வணிகம்

நாட்டையே உலுக்கும் திடீர் பணத் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் புகார்; ஜேட்லி விளக்கம்; மக்கள் அவதி!

இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.

49%க்கும் மேல் அன்னிய முதலீடு வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத், 49%க்கு மேல் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய மதிப்பை தரம் உயர்த்தியதுஅமெரிக்கா! வல்லரசு நாடுகளுக்கு இணையாக!

இதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது. தற்போது இந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் இணைத்துள்ளது.

நிஜாம் பாக்கு உரிமையாளர் வீட்டில் சோதனை: கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல்

சென்னை மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை என பல இடங்களிலும் நடைபெறும் சோதனையில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் நீரவ் மோடியை கைது செய்ய சீனா உதவும்!

மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, தற்போது ஹாங்காங்கில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நீரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைத்துள்ளோம்’ என்றார்.
- 2026

இன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் விலை நிலவரம்! (ஏப்.9)

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.72 எனவும், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.68.38 எனவும் உள்ளது.

பிட்காயின் என பிட் போட்ட அமித் பரத்வாஜ்; ரூ.2000 கோடி மோசடி!

சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட தென் மாநில நகரங்களிலும் பிட் காயின் குறித்து ஆசை வார்த்தைகள் பரப்பப் பட்டன. இடையே, பிட்காயினில் மதிப்பு குறைந்துவிட்டது என்று ஒரு கதை வேறு கட்டிவிட்டார்கள். கண்ணுக்குப் புலப்படாத விர்சுவல் காயின் இது என்றும் சிலர் கதை அளந்தார்கள். இதை நம்பி பலரும், ஒன்றுக்குப் பத்தாகப் பணம் கிடைக்கும் என்று பலரிடம் வாய் வழியே பரப்பி வந்தார்கள். இப்போது பிட்காயின் சிக்கல் பலரை வாய்மூட வைத்திருக்கிறது.

கட்டண உயர்வு இல்லை; ஆனாலும் வசூலும் பயன்பாடும் அதிகம்தான்! சாதிக்கும் ரயில்வே துறை!

2017-18ஆம் நிதி ஆண்டில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி. கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுடன் இதனை ஒப்பிடும் போது, ரூ.2,551 கோடி வருவாய் அதிகம்.

வாகன இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அரசு நலத்திட்ட உதவிகள் பெற ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது,  பாஸ்போர்ட் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்டவை தற்போதைக்கு கட்டாயமல்ல என்றும், அதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சிடிஎஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியது வருமான வரித் துறை: ரூ.2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு!

சிடிஎஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், எல்லா வரியையும் முறையாக கட்டியுள்ளோம். வருமான வரித் துறை சட்டத்தை மீறிச் செயல்படுகிறது. வருமான வரித்துறை நடவடிக்கைகள், எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழில் நிறுவனங்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளித்தது. இதனிடையே வழக்கு விசாரணை முடியும் வரை மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- 2026

Recent articles