தமிழகம்

எனக்கு கொள்ளுப் பேரனே உள்ளார்: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் கூறிய விளக்கங்கள்!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், இன்று மாலை 6 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

ஏப்.28 வரை பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல்!

இந்நிலையில் இன்று மாலை பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கங்கள் சொல்கிறார் ஆளுநர்?!

விசாரணை அறிக்கை கிடைத்தபின் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது - என்றார் ஆளுநர்.

காவிரி விவகாரத்தில்… நடிகர் ரஜினி காந்த் திடீர் முடிவு!

இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!

நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியையிடம் ‘விடிய விடிய’ விசாரணை: போலீஸார் அதிர்ச்சி!

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி மதி, தான் மேற்கொண்ட விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விசாரணையில் பலரது பெயர்களை நிர்மலா தேவி கூறியுள்ளதாகவும், இதனால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 2026

காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல அழைத்த பேராசிரியை நிர்மலா கைது!

இதனிடையே நிர்மலா தேவி மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்ப முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

யாருக்காக இந்த ஈனச் செயல்?: வழக்கை சிபிஐ.,விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்குமாறு, பேராசிரியை நிர்மலா தேவி கூறிய விவகாரத்தில் சிபிஐ., விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., அறிக்கை!

திமுக., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழர் பெயரில் இயங்கும் இயக்கங்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருவதும், ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டு அவரை பதவி விலகச் சொல்வதுமாக அரசியல் நடத்தி வருவதும் அண்மைக் காலமாக தமிழகம் பார்த்து வருகிறது

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles