தமிழகம்

தீக்குளித்த மதிமுக நிர்வாகி சிகிச்சையின் பலனின்றி பலி

தேனியில் மத்திய அரசு அமைக்கவுள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின்போது திடீரென மதிமுக தொண்டர் ரவி என்பவர்...

இப்போ மூஞ்சியை எங்க கொண்டு போய் வெப்பீங்க மிஸ்டர் ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழகத்தை கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. மேலும் இனி கர்நாடகாவில் ரஜினி-கமல் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்…? பகீர் கிளப்பும் செய்திகள்!

இன்றைய நிலையில், இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடக்கக்கூடிய வாய்ப்புள்ள தகவல்தான் இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!!

டீக்கடை மோடிக்கு ஒரு டீக்கூட கிடைக்காது!: கடையடைப்பு அன்றுதானாம்!

அப்போ பிரதமருக்கு டீ கிடைக்காதா? என்று கேள்வி கேட்கும் வகையில், தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பல்வேறு இடங்களில் திருட்டு கல்லூரி மாணவர்கள் கைது

பாவூர்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாவூர்சத்திரம் வட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் சமீப...

ஜாதியை வைத்தோ… மதத்தை வைத்தோ… தமிழர்களை பிரிக்க முடியாது : கனிமொழி எம்.பி பேச்சு! 

ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில்  கனிமொழி  எம்.பி பேசினார்.நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில்  மறைந்த முன்னாள்...
- 2026

செங்கோட்டையில் இடி மின்னலுடன் பலத்த மழை !

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்களை பெரிதும் வாட்டியது. இந்நிலையில் தென் மாவட்டங்களின், சில இடங்களில் மழை பெய்யலாம் என, வானிலை மையம் அறிவித்திருந்தது,  இதனிடையே இன்று...

காவிரிக்காக அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்: சுப்ரமணியன் சுவாமி

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார். மேலும் இதே வார்த்தைகளை செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியுள்ளார்.

செங்கோட்டை- கொல்லம் ரயில்: கேரள அரசியல்வாதிகளுக்கு உள்ள அக்கறை தமிழகத்தில் இல்லாமல் போனது ஏன்?

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குகைகள், மலைப்பாதைகள், அடர்ந்த வனப் பகுதியின் வழியாக இந்த ரயில் செல்லும் போது வழியெங்கும் இயற்கை எழில் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்தப் பாதையில் தொடர்ந்து, முன்பு போல், நாகூர், நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பயணிகள்!

செங்கோட்டையில் தாம்பரம்- கொல்லம் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! 

செங்கோட்டை –புனலூர் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கடந்த 2010ஆம் ஆண்டு செப்-20ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மூன்றாண்டுகளுக்கு பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விரைந்து முடிக்கப்பட்டன.

வாய் கூசாமல் பொய் பேசிய ஸ்டாலின்: அப்துல் கலாம் நியூட்ரினோவை எதிர்த்தாரா?

உலகத் தலைமையை மீட்டெடுத்தல், கனிம வளங்களைப் பெறுதல் என்றெல்லாம் கலாம் குறிப்பிடுவதுதான் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு சில குழுக்களுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது என்பது, கலாம் கட்டுரையைப் படித்த பின்னர்தான் தோன்றுகிறது.

தி.க.காரர் சொல்வது போல்… மோடி அரசிடம் அப்துல் கலாம் கப்பம் வாங்கினாரா?

அறிவியல் சார் தொழில்நுட்ப வளர்ச்சி சார் திட்டம். பகுத்தறிவுப் பட்டறையில் பட்டை தீட்டிய அறிவியல் அறிஞர்களால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அப்துல் கலாம் இத்திட்டம் குறித்து திடமாக, ஆய்வு நோக்கில் ஆதரித்து எழுதினார். பக்கம் பக்கமாக எழுதினார்.
- 2026

Recent articles