இந்தியா

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.

ஒரே இலங்கை; தமிழர்களுக்கு மாநில சுயாட்சி – இதுவே எங்கள் கோரிக்கை: விக்னேஸ்வரன்!

தென்காசி, பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு மாலை 5 மணி அளவில் விக்னேஷ்வரன் சுவாமி தரிசனத்துக்கு வருவார் என்று தகவல் பரப்பப் பட்ட நிலையில், அவர் வருகை ரத்து செய்யப் பட்டதாக பின்னர் அறிவிக்கப் பட்டது.

பழங்குடியினப் பெண்ணுக்கு காலணி வழங்கி, கீழே குனிந்து மாட்டியும் விட்ட மோடி!

பழங்குடியினப் பெண்களுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அப்போது பெண் ஒருவருக்கு காலணிகளை மோடி வழங்கினார். நிகழ்சசியில் பேசிய அவர், இந்திய நலவாழ்வுத் திட்டம் என்பது சேவைகளை அளிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பங்களிப்புடன் நலமான, திறமுள்ள, புதிய இந்தியாவை உருவாக்குவதாகும் எனத் தெரிவித்தார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆனார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே!

இதில், இமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் வி.எஸ். கோக்ஜே 131 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராகவா ரெட்டி 60 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கோக்ஜே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: மோடி எச்சரிக்கை!

இந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த சமூக மாற்றம் நம் குடும்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

சித்தராமையா மீண்டும் முதல்வராவது சந்தேகம்: இந்தியா டுடே கணிப்பு!

தமிழகத்தில் நடத்தப் பட்ட போராட்டங்கள், கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
- 2026

நாளை முதல் செல்போனிலேயே எடுக்கலாம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு

இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது. இந்த பயணச்சீட்டை sms மூலம் மற்றவருக்கும் அனுப்ப இயலாது.

ஜெயிச்சிட்டான்யா… ஜெயிச்சிட்டான்! உளறினாலும் உருப்படியா உளறி…! கன்னடர் இதயம் வென்ற சிம்பு!

 சென்னை: திரையுலகினர் மௌன விரதம் இருந்து ஏற்படுத்த முடியாத பாதிப்பை, கன்னடர் மத்தியில் உளறினாலும் உருப்படியாய் உளறிப் பேசியே சிம்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஏப்ரல் 11 - ஒரு டம்ளர்...

நள்ளிரவில் ராகுல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ‘ போதை தள்ளாட்ட’ பேரணி! செல்ஃபி எடுத்தவர்களை சீறிய பிரியங்கா!

காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் பலர் மது அருந்திக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு, தள்ளாடியபடி வந்தனர். இதனால் பேரணியில் வந்த பெண்கள் அச்சமடைந்து பாதுகாப்பின்மையை உணர்ந்தனர். பிரியங்கா கோபப் பட்டதற்குக் காரணம் இதுதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சமாதானம் செய்தனர்.

ஏகாதசி உபவாச நாளில் உண்ணாவிரதம்: ஆன்மிகப் பாதையில் பாஜக.,!

இதனிடையே பா.ஜ.க வினர் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்த தினம், சர்வ ஏகாதசி என்றும், ஏகாதசி உபவாசம் மிகவும் சிறப்பானது என்றும், பா.ஜ.க. எப்பொழுதும் ஆன்மீகப் பாதையில் செல்வதன் எடுத்துக்காட்டு இது என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

#GoBackModi க்கு போட்டியாக டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouModi

டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

உண்ணாவிராதம்னா என்னான்னு மோடியப் பாத்து கத்துக்கப்பா மிஸ்டர் ராகுல்!

எந்தப் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அரசு தொடர்பான ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சியில் பேசினார். எங்கும் தன் உண்ணாவிரதம் பற்றி பேசவில்லை. அரசியல் கருத்துகளையும் சொல்லவில்லை.
- 2026

Recent articles