தமிழகம்

சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது என்றார் ஜெயலலிதா: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் வாக்குமூலம்!

இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார். 

திருமாவளவன் மற்றும் கிறிஸ்துவ சமூக நீதி பேரவை பாதிரிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

சென்னை: இந்து மதம் மற்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் கிறிஸ்துவ சமூக நீதி பேரவை அமைப்பு பாதிரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமுன்னணி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காவிரியை வைத்தே ரஜினிக்கு ப்ளாக்மெயில்! ‘கன்னட’ திரையுலகினர் அடாவடி!

எத்தகைய அரசியல் பின்னணியில் கமல்ஹாசன் கர்நாடகத்துக்குச் சென்று, இவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்து, அரசியல் தளத்துக்கு வரும் முன்பேயே தமிழர்களுக்கு கமல்ஹாசன்  செய்துள்ளது பச்சைத் துரோக அரசியல்தான் என்பது, பளிச்சென தெரிந்துவிட்டது!

இடி தாக்கி தஞ்சை பெரியகோயில் நுழைவு வாயிலின் கேரளாந்தகன் கோபுரத்தில் சேதம்!

இருப்பினும், கோயில் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டதால், பக்தர்கள் இதனை அபசகுனமாகவே கருதுகின்றனர்.

கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம். 

குஸ்தி போட்டது குஷ்பு; டிஸ்மிஸ் ஆனதோ நக்மா! தமிழக மகளிர் காங். பதவி அம்பேல்!

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. 
- 2026

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்கள் பஞ்சர் ஆனதைத்தான் ப.சி., அப்படி சொன்னாரோ? ஹெச்.ராஜா நக்கல்!

இந்திய பொருளாதாரத்தின் நிலை 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது என்று ப. சிதம்பரம் கிண்டல் செய்திருந்ததற்கு நக்கல் அடித்துள்ளார் ஹெச். ராஜா. அதன்படி, தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சர் ஆனதைத்தான் அப்படிச் சொல்கிறார் போலும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

காலா ரஜினிக்கு கூலா வேண்டுகோள் விடுக்கும் அன்புமணி!

காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

2002இல் இப்படித்தான் பிளாஸ்டிக் தடைன்னு…: ராமதாஸ் சொல்லும் கணக்கு!

பிளாஸ்டிக் பொருள் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், 2002 சட்டம் போல் கைவிடக்கூடாது என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். 

எந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை தெரியுமா..?

பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில், கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை,...
- 2026

Recent articles