Author: ரம்யா ஸ்ரீ
நலம் தரும் அசோகாஷ்டமி… இன்று!
இதைச் சொல்லி மருதாணி இலைகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பல நோய்கள், துன்பத்திற்குக் காரணமான பாபங்கள் விலகுவதாகக் கூறுகிறது லிங்க புராணம்.
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 1,264 கால் போட்டு காவலரை திட்டியவர் கைது!
இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது.
மலச்சிக்கல் இருந்தா… தக்காளியை இப்படி சாப்பிடுங்க போதும்..!
மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து தக்காளி. அட... அப்படி என்ன ஆச்சரியத்துடன் பார்க்கிறீங்க! உண்மைதானுங்க..! தக்காளிய ஏதோ சமையலுக்கு மட்டும்னு நினைச்சிட்டிருக்கோம். உண்மையில் தக்காளி பல மருத்துவ அம்சங்களை கொண்டதுன்னு சொல்றாங்க...
அந்த 75 நாட்களும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம்… அப்பல்லோ பிரதாப் ரெட்டியில் பகீர் பதில்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும், வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
இளையராஜா டைட்டிலில் உருவாகும் புதுப் படம்!
அவர், 'இளையராஜா' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் எனப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குமாம்.
பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் சரிவு: மார்க்குக்கு 600 கோடி டாலர் இழப்பு!
கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது ட்ரம்பிற்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா என்ற நிறுவனம், 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை எடுத்து அதனடிப்படை யில் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்ததாம்.
தன்னாட்சி அங்கீகாரம் பெற்றன 9 தமிழக கல்வி நிறுவனங்கள்!
சிறப்பாகச் செயல்பட்டு வரும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.
சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது! கண்டித்து தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல்!
இதனிடையே, ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அந்தப் பகுதி வழியே வந்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சந்தித்துப் பேசினார். .
‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளியேற்றம்!
ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அஜீத்தை வேறொரு அரசியல் பரிணாமத்துக்கு அழைத்துச் செல்லும் படம்!
மறைந்த ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நட்பில் இருக்கும் தல அஜீத், போனி கபூர் தயாரிக்க உள்ள புதுப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்குவார் என்கிறார்கள்.
பாம்பு டான்ஸா ஆடுறீங்க… நாங்க ‘கீரி’டா: வங்கதேசத்தை அலற வைத்த தினேஷ் கார்த்திக்!
தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐந்து போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன கோப்பையை வழங்கினார்.
சென்னைக்கு மழை வாய்ப்பு; விட்டு விட்டுப் பெய்யும்! வானிலை மைய இயக்குநர்
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றார்.
