கட்டுரைகள்

தமிழன்டா..! என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்..! இப்படியே போனால்…?

அடச் சே...! இப்படியே போய்கிட்டு இருந்தா, இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்ன்னு யாரும் சொல்லாமலேயே அத்தனையும் நடக்கும். அதுக்கு முன்னாடி நாம... அட்லீஸ்ட், கொஞ்சமாவது படிப்பறிவு மண்டையில ஏறுகிற, சின்னப் பசங்களையாவது அறிவூட்டுகிற வேலையில நாம இறங்கலேன்னா... தமிழ்நாடை தமிழகமா பாக்க முடியாது.. வருங்காலத்தில்! 

காவிரி அரசியல்: சித்தராமையாவுக்கு ‘அழுத்தம்’ கொடுக்குமா திமுக.,!?

எனவே, திமுக., இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று, கர்நாடகத்தைக் கண்டிக்காத காங்கிரஸின் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்...; சித்தராமையாவை கண்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் போது, கூட்டணிக் அட்சி காங்கிரஸின் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதுதான் காவிரிக்கான திமுக.,வின் உண்மையான போராட்டமாக இருக்கும்!

சேலம் -சென்னை பசுமை வழித் தடத்தில் சதி? அம்பானி அதானி கொள்ளைக்காகவா?

புதிய பசுமைச்சாலை அரசாங்க செலவிலேயே BOT திட்டத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டு, பராமரிப்புக்காக குறைந்த கட்டணமே வசூலிக்க இருக்கிறார்கள். அதிகபட்சம் 2 டோல்கேட் மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எனவேதான் இந்தப் புதிய பசுமைச் சாலைக்கு சமூக ஊடகங்கள் வழியே தவறாக பரப்பப்படும் இந்த சதி செய்திகள், அவதூறுகள் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தமிழக அதிரி புதிரி டமால் டுமீல் போராட்டங்களும்

உணர்ச்சிபூர்வமாகப் போராளிகளாகத் துள்ளாமல், எதையும் ஆழ்ந்து யோசித்துத் தெளிவுடன் முடிவெடுக்காத வரை, தற்போதைய தமிழகத்தின் நிலைமையும், தமிழனின் எதிர்காலமும் கவலைக்கிடமே.

ஸ்கீம் என்பதும் மேலாண்மை வாரியம் என்பதும் ஒன்று தானா?

அதாவது "நடுவர் மன்றத்தின் முடிவைச் செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு அல்லது செயல்திட்டம்" என்பதே "ஸ்கீம்".

வடக்கே ஒரு நியாயம்; தெற்கே ஒரு நியாயமா?

கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது
- 2026

தமிழ்த் தாய் வாழ்த்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதை தடை செய்க!

எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எந்தவொரு நிறுவனமும் வணிகரீதியாக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தப் பாடலை எந்தெந்த நிறுவனங்கள் இதுவரை வணிக ரீதியாக பயன்படுத்தியுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

குற்றவாளிகள்தான் நம் தலைவர்களா?

எது எதற்கெல்லாமேம ஒன்று கூடும் இளைஞர்கள் நாட்டில் நல்லாட்சி நடைபெற குற்றப்பின்புலம் இல்லாத தலைவர்களும் தொண்டர்களும் தேவை என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் அரசாங்கம் என்பதே அரசியல்வாதிகளுக்குத்தான் என்ற இன்றைய அவல நிலையை மாற்றிவிட முடியாது.

ஸ்டெர்லைட் போராட்டம் : சில உண்மைகள்!

9. நமக்கு வேலைகள் வேண்டும் என்றால் உற்பத்தித் தொழிற்சாலைகள் அவசியம். உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு நாம் குறைந்தபட்ச விலையாவது கொடுத்தாக வேண்டும். எதுவும் கொடுக்க மாட்டேன் எனக்கு வேலையும் வேண்டும் என்று சொன்னால் ஏதும் நடக்காது. தமிழ்நாட்டில் முதலீடு குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை. 2015ல் 20000 கோடி இருந்தது 2017ல் சுமார் 3100 கோடியாகக் குறைந்து விட்டது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கர்நாடகத்தில் 1.5 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு நடந்திருக்கிறது. தமிழகத்தை விட 50 மடங்கு அதிகம்.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?

நமக்கு நம் மாநில வளமும் நலமும் முதலில் முக்கியம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல் முறையாக, மத்திய அரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற வாதத்தை சட்டமன்றத்தில் வைத்தாலும் கூட, அதை அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால் மாநிலத்துக்கு நல்லது என்ற அவரது மாநிலத்தின் நலன் சார் நோக்கத்தில் குறைகாணாமல் ஆதரவளிக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-7’; துறைமுகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமை!

டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் மிக நீண்ட காலத்துக்கு, கப்பல் மற்றும் துறைமுக வளர்ச்சித் துறையில், மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இருந்தும், அவர்களால் துறைமுகங்களின் வளர்ச்சியில் அல்லது கப்பல் துறையில் மிகச் சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிந்தது. துறைமுகங்களின் போர்டுகளில் தங்கள் கட்சிக்காரர்களை உள்ளே புகுத்துவதை டி.ஆர்.பாலு உறுதி செய்தார்.ஜிகே.வாசனோ, எண்ணூர் துறைமுகத்தை காமராஜர் துறைமுகம் என்று பெயர் மாற்றுவதில் மட்டுமே முனைப்பாக இருந்தார்.

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-6’; உலக முதலீட்டாளர் மாநாடும்; தமிழகம் பெற்றதும்!

ஆனால், முதல் முதலீட்டாளர் மாநாட்டில் கிடைத்த பலன்கள் என்ன என்று அறிவதற்கு முன்னமே, அடுத்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அதன் மூலம் கோமாவில் படுத்தது தமிழக அரசும் தொழில்துறையும் மாநிலத்தின் முன்னேற்றமும்தான்!
- 2026

Recent articles