தமிழகம்

பதவிக்காக சசிகலாவிடம் பிச்சை எடுத்தவர்தான் தினகரன்: போட்டுத் தாக்கும் திவாகரன்

மன்னார்குடி குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சண்டைகளால், இரு தரப்பினரும் செய்து வந்த அராஜகங்கள், ஊழல்கள், துரோகங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

பழனி உத்ஸவர் சிலை முறைகேட்டை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு!

பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் புழல் ஜெயிலர் நிர்மலா தேவி இருக்கும் சிறைக்கு மாற்றம்!

இந்நிலையில் ஜெயராமன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஜெயிலராக இருந்த உதயகுமார் புழலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன்...

டிடிவி தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்: ஸ்லீப்பிங் செல் செந்தில் பாலாஜி!

ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்ததோடு, பிரியாணியும் அவர் துறை சார்ந்த மது பான வகைகளையும் கொடுத்து சேர்த்த கூட்டத்தை விட, டி.டி.வி.தினகரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம்.இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமணி என்கிற தகரமணி, தவறான கருத்துகளைக் கூறி வருகிறார்.

ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊதிய...
- 2026

மு.க.ஸ்டாலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பாத்திமா பாபு என்ன சொல்கிறார்?

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, 'சித்திரப்பாவை' எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப் படி தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை.

வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 30 ஆம் தேதி வரை 216 மில்லியன்...

போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள்...

வங்கி மோசடி புகாரில் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது வழக்கு

ரூ600 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் முன்னாள் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார்....

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் 

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் ,சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த...
- 2026

Recent articles