Home Blog Page 281

பசும்பொன்னுக்கு ரெண்டு வருசமா வராத எடப்பாடி இப்ப வராறே! – சசிகலா சொன்ன பதில் என்ன தெரியுமா!?

sasikala in pasumpon - 2026
#image_title

இரண்டு ஆண்டுகளாக பசும்பொனுக்கு வராத இபிஎஸ் தற்போது தேர்தல் நாள் வருகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சசிகலா பதிலளித்தார்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா மதுரை விமான வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளாக பசும்பொனுக்கு வராத இபிஎஸ் தற்போது தேர்தல் நாள் வருகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை.
பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு:
தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் இருக்கிறார்கள் என்று தெரியும்.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்ற கேள்விக்கு:

எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவர் வாயில் அருகில் வரும் அளவிற்கு காவலர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரை முன்கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்து இருக்கலாம்.

இபிஎஸ் பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு:

மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது. நீங்களும் நானும் தனிமனிதராக எதுவும் சொல்ல முடியாது. அவர்களின் ஆசையை அவர்கள் சொல்வதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்த கேள்விக்கு:

வியூகம் உள்ளது. எங்க கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல தான் அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இலங்கை மீனவர்கள் கைது குறித்த கேள்விக்கு:

திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவை கொடுத்தார்கள். அது மீனவர்களுக்கு நல்ல விஷயமா. மீனவர்கள் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் தான் அன்றைக்கே அவர்கள் செய்திருக்க வேண்டும் அதனால் அவர்களிடம் இன்று மீனவர்களுக்கு உதவியை எதிர்பார்ப்பது தவறு என்று நான் நினைக்கிறேன்.

அம்மா திட்டங்களை நாங்கள் நிறைவேற்றவில்லை திமுக வகுத்த திட்டங்களை தான் நிறைவேற்றுகிறோம் என்று உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு:

மக்களுக்கு தெரியும் யார் ஆட்சியில் என்ன செய்தார்கள் மக்களுக்கு அது சென்று சேர்ந்ததா என்று மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் சொன்னதை எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு.

தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒன்றிணைப்பீர்களா, இபிஎஸ் இடம் இருப்பது தான் அதிமுக என தேர்தல் ஆணையமும் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு:

சிவில் வழக்கு தீர்ப்பு இன்னும் வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தால் தான் இறுதி முடிவு என்று அவர்களும் சொல்லியுள்ளார்கள் தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் அந்த கடிதத்தை தான் கொடுத்திருக்கிறார்கள்.

நீங்கள் பொதுச் செயலாளர், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரா என்ற கேள்விக்கு:

அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதுதான் அதிமுக நிலைமை. தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து தான் வருகிறேன் தேர்தலும் வருகிறது விரைவில் சுற்றுப்பயணம் ஆரம்பிப்பேன் என்றார்.

தென்காசி உலகம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

tenkasi ulakamman utsav - 2026
#image_title

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா இன்று திங்கள்கிழமை வேதபாராயண முறைப்படி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கிய நிகழ்வாக உள்ளது. இன்று இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடா்ந்து அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தென்காசி முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவில் நவ7ஆம்தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. நவ.9ஆம் தேதியன்று காலை 8.20க்கு யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலையில் தெற்குமாசிவீதியில் காசிவிஸ்வநாதா் உலகம்மனுக்கு தபசுக்காட்சிகொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் நாள்தோறும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். மாலையில் மண்டகப்படிதாரா்களின் சமய சொற்பொழிவு,மண்டகப்படி தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனா்.

