தமிழகம்

ஐபிஎல் போட்டியின் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்ப முடிவு செய்த சென்னை தியேட்டர்

11வது ஐபிஎல் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்ப சென்னை உதயம்தியேட்டர் காம்ப்ளக்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், போலீஸ்...

திரையுலக பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: தமிழக அமைச்சர் அறிவிப்பு

திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் இதுகுறித்து விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபப்டும் என்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர்...

‘வாய்ஸ்’ கொடுக்கவில்லை! ரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் தமிழருவி மணியனின் மாநாடு ரத்து!

காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான போராட்டம் என்று தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது. மாநாட்டை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி, வழங்கியவர்களிடமே திரும்பத் தரப்பட்டு விடும்” என்று கூறியுள்ளார்.

என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார்: திருச்சி மாநாட்டில் கமல்

காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என சாக்குபோக்கு சொல்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிறார் சீமான்; ஆனால் உண்மை என்னவென்று அவருக்குத் தெரியாது…!

இப்போதும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், மறைந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவருகிறார் வைகோ. உண்மை தனக்குத் தெரியும் என்று முழங்கி வரும் வைகோ, இந்த முறை, சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகப் பேசியிருக்கிறார்.

இன்டர்நேஷனல் ஃப்ராடு.. சீமானை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடும் வைகோ!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதிக் கொண்டு, அவரோடு பழகியவர் போல பொய் கூறி வருகிறார். விடுதலைப் புலிகளின் சின்னத்தை தனது கட்சிக் கொடியில் வைத்துக் கொண்டுள்ளார். நான் ஒரு மாத காலத்துக்கும் மேல், விடுதலைப் புலிகள் இயக்க சீருடை அணிந்து கொண்டு பிரபாகரனுடன் இருந்தவன் என்று வைகோ தெரிவித்தார்.
- 2026

அம்மனாக திடீரென மாறிய வினாயகர் சிலை: சென்னையில் பரபரப்பு

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வினாயகர் சிலை பால் குடிப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு வினாயகர் சிலை திடீரென அம்மன் சிலையாக மாறி...

மதுரை சந்தையூர் கிராம சாதிப் பிரச்னை; தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு!

 தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும்,  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் ராஜினாமா செய்ய வேண்டுமா? நெட்டிசன்கள் குறும்பால் திமுகவினர் அதிர்ச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தினந்தோறும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது.

காசு கொடுப்போம்னு கூட்டியாந்தாங்க…! உண்ணாவிரதப் பந்தலில் புலம்பல்கள்!

மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது. 

அன்று மட்டும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேறியிருந்தால்…? : முதல்வர் எடப்பாடியின் கேள்வி!

ஆனால் திமுக., காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது. அதன் மூலம், விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்தது திமுக., என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. 

காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம்

உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
- 2026

Recent articles