இந்தியா

ஸ்வீடனில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தாராம்.

காவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்

முன்னாள் உள்துறை அதிகாரி ஆர்.வி.எஸ். மணி, ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை வலியப் புகுத்தி, அதை நிலை நிறுத்துவதற்காக ஐ.மு.கூட்டணி அரசில் சில கோப்புகள் வலியத் தயாரிக்கப் பட்டன என்று பகிரங்கமாகக் கூறியதை நினைவுகூர்ந்த பத்ரா, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரிவினை அரசியல் பேசுவதை வெளிப்படையாக விமர்சித்தார்.

காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

காவி பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை வடிவமைத்தவர், அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர். அவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங், தன் பங்குக்கு அடிக்கடி அந்த வார்த்தைகளை ஊடகங்களில் சொல்லி வந்தார்.

பூனை மேல் மதில் போல ஸ்டாலின் போராட்டம்: ஹெச்.ராஜா கிண்டல்!

ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் - என்று கிண்டல் அடித்துள்ளார்.

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

இந்நிலையில், குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பில், இவர்களுக்கும் இந்த வழக்கின் தொடர்புக்கும் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
- 2026

திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம்,

சிறப்பான ஒத்துழைப்பு: அரசு, முதல்வர், கல்லூரி இளைஞர்களுக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி!

பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப் பட்ட இந்தக் கண்காட்சி பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டி, கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி, பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய போதும், அவற்றைப் புறம் தள்ளி பொதுமக்கள் பெருமளவில் குவிந்து இந்தக் கண்காட்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.

ராமமோகன ராவ் சொல்வது பொய்: அலறும் அமைச்சர் தங்கமணி

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் எங்களையும் உள்ளே இழுத்து எங்கள் மீது புகார் கூறியுள்ளார்.

காமன்வெல்த்; பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.
- 2026

Recent articles