டிரெண்டாகி வரும் #தேசியதலைவர்தேவர்

guruji and thevar - 2026

தேசியத் தலைவர் தேவர் என்ற ஹாஷ் டேக் இப்போது எக்ஸ் தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த வாரம் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி, , மருது சகோதரர்கள் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தேசிய தலைவர்களை சாதிய தலைவர்களாக சுருக்கி இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு மிகப்பெரும் தேசியத் தலைவர் என்பதை குறிப்பிட்டு, அவருடைய ஜெயந்தி நாளில், தேசிய தலைவர் தேவர் என்ற ஹாஷ்டேக் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் உடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பதும், அவரது தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்தார் என்பதும் வரலாறு.

pasumpon thevar - 2026

முத்துராமலிங்கத் தேவர், உயிருடன் இருந்தவரை, தேசிய எண்ணம் கொண்ட ஆர்எஸ்எஸ்., அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், ‘தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ என்றார்.

தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், தேசிய எண்ணம் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்., அமைப்பை அதிகம் நேசித்தவர் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, ‘தேசியத் தலைவர் தேவர்’ என்ற தலைப்பிலான ஹேஷ்டேக் இன்று வைரலாகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவர் கலந்து கொண்ட செய்தி, அந்நாளைய தியாக பூமி, 8-3-1956, இதழில்ன் பக்.7-8ல் பிரசுமானது.

WhatsApp Image 2022 10 15 at 10.21.40 AM - 2026
#image_title
WhatsApp Image 2022 10 15 at 10.21.52 AM - 2026

Trending Now Twitter: தேசியதலைவர்தேவர்

1) https://t.ly/SV9Tk

2) https://t.ly/LqZVc

3) https://t.ly/_4wGo … …

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வல அனுமதி மறுப்பு; நீதிமன்ற அவமதிப்பு!

kadeswara subramaniam hindu munnani - 2026

RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுப்பு- நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்-கடும் கண்டனத்திற்கு உரியது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1925ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவக்கப்பட்டது. அதன் நிறுவன நாளும் இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளில் RSS அணிவகுப்பு ஊர்வலம் கடந்த 98ஆண்டுகளாக நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சி ஊர்வலம் அல்ல அது. கட்டுப்பாடுள்ள அணிவகுப்பாக அந்த ஊர்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னார்வலர்களால் மக்களிடையே கட்டுப்பாடு,தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.

கேரளா, புதுச்சேரி உட்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.

இது ஜனநாயக விரோதமானது. அனுமதி அளிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்பதை காட்டிலும் நீதிமன்றத்தின் கருத்தினை அலட்சியம் செய்யும் நடத்தையாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை தடை செய்ய எந்த காரணமும் இருக்க முடியாது. தமிழகத்தில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மாநாடு என அனைத்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தேச ஒருமைப்பாட்டிற்கு தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கிறது.

தேசபக்தியை கட்டுப்பாட்டை நேர்த்தியாக நடத்தி காட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தாக்கம் திராவிட அரசியல்வாதிகளுக்கு கசக்கத்தான் செய்யும்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னை ரஷ்யாவின் சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவரே தான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என அடிக்கடி கூறியும் வருகிறார். ஆனால் இந்த உலகில் சர்வாதிகாரியாக ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் கதி என்வனாது என்பதை சரித்திரத்தை பார்த்து அவர் தெளிவுபெறட்டும்.

நீதிமன்றம் உத்தரவுகளை மதித்து ஜனநாயக வழியில் தமிழக அரசு நடக்க வேண்டும் என்று இந்து முன்னனி கேட்டுக் கொள்கிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியை காலதாமதமின்றி வழங்கிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தேவர் ஜயந்தி: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!

devar jayanthi garlanding - 2026
#image_title

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கட்சியினருடன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது…

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்கள் மற்றும் தமிழக பாஜக., மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம். தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம்… – என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூரில்… தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு:

அலங்காநல்லூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றியச்
செயலாளர் கண்ணதாசன், ஒன்றியத் தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா:

சோழவந்தான் : மதுரை அருகே சோழவந்தான் பேருந்து நிலையம் முன்பாக உள்ள தேவர் சிலைக்கு, காங்கிரஸ் கமிட்டி சார்பாக முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு தென் மண்டலத் தலைவர் பாதுஷா தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் பழனிவேல், முன்னாள் வட்டாரத் தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், கனகராஜ் சேகரன் ரவி சங்கரபாண்டி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தேவை – செங்கோட்டை வழியாக, சபரிமலைக்கு தினசரி சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 16 முதல் துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை – புனலூர் வழி சிறப்பு ரயில் வசதி இயக்கவும், செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, தகவல் மையம், மருத்துவ சேவை மையம், அமைக்கவும் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ஒவ்வோர் ஆண்டும் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து, புனலூர் – செங்கோட்டை – ராஜபாளையம்- தஞ்சாவூர் – மயிலாடுதுறை வழியாக டெல்டா மாவட்டங்களையும், கேரள பகுதிகளையும், இணைத்து சபரிமலை சிறப்பு வண்டி இயக்கப்பட்டது.

வண்டி எண் 06068 : எர்ணாகுளத்தில் இருந்து திங்கள்தோறும் கிளம்பி தாம்பரத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று சேர்ந்தது.
வண்டி எண் 06067 : தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தோறும் கிளம்பி புதன்கிழமை எர்ணாகுளம் சென்று சேர்ந்தது. இந்த ரயில்களால் ஐயப்ப பக்தர்கள் பெரும் பயனடைந்தனர்.

டெல்டா பிரதான பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இந்த சிறப்பு வண்டியை பயன்படுத்தி, புனலூர் ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து பம்பையை எளிதாக அடையலாம்.மேலும் ஐயப்பன் படைவீடு கோயில்களான குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலிக்கு எளிதில் செல்லலாம்.

மேலும் புனலூர் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பம்பை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப் படுகின்றன.

இதனால் இந்த ஆண்டும் எர்ணாகுளம் தாம்பரம் சபரிமலை சிறப்பு ரயில், தினசரி ரயிலாக, புனலூர் – செங்கோட்டை வழியாக இயக்கவும், செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா சிறப்பு ரயில்களை இயக்கவும் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தற்போது புனலூர் ரயில்வே நிலையத்தில் தகவல் மையம் மருத்துவ சேவை உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதைப் போல் தமிழக கேரள எல்லைப் பகுதியிலுள்ள செங்கோட்டையிலும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மிகப்பெரிய அளவில் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயங்குகிறது. திருநெல்வேலி – செங்கோட்டை – சென்னை – செங்கோட்டை – சென்னை- காரைக்குடி வழி செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை மதுரை செங்கோட்டை மதுரை குருவாயூர் என பல்வேறு ரயில்கள் செங்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பயணிக்கின்றனர். சபரிமலைக்கு பக்தர்களின் வசதி கருதி செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு தகவல் மையம், மருத்துவ சேவை மையம், குடிநீர் சேவை உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

WC 2023: நடையக் கட்டின நடப்பு சாம்பியன்! இங்கிலாந்தின் அதிர்ச்சி! இந்தியாவின் முதிர்ச்சி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
25ஆம் நாள் – இந்தியா vs இங்கிலாந்து
லக்னோ – 29.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இந்திய அணி (229/9, ரோஹித் ஷர்மா 87, கே.எல். ராகுல் 39, சூர்யகுமார் யாதவ் 49, பும்ரா 16, வில்லி 3/45, வோக்ஸ் 2/33, ரஷீத் 2/35) இங்கிலாந்து அணியை (34.5 ஓவரில் 129, ஜானி பெயர்ஸ்டோ 14, டேவிட் மலான் 16, லிவிங்ஸ்டோன் 27, ஷமி 4/22, பும்ரா 3/32, குல்தீப் 2/24, ஜதேஜா 1/16) 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை மட்டையாடக் கேட்டுக்கொண்டது. இந்திய அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே தங்கள் பணியை சரிவரச் செய்தனர். ரோஹித் ஷர்மா 101 பந்துகளில் 87 ரன்; கே.எல். ராகுல் 58 பந்துகளில் 39 ரன்; சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன்; ஜஸ்பிரீத பும்ரா 25 பந்துகளில் 16 ரன். மற்றாவர்கள் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்ட முடியவில்லை. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 5 மெய்டன் ஓவர்கள் வீசினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் (9 ரன்), கோலி (பூஜ்யம் ரன்), ஷ்ரேயாஸ் (4 ரன்), ஜதேஜா (8 ரன்) இன்று ஜொலிக்கவில்லை. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 229 ரன் எடுத்திருந்தது.

          இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கிய போது அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் மலான் (16 ரன்) 5ஆவது ஓவரின் ஐந்தாவது பந்திலும் ஜோ ரூட் (பூஜ்யம் ரன்) அதற்கடுத்த பந்திலும் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் (பூஜ்யம் ரன்) எட்டாவது ஓவரிலும் பெயர்ஸ்டோ 10ஆவது ஓவரிலும் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் (10 ரன்) குல்தீப் யாதவ்வால் கிளீன் போல்டானார். அச்சமயத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் 15 ஓவரில் 52/5.

அதன் பின்னர் அவர்கள் 20 ஓவர்கள் தாக்குப் பிடித்தனர்; 77 ரன்கள் அதிகம் சேர்த்தனர். 34.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 129 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவினர்.  இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகவும் அருமையாகப் பந்துவீசினார்கள்.

இங்கிலாந்துக்கு மற்றொரு தோல்வி, ஆறு ஆட்டங்களில் ஐந்தாவது தோல்வி மற்றும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏன் இப்படி? என்பதற்கு எளிதான பதில்கள் எதுவும் இங்கிலாந்து அணியிடம் இல்லை. நடப்பு சாம்பியன்களிடமிருந்து இது ஒரு குழப்பமான செயல்திறன். அவர்கள் ஒரு மோசமான அணி இல்லை ஆனால் எப்படியோ எதுவும் கிளிக் ஆகவில்லை.

இன்றைய இன்னிங்ஸ் இடைவேளையின் போது, அவர்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது போல் இருந்தது, ஆனால் இடைவிடாத இந்திய பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக அவர்களின் பேட்டிங் நொறுங்கியது. அவர்களில் எட்டு பேர் இரட்டை இலக்கத்தை எட்டினர், ஆனால் லிவிங்ஸ்டோன் (27) மட்டுமே 20 ரன்களைக் கடக்க முடிந்தது.

ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இதுக்கு, செங்கோட்டை – பெங்களூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸை நல்ல படியா இயக்கலாமே!

sengottai madurai rail - 2026

மதுரை – பெங்களூரு இடையே, புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ரயிலை திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு இயக்க சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தென் மாவட்ட மக்கள், குறிப்பாக மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலியில் இருந்து இயக்கினால், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.

ஏற்கெனவே நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு ஒரு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எப்போதும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிப்பதால், காத்திருப்புப் பட்டியல் எப்போதும் 100 , 200க்கு மேலே உள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலிலும் எப்போதும் காத்திருப்புப் பட்டியல் அதிகளவில் உள்ளது.

தென்மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு, கல்வி வணிகம் போன்றவற்றுக்காகவும், வேலை விஷயமாகவும் அடிக்கடி சென்று வருகின்றனர். இதனால் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ரயிலை, திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக நீடித்து இயக்கலாம். ஏற்கெனவே திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் தொலைவும் திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு உள்ள தொலைவும் ஒன்று தான் என்பதால் இதை ஒரே நாளில் சென்று வரும் வகையில் இயக்க முடியும்.

மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் வந்தே பாரத் ரயிலை பராமரிப்பதற்கு தனி பணிமனை உருவாக்கும் பணிகளும், இந்த ரயில் சீரான வேகத்தில் செல்வதற்கு தண்டவாளம் பராமரிப்பு பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இப்பணிகள் முடிந்தால், நவம்பர் மத்தியில் மதுரை பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை ரயில் தண்டவாளங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, ஏற்கெனவே, சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் 110 கிலோ மீட்டர் வேகம் எடுத்துச் செல்கிறதால், மதுரை திருநெல்வேலி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அவசியம் இருக்காது. மேலும், திருநெல்வேலியில் வந்தே பாரத் ரயிலை பராமரிக்க தனி பணிமனையும் உள்ளது. இதற்கான பொறியாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் திருநெல்வேலியில் உள்ளது.

எனவே, திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயிலை இயக்கினால் நிர்வாகச் சிக்கல்கள் எதுவும் இருக்காது. கூடவே பயணிகளும் பெரிதும் பயனடைவர். பகல் நேரத்தில் இந்த ரயில் போய் வருவதால் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பான பயண வசதியும் கிடைக்கும்.

அதே நேரம், செங்கோட்டை வரை எலக்ட்ரிக் லைன் வந்துவிட்டது. எனவே, அடுத்து வந்தே பாரத் செங்கோட்டைக்கு வருமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. செங்கோட்டையில் இருந்து மதுரை வரை முக்கிய நகரங்களாக தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி உள்ளது. இந்த வழித்தடத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளது. ஆன்மீகத் தலங்களும் அதிகம். வர்த்தக ஸ்தலங்களும் அதிகம். குற்றாலம் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.

பெரும்பாலான பயணிகள் செங்கோட்டை வந்து சபரிமலை செல்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஐயப்பனின் படை வீடுகள் செங்கோட்டையைச் சுற்றி அருகருகில் உள்ளன. அச்சங்கோவில் அரசன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில், ஆரியங்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், குளத்துப்புழா பாலகன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்துவிட்டு, பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.

எனவே, மதுரையில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நிறுத்தங்கள் மட்டும் கொண்டு, வந்தேபாரத் ரயில் செங்கோட்டை – பெங்களூருக்கு இயக்கப்படலாம். மதுரை – செங்கோட்டை இரண்டு மணி நேர பயணம் சாத்தியமாகும். பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதி, செங்கோட்டையில் சாத்தியம் என்பதால், இந்தப் பகுதியும் வளர்ச்சியடையும்.

சபரிமலை 41 நாள் மண்டல பூஜை நவ.17ல் தொடக்கம்! பக்தர்களுக்கான மேலும் சில முக்கியத் தகவல்கள்…

sabarimala new year eve - 2026
#image_title

உலக அளவில் பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பிரபலமான 41 நாள் மண்டல பூஜை காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் திருநிலை வரும் நவம்பர் 17 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டு, விழாக்கள் துவங்குகிறது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகைபுரம் மஞ்ச மாதா கோவில் புதிய மேல் சாந்திகள், திருவாங்கூர் தேவசம்போர்டு, புதிய தலைவர் சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் பத்தனந்திட்டா மாவட்ட ஆட்சியர் புதியவர் என பல புதிய முகங்களுடன் சபரிமலை மண்டல பூஜை விழா காணும் துவங்குகிறது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறப்புடையதாக ஒவ்வொரு நாட்களும் இருக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

சபரிமலை மண்டலம் மற்றும் மகர விளக்கு பாதுகாப்பாகவும் இருப்பதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன!

நேற்று பக்தர்கள் செல்லும் பாதையில் லாஹ இலவங்கள், திரிவேணி, பம்பா பஸ் நிலையம் போன்ற இடங்களைச் சென்று பந்தனம்திட்டா ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, பேரிடர் நிவாரணப் பிரிவு அலுவலர் டி.ஜி.கோபகுமார், பல்வேறு துறை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்!

பாதுகாப்பாகவும் சுகமுடனும் மண்டல மகர காலம் இருக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. வரும் நவ.16 மாலை நடை திறக்கப்பட்டு, நவ.17 முதல் டிச.27 மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் அன்று ஒரு நாள் முன்பதிவு ஓபன் செய்யப்படவில்லை..

