தமிழகம்

ஜெ. மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின்...

திருச்சி விமான நிலையத்தில்ரூ .18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த ஜலாலுதீனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10, +2 தேர்வு முடிவுகளை டிவி., நாளிதழில் வெளியிட தடை கோரி மனு!

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகளிலேயே 10, +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

இறக்குமதி மணலை யாரும் விற்கக் கூடாது! பொதுப்பணித் துறைக்கே உரிமை உண்டு! அரசாணை வெளியீடு!

இறக்குமதி மணல் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

மணல் கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி

அவரது உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில்,...
- 2026

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அடிக்கல் நாட்டிய இபிஎஸ் – ஓபிஎஸ்!

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி ரூ. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் : திருமாவளவன்

மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க...

ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் -முதல்வர்

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக...

சென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா துப்பாக்கி முனையில் கைது!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நபா் ராக்கெட் ராஜா. இவா் மீது கொலை வழக்கு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் ராக்கெட் ராஜா மற்றும்...

தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை அதிகாரி தெரிவிக்கையில், "தமிழகத்தில் வெயில் அளவு வரும்...

நீட் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் புலம்பல்

சிபிஎஸ்இ., கல்வித் தரத்தில் இயற்பியல் பாடப் பிரிவில் கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததாகக் கூறிய மாணவர்கள், சற்று கூடுதலாக உழைத்திருந்தால் இயற்பியல் கேள்விகளும் எளிதானதாக இருந்திருக்கும் என்று கூறினர்.
- 2026

Recent articles