற்கு எப்படி அனுமதி அறங்கெட்ட துறையால் அனுமதிக்கப்பட்டது

சட்டம் தெரியாத இவர்கள்‌ எப்படி திருக்கோவிலை காப்பாற்றுவார்கள் இந்த, இந்த சீர்கேடான பணிக்கு துணை போனது‌ யார் என கண்டறிந்து அவர்களை இந்து சமய அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
திருக்கோவிலின் நிர்வாக அலுவலரை வன்மையாக கண்டிப்பதோடு அவரை திருக்கோவில் பணியிலிருந்து மாற்ற வேண்டும்

ஹிந்துக்களின் உண்டியல் பணம், ஹிந்துக்களுக்கு மட்டுமே… மேலும் யாராக இருந்தாலும் மாற்று மதத்தினரை பணி செய்ய திருக்கோலிலுக்குள் அனுமதியளிக்க கூடாது…
வேலியே பயிரை மேய்கிறது…. வேடிக்கை பார்க்கும் ஹிந்துவே எப்பொழுது குரல் கொடுக்க வரப்போகிறாய்…

  • பா.சரவணகார்த்திக், (விசுவ ஹிந்து பரிஷத்)

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

corona - 2026

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளிடம் சுவாச நோய்களின் அதிகரிப்பு மற்றும் நிமோனியாவின் கொத்துகள் பற்றிய விரிவான தகவல்களை, உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் அதிகாரப்பூர்வ தகவல் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

13 நவம்பர் 2023 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தேசிய சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த சீன அதிகாரிகள், சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து செய்தி வெளியிட்டனர்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது, இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா (பொதுவாக இளம் குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சி காரணமாக இந்த சுவாச நோய்கள் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறினர். சுகாதார வசதிகள், சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு, நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியது இவற்றின் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

நவ.21 அன்று, வட சீனாவில் குழந்தைகளிடம், ‘இனம் கண்டறியப்படாத’ நிமோனியாவின் கொத்துகள் இருப்பதாக ஊடகங்களும் ProMED அறிக்கைகளும் தெரிவித்தன. சீன அதிகாரிகளால் முன்னர் அறிவிக்கப்பட்ட சுவாச நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு அல்லது தனி நிகழ்வுகளுடன் இவை தொடர்புடையதா என்பது குறித்த தெளிவாக தகவல்கள் இல்லை.

நவ.22 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தைகளிடம் காணப்பட்ட சுவாச நோய்கள் குறித்த கூடுதல் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவத் தகவல்களையும், ஆய்வக முடிவுகளையும், சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் மூலம் கோரியது.

இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட, கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சமீபத்திய பரவல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளின் தற்போதைய சுமை இவை குறித்த கூடுதல் தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

சீனாவில் தற்போதைய தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் மருத்துவ நெட்வொர்க்குகள் மூலம், சீனாவின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது.

அக்டோபர் மத்தியில் இருந்து, வடக்கு சீனாவில், முந்தைய மூன்று ஆண்டுகளின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அதிகரித்து வருவது பெரிதாகப் பதிவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, காய்ச்சல் போன்ற நோய்கள், RSV மற்றும் SARS-CoV-2 ஆகியவற்றின் போக்குகள் குறித்த தகவல்களைப் பதிவுசெய்யும் அமைப்புகளையும், உலகளவிலான இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு மற்றும் பதிலளிக்கும் தகவல் தளங்களையும் சீனா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, உலக சுகாதார அமைப்பு இந்தக் கூடுதல் தகவலைக் கேட்டுப் பெற்று, சீனாவில் சுவாச நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்குமென்று அது கூறுகிறது. இதில் WHO பரிந்துரைத்த தடுப்பூசியும் அடங்கும்; நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி, தொலைவில் வைத்திருத்தல்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டில் இருப்பது; பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு; பொருத்தமான முகக் கவசங்களை அணிவது; நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்தல்; மற்றும் வழக்கமான கை கழுவுதல் நடவடிக்கை இவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ATS அமைக்கப் படுவதன் சரியான நோக்கத்தை‌ தமிழக அரசு தெளிவு படுத்தவில்லை!