தற்போது வரை 40 நாளுக்கான முன்பதிவு மட்டுமே தொடங்கியுள்ளது. மண்டல பூஜை 41 நாள் 17.11.2023 முதல் 27.12.2023 மாத பூஜை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஐம்பதாயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மண்டல பூஜை நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஐம்பதாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 70 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட் குறைவாக முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இது அதிகரிக்கப்படுமா? இல்லை நேரடியாக வந்து முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாமா என்று பின்னர் தெரிய வரும் .

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், ஆன்லைன் முன்பதிவுக்கு மரகூட்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு, ஒரு வரிசையில் ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்கள், பழைய சரங்குத்தி வழியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதுபோல் அனுமதிக்கப்படுமா என்றும் தெரியவில்லை..!!

திருவாங்கூர் தேவஸ்தானம் என்ன முடிவு எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என பக்தர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீதம் உள்ள டிக்கெட்கள் ஸ்பாட் புக்கிங் எனப்படும் முறையில் நிலக்கல், பந்தளம், எரிமேலி உள்ளிட்ட கேரளாவின் முக்கிய திருக்கோவில்களில் வழங்கப்படும். மண்டல காலங்களில் அதுதான் வழக்கம்.

இந்த நிலையில் தற்போது புதியதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக ஷிபு ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார்.

முன்னாள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திவ்யா எஸ் ஐயர் ஐஏஎஸ் மாற்றப்பட்டார். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்து கொடுக்க வேண்டும். முக்கியமான கோரிக்கை பேருந்து வசதி . புதிய ஆட்சியர் செயல்பாடு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

சபரிமலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு பூஜை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய மேல்சாந்தி பிரம்மஸ்ரீ மகேஷ் நம்பூதிரி மளிகைபுறம் கோயில் புதிய மேல்சாந்தி முரளி நம்பூதிரி இருவரும் வரும் நவ.16 சபரிமலைக்கு இருமுடி கட்டி வருகின்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரு S. பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை வரும் நவம்பர் 17 முதல் துவங்க உள்ள நிலையில், புதிய மேல்சாந்திக்கள் புதிய தேவசம் போர்டு தலைவர் புதிய மாவட்ட ஆட்சியர் என புது முகங்களுடன் சபரிமலையில் முக்கியத்துவ விழாக்காலம் தூங்குகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலை விழா காலங்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரபலமான பம்பை நதியில் தற்போது தண்ணீர் அதிக அளவில் வருகிறது. தெளிந்த நீரோடை போல் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. தற்போது கேரளா வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் வரும் தண்ணீரை பலரும் இப்போதே கார்களில் வந்து பார்த்து நீராடி பம்பா கணபதி தரிசனம் செய்து செல்கின்றனர்.

நீட் விலக்குக் கோரிக்கை: ஸ்டாலினின் புதிய கூத்து!

mkstalin - 2026

— ஆர். வி. ஆர்

ஒரு பொது நிகழ்ச்சிக்காக அண்மையில் சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி திரும்புவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இருந்தார். அவரை வழி அனுப்ப விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜனாதிபதியிடம் ஒரு ஸ்டண்ட் அடித்துவிட்டுத் தான் வந்த பிரதான வேலை முடிந்ததில் திருப்தி அடைந்தார்.

அது என்ன ஸ்டண்ட்? தற்போதைய தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தான் எழுதிய புதிய கடிதத்தை ஸ்டாலின் நேரடியாக ஜனாதிபதியின் கையில் கொடுத்தார். அதுதான் அந்தக் கூத்து.

ஜனாதிபதி என்ன செய்வார்? நாம் பிளாட்பாரத்தில் நடக்கும்போது நம் கையில் திணிக்காத குறையாக நம்மிடம் கொடுக்கப்படும் விளம்பரத் தாள்களை நாம் பாவமே என்று வாங்குவது போல் அவரும் வாங்கி இருப்பார். மத்திய அரசு அநேகமாக அதைப் பைலில் தூங்க வைக்கும். வேறு நடவடிக்கை எடுக்க அந்தக் கடிதத்தில் துளியும் சாரமில்லை.

