இந்தியா

பிட்காயின் என பிட் போட்ட அமித் பரத்வாஜ்; ரூ.2000 கோடி மோசடி!

சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட தென் மாநில நகரங்களிலும் பிட் காயின் குறித்து ஆசை வார்த்தைகள் பரப்பப் பட்டன. இடையே, பிட்காயினில் மதிப்பு குறைந்துவிட்டது என்று ஒரு கதை வேறு கட்டிவிட்டார்கள். கண்ணுக்குப் புலப்படாத விர்சுவல் காயின் இது என்றும் சிலர் கதை அளந்தார்கள். இதை நம்பி பலரும், ஒன்றுக்குப் பத்தாகப் பணம் கிடைக்கும் என்று பலரிடம் வாய் வழியே பரப்பி வந்தார்கள். இப்போது பிட்காயின் சிக்கல் பலரை வாய்மூட வைத்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் கூடாது: முரண்டு பிடிக்கும் வாட்டாள்; ஏப்.12ல் முழு அடைப்பு!

தமிழக போராட்டம் எங்களையும் போராடத் தூண்டியுள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயன்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை இங்கே நுழைய விடமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி, வரும் 12ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கூறினார்.

மான்வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி: 5 ஆண்டு சிறை தண்டனை!

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்புர் நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

காமன்வெல்த்: தூக்கி சுமந்த தங்க மங்கை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள்  பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

இன்று வேலைக்கு வரவில்லையானால் நடவடிக்கை பாயும்

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது

சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜ்ரிவால் சந்திப்பு; மூன்றாம் அணிக்கான முன்னேற்பாடுகள் தயார்!

இந்த சந்திப்புகளின்போது, மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது. அவருடைய இன்றைய சந்திப்புப் பட்டியலில் முதலில் தில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடம்பிடித்தார். அவரை இன்று காலை சந்திரபாபு நாயுடு தில்லி ஆந்திர பவனில் சந்தித்துப் பேசினார்.
- 2026

கட்டண உயர்வு இல்லை; ஆனாலும் வசூலும் பயன்பாடும் அதிகம்தான்! சாதிக்கும் ரயில்வே துறை!

2017-18ஆம் நிதி ஆண்டில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி. கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுடன் இதனை ஒப்பிடும் போது, ரூ.2,551 கோடி வருவாய் அதிகம்.

நல்லவேளை..! சிபிஎஸ்இ கணிதம் மறு தேர்வு இல்லை… பெருமூச்சு விடும் மாணவர்கள்!

புதுதில்லி: கடந்த மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்தது.

நோக்கம் போல் கட்டணம் உயர்த்துவதற்கு கிடுக்கிப் பிடி: அதிரடி முதல்வர்; அலறும் பள்ளிகள்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கடி பள்ளிக் கட்டணங்களை உயர்த்துவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது அரசின் கல்வித் துறைக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது.

நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும்…! பேரிடி கொடுத்த அஃப்ரிடிக்கு பொருந்தும் பழமொழி!

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பொய்ச் செய்தி வெளியிட்டால் அங்கீகாரம் ரத்து! அமைச்சக ஆணையை ரத்து செய்தது அரசு!

இந்நிலையில், தவறான செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற ஆணை திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மத்திய செய்தித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ஆணையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வட மாநில போராட்டங்களால் ரயில் சேவை பாதிப்பு

பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
- 2026

Recent articles