kadeswara subramaniam hindu munnani - 2026

ATS அமைக்கப்பட்டதின் சரியான நோக்கத்தை‌ தமிழக அரசு
தெளிவு படுத்தவில்லை, இருப்பினும்
பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

தென் பாரதத்தில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம், நக்சல் பயங்கரவாதம் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு மிக முக்கியமான காரணம் பயங்கரவாதத்தை தமிழக அரசியல் லாபத்திற்காக மூடி மறைப்பதே.

அதே சமயம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் நாசகார செயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாடு தான். இது கடந்த நாற்பது ஆண்டுகளாக வெளிப்படையாகவே தெரிய வந்தாலும் அதற்கான சரியான கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பயங்கரவாதின் மீதான முழுமையான பார்வையை காவல்துறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் செயல்பாடு குறித்தான விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதற்கான நிதி சுமார் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பல கொலை, குண்டுவெடிப்பு வழக்குகள் முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்காததும் தமிழகத்தில் பயங்கரவாம் தலைதூக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எனவே இதற்காக தனியாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது இது போன்ற குறைகளை களைவதுடன் பயங்கரவாதத்தின் செயல்பாடு குறித்து நுண்ணறிவு பிரிவு சேகரிக்கும் செய்திகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

கேரளா, மகாராட்டிரம் உள்பட 4 மாநிலங்களில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. எனவே நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (A.T.S.) அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கிடைக்கும் பயங்கரவாதம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு பயங்கரவாதிகள் எந்த வகையிலும் தப்பிக்காமலும் செயல்படாமலும் முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறையை ஒருதலைப்பட்சமாக செயல்பட வைத்து காவல்துறைக்கு அவபெயரை ஏற்படுத்தி வருகிறது ஆளும் திமுக அரசு.

அதுபோல் அரசியல் குறுக்கீடு இல்லாமல் புதிதாக துவக்கியுள்ள இந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவை (ஏ.டி.எஸ்) செயல்பட அனுமதிக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக ஏ.டி.எஸ். பிரிவின் செயல்பாட்டை முடக்காமல் தேச நலனுக்காக, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி நின்ற ஏகபாதமூர்த்தி!

eka patha murthy - 2026
#image_title
  • கே.ஜி. ராமலிங்கம்

ஏகபாதமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றான ஒரு வடிவமாகும். இம்மூர்த்தியை ஏகபாதர் என்று அழைப்பர்.

ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது.

சிவலிங்கத்தில் இருந்து தோன்றியவை 64 சிவமூர்த்தங்கள் (வடிவங்கள்). இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என ஆகமங்கள் கூறுகின்றன. இம்மூர்த்தங்களைச் சுருக்கி, சோமாஸ்கந்தர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், வீரபத்ரர், பிட்சாடனர் உள்ளிட்ட இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.

திருவுருவக் காரணம் ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும்.

அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஐக்கியமாகிவிடுவார்கள்.

ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். சிவபெருமான் ஒரு காலில் நின்ற கோலத்தில் இருக்கவும்,அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர். பிரம்மாவும்,விஷ்ணுவும் அஞ்சலி முத்திரை காட்டுகின்றனர். சிவபெருமானுக்கு பதில் ஆக்ரோஷ பைரவர் இருப்பின் அந்த வடிவத்தை ஏகபாத பைரவர் என அழைக்கின்றனர். சிவபெருமானின் ஒற்றைக்கால், பிரபஞ்சத்தை தாங்கி நிற்கும் தூணாக கருதப்படுகிறது.வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் இருக்க, இடது கை வரத கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.பின்கைகளில் மானும், ஆயுதமும் ஏந்தி நிற்கிறார்.

ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையும் இடமாகவும் ஏகபாத மூர்த்தி இருக்கிறார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஏகநாதரை வழிபடலாம்.

“ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி

தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.” என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம்.

ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்), குரு

ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி! அகண்ட ஜோதியாய் புலன்களுக்கு எட்டாதவராய் அனைத்து உயிர்களும் ஒடுங்கக்கூடிய இடமாக இருப்பவர். கருத்துக்களுக்கு எட்டாதவர். மாறுதல் இல்லாதவர். கருணையின் பிறப்பிடமாய் திகழ்பவர். எல்லா ஆன்மாக்களும் ஆணவ மலத்தில் அழுந்திருப்பதனால் ஆன்மாவின் அற்புதத்தை அறியும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவற்றைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும், மறைத்தும், அருள் புரிந்தும் செய்து உலக உயிர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்து இயங்க வைக்கின்றார்.

சதா உறங்குபவனுக்கு உலகத்தைப் பற்றி ஏதும் தெரியாது. உலகத்து மக்களின் மீது வைத்த கருணையால் ஆன்மாக்களை விழிப்படையச் செய்கின்றார்.

பேரூழிக் காலத்தில் அனைத்து உயிரினங்களும் பெருமானிடம் ஒடுங்க அவர் மட்டும் அழியாமல் இருப்பார். தனித்து நிற்கக் கூடிய வல்லமை பெற்றவர். பின் வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் மழு, முன்வலக்கையில் காக்கும் குறிப்பு, இடக்கை அருளும் குறிப்பும் கொண்டு புலித்தோல் உடுத்தி, சடையில் சந்திரன், கங்கை அணிந்து இருப்பார்.

“வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும்

கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும்

செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை

யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே”. –

என்கிறது இலிங்க புராணம்

சர்வசம்ஹாரம் நிகழும் மகாப் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் சரணடைந்து, தன் திருவடியில் இலயம் பெற வேண்டி, ஒற்றைக்கால் உடையவராகத் திருவுளம் கொண்டு சிவபெருமான் விளங்கும் கோலமே ஏகபாதமூர்த்தியாகும்.

இவர் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு விளங்குவார். இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் விளங்கும் ஜடாமகுடமும் திகழ இவர் விளங்குவார்.

விசுவகர்ம சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன. ஏகபாதமூர்த்தியை ஏகாதசருத்திரருள் ஒருவராகக் கூறுவாரும் உளர்.

மனம், ஞான நிஷ்டையை விரும்ப அருள்வார். வேதங்கள் நான்கையும் புரிந்துகொள்ளும் அறிவினை அளிப்பார். அனைத்து சம்ஹார காலத்திலும் அனைவரும் லயமடையவும் இறக்கவும், எல்லா உலகங்களும் அவர் திருவடியில் கீழ் நிற்பதாலும், ஏகபாத மூர்த்தி ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

ஏகபாதமூர்த்தி சிலைகள் தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன

ஏகநாதர் மூர்த்தியின் சிற்பம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள நந்தி சிற்பத்தை சுற்றி உள்ள தூண்களில் ‌தூண் சிற்பமாக உள்ளது.

திருவொற்றியூரில் வடிவாம்பாள் சந்நிதி பிரகாரத்திலும், திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் இருபுறம் விளங்க நடுவில் சிவபிரான் விளங்கும் ஏகபாத திருமூர்த்தி கோலம் உள்ளது. தப்புளாம் புலியூரிலும் (திருவாரூர்) உள்ளது.

உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது.

இங்குள்ள ஏகபாதமூர்த்தி சிற்பத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிவன், முன்னிருகைகளில் அபய, வரத முத்திரைகளுடனும், பின்னிருகைகளில் மான், மழு ஏந்தியபடி காட்சி தருகிறார். பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய ஹஸ்த முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

உத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தர

கோசமங்கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம், சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

ஏகபாதமூர்த்தியை வழிபடுவோர் அனைத்துப் பேறுகளும் நலன்களும் பெறுவோம்.

ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து பொறுப்பாளர்கள் கைது: இந்து முன்னணி கண்டனம்!

devanathan yadav poster - 2026
#image_title

ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்த மைலாப்பூர் காவல் சரக அதிகாரிகளை கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

சில தினங்கள் முன்பு டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களின் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் துணை கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இது குறித்து கண்டனத்தை தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் நேற்று யாதவ் மகாசபை இதுகுறித்து மயிலை காபாலீஸ்வரரிடம் வேண்டுதல் மனு அளிப்பதாக அறிவித்து இருந்தனர். அதற்கு இந்து முன்னணி சார்பில் ஆதரவு தெரிவித்து இருந்தோம்.

காலம் காலமாக மக்கள் தங்கள் குறைகளை, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இறைவனிடம் மனுவாக, வேண்டுதல் சீட்டாக சமர்ப்பிப்பது நடைமுறை. அதன் அடிப்படையில் யாதவ மகாசபையினர் தங்களுக்கு ஆட்சியாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை இறைவனிடம் முறையிட சென்ற போது காவல்துறை தடுத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இறைவனை வழிபடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. இறைவனை வழிபட தடுப்பதுதான் சட்டப்படி குற்றம்.

இதற்கிடையில் இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் திரு. ஏ.டி. இளங்கோவன் மற்றும் சென்னை பொறுப்பாளர்கள் திரு.செந்தில், திரு. முருகன் ஆகியோர் கபாலீஸ்வரர் கோவிலில் வழிபட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது மைலாப்பூர் சரக போலீஸ் அதிகாரி அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளைப் பேசி வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளார். ஆலயத்திற்குள் அத்துமீறி போலீஸ் நுழைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதை கண்டிக்கிறோம்.

இதேபோல முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டு தலங்களில் காவல் துறையினர் நடந்து கொள்வார்களா? அதற்கு திராணி உள்ளதா?

அந்த காவல்துறை அதிகாரி தனது ஊரில் காலமான தனது அம்மாவின் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களைக் கொண்டு திறந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் அரசியல் சார்பு உடையவராகவே தொடர்ந்து செயல்படுவதாகவும் பொது மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய அதிகாரிகளால் காவல்துறை செயல்பாட்டிற்கு களங்கம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்களில் பல பெண்களும் இருந்துள்ளனர்.

எனவே கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு.கேசவவிநாயகம் அவர்களை அனுமதிக்கவில்லை. இதுவும் அதிகார துஷ்பிரயோகம்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அவர்களை முதல்வர் உள்பட அமைச்சர்கள் அவர்தம் குடும்பத்தார் மருத்துவமனையில் சந்தித்தனர் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பரோலில் வந்த குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்திக்க அனுமதிக்கும் காவல்துறை, தேசபக்தர்களை,ஆன்மிகவாதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது சரியா?

எனவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

திண்டுக்கல் நத்தம் கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

natham temple somavaram - 2026
#image_title

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி அருள்மிகு
கைலாசநாதர் செண்பகவல்லி கோவிலில் , கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டின் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் ,இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, காலை கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. 1008 சங்குகளுக்கு முன் உலக நன்மை வேண்டி யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவாப்புடையார், பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக பிரளயநாத சாமி, திருவேடகம் ஏடகநாதர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேகம் நடைபெற்றது.


நத்தம் கோவில்பட்டியில் கும்பாபிஷேக விழாவில் தீர்த்த அழைப்பு

நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி நடந்த தீர்த்த அழைப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நத்தம் கோவில்பட்டி யில் உள்ள பகவதி அம்மன், அய்யனார்சுவாமி, சந் தன கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி மேளதாளம் முழங்க தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. முன்னதாக நத்தம் கோவில்பட்டி பொதுமக்கள் கரந்தமலை சென்று புனித நீராடி பின் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தை மேளதாளம் முழங்க யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக சந்தனகருப்பசாமி கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து அங்கிருந்து நத்தம் மாரியம்மன், கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில், பிடாரி அம்மன், கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகவதி அம்மன் கோவில் முன் அமைக்கப் பட்ட யாகசாலைக்கு எடுத்து தரப்பட்டது. நவ.24 காலை 8:00 மணிக்கு மேல் 3 கோயில்களிலும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.