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு சட்டம் விலக்குத் தரவேண்டும் என்பது திமுக-வின் நிலைப்பாடு. அந்தப் பைத்தியக்கார நிலையை, அந்தப் பித்தலாட்டத்தை, நமது மாநில மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.

ஒரு அப்பட்டமான சுயநலம் மிக்க மோசடிக் கோரிக்கையை இவ்வளவு வெளிப்படையாக வேறு எந்தத் தலைவர் அடிக்கடி மக்கள் முன் வைத்து மத்திய அரசிடமும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்? இதைத் திமுக செய்கிறது, ஸ்டாலின் இதற்குக் குரல் கொடுக்கிறார், என்றால் என்ன அர்த்தம்?

தமிழர்கள் உட்பட, சாதாரண இந்தியர்கள் அப்பாவிகள். அரசின் ஒரு திட்டம் அல்லது செயல்பாடு நாட்டை முன்னெடுத்துச் செல்லுமா –அதன் வழியாகத் தங்களின் வாழ்வு முன்னேறுமா – என்பது பற்றித் தெளிவான புரிதல் இல்லாதவர்கள், அதனால் அதில் அக்கறை இல்லாதவர்கள். அவர்களின் ஏழ்மையும் வாழ்க்கை நிலையும் அப்படித்தான் அவர்களை வைத்திருக்கும்.

நீட் தேர்வின் அவசியம், நீட் விலக்குக் கோரிக்கையின் ஓட்டைகள் ஆகியவை பற்றித் தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் அறிய முடியாது, அவர்கள் கவலைப்பட இடமில்லை. ஆகவே ஸ்டாலின் இப்படித்தான் நினைப்பார்: ‘நாம் நீட் விலக்கு கேட்பதால் சாதாரண மக்களிடம் நமக்குக் கெட்ட பெயர் வராது. ஒருவேளை நாம் இதில் வெற்றி பெற்றால் நமக்கு வரும் நன்மைகளும் அந்த மக்களுக்குப் புலப்படாது. இப்போதைக்கு இந்த நீட் விலக்கு விளையாட்டை நாம் தொடர்ந்து நடத்துவோம்!’

நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் யாரை பாதிக்கிறது, எதனால் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சொல்லி இருக்கிறார் – அது அவரின் வழக்கமான புளுகு தான்.

“நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது” என்று தன் கடிதத்தில் ஆரம்பிக்கிறார் ஸ்டாலின். அதாவது, நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை நடைபெற்றால் “ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்” பயன் அடைவார்கள், இப்போது நீட் தேர்வு வந்ததால் அத்தகைய மாணவர்கள் பயன் அடையவில்லை என்பதுதான் ஸ்டாலினின் ஒரே பாயிண்ட். இது போலியான பேச்சு, பஞ்சரான வாதம்.

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு வந்ததால் எவ்வளவு பிரும்மாண்ட நஷ்டத்தை அடைந்தார்கள் என்று திமுக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும்.

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் முக்கியமாக என்ன சொல்லவில்லை என்பதைப் பாருங்கள்.

‘நீட் தேர்வு வினாக்கள் மருத்துவச் சேர்க்கைக்கு சம்பந்தமே இல்லாதவை’ என்று ஸ்டாலின் சொல்லவில்லை.

‘நீட் தேர்வு சொத்தையாக, தரம் குறைந்ததாக இருக்கிறது, அதை விட தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு மதிப்பானது, தரம் உயர்ந்தது’ என்றும் அவர் சொல்லவில்லை.

‘நீட் தேர்வு முறையை விட, தமிழகத்தில் முன்பிருந்த பிளஸ் 2 வழியிலான மருத்துவச் சேர்க்கை வெளிப்படையாக, பாரபட்சமின்றி அமைந்தது’ என்றும் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை.

நீட் தேர்வு முறையில் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடி மக்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்காகத் தமிழக மருத்துவச் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகையால் ஸ்டாலின் எப்போதும் பேசும் சமூக நீதிக்கு நீட்டால் நமது மாநிலத்தில் குறைவில்லை.

வசதி குறைந்தவர்கள் மற்றும் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் நீட் எழுதித் தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை பெற்ற விவரங்கள் வருடா வருடம் பத்திரிகைகளில் போட்டோவுடன் வருகின்றன. படிப்பில் நாட்டமுள்ள ஏழைகள் நலனும் நீட் முறையில் காக்கப்படுவது தெரிகிறது.

இதுதான் நீட் தேர்வின் வெளிப்படையான நல்ல விளைவென்பதால், ஸ்டாலின் பொதுமக்களிடம் சொல்ல விரும்பாத, சொல்ல முடியாத, ஏதோ கசமுசா விஷயம் தானே திமுக-வின் நீட் எதிர்ப்புக்குக் காரணம்?

இன்னொரு விஷயம். நன்கு நிர்வகிக்கப் படும் நீட் தேர்வு முறை வந்த பின், பெரிய மனிதர்களின் சிபாரிசைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் தகுதிக் குறைவான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் படுவதில்லை. இந்த உண்மையைச் சில நாட்கள் முன்பு திமுக பிரமுகர் தயாநிதி மாறன் ஒரு பொது மேடையில் தன்னையும் அறியாமல் அம்பலப் படுத்தினார். அவர் பேசியது இது:

“என் மகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சமயத்தில் நான் அவளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்க்க நினைத்தேன். என் மனைவியோ சி.பி.எஸ்.சி. பாடத் திட்ட பள்ளியை விரும்பினார் – பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில். அப்போது நான் சொன்னேன்: ‘நீ ஏம்மா கவலைப் படற? எங்க கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்கப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்க மாமா ஸ்டாலின் எத்தனை பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! நானே மந்திரியா இருந்தபோது எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்கேன்! என் பொண்ணுக்கு நான் வாங்கித் தர மாட்டேனா? என்று மார் தட்டி நின்றேன். அதன்படி என் மகளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்த்தேன். 2017 வந்தது. அப்போது என் மகள் பிளஸ் 2 முடித்தார். வந்தது பார் நீட்! என்னாச்சு? என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை…….”

முன்பு தமிழகம் கடைப்பிடித்த பிளஸ் 2 வழி மருத்துவச் சேர்க்கை முறையில் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் எத்தனையோ நபர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கச் செய்தார்கள் என்றால், அப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தாங்கிப் பிடித்த ஏழைகளா, பின் தங்கிய வகுப்பினரா? அனேகமாக இருக்க முடியாது.

முன்பு பிளஸ் 2 வழியில் சேர்க்கை நடந்த போது ஏழைகள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர் பாதிக்கப் படவில்லை என்று ஸ்டாலின் ஜனாதிபதியிடம் தெரிவித்தது உண்மை என்றால் – அதாவது அத்தகைய மாணவர்களுக்கு முன்பு சுலபமாக மருத்துவச் சேர்க்கை கிடைத்தது என்றால் – அப்போது திமுக பிரமுகர்கள் சீட் “வாங்கிக் கொடுத்த” எக்கச்சக்கமான மாணவர்கள் ஏழைகள் அல்ல என்றுதானே அர்த்தம் – அவர்களில் பின்தங்கிய வகுப்பினர் இருந்தாலும்?

திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கையில் ஒரு சத்தும் இல்லை, ஆனால் வண்டி வண்டியாக மர்மம் இருக்கிறது என்பதை தயாநிதி மாறனும் இப்போது உளறிக் கொட்டி விட்டார். ஆனாலும் ஸ்டாலின் கவலைப் பட மாட்டார். அதற்கெல்லாம் சிறிதாவது ஒருவரிடம் வெட்க உணர்வு இருக்க வேண்டுமே?

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai