இந்தியா

பசவண்ணர் சிலைக்கு மரியாதை: லண்டனில் மோடி; கர்நாடகாவில் சித்தராமையா!

“சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.

இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமை கொள்கிறோம்! ஸ்வீடனில் மோடி!

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் மன்னர் 16ஆம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

காஷ்மீரில் ஒட்டுமொத்த பாஜக., அமைச்சர்களும் ராஜினாமா!

இதையடுத்து அவர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவரிடம் செவ்வாய்க்கிழமை நேற்று மாலை அளித்தனர். மாநில துணை முதல்வர் நிர்மல் சிங்கும் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில்..!

டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வறைக்குக் கொண்டு வர வேண்டும்.

மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.

இரட்டை இலை சின்னம் குறித்த டிடிவி வழக்கு: 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இதில் கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார்.
- 2026

நாட்டையே உலுக்கும் திடீர் பணத் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் புகார்; ஜேட்லி விளக்கம்; மக்கள் அவதி!

இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.

செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி*

*பவன் கல்யாணை சகோதரராகக் கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.உடனே,  செய்தியாளர்கள் முன்னிலையில் தன் செருப்பை எடுத்து, தன்னைத்தானே அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

பகல்ல ‘அம்மா’…ன்றாங்க; இரவுல ‘அதுக்கு’ வா…ன்றாங்க: தெலுகு நடிகை சந்த்யா நாயுடு

இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!

49%க்கும் மேல் அன்னிய முதலீடு வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத், 49%க்கு மேல் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

மோடி மீது விமர்சனம்! ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா!

பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
- 2026

Recent articles