தமிழகம்

முத்துக்கருப்பன் ராஜினாமாவை வரவேற்ற ஸ்டாலின்! கனிமொழி உள்ளிட்ட 4 பேரும் ராஜினாமா செய்வர் என்கிறார்!

குறிப்பாக திமுக.,வின் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி என நால்வரும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா திமுக., என்று கேள்வி எழுப்பப் படுகிறது. 

காவிரி பிரச்னையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக தீர்மானம்!

சென்னை: தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மார்ச் 30 இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவை... 

கர்நாடகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், தமிழகத்துக்கு காவிரி நீர்: ஹெச்.ராஜா

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட்டோம் என்று சொன்னாலே அது அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு, வாங்கு வங்கியைக் குலைத்து விடும் என்ற அளவில் இருக்கும் போது, பாஜக., ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்று ஹெச்.ராஜா போன்றவர்கள் இங்கு பேசுவது, அதையே ஒரு தேர்தல் பிரசார உத்தியாக காங்கிரஸால் கையாளப்பட்டு, கிடைக்கும் ஓட்டுகளையும் பதம் பார்த்துவிடும்

திருப்பூர் எம்.பி., சத்யபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் கைது!

இந்தச் சம்பவம் இரு வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னை ஜெயலலிதா அடித்துவிட்டார் என்று நாடாளுமன்றத்தில் அழுது புலம்பு புகார் கூறிய நேரத்தில்தான் இந்த விவாகரத்து நோட்டீஸ் விஷயமும் வெளியாகி ஜெயலலிதாவுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தது என்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்.2ல் ஓபிஎஸ் உண்ணாவிரதம்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அது கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
- 2026

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற போராட்டம் நியாயம்தானா? ஒரு ஃபேஸ்புக் பயனாளியின் பதிவு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் வலுவடைந்துள்ளது. தூத்துகுடி எந்த பக்கம் உள்ளது என்று தெரியாத நெட்டிசன்கள் கூட...

மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் உள்ள நியாயங்கள்!

இப்படியாக, மத்திய அரசின் குழப்ப நிலையை முன்வைத்து  மத்திய அரசின் செயலை நியாயப் படுத்தி முன் வைக்கப்படும் இன்னொரு கருத்து:உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது என்று தமிழ் ஊடகங்கள் ஒரு செய்தியைப் பரப்பியுள்ளன.

எம்ஜிஆரை போல் ரஜினியை வளர்த்துவிட முடிவு செய்துவிட்டதா திமுக?

திமுகவில் கணக்கு கேட்டார் என்பதற்காக எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் கணக்கு கேட்டபோது அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார். ஆனால் அவரை கட்சியில் இருந்து...

விழுப்புரம் சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடம் ஒன்றின் 4 வது மாடியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்து குறித்த...

செங்கோட்டை புனலூர் வழியாக ரயில் சேவை தொடக்கம்!

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

அண்ணேய்… வாலப்பாடியா… எடைப்பாடியா..? பினாமிகிட்ட கேட்டு ஒழுங்காச் சொல்லு!

பழமொழிகளை சொதப்பினார். சுதந்திர தினம் குடியரசுதினத்தை மாற்றினார். சரிதா சரிகா என்று உளறினார். பெயர்களைக் குறிப்பிடுவதில் தடுமாற்றம். தேதிகளை நினைவில் கொள்வதில் தடுமாற்றம். இப்படி எல்லாம் இருந்தும், திமுக.,வின் இளைஞரணிச் செயலராக முதுமையின் தடுமாற்றத்தில் இருக்கும் காலம் வரை இருந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டி கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
- 2026

Recent articles