தமிழகம்

சூட்டைத் தணிக்க அடுத்த 24 மணி நேரத்தில் மழை: எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க நீதிபதி ராமதிலகம் காவல்துறைக்கு அறிவுரை!

இதையடுத்து, நீதிபதி எஸ்.வி.சேகரைக் கைது செய்து விசாரிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும்,  எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் வஞ்சனை இல்லை; வாஞ்சையுடன் நடக்கிறோம்: தமிழிசை

அதனால்தான், நான்கு மாநிலங்களையும் சேர்த்து வைத்து, கூட்டம் நடத்தி, ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு, ஒரு நிரந்தர முடிவும் தீர்வும் எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை தெரிவித்துள்ள தமிழிசை, பின்னர் ஏன் உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறினார் என்பது அவருக்கே புரிந்த உண்மை.

காவிரி விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மரத்தில் ஏறிப் போராட்டம்

முன்னதாக, காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்க முடியாது என்றும், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும்: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு மையம் மாற்றுவது குறித்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மருத்துவம் சார்ந்த...

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு...
- 2026

மக்களைப் பாதுகாக்கும் மீனாட்சி: நிர்மலா சீதாராமனுடன் புகைப்படம் பகிர்ந்து தமிழிசை டிவிட்!

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், காலை மதுரை மீனாட்சி கோயில் தரிசனம் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் மக்களைப் பாதுகாக்கும் அன்னை மீனாட்சியின் அருள்தரிசனம் - என்று குறிப்பிட்டிருந்தார்.

மதுரை கோயில் தீவிபத்து பகுதியை சீரமைக்க மத்திய அரசு உதவும்: நிர்மலா சீதாராமன்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியே ஆன்லைன் பதிவு இன்று காலை தொடங்கியது. இது இந்த மாதம் (மே) 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்படி பணத்த வெச்சிட்டு போனா..? எனக்கே எடுக்கணும்னு ஆசை வருது: சொல்பவர் போலீஸ்காரர்

இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்தால், எனக்கும் திருட ஆசையாகத்தான் இருக்கிறது என்கிறார். இப்படிப் பட்ட ஓர் எண்ணம் போலீஸாருக்கு தோன்றுவதே, உளவியல் ரீதியாக போலீஸாரை நேர்மையான வழியில் செல்ல தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது!

மதுரை வங்கிக் கிளையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இந்த ஆய்வின் போது, வங்கி வாடிக்கையாளராக வந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்த படி அனைத்தையும் கவனிக்கிறார். இருக்கும் ஓரிருவரும் நகர்ந்த பின்னர், தனி ஆளாக அமர்ந்திருக்கும் அவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காசாளர் இருக்கும் கேபினில் எட்டி பணத்தை எடுக்கிறார். இரு முறை முயன்று இரு முறையாக பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில்...
- 2026

Recent articles