Author: Suprasanna Mahadevan
Breaking News
உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளதா? இதோ வழி!
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு… கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை …" என்றான்.
கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட்: ஜெயக்குமார்!
வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என கேட்கிறீர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
தொடர் மழை! வீடு இடிந்து ஒரு குடும்பத்தில் ஐவர் உயிரிழப்பு!
அமேதி மாவட்டத்தின் திலோய் தெஹ்ஸிலின் பகுதிக்கு உட்பட கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஆரோக்கிய சமையல்: எலுமிச்சை தொக்கு!
எலுமிச்சைத் தொக்குதேவையானவை:எலுமிச்சம்பழம் – 10,மிளகாய்த்தூள் – 10 டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கடுகு – சிறிதளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.செய்முறை:எலுமிச்சம்பழங்களை...
நவராத்திரி ஸ்பெஷல்: வெள்ளை கொண்டைகடலை சுண்டல்!
கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.
சீன அதிபர் இந்திய வருகைக்கு முன் இம்ரான்கானுடன் சந்திப்பு!
சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இந்திய வருகைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியா வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். அங்கு இரு நாடுகளின் உறவு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இருநாடுகளுக்கு இடையிலான லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது., பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அக்டோபர் 08-ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாம்அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கான், சீனா செல்வது இது 3-ஆவது முறையாகும். சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் சீனா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
காந்திஜியின் இலட்சியங்கள் நமக்கு வழிகாட்டும் ஒளி: மோடி!
காந்திஜி அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது
இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் இறப்பு! கொலை?
எஸ்.சுரேஷின் சில உறவினர்களும் அதே குடியிருப்பில் வசிக்கின்றனர். எஸ்.சுரேஷை தொடர்புக்கொள்ள முடியவில்லை என காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவு திறந்து உள்ளே சென்றபோது, அங்கு எஸ்.சுரேஷ் இறந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார். அவரின் தலையில் அதிக அளவில் காயங்கள் உள்ளன. அவரின் தலையில் ஏதோ கனமான பொருள் கொண்டு தாக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அரசியலுக்கு அவசியம் வாருங்கள்: ‘லயோலா’ மாணவர்களிடையே கமல் அறைகூவல்!
படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை. தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும்.
நெசவு தொழில் மேம்பட கதர் ஆடைகளை வாங்கிடுவீர்: முதல்வர்!
கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமரும்,சீன அதிபரும்..! முதல்வர் மாமல்லை பயணம்!
இந்நிலையில், நாளை மாமல்லபுரம் செல்லவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
என்ஜினீயரிங் கனவு கை நழுவியது! கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை!
ராகேஷ் குமார் தனது பாட்டி ராஜம்மாளுடன் நாகலாபுரத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் ராகேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
