தமிழகம்

தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!

பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.

வாரியம் வருமென்றால் ராஜினாமா செய்வேன் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் மோடி: அதிகாரிகள் ஆலோசனை!

இதற்கிடையே, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சேர்த்து வைக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்த் தாய் வாழ்த்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதை தடை செய்க!

எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எந்தவொரு நிறுவனமும் வணிகரீதியாக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தப் பாடலை எந்தெந்த நிறுவனங்கள் இதுவரை வணிக ரீதியாக பயன்படுத்தியுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடுவதாக மார்க். கம்யூ. புகார்

மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. - என்று கே. பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருவூலங்களுக்கு 31ஆம் தேதி வேலை நாள்

தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வேலை நாளாகச் கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 2026

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

சூர்யாவை பார்த்து காப்பி அடிக்கின்றார் மு.க.ஸ்டாலின்: மா.பா.பாண்டியராஜன்

சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சொடக்கு போடும் நேரத்திற்குள் இந்த ஆட்சியை என்னால் கவிழ்க்க முடியும் என்று கூறினார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி, 'கடப்பாரை கொண்டு நெம்பினாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது'...

போக்குவரத்துத் தொழிலாளருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதே! : நீதிபதி அறிக்கை!

அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி குறைந்தது இரண்டு மருத்துவர் களையாவது இன்று விசாரணை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

மோடிக்கு கண்மூடித்தன ஆதரவு ஏன் பெருகுகிறது?: பத்திரிகையாளர் மாலன் கண்டறிந்த உண்மை!

அதில் அவர் கூறியபடி...  இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்" என்கிறார் தாமரை.//

இளையராஜா மீது புகார் கூறும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு ராம.கோபாலன் கடும் கண்டனம்!

இந்துக்கள் வணங்கும் ஆண்டாளை, தாசி என்று, உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியதுடன், பகுத்தறிவாதிகள் இதனை ஏற்பார்கள் என கூறினார் வைரமுத்து. இந்தப் பொய்யான, அபாண்டமான கருத்தை இந்து முன்னணி கண்டித்தது. இதற்குக்கூட ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இது  கருத்துரிமையை முடக்கும் செயல் என வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய கருத்துரிமைவாதிகள், இளையராஜா விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?
- 2026

Recent articles