தமிழகம்

சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது! கண்டித்து தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல்!

இதனிடையே, ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அந்தப் பகுதி வழியே வந்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சந்தித்துப் பேசினார். .

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் கடும் கண்டனம்

ரத யாத்திரையால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளியேற்றம்!

ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

பொறுத்தது போதும் பொங்கியெழு! இளைஞர்களை தூண்டிவிடும் கனிமொழி

பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் அட்மின், எந்த நேரத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாரோ, அதுமுதல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆங்காங்கே கடந்த சில...

மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- 2026

தஞ்சை கொண்டு செல்லப்படும் நடராஜன் உடல்; பரோலில் வருகிறார் சசிகலா..!

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனைக் கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்துள்ளதால், அந்த 6 மாத கால அளவு முடிவதற்கு இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன. எனவே விதிகளின் படி அவருக்கு பரோல் கிடைக்குமா?

ரத யாத்திரையை தடுக்க சென்ற திருமாவளவன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது!

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தமிழக எல்லையில் நுழையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த ரத யாத்திரையை தடுக்கும் வகையில் நேற்று முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானார். மரணம் அடைந்த நடராஜன் உடல்...

நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை: ரத யாத்திரையை தடுக்க நடவடிக்கை

விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் ரத யாத்திரை நாளை தமிழகத்தில் வர உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும்...

‘யலேய் டிரெஸ்ஸ கழட்டுல!’ மிரட்டும் ஆசிரியர்; பதுங்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

எலே கம்பெடுத்துட்டு வாங்க... எலேய் கழட்டுல... ஏ..நான் பெரிய ரவுடி தெரியுமால ..உனக்கு? ஏ..நீ என்ன பெரிய ரவுடியா? கழட்டுல.. கழட்டுல... மரியாதையா கழட்டு, கிழிச்சிருவேன் இல்லைன்னா... என்று அந்த ஆசிரியர் அந்த மாணவரை ஒதுக்குகிறார்... சுவர் ஓரமாக! பேசவே கூடாது, சொன்னபடி செய்யணும்... சரியா!

கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பம்; 2ஜி.,யில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு!

2ஜி முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அது போல், சிபிஐ.,யும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
- 2026

Recent articles