Home Blog Page 270

‘சங்கர நேத்ராலயா’ டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவு!

sankara nethralaya badrinath - 2026
#image_title

லட்சக் கணக்கானோருக்கு கண் பார்வை கிடைக்க அரும்பாடுபட்ட ‘சங்கர நேத்ராலயா’ அமைப்பின் நிறுவனர் டாக்டர். எஸ்.எஸ். பத்ரிநாத் தமது 83வது வயதில் செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.

45 வருடங்கள் முன்பு சங்கர நேத்ராலயாவைத் தொடங்கியதன் மூலம், லட்சக்கணக்கான மக்கள் பார்வை மீளப் பெற்று, பயனடைந்து வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநில மக்கள் சங்கர நேத்ராலயாவினால் அதிகம் பயனடைந்துள்ளனர்.

தனது திறமைகள் அனைத்தையும் சமுதாய நலனுக்காகவே அர்ப்பணம் செய்தவர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத். பெரும் தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை முதலில் சென்னையில் நிறுவியவர் டாக்டர் பத்ரிநாத். இவர் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978ல் இந்த அமைப்பை நிறுவினார். ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் போது, ​​கண் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டு, அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் 1962ல் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் செய்தார். பின்னர், அவர் கண் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1978ம் ஆண்டில், காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடனும் வழிகாட்டலிலும், டாக்டர் பத்ரிநாத் மற்றும் சமூக சேவகர்கள் குழுவினர் சென்னையில் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். காஞ்சி சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் வடகிழக்கு மாநிலங்களிலும் சங்கர நேத்ராலயாவின் சேவை நீண்டது.

ஆர்.எஸ்.எஸ்., பேரணி தொடர்பில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

supreme court of india - 2026

திங்கட்கிழமை (20.11.2023) உச்ச நீதிமன்றம், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மாநிலத்தில், எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடாமல் பேரணி ஊர்வலங்களை நடத்த அனுமதிப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்த முன்மொழிவை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்தும் ஆட்சேபனைகள்/பரிந்துரைகளை அழைத்த பின்னரே உயர் நீதிமன்றம் அத்தகைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது எதிர்காலத்தில் தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், நவம்பர் 19 அல்லது 26 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, ஆர்எஸ்எஸ் அமைப்பு முன்மொழியப்பட்ட வழித்தடங்களை மூன்று நாட்களுக்குள் மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதைகள் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இன்று, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கபில் சிபல், நவம்பர் 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) மாநிலத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு, காவல்துறை அதிகாரிகளுக்குப் பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு சமீபத்திய உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் அடங்கிய ஒருநபர் பெஞ்ச் அக்டோபர் 16-ம் தேதி ஒரு உத்தரவையும், அக்டோபர் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி இளங்கோவன் அடங்கிய ஒரு நபர் பெஞ்ச் ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றத் தவறியதாக, நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்தது. மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, அந்த அமைப்யால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்று, மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், பிரதிவாதிக்கு (ஆர்எஸ்எஸ்) நிவாரணம் கிடைத்துள்ளதால், அவமதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் இதை எதிர்மனுதாரரின் வழக்கறிஞர். சீனியர் அட்வகேட் குரு கிருஷ்ண குமார், கடுமையாக எதிர்த்தார்.

இதை அடுத்து , நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடிக்க மறுத்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், நீதிமன்றத்தின் முன் முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

“ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவது, உத்தரவுகளை நிறைவேற்றுவது.. ஒவ்வொரு முறையும்.. ஏன் இப்படி இருக்க வேண்டும்? இரு தரப்பும் தங்கள் நேரத்தையும் நீதிமன்ற நேரத்தையும் கூட தேவையில்லாமல் வீணடிக்கலாம். நிலுவையில் உள்ள வேறு சில வழக்குகளில்.. எதிர்கால நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தக்கூடிய உங்கள் ஏற்பு (RSS)க்கு உட்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் (மாநிலம்) கொண்டு வந்தால், எதிர்காலத்தில் நீங்கள் அவமதிப்புக்கு ஆளாக மாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் எதிரானவர் அல்ல என்று, நீதிபதி சூர்ய காந்த், பிரதிவாதியின் வழக்கறிஞரிடம் கூறினார்.

