இந்தியா

ஆந்திரா, தெலங்கானாவில் கடும் பணத்தட்டுப்பாடு

பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டிருப்பதுடன், வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ரயில்வேயில் 90 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பம்

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் வரையில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் உள்ள நியாயங்கள்!

இப்படியாக, மத்திய அரசின் குழப்ப நிலையை முன்வைத்து  மத்திய அரசின் செயலை நியாயப் படுத்தி முன் வைக்கப்படும் இன்னொரு கருத்து:உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது என்று தமிழ் ஊடகங்கள் ஒரு செய்தியைப் பரப்பியுள்ளன.

தேசிய கீதத்துக்கு நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப் படுவதேன்?: இல.கணேசன் கேள்வி

பாராளுமன்றத்தில் தேசிய கீதமோ, வந்தே மாதரமோ இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் நம் நாட்டு மக்களே. அவர்களும் தேசத்தை வணங்க அனுமதிக்க வேண்டும், இல்லாவிடில் இதையே சிலர் தவறான முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்ட வாய்ப்புண்டு. இதைச் சரி செய்ய வேண்டுகிறேன்- என்று அவர் பேசினார்.

வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தம்

இது புவியில் இருந்து அதிகபட்சம் 36 ஆயிரம் கி.மீ. தொலைவும், குறைந்தபட்சம் 170 கி.மீ., தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் புவியைச் சுற்றிவரும். ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
- 2026

இதற்குப் பெயர் ஜென்டில்மென் விளையாட்டா? டிராவிட் போல் நேர்மையாளர் உண்டா?

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.

காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஓர் ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!

தகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது.

அரசு நலத்திட்ட உதவிகள் பெற ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது,  பாஸ்போர்ட் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்டவை தற்போதைக்கு கட்டாயமல்ல என்றும், அதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வினாத்தாள் வாட்ஸ்அப்பில் லீக் ஆன சர்ச்சை: 2 தாள்களுக்கு மறு தேர்வு என சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலாண்மை வாரியத்துக்காக தற்கொலை: அதிமுக., எம்பி பேச்சும் எதிர்வினைகளும்!

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும், ஆனால் இப்படி தற்கொலை என்றெல்லாம் சொல்லி மிரட்டுவது நன்றாக இல்லை என்று அவையில் பலர் கருத்து கூறினர். இருப்பினும் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறியதாக பின்னர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
- 2026

Recent articles