“மனுதாரர் (தமிழ்நாடு மாநிலம்) உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக, உடனடியாக சட்டப்பூர்வ தீர்வைப் பெற்றதாகவும், அதன்பிறகு நவம்பர் 6 ஆம் தேதி இந்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உண்மையாகவும் அக்கறையுடனும் கடைப்பிடித்ததாகவும் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது என்று, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

மூத்த வழக்கறினர் கபில் சிபல் மற்றும் தமிழ்நாடு அரசு வழக்குரைனர் அமித் ஆனந்த் திவாரி, உயர் நீதிமன்றத்திற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தில் முன்மொழிவை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. “உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளூர் நிலைமைகளை பரிசீலிக்க சிறப்பாக தயாராக உள்ளனர்” என்று நீதிபதி தீபாங்கர் தத்தா கூறினார்.

இந்தியா வந்த கப்பலைக் கடத்திய ஏமன் பயங்கரவாதக் குழு!

ship galaxy leader in red sea - 2026
#image_title

துருக்கி துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்த சரக்குக் கப்பல் ஒன்றை செங்கடல் பகுதியில் வைத்து நேற்று ஏமனைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு கடத்தி இருக்கிறது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) இதனை செய்தியாக நேற்று வெளியிட்டது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர் கப்பல் தொகுதி ஒன்று அந்த பிராந்தியத்தில் உலவிக் கொண்டு இருக்கும் வேளையிலேயே இது நடந்திருப்பதால் பதற்றம் தொற்றிக் கொண்டது.

சொல்லி வைத்தார் போல் மேற்கு கரை காசா பகுதியில் நடைபெறும் தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது என தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதனை செய்தது ஏமனை தலையிடமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத குழுவான அன்சார் ஹல்லா. அவர்களே இதனை நேற்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறார்கள். அவர்களின் வாதம் இஃது இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்….. ஆதலால் கடத்துவிட்டோம் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட அவர்கள் சொன்னது ஊர்ஜிதம் ஆகியிருக்கும் நிலையில்…, இக்கப்பலை லீஸ் அடிப்படையில் இயக்குவது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்றாகும். அதில் உள்ள சரக்கு இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்தது…, மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் எந்த தேசத்தவர் என்பதெல்லாம் இன்னமும் சரியாக தெரியவில்லை என்கிறார்கள்.ஆனால் கப்பல் அவ்வளவு தான் என்கிறார்கள்.

நேற்றைய தினம் இஸ்ரேல் இது குறித்து வெளி உலகிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தும் இதன் பொருட்டே என்கிறார்கள்.ஏற்கனவே கத்தார் அரசாங்கம் இஸ்ரேலுக்கு வேவு பார்த்ததாக சொல்லி 8 இந்திய பொறியாளர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து நிறைவேற்ற துடித்து கொண்டிருக்கிறது.

நம் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய் சங்கர் தீபாவளி பண்டிகைக்கும் ஊர் திரும்பாமல் அரபு உலக நாடுகளிலேயே தங்கி இவர்களை விடுவிக்க சட்ட போராட்டம் முதற் கொண்டு ராஜாங்க ரீதியான அழுத்தங்கள் வரை பிரயோகித்து கொண்டு இருக்கிறார். இதில் தற்போது ஹௌதி இயக்கத்தினரும் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கு கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு விட்டார்களாம்.ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு சலித்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு ஹமாஸ் இயக்கத்தினர் ஆஸ்பத்திரியை கேடயமாக பயன் படுத்தி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள கட்டிடங்கள் கட்டுமானங்களை காட்டிலும் கீழே தரை தளத்தில் மிகப் பெரிய பெரிய சுரங்கங்களை உருவாக்கி வலைப்பின்னல் போல் அமைத்து வைத்திருக்கிறார்கள்.

மேற்கு கரை காசா பகுதியில் தற்போது வரை இஸ்ரேலிய துருப்புக்கள் கதக்களி ஆடிக் கொண்டு இருக்க….. அங்கு பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹில்புல்லா முதற்கொண்டு ஹமாஸ் இயக்கத்தினர் வரை களமாடிக்கொண்டு இருக்கிறார்கள் …. அல்லது அப்படி சொல்கிறார்கள். கடந்த காலங்களில் இஸ்ரேலிய மொசாட் அமைப்பினரால் கொல்லப் பட்டதாக அறிவிக்க பட்ட பலரும் தற்போதைய நிகழ்வில் உயிர்த்தெழுந்து வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது இத்தனை காலமும்…. அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை காலமும் நிலவறை பதுங்கு குழியிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால் அந்த பதுங்கு குழிகள் எவ்வளவு தூரம் தோண்டப்பட்டு எவ்வளவு தூரம் சௌகரியங்களை ஏற்படுத்தி வைத்து இருக்கிறீர்கள்

இது அத்தனையும் நெதன்யாஹூ பதவியில் இல்லாத ஓர் ஆண்டு காலத்தில் தான் இது நடந்திருக்க வேண்டும்….. இஃது ஒரு வகையில் மொசாட்டின் தோல்வி என சொல்பவர்களும் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு தற்போது இஸ்ரேலிய துருப்புக்கள் காசா பகுதியின் கடவுளான யாசர் அராபத் சிலையை புல்டோசர் வைத்து சேதப் படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்….. சமூக வலைத்தளங்களில் இது பற்றிய வீடியோ காட்சிகளும் பகிரப்பட்டு வருகிறது.

இதனை எப்படி கையாள்வது என தெரியாமல் மேற்கு உலக நாடுகள் திண்டாடி வருகிறது.

இந்த ஜோரில் அவர்கள் உக்ரைனை மறந்து விட்டார்கள்.கேட்காமலேயே கொட்டிக் கொடுத்த பலரும் இன்று…. ஜெலன்ஸ்க்கி கடனாவது கொடுங்கள் என கெஞ்சி கேட்டு கொண்டும் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து கொண்டு வருகிறார்கள்.

ஜோபைடன் நிர்வாகத்திற்கு நெதன்யாஹூ ஆகமாட்டார். ஆனாலும் பல்லைக் கடித்து கொண்டு இருக்கிறார் தற்போதைய நிலையில். இஸ்ரேல் வசம் அணு ஆயுத இருப்பதாக சொல்லி அதனை விசாரிக்க சர்வதேச சமூகத்தவரை உள்ளே கொண்டு வர முடியுமா என திரைமறைவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறது பைடன் நிர்வாகம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனம் என ஒன்று இனி உலக வரைபடத்தில் கிடையாது என இஸ்ரேலிய துருப்புக்கள் உறுமிக்கொண்டு இருக்கிறார்கள்.

அரபு உலக நீட்சி மேற்கு கரையில் இருக்கிறது….. யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாத பாரம்பரியம் அது இஸ்லாமிய வலது சாரி இயக்கங்கள் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். மாட்டிக் கொண்டு முழிப்பதென்னவோ அப்பாவி மக்கள் தான். மஹா சிக்கலான சமாச்சாரம் இது….. ஜோபைடன் தனது தணியாத அதிகார தாகத்தால்……. ஆர்வத்தால் இதனை தொட்டிழுத்து இருக்கிறார் என்கிறார்கள் உலக அரசியல் விமர்சகர்கள்.

எல்லாம் கிடக்க……கிழவனை… கதையாக இந்திய ஆளுமைகள் தான் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு என்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது நம்மவர்களை இதில் இழுத்து விட துடித்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இஸ்ரேலை ஆதரிக்காத நிலையில்……. கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்ரேலை ஆதரிக்கிறது, அதாவது 2014 க்கு பிறகு… இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது என இங்கு உள்ள சில பைத்தியங்கள் பகடி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேற்கு கரை காசா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஆரம்ப நாள் முதலே இந்தியா இஸ்ரேல் பக்கம் நிற்பதாக வெளிப்படையாக அறிவித்தற்கு பின்னால் வலுவான காரணங்கள்….. அரசியல் தந்திரோபாய நகர்வுகள் இருக்கின்றன.

அரபுலகம் வேறு, இஸ்லாமிய சமூகம் வேறு… அதில் பழமைவாத இஸ்லாமிய பயங்கரவாதம் வேறு…. அதுபோலவே யூதர்கள் வேறு… கிருத்துவ மிஷனரிகள் வேறு என தெள்ளத்தெளிவாக காய் நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள். இது குறித்தெல்லாம் நம்மில் பலருக்கும் விரிவான பார்வை இல்லை. ஊடகங்களிலும் இது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.தோல்பாவைகளாக சிலரது கைப்பாவையாக பல்வேறு விஷயங்கள் இங்கு நடக்கிறது என்பது தான் இன்றுள்ள நிதர்சனமான உண்மை.நாம் தான் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்…. அப்படி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாமும் பார்க்க பழகலாம்.

– ஜெய் ஹிந்த் ‘ஸ்ரீராம்’

செங்கோட்டையில் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., பேரணி, பொதுக்கூட்டம்!

sengottai rss rout march - 2026
#image_title

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் நவ.19 மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.

செங்கோட்டை வடக்குரதவீதி அப்பாமாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் வைத்து தென்காசி மாவட்ட ராஷ்ட்டிரீய ஸ்யம் சேவக சங்கம் சார்பில் 98 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தப் பேரணியில் முழு சீருடையுடன் 230 தொண்டர்கள் பங்கேற்றார்கள். பேரணியானது வடக்குரதவீதி, கீழ ரதவீதி, கேசி ரோடு, வண்டிமலச்சியம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது. இந்தப் பேரணி அமைதியாக நடைபெற்றது. பொது நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமாகக் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமத்தின் ஸ்வாமி அகிலானந்தா ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கன்யாகுமரி பகுதி செயலர் ஜோதீந்திரன்  உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில், “நம் நாட்டின் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கல்வி, செல்வ வளம் இருந்தது. அதை வெளிநாட்டினர் வந்து கொள்ளை அடித்தார்கள். இது சுதந்திரமடைந்த பின்னும் தொடர்ந்தது. ஆனால், கடந்த பத்து வருடத்தில் ஒரு ஸ்வயம்சேவகர் பொறுப்பில் அமர்ந்த பின், எத்தகைய மாற்றங்களை நாம் காண்கிறோம். காரணம், ஆள்பவர்களின் அர்ப்பணிப்பு. வேலையில் உறுதி. அதிகாரத்தின் மூலம்,  உலகின் குருவாய் பாரதம் மாறுவதை நாம் கண் முன்னே பார்க்கிறோம்.

ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்காவையும் இணைத்து, எளியோரையும் அரவணைத்தோம். அதுதான் நம் சனாதன தர்மம் கற்றுக் கொடுத்தது. சனாதனம் என்றால் என்ன? அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டிதான் சனாதன தர்மம். வசுதைவ குடும்பகம் என்பதை நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். சதுர் வர்ணம் என்று சொல்லி வைத்தார்கள் என்றால், அது தொழிலின் அடிப்படையில்.

நம் நாட்டில் செல்வ வளம் இருந்ததால் தான் கஜினி முகமது படையெடுத்து ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துக் கொண்டு போனான். கல்விச் செல்வம் தழைத்தோங்கி இருந்ததால் தான், இந்த நாட்டின் கல்வி முறையை ஆங்கிலேயன் வந்து அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்றினான்.

இப்போது சிலர் சொல்வது போல் ஆங்கிலேயர் வந்துதான் கல்வி கொடுத்தான் என்பது எவ்வளவு கொடுமை. நாம் நம்மை உணர வேண்டும். நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர வேண்டும். பாரதம் உலகின் குருவாய் ஆகும்!” என்று பேசினார்.

மாவட்ட பொறுப்பாளர் இரா.முருகேசன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தொண்டா்கள், இந்து முன்னனி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனா்.

உலக அரசியல் சதுரங்கத்தில்… 2024ன் அதி முக்கியத்துவம்! என்ன செய்யப் போகிறோம்?

modi in g20 - 2026
#image_title

2024 ஆம் ஆண்டு உலக அளவிலான அரசியல் சதுரங்கத்தில் தேர்தல் ஜுரம் பிடிக்க ஆரம்பித்தது இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி, ரஷ்யா, சீனா – தைவான், நம் இந்திய தேசத்திற்கு என இந்த பட்டியலில் உள்ள தேசங்களின் தேர்தல் முடிவுகள் நாளைய உலக அரசியல் ஆடுகளத்தையே மாற்றும் வல்லமை கொண்டது.

தைவான் தேர்தலை மையமாக வைத்தே, அங்கு பெய்ஜிங் இரவு பகலாக உழைத்து கொண்டு இருக்கிறது. ஜிங் பிங்கே அமெரிக்கா வரை சென்று பைடனோடு பேரம் பேசி விட்டு வந்திருக்கிறார் கடந்த வாரம். சுற்றுப் பயண தீர்மானம் என்னவோ இரண்டு நாட்கள் தான். ஆனால் ஜோபைடனே இரண்டு நாட்கள் முன்னதாகவே அழைத்து விருந்து உபசாரம் செய்தார். அங்கே என்ன நடந்தது, என்ன பெயர்ந்தது என்ற பேரங்கள் எல்லாம் பின்னர் மெதுமெதுவாய் வெளியே கசியும்.

மத்தியக் கிழக்கு அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அமெரிக்கா, அதன் பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து கொண்டு உள்ள சூழ்நிலையில்தான், சீன அதிபரின் இந்த பயணம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. காரணம் இந்தியாவின் செயல் திறன் அப்படி. அமெரிக்கா, சீனாவின் மத்தியக் கிழக்கு பொருளாதார நகர்வுகளை பார்த்து ஓரம் போக, அந்த இடத்தில் சீன ஆக்ரமிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளில் இந்தியா ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. இது மிகப் பெரிய ஆடு புலி ஆட்டம். பெய்ஜிங்கை காட்டிலும் புதுதில்லி வேகமாக இருக்கிறது என்கிறார்கள்

விடாமல் ஆட்டம் காட்டி வரும் சபஹார் துறைமுக பணிகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் ஆர்மீனியாவை இந்தியா உள்ளே கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால், துருக்கி அதிபர் ஹெர்துவான் கதி கலங்கி கருவிக்கொண்டே இருக்கிறார். ஏனெனில் இவருக்கு இது ஆகாத தேசம். ஆர்மீனியா, அஜர்பைஜான் விஷயத்தில் இவர் அஜர்பைஜான் பக்கம் நின்று ஆர்மீனியர்களை துரத்தி அடித்தார். இன்றளவும் அஜர்பைஜான் பிடித்து எடுத்த பகுதிகள் மீட்டெடுக்கப் படவில்லை. அது, ரஷ்யா கையைப் பிசைந்து நின்ற தருணம். இந்த விஷயத்தில் இந்தியாவோ, செமத்தியாக திருப்பி அடித்து இருக்கிறது.

துருக்கியின் வாடகை ராணுவத்தினரை, ஹமாஸ் போராளிக் குழுக்களை, ஹிஸ்புல்லாக்களை மறைமுகமாக ஆதரித்து வரும் சீனாவிற்கு இது பேரதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இவர்களின் திரைமறைவு ஆதரவைக் கொண்டே மத்திய கிழக்கு நாடுகளில் தனது பொருளாதார திட்டமிடலை வைத்திருக்கிறது பெய்ஜிங். இதனை தந்திரமாக உடைத்து இருக்கிறது இந்தியா.

உதாரணமாக ஆர்மீனியா, ரஷ்யா ஆதரவு பெற்ற நாடு. உலக அளவில் இந்தியாவிடம் இருந்து ராணுவ சாதனங்களைக் கொள்முதல் செய்யும் நாடு. இதன் எதிர் முகாமில் உள்ளது அஜர்பைஜான். இதனை துருக்கி தூக்கிப் பிடிக்கிறது. இதற்கு அமெரிக்க ஆதரவு உண்டு. இந்த இடத்தில் சீனா மறைமுகமாக ஆதரிக்கும் ஹமாஸ், முழுக்க முழுக்க அமெரிக்காவை எதிர்க்கவே கட்டமைக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம் என்பது உலக அளவில் பேசப்படும் ஒன்று. இவர்களுக்கு உண்டான நிதியின் பெரும் பங்கு, அரபு உலக கச்சா எண்ணெய் வர்த்தக விற்பனை மூலமே கனகச்சிதமாக செல்கிறது. சமீபத்திய நாட்களில் இவர்கள் இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கிறார்கள்!

சரியாகச் சொல்வதென்றால், இப்படி அமெரிக்கா இஸ்ரேல் என ஒட்டுமொத்தமாகக் குடைச்சல் கொடுக்கும் சீனா, துருக்கி மறைமுக ஆதரவு பெற்ற இவர்களை, நம் இந்திய தரப்பு ஒரு மார்க்கமாக செக் வைத்து இருக்கிறது. இவர்கள் அனைவரும் ரஷ்ய ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது இதில் உள்ள நுட்பமான, சாதுர்யமான விஷயம். இதில் சொல்லும்படியான விஷயமே, அரபு உலகம் இதனை வரவேற்கிறது என்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க, ரஷ்யாவில் நடைபெற உள்ள தேர்தலில் விளாடிமிர் புடினை எதிர்த்து ஒருவர் களம் இறங்க இருக்கிறார். அவரது பெயர் இகோர் கிர்க்ஙின். ரஷ்ய முன்னாள் FSB ராணுவ அதிகாரி. டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை உள்ளடக்கிய டொன்பாஸின் பகுதியில பணியாற்றியவர். தற்போதைய உக்ரைன்- ரஷ்யா மோதலில் நேரடியாகக் களத்தில் இருந்து செயல்பட்டவர். ரஷ்ய வாடகை ராணுவத்தினரான வாக்னர் க்ரூப் மற்றும் சேச்சன் ஆர்மி படையினருக்கு நன்கு பரிச்சயமானவர்.1970 களில் பிறந்த இவர் புடினை விட தாம் நன்கு செயல்பட முடியும் என்கிறார். அதனாலேயே அவரை எதிர்த்து களமாட இருப்பதாகவும் சொல்கிறார்.

இது கிட்டத்தட்ட ஒரு முன்னாள் KGB உளவாளியை ஒரு முன்னாள் FSB ராணுவ அதிகாரி எதிர்கொள்ள இருக்கிறார். இதில் கவனிக்கதக்க விஷயம், இவருக்கு சீன விவகாரம் வேப்பங்காய் என்பதுதான்! அதேநேரம் உக்ரைன் விஷயத்தில் இந்திய நிலைப்பாட்டை சிலாகித்தவர். இவர் மீது மேற்கு ஐரோப்பிய சாயம் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது. எனினும் ஒருவகையில் சரியாக காய் நகர்த்தினால், இவரால் விளாடிமிர் புடினை தீவிரமாக எதிர்க்க முடியும் என்கிறார்கள். அதாவது புடினை சற்றே அசைத்து பார்க்கலாம் என்கிறார்கள். தற்போதைக்கு அவ்வளவு தான் முடியும் இந்த விஷயத்தில்!

அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கிறது. சரியாக ஓர் ஆண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிபர் தேர்தலில் பங்கு பெற இருக்கிறார்கள். ஏற்கெனவே தற்போது ஆட்சியில் உள்ள, அதாவது ஜோபைடன் சார்ந்த டெமாக்ரெடிக் கட்சியின் கமலா ஹாரிஸ் துணை அதிபர் என்கிற முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்மணியாக அறியப் படும் வேளையில், தற்போது நேரடியாக அதிபர் தேர்தலில் பங்கு பெற ஏற்பாடுகள் நடக்கிறது. இவர்களில் இளம் வயதினரான விவேக் ராமசாமி மிகவும் கவனிக்க தக்க நபராக அங்கு வலம் வருகிறார். இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்ந்த ரிபப்ளிக் (குடியரசு) கட்சியில் நிக்கி ஹாலி என்கிற சௌத் கரோலினா முன்னாள் மாகாண கவர்னர் களம் இறங்கி இருக்கிறார். அதாவது டிரம்பை போட்டி இடாமல் செய்ய அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர் போட்டியிடாமல் போனால் முன்னாள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ அதிபராக களம் காண, இவர் துணை அதிபர் தேர்தலில் பங்கு கொள்ளக் கூடும் என்கிறார்கள்.

தற்போதைக்கு நம் முன் உள்ள இவற்றைக் கொண்டு ஒரு அனுமானத்துக்கு வரலாமே தவிர, கள நிலவரம் சூடு பிடிக்கும் நேரத்தில்தான் இது குறித்து தீவிரமாக ஆராய முடியும்! அவரவர் தங்கள் பங்கிற்கு உழைத்துக் கொண்டு இருக்க, நம் ஆளும் தரப்போ, இப்போது அயராது உழைத்து கொண்டுக் இருக்கிறார்கள் நாட்டின் பொருளாதார நலன்களுக்காக!

கட்டுரை: – ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

WC 2023: கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி

இறுதிப்போட்டி, இந்தியா vs ஆஸ்திரேலியா, அகமதாபாத் – 19.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இந்திய அணியை (240, கே.எல். ராகுல் 66, விராட் கோலி 54, ரோஹித் ஷர்மா 47, மிட்சல் ஸ்டார்க் 3/55, பேட் கம்மின்ஸ் 2/34, ஹேசல்வுட் 2/60, ட்ராவிஸ் ஹெட் 2/21) ஆஸ்திரேலிய அணி (43 ஓவர்களில் 241/4, ட்ராவிஸ் ஹெட் 137, லபுசேன் 58, பும்ரா 2/43, ஷமி 1/47, சிராஜ் 1/45) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து பலகீனங்களும் வெளிவந்தன. வழக்கம் போல ரோஹித் ஷர்மா 47 ரன் கள் எடுத்து 9.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்னரே ஐந்தாவது ஓவரில் ஷுப்மன் கில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்திருந்தார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்பிற்கு 80 ரன் எடுத்திருந்தது. 11ஆவது ஓவரில் இருந்து 40ஆவது ஓவர் வரை ஆஸ்திரேலிய அணி இந்திய பேட்டர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 10ஆவது ஓவருக்குப்பின் இந்திய அணி ஒரு ஃபோர் அடிக்க 97 பந்துகள் ஆனது. ரோஹித் ஷர்மா 4 ஃபோர், 3 சிக்சர் அடித்தார். பிற பேட்டர்கள் அடித்த ஃபோர்கள் வருமாறு கோலி 4, ஐயர் 1, ராகுல் 107 பந்துகளில் 1 ஃபோர், சூர்யகுமார் 1, ஷமி 1, சிராஜ் 1 ஃபோர். இதுவரை பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஜதேஜா மூவரும் உலகக் கோப்பையை வெல்லும் இனிய வாய்ப்பை இழந்தனர்.

          ஆஸ்திரேலிய அணி ஆடவந்தபோது இந்திய பந்து வீச்சாளர்களின் பலகீனம் வெளிப்பட்டது. விக்கட் எடுக்க முடியவில்லை என்றால் ஷமி அணிக்கு எவ்வளவு மோசாமான் பவுலராக இருப்பார் என்பது இன்று தெரிந்தது. ரன்ரேட் 4.9ஆக இருக்கும்போது அவர் 6.71 ரன்ரேட்டிற்கு பந்து வீசினார். அடுத்து முகம்மது சிராஜும் ரன்ரேட் 6.41-ற்கு பந்து வீசினார். குல்தீப் யாதவ், ஜதேஜா இருவரின் சுழல் பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அருமையாகச் சமாளித்தனர்.

மொத்தத்தில் ‘கப்’ நமக்கு இல்ல குமாரு.

சட்டப் பேரவையா? திமுக., பொதுக்கூட்ட மேடையா?

kadeswara subramaniam hindu munnani - 2026

சட்டப்பேரவையா? திமுக பொதுக்கூட்ட மேடையா? அரசாங்கம் நடத்தாமல் அரசியல் நடத்தும் கேவலத்திலும் கேவலத்தை அரங்கேற்றிய திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நேற்றைய சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைத்துள்ளது. கண்ணியக் குறைவான பேச்சுக்களால் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அமைமைச்சரவை நிறைவேற்றிய பத்து தீர்மானங்கள் ஏற்புடையது இல்லை என விளக்கம் அளித்து தமிழக ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு முன்பே கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே தீர்மானங்களை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முதல் ஆளும்கட்சி ஆளும்கட்சி கூட்டணி உறுப்பினர்களும் கண்ணியக் குறைவாக ஆளுநரை வசைபாடியுள்ளனர்.
ஆனால் ஒருவர்கூட ஆளுநர் குறிப்பிட்டுள்ள விளக்கம் சம்பந்தமாக பேசியதாக தெரியவில்லை. கல்வி பொது பட்டியலில் மத்திய அரசின் கீழ் வருகிறது. எனவே பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரை நியமிக்க மாநில அரசிற்கு இதில் அதிகாரமில்லை என்பது தெளிவாக தெரிந்தும் திமுகவின் வரட்டு பிடிவாதத்தால் கண்மூடித்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளும் தரப்பில் கூறும் காரணம் சிறுபிள்ளை தனமானது.

இதே போன்ற நாடகத்தை தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்து நிறைவேற்றிய தீர்மானத்தில் செய்தது. தற்போது மாநில அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது. ஆனால் ஊடகங்கள் இது குறித்து அறிவார்ந்த விவாதம் நடத்தவில்லை. நடத்தியிருந்தால் ஆளும்கட்சி தனது பிடிவாதத்தால் மண்ணை கவ்விய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

அதேசமயம் தமிழக ஆளுநரை, மத்திய அரசை தரம்தாழ்ந்து சட்டசபையில் தெருமுனையில் நின்று வாய்க்கு வந்தபடி பேசும் நாலாந்தர அரசியல்வாதிகள் போல முதல்வர் உள்பட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசியது கண்டனத்திற்கு உரியது.

எதிர்க்கட்சிகள் பேசும்போது சபாநாயகர் தேவையில்லாமல் குறுக்கிட்டு திமுகவின் ஊதுகுழலாக கருத்தை திணிக்கிறார்.

சட்டசபையில் ஆளும்கட்சி திமுக அரசாங்கம் நடத்தவில்லை, அரசியல் நடத்தி சபையின் கண்ணியத்தை சீர்குலைத்து வருகிறது.

தமிழக முதல்வரும் சபாநாயகரும் இதுபோல் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே தமிழக சட்டபேரவை மாண்பை சீர்குலைக்காமல் எல்லா உறுப்பினர்களின் கருத்திற்கும் மதிப்பளித்து சபை நடத்தவும், கண்ணியமுடன் கருத்துக்களை எடுத்து வைக்கவும் சபை முன்னவர் என்ற முறையில் தமிழக முதல்வர் கவனம் கொடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

செங்கோட்டையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. 

செங்கோட்டை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத ஸ்வாமி திருக்கோயிலில் வருடந்தோறும் கந்த சஷ்டியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல், இந்த ஆண்டும் கந்த சஷ்டித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி முருகப்பெருமான் திரளான பக்தர்கள் உடன்வர ரதவீதிகளில் வலம் வந்தார்.

பெருமாள் சந்நிதித் தெரு முனையில் ரத வீதியில் பக்தர்கள் பெருமளவு திரண்டிருக்க, முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சி நடந்தேறியது.

பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் முருகப் பெருமானை தரிசித்து, அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

indian cricket team - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

          இன்று அகமதாபாத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறுகிறது. பாரதமே நமது அணி வெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. விளையாட்டில் வெற்றி தோல்விகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைய தினம் நன்றாக விளையாடுகின்ற அணி வெற்றியைப் பெறும். இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

          ஒன்பது லீக் போட்டிகள் ஒரு அரையிறுதி என பத்து ஆட்டங்களில் இந்திய அணி வாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்கள் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. குறிப்பாக இந்திய அணியுடனான சென்னை ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. அந்த அணி தோற்ற இரண்டாவது அணி தென் ஆப்பிரிக்க அணி. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணியை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.

          இந்திய அணியின் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவரை 44 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 2332 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 209; 8 சதங்கள்; 9 அரை சதங்கள். விராட் கோலி இதுவரை 46 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 2313 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 123; 8 சதங்கள்; 13 அரை சதங்கள். இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஜதேஜா என வரிசையாக ஏழு பேட்டர்களும் சிறப்பாக ஆடிவருகிறார்கள். குறிப்பாக முதல் பத்து ஓவர் பவர் ப்ளேயில் சராசரியாக 80 ரன் எடுக்கின்றனர். அதேபோல கடைசி 10 ஓவர் பவர்ப்ளேயில் சராசரியாக 90 ரன் எடுக்கின்றனர்.

          பந்துவீச்சில் ஜதேஜா இதுவரை 40 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 37 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 5.27.  முகம்மது ஷமி இதுவரை 23 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 38 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 6.04. பும்ரா இதுவரை 20 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 28 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 5.28.

          அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இதுவரை 30 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 941 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 201; 3 சதங்கள்; 2 அரை சதங்கள். வார்னர் இதுவரை 25 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 1215 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 128; 3 சதங்கள்; 9 அரை சதங்கள். ஸ்மித் இதுவரை 24 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 1306 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 149; 5 சதங்கள்; 6 அரை சதங்கள்.

          பந்து வீச்சில் ஆடம் ஜாம்பா 34 விக்கட்டுகள், ரன் ரேட் 5.67. ஸ்டார்க் 27 விக்கட்டுகள்; 6.02 ரன் ரேட். கம்மின்ஸ் 26 விக்கட்; ரன்ரேட் 5.24.

          எனவே புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் ரோஹித் ஷர்மாவின் தலமையில் விளையாடும் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடான, திருப் பரங்குன்றம், சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், மாதந்தோறும், திருவிழாக்கள் நடைபெறும்.

இவற்றில், முக்கிய திருவிழாவான, கார்த்திகை தீபத்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 26 ஆம் தேதி, கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, திருப் பரங்குன்றம், மலைமேல் உள்ள, மோட்ச மண்டபத் தூணில், ஐந்தரை அடி உயரம் உள்ள, செப்புக் கொப்பரையில், சிவாச்சாரியர்களால், கார்த்திகை தீபம் தயார் செய்யப்பட்டு, மாலை 6 மணி அளவில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இன்று காலை, உத்ஸவர் சந்நிதியில், சுப்பிரமணிய ஸ்வாமி, தெய்வானை அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 16 வகைத் திரவியங்களால், அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள, தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம், நடைபெற